Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 9

Advertisement

lakshu

Well-known member
Member
உன் தங்கச்சிடா மச்சான் , மச்சான்

ஹோ புரியுது , எப்போதிலிருந்து

ஒன் சைடு தான்டா , இனிமேதான் லவ்வ சொல்லனும்.

கொண்ணுடுவேன்டா ,என் லைப்பே அந்தரத்தில மிதக்குது இதுல.

ஏண்டா நான் லவ் பண்ணா உனக்கு என்ன?

டேய் , அவ இன்னும் படிச்சே முடிக்கல , அதுக்குள் லவ்வா.

ஹூரோ நீ பண்ணாலாம் ,நான் பண்ணகூடாது. பாருங்க மக்களே .

மனோ , நான் உங்கிட்ட ஆபிஸ பார்த்துகோடா சொன்னா , ஆனா சின்ன சின்ன விஷியத்து எல்லாம் போன் பண்ணற. டேய் கொஞ்சம் சிரியஸா இருடா. சரி வீடு வந்திடுச்சி .

ஓகே பாய் வாசு, நான் நேரா அங்க வரேன்.

மித்ரா,ரம்யா இருவரையும் பியூட்டி பார்லரில் விட்டான். மூவரும் உள்ளே சென்றார்கள். மேரேஞ் தேவையான மேக்கப் தேர்ந்தேடுத்தார்கள். வாசு இன்னும் ஓண்ணவர் ஆகும் நீ எங்கனா வெளிய போய்ட்டு வா-மித்ரா.

சரி சொல்லி வாசு கீழே சென்றான் , மனோ உள்ளே வந்தான். ஹாய் மித்ரா ,வாங்க அண்ணா உட்காருங்க.மனோ சுற்றி பார்த்தான்.

நமக்கு தெரிஞ்ச இடம்தான் சார். என் தோழி உடையது.-ரம்யா.

அப்ப சரிம்மா, கல்யாணத்தை நிறுத்தனும் சொல்லற , இந்த மாப்பிள வேணா ஆணா வேற மாப்பிள பார்த்தா மேரேஜ் செஞ்சிப்பியா.

இல்லணா எனக்கு மேரேஜ் வேணா.,

ஏன்டா , உனக்கு ஒரு துனை அவசியம்டா, எவ்வளவு நாள் தாத்தா பார்திருப்பார் , உன் கடைய பார்த்துக்க யார் இருக்கா .

அதுக்குதான் இனாவனா வாசு இருக்கானே , இன்னும் 5000 சம்பளம் போட்டுக்கொடுத்து அவன் ஓய்பு இங்கே தங்க அதற்குள் ரம்யா அவளை சுரண்ட ஆரம்பித்தாள்

ஏய் சும்மா இருடி, மித்ரா அமைதியா இருன்னு

ஏன்?

வா வ வாசு. கதவருகில் நின்று கையை கட்டி கேட்டுக்கொண்டிருந்தான்

மித்ரா யாரு , ம்ம் இனாவனா வாசு ,வண்டிசாவிய விட்டுட்டு போய்டேன் , எடுக்க வந்தேன், நான் இனாவனா வா உனக்கு ,அதுவும் நீ கொடுக்கற 5000 ரூபாய்க்கு என் பொண்டாட்டி,புள்ளை எல்லாம் உனக்கு வேல செய்யனும்.

மித்ரா தலையில் கொட்டு வைத்தான்.

ஆ அம்மா , ஏன்டா கொட்டன ,அண்ணா அடிக்கிறான்.

வாசு தெரியாம சொல்லிடுச்சு .-மனோ

ஏண்டி , சொல்ல மாட்ட நேத்திலிருந்து பார்த்துப் பார்த்து சேவகம் செய்யறேன். இவ தெரியாம சொல்றா.

என்ன நீ இவ ,டி ,போட்டு பேசற நான் உன் பாஸ்.

பாஸ்!! பாஸ்!!! நீ மேரேஜ் நிறுத்த ப்ளான் பண்ணறீங்களே அத போன் போட்டு உங்க பெரியப்பாவுக்கு சொல்லட்டா.

உடனே ரம்யா, அய்யோ வேணாண்ணா , நான் அப்பவே சொன்னேன், வாசு

நல்ல அண்ணா அவங்கிட்ட ஹேல்ப் கேட்கலாம். இவதான் வேணா சொல்லிட்டா.ஆமாம் வாசு மாப்பிள்ள பையன் சரியில்ல ,பணத்துக்கா வந்திருக்கான், அவங்க சித்தாப்பா ஏற்பாடு என்று மனோ விவரித்தான்.

வாங்க எல்லாம் காபி குடிச்சிட்டு வரலாம் இங்க பேச வேணாம்.

நால்வரும் மேலே உள்ள ஹோட்டலுக்கு சென்றார்கள்.

ரம்யா பக்கத்தில் மனோ அமர்ந்தான், மித்ரா பக்கத்தில் வாசு

சாரி வாசு, கோபமா –மித்ரா.

இல்ல , நாலுபேருக்கும் காபி சொல்லட்டுமா, பேரரிடம் ஆடர் செய்தான்.

மாப்பிள்ளையை கடத்திட்டா மேரேஜ் நின்னடும் இல்ல-ரம்யா

போலிஸ் கேஸ் ஆகாதா. நாம மாட்டிட்ட. ஆமாம் எப்படி கடத்துவிங்க.

நம்ம ஏரியா ரௌடிய வச்சிதான்.

அவங்க சித்தப்பா கார்மேகத்துக்கு தெரிஞ்ச ஆளாதான் இருப்பாங்க இந்த ரௌடிங்க..

இப்ப என்ன பண்ணறது- மனோ.

கல்யாணத்தண்ணிக்கு காலையில மாப்பிள்ளையை கடத்தறோம். ஆணா மாப்பிள்ளையே எனக்கு பொண்ண புடிக்கல ஓடி போயிற மாதிரி செட் செய்யனும். இது பிளான் A.

இது ஓர்க்கவுட் ஆகலணா.

ஆகலணா மூணுபேரும் ஓரே நேரத்தில் கேட்டனர்.காபி பரிமாற பட்டது.

காபி குடிங்க சொன்னான் வாசு.

மனோ கேட்டான், ஓர்க்கவுட் ஆகலணா.

பொண்ண தூக்கிடுவோம் இது பிளான் B.. மித்ராவுக்கு புரை ஏறியது. தலையை தட்ட வந்த ரம்யா கையை தடுத்துவிட்டு , தலையை தட்டினான் வாசு. நீ பயப்படாத மித்ரா , ஓண்ணுமாகாது, பிளான் A.வே சக்சஸ் ஆகும். சொல்லிக்கொண்டே மித்ராவுடைய காபி கப்பை தன்னுடைய கப்பை மாற்றினான்.

சரி வாசு , இதை பார்த்த ரம்யா மித் வாயேடுத்தாள் ,

மனோ அவள் வாயை மூடினான். கொசுத்தொல்லை தாங்க முடியல,-வாசு. மனோவின் கையை எடுத்து என்ன நடக்குது இங்க. என்று கேட்டாள்.

லவ் பண்ணறாணம், கண்டுக்காதே, நிசமாவா ஷாங்கிங்கா இருக்கு

ம்ம் .இன்னும் இவன் பெர்பமன்ஸே ஆரம்பிக்கல அதுக்குள்ள ஷாக்காகதே.

இன்று திருமணம் நாள்,

காலை 11.00 மணி , உறவினர்கள் விருந்தை முடித்து கும்பல் கும்பலாக பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் எழுந்து பழனிவேலிடம் கல்யாணம் முடிச்சிடுச்சு , பொண்ண,மாப்பிள்ளையும் நல்ல நேரத்தில வீட்டுக்கு கூட்டிட்டு போனோம் டைம் ஆயிடுச்சு .

மாப்பிள்ளை ,

சார்.

என்னப்பா நீ சாருன்னு கூப்பிடுற , மாமான்னு சொல்லு.

நீங்களும் என்ன பெயர் சொல்லி கூப்பிடுங்க.

சரி வாசு மாப்பிள்ள,மித்ராவும், நீங்களும் நல்ல நேரத்தில வீட்டல காலடி வைக்கனும். ஆகட்டும் மாமா.

வாசு பட்டு வேட்டியில் , கையில் 5 பவுனில் பிரஸ்லேட், செயின்,கையில் டைமண்டு ,தங்கம் கலந்த மோதிரம் முனுமுனு விரலில்.மன்மதனே இந்த ஆணழகனாக நின்றிருந்தான்.கல்யாண புரிப்பு, அவன் மனதில்.மித்ராவின் கையை பிடித்து காரை நொக்கி நடந்தான்.

அந்த ஆடி காரில் , மனோ வண்டிஓட்ட, அவன் பக்கத்தில் மந்திரிஞ்சி விட்ட கோழி போல் ரம்யா. பின் சீட்டில் மித்ராவும், நம்ம வாசுவுங்க..

மித்ரா பக்கத்தில் வாசு உட்கார்ந்தவுடன்,என் பக்கத்தில உட்காராத போடா தள்ளிவிட்டாள்.

ப்ராடு, ப்ராடு உன்ன நம்பனா பாரு,

ஏன்டா, கல்யானத்த நிறுத்த ப்ளான போட்டா ,உன் கல்யானத்திற்கு ப்ளான போட்டு இருக்க

இது ப்ளான் C. பேபி. ஹாஹா சிரிக்க ஆரம்பித்தான் கள்ளன்.மனோ நான் மித்ராவ தான மேரேஜ் பண்ண இவ ஏண்ணடா இப்படி இருக்கா, ரம்யாவை பார்த்து கேட்டான்.

ஷாக்காம்.!!!!

இனிமேதாங்க நம்ம வாசு பெர்பாமன்ஸே ஆரம்பம்....
 
இந்த 9th அப்டேட் வந்து விட்டதே
திரும்பவும் கொடுக்கறீங்களே, லக்ஷு டியர்
அடுத்த 10th அப்டேட் கொடுங்கப்பா
 
Top