Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 8

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 8



மித்ரா தன்னிலை உணர்ந்து , அவன் சொன்னதை கவனித்தாள், அவனை அனைத்து இருந்த கையை பிரித்து, நீ வாயை மூடு. எவன்னா நாய்க்கு மனிச பேர வைப்பானா.

ஏன் வைக்க கூடாதுன்னு சட்டம் இருக்கா.

நீ ஏன் மணிய நாயின் சொலல்ல. எனக்கு நாயின்னா பயம் , இது வேணா.

மித்ரா , நேற்று வந்தான்னுங்களே , அவனுங்க தான் மிருகம். மணி இல்ல.

உன் கையை கொடு.

நான் கொடுக்க மாட்டேன் , வாசு , மித்ரா கையை பிடித்து மணியை வருடினான். நீ அன்பா பழகு, மணி உன்கிட்ட பாசமா இருப்பான். அவன்கிட்ட பேசு ,புரிஞ்சிப்பான்.

மித்ரா மணியை தடவிக்கொண்டே, எவ்வளவு பெரிசா இருக்கு வாசு.

என் தம்பி இவன் என்னடா டைகர் மணி.

இவன் என்ன சாப்பிடுவான்.

சிக்கன், மட்டன், பிரியாணி, மீன் ஆல் நான் – வேஜ்.

மணிக்கு பிடிச்சத கேட்டேன், உனக்கு புடிச்சத இல்ல.

அவனுக்கு பிடிச்சத சொன்னேன்

ஆமாம் இது எப்ப குட்டி போடும், இது குட்டி போடாது, குட்டி போடவைக்கும்.

ஐய்யோ தெரியாத கேட்டுடேனே , இதுவச்சே ஓட்டுவானே, அமைதியானால் பெண். ஆனா இப்படியே விட்டா அது வாசு இல்லையே.

. மணின்னு பாய் நேம் வச்சிருக்கேன், இந்த வீக் கேன்டுல டேட்டிங் விடனும் அவன.

ஏன் கேட்க மாட்டாயா மித்ரா.

எனக்கே தெரியும். நீ வாடா மணி நம்ம ரூம்கு போகலாம். இவங்கிட்ட வெட்டி பேச்சி எதுக்கு. மித்ரா பின்னால் மணி போனான்.

அவள் சித்தப்பா வீட்டில் , ஹாலில் கார்மேகம் , அவர் பையன் மகேஷ் உட்கார்ந்திருந்தார். கமலா அழுதுக்கொண்டே அப்பா மித்ரா வீட்ல இருக்கானே வாசு, அவன் என் புருஷன் கையை ஓடிச்சிட்டானப்பா.

என்னம்மா சொல்லற-மகேஷ்

ஆமாண்ணா நேத்து நைட். அவர் ஏன் அங்க போனாரு.

குடிச்சுட்டு அந்த பொண்ண வம்பு பண்ணா, முதல்ல உன் புருஷன அடக்கி வை கமலா அம்மா சாரதா பேசிக்கொண்டே காபியை கார்மேகத்திடம் கொடுத்தாள்.

அதுக்கு கை உடைப்பானா, அவன ஏதாவது செய்ண்ணா என்று அழ ஆரம்பித்தாள்.

டேய் நீ சும்மா இருடா, இப்ப எதுவும் பண்ணாத, மித்ரா கல்யாணம் முடியனும் அதான் முக்கியம். அவளும்,அவ புருஷனும் சேர்ந்து கையேழுத்து போட்டதான் சொத்த விற்க முடியும் .

நம்ம பார்த்த மாப்பிள்ளை பத்தரம்டா. அப்பறம் மித்ரா எங்க போறான்னு பாலோ பண்ண இரண்டு ஆள போடு. ஜாக்கிரதை பெரியப்பா ஏற்கனவே நம்மேல சந்தேகமா இருக்கிறார்.

காலை சிற்றுண்டி முடித்துவிட்டு ,ஹாலில் மணியை கொஞ்சினாள் மித்ரா , மதியம் ஹோட்டல பிரியாணி ஆடர் செய்யட்டா.-வாசு

வாசு என் ப்ரண்டு ரம்யா வரா , அவளுக்கு சேர்த்து சொல்லு , நாங்க மதியம் வெளியே போறோம் .

எங்க போறீங்க நானும் கூட வருவேன், தாத்தா உன்னை பத்திரமா பாத்துக்க சொன்னாங்க.

பியூட்டி பார்லர் போறோம் , வருவியா

வருவேன்.சொல்லிட்டு மணியை எட்டி ஓரு உதைய விட்டு, இவன போய் கொஞ்சிட்டு இருக்கா என்னை கொஞ்சலாம் இல்ல முனுமுனுத்து விட்டு குளிக்க சென்றான்.

ரம்யா உள்ள நுழைவதை பார்த்து மணி வொவ்வொவ் என குலைத்தான். மித்ரா மித்ரா என கத்தினாள்.

மணி அவ என் பிரண்டு ரம்யா. ஷேக்ஹாண்ட் கொடு.

ஹே சூப்பர் யார்து இந்த டாக்கு.

ம்ம் வாசுது.ஓஓ உன் நாயகன்தா.

ஏய் உதைபடுவ உன் வாய மூடுடி அவன் கேட்க போறான்.

வாசு குளித்துவிட்டு உள்ளே நுழைந்தான் ,மறைந்திருந்து ரம்யா பே என கத்தினாள் .கையில் இருந்த செல், பால் பாக்கெட் பதற்றத்தில் கீழே போட்டான். ஏய் எரும ,இப்படியா கத்திறத்து . மூச்சிய பாரு,

ரம்யா ஆ வென வாசுவே பார்த்தால் , உண்மையாவே ஹீரோ தான்.

செம்மயா இருக்காரு. ஹாய் ஐயம் ரம்யா.

நான் ,வாசு சொல்ல வாயெடுக்க , எல்லாம் தெரியும். மானேஜர் , 10000 சம்பளம் , நயன் , தீபிகா பெயர் வைக்கிற வரை தெரியும் வாசு அண்ணே.

ஹாஹா மித்ரா சொன்னாலா , ம்ம் தலையை ஆட்டினாள் ரம்யா. அதற்குள் ஆடர் செய்யத சாப்பாடு வர அதை வாங்கினான் வாசு.

கிச்சனில் இருந்து பிளேட் எடுத்து டைனிங் டேபிளில் வைக்க வந்த பார்சல பிரிக்க என வாசுவுடன் சேர்ந்து உதவினால் , அண்ணா எனக்கு ஓரு டவுட்டு ,

என்னம்மா , இல்ல உன் பார்த்தா பணக்கார வீட்டு பையன் மாதிரி இருக்கு , 10000 சம்பளத்திற்கு வேலைக்கு வந்த ஆள்மாதிரி இல்லயே,

கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே , உன் தோழிய கடத்திட்டு போக.

எதுக்கு ,

கல்யாணம் பண்ணதான். போண்ணா ஜோக் அடிக்காதீங்க.அதற்குள் மித்ரா வர, மூவரும் லன்ச் முடித்தார்கள். மித்ரா , நான் என் பிரண்டு கார் எடுத்திட்டு வரேன் என்று சொல்லி வெளியே சென்றான்.

ஹலோ டேய் எருமை மனோ ,

சொல்லடா வாசு ,

"மூலையே யூஸ் பண்ணாத நீயும் , மூலையே இல்லாத அதுங்க இரண்டும் என்னடா பிளான் போடுறீங்க."

ஓ! அதுவா பியூட்டி பார்லர் மேல ஹோட்டல் இருக்கு ,அங்க தான் மீட்டிங் அப்பறம் ப்ளானிங்.சரி ரம்யாவை பார்த்தியா,

-அந்த அரை லூஸையா சொல்லற-வாசு

"டேய் அவ உன் தங்கச்சிடா மச்சான்", அதுக்கு என்ன இப்ப.

உன் தங்கச்சிடா மச்சான் , மச்சான்
 
அடிப்பாவி கமலா
குடித்து விட்டு அடுத்த பெண்ணை உன் புருஷன் கையைப் பிடித்து இழுத்தது தப்பில்லையா?

சொத்துக்காக எவனோ ஒரு கேடுகெட்டப் பொறுக்கியை மாப்பிள்ளையாக இன்னொரு கேடுகெட்ட பொறுக்கி கார்மேகம் சித்தப்பா மித்ராவுக்கு பார்த்திருக்கிறானா?
 
வீட்டிலே வேலை செஞ்ச வேலைக்கார தாத்தாவுக்கு மித்ராவின் மீது இருக்கும் பாசம் கூட கார்மேகம் செத்தப்பனுக்கு இல்லையே
வீணாப் போன படுபாவி
சொத்துக்காக கண்ணு தெரியாத பிள்ளையை என்ன பாடுபடுத்தப் போறானோ?
 
Top