Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 16

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 16

1465
11.00 மணிக்கு பாட்டியின் அறைக்கு சென்று மித்ராவை தூக்கிவந்து தனது பெட்டில் படுக்கவைத்து,. லைட் ஆப் பண்ணிட்டு அவள் பக்கத்தில் படுத்தான். வாசு என்னைவிட்டு போயிடுவியா, எனக்கு பயமா இருக்கு வாசு போகாதே தூக்கத்தில் மித்ரா பிதற்றினாள். மித்ரா நான் போகல தூங்கும்மா அவள் தோளை தட்டிவிட்டான்.

காலை விடிந்தது ,வாசு அலாரத்தை நிறுத்திவிட்டு எழந்தான் ஆனா எழமுடியவில்லை, என்னவென்று பார்த்தான் மித்ரா அவன் இடுப்பை கட்டிக்கொண்டிருந்தாள். “மித்ரா எழுந்திருடி டைம் ஆகுது”. தூக்கம் வருது வாசு சொல்லி இன்னும் இறுக்கி கொண்டாள்.”ஏய் கையை எடுடிவலிக்குது”. அவளை தட்டினான். மெதுவாக எழுந்தாள் ஏன்டா என்னை தொடற.யாரு நானா இந்த கை யாருதுடி, எடுடி கையை நான் ஜாக்கிங் போகணும் ஆபிஸல வேல இருக்கு.

சிறிதுநேரம் சென்ற பின்பு மித்ரா ..மித்ரா என்று கத்தினான். இவன் குரலை கேட்டு சின்னாவும், பாட்டியும் தோட்டத்திற்கு வந்தார்கள்

எங்கடி என்னுடைய எக்ஸசர்சஸ் மிஷின் ஒன்னும் இல்ல.

அது வந்து,

எங்க எல்லாம்,

நீ ஓண்ணும் எக்ஸசர்சஸ் செய்ய வேண்டாம், மாடியில எல்லா பொண்ணுங்களும் உன்னதான் பார்க்குதுங்க, நீயும் அவங்க பார்க்கதான் எக்ஸசர்சஸ் செய்யற

என்னது பொண்ணுங்க பார்க்கிறாங்களா, உனக்கு எப்படி தெரியும்.

ஏன் எனக்குதான் கண்ணு தெரியாது, பாட்டிக்கும்,சின்னாக்குமா கண்ணத் தெரியாது.

டேய் சின்னா ஓடிடுடா , போட்டுகொடுத்துட்டா-பாட்டி.

மணி புடிடா அவங்கள உன்ன வந்து கவனிச்சிக்கிறேன், விடாத மணி எங்க ஓட பார்க்கிற ,என்ன சொல்லி வைச்ச அவக்கிட்ட, உன் வயசுக்கு இதெல்லாம் தேவையா தொறத்தினான்.

வீடு நிசத்தமாக இருந்தது.வாசு கோபத்தின் உச்சியில் இருந்தான். என்ன பண்ணிங்க சொல்லிறீங்களா இல்ல, மாமா பாட்டிதான் பழைய சாமான் போடறவங்கிட்ட போட்டு பேரிச்சைபழம் வாங்கினாங்க.

டேய் என்னடா சொன்ன லட்சக்கணக்கல வாங்கனடா.எவன் இப்படி ஏமாத்திட்டு வாறிக்குன்னு போயிருக்கான்.

இரண்டு தெரு தள்ளியிருக்கிற கடையில.உடனே வாசு போன் பண்ணி கார்ட்ஸிடம் விஷியத்தை சொன்னான்,நாலு தட்டுதட்டி எல்லா திங்க்ஸ் எடுத்துவந்து வீட்டல ரெடி பண்ணி கொடுத்துடுங்க, மனுஷன நிம்மதியா இருக்கவிடுறீயா சிலுக்கு, மித்ராகிட்ட என்ன சொல்லி வைச்ச.

இங்க வா , மித்ராவின் கையை பிடித்து தன் அருகில் நிறுத்தினான், நான் எல்லா பொண்ணையும் பார்க்கிறேன் சிலுக்கு சொல்லிச்சா.

ஆமாம், பார்க்கிறவங்க ஏதுக்கு என்ன கல்யாணம் செஞ்சிங்கனும்,அப்பவே பாட்டி சொல்லிச்சு கோபியர்களுக்கு நடுவுல இருக்கிற கிருஷ்னன் நீ.

ஏய் எனக்கு கோபி மஞ்சூரியன்தான் தெரியும், அது யாரு கோபியர்.

ஐய்யோ தெரியாத மாதிரி சீன போடாத,எனக்கு புருஷனா வரவன் இப்படிதான் இருக்கனும் "டெபனிஷன் "வச்சிருத்தேன்.

"அது என்ன டெபனிஷன்மா"

"ஸ்ரீராமனா இருக்கனும், என்னமட்டும்தான் பார்க்கனும்."

"உன்ன எங்கடி பார்க்க விட்ட."

"ஹாஹா" என்று பாட்டி சிரிக்க, என்ன கேக்கபெக்கன்னு சிரிப்பு வந்தேனா வாய உடைச்சிடுவேன்.அப்போ உனக் என்மேல நம்பிக்கையில்ல சிலுக்கு சொல்லறத நம்புவ, நம்பிக்கையில்லாத பொண்டாட்டி எனக்கு வேனாம், வாசு ஆபிஸூக்கு கிளம்பிக்கொண்டிருந்தான், என்ன தேடற வாசு, அமைதியாக இருந்தான், நான் பட்டன் போடவா,

தேவையில்ல,அவன் பின்னாடியே சுத்தினாள்,
அவன் கோபமா இருக்கான் பாட்டி,

விடு மித்ரா மதியம் கூல் ஆயிடுவான்,டேய் வாசு சாப்பிட்டு போடா.எனக்கு வேணாம் நீயே எல்லாத்துயும் கொட்டிக்கோ!.

வாசு சாரிடா,இனிமே இப்படி செய்மாட்டேன் , சாப்பிட்டு போ வாசு என்று மித்ரா வாசுவின் கையை பிடித்தாள்,

கையை விடுடி.கையை தட்டிவிட்டு சென்றான்.
எல்லாம் உங்களால தான் சாப்பிடாத போறான் ,அக்கா மாமா வெளில்ல சாப்பிடுவாரு நீ ஃபில் பண்ணாத. நான் ஸ்கூல் கிளம்புறேன் .

மித்ரா அவனுக்கு பொங்கல் பிடிக்காது அதான் வேணாம் போயிட்டான்,

சாந்தியக்காகிட்ட சொல்லி அவருக்கு புடிச்சத செய்ய சொல்லுங்க பாட்டி.,(சமையல் உதவிக்கு வைத்த ஆள்).

"நீ வா சாப்பிட"

எனக்கு வேணாம் பாட்டி,வாசு பசி தாங்க மாட்டான், என்மேல அவனுக்கு கோவம், நான்தான் தப்பு பண்ணி ட்டேன் சொல்லி அழ ஆரம்பித்தாள்.

பாட்டி அவ கண்ணை துடைத்துவிட்டு, அவ்வளவு அண்பு புருஷன்மேல, அப்பறம் ஏன் தள்ளிவைக்கிற அவன. மனைவி கடமையின்னா சமைச்சு போடறது , துணிதுவைக்கிறது இல்ல, அவன தாங்கறது தான் மனைவி அது சந்தோசமா இருத்தாலும் சரி கஷ்டமா இருத்தாலும் சரி, விட்டுக்கொடுத்து வாழ்னும் மித்ரா, அவனுக்கு போன் போட்டுதரேன் பேசு, டேய் வாசு இப்ப எதுக்கு சாப்பிடாத போனே,நீ சாப்பிடலன்னு மித்ராவும் சாப்பிடல. இந்தா பேசு அவங்கிட்ட.

"வாசு",

"எதுக்குடி போன் பண்ண",

"சாப்பிட வா வாசு",

"நான் வரல",

பாட்டி சொன்னாங்க, இந்த பணத்துக்காக பண்னை வீட்ட உன் பெயரல எழுதி தராங்கலாம். ஏய் அந்த வீடே என்னது தான் எனக்கே எழுதி தருதாமாம் சிலுக்கு.

சாப்பிட வா வாசு,

எனக்கு வேணாம்.

என்னடா ரொம்ப கெஞ்ச வெக்கற.உன்ன யாருடி கெஞ்ச சொன்னது, "கொஞ்சுடி மாமன".

பாட்டி அவன் கொஞ்ச சொல்லறான்.

அவன் அலப்பறை தாங்க முடியல , போனாபோது ஆசைப்பட்டு கேட்கறான் சின்னபையன்.சரி பாட்டி..

என் செல்லக்குட்டி , பட்டுக்குட்டி ,பூஜ்ஜிக்குட்டி,அப்பறம் பாட்டி பண்ணிக்குட்டி,எருமைக்குட்டி என்று சொல்ல,

ஆங் பண்ணிக்குட்டி, ஏய் செல்லாது,செல்லாது பஸ்ட் இருந்து கொஞ்சு,

வாசு ரொம்ப பண்ணாதடா பசிக்குது.மாமாவ கொஞ்சன இல்ல அதுக்கு ச்சு என போனில் கிஸ் பண்ணினான். முகம் சிவந்து போனாள்.

ஹாய் மித்து போனில் அண்ணனா, என்ன ரோமன்ஸா ஓட்ட ஆரம்பித்தாள் ரம்யா. அரைமணி நேரத்தில் வாசு வந்துவிட்டான்.வா ரம்யா லீவா, ஆமாமண்ணா.

மித்ராவும், வாசுவும் சாப்பிட்டு முடித்தார்கள்,வாசு பாட்டியின் பக்கத்தில் அமர்ந்தான். பாட்டி உள்ளே இருந்து ஓரு செயினை எடுத்து வந்தாள் ,பாட்டி என்ன இது இவ்வளவு நீட்டா இருக்கு செயின் கோல்டா பாட்டி,

பாட்டி, ரம்யா,சாந்தி சிரித்தார்கள். உருளையா இருக்கு , ,

வாடி உள்ள ,இரு வாசு என்னன்னு கேட்டு வாரேன் யாருதுன்னு தெரியல.மித்ராவை ரூமிற்குள் இழுத்து சென்றான். எவ்வளவு பெரிசா இருக்கு பாரேன் இரு கையால் நீட்டி காண்பித்தாள். அவள் கையை இழுத்து அவன் இடுப்பில் வைத்தான், கட்டுடி ,இது உங்க இடுப்புக்கொடியா ச்சீசீ , என்னடி ச்சீ காலையில என் வயிற இருக்க கட்டிக்கிட்ட அதான் கழண்டுச்சு, இததான் தேடிட்டு இருத்தேன்.

எல்லாரும் என்ன நினைப்பாங்க இந்த வயசுல உனக்கு தேவையா வாசு,

ஏய் நான் சின்ன வயசுல இருந்து போட்டுட்டு இருக்கேன், அவளை நெருங்கி கட்டிக்கொண்டான்

கட்டிட்டியா

ம்ம் இனிமே விழாது.

கும்முன்னு செமயா இருக்கிறடி, ஐ லவ் யுடி.

கையை எடுடா,

ஆரம்பிச்சிடுவியே , சரி நான் கிளம்பிறேன். பாய் தேனு மிட்டாய்.
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Top