Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 15

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 15
1459


வாசு எங்க போறோம் ,

ம் சொல்றேன்,மித்ரா கடையில வேலை செஞ்சானே அஷோக் அவன் நிறைய பணத்தை சுருட்டியிருக்கான்.

என்ன சொல்ற வாசு,பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்திட்டான்,அதான் நிறுத்திட்டேன்.

ஸ்டாக் ரெக்கார்டுல 150 அரிசி மூட்டை இருக்கு, சேல்ஸ்ல 100 மூட்டை இருக்கு மீதி மூட்டை காணோம், அது மாதிரி எல்லாம் பொருளும் வெளிய போயிருக்கு, ஹோட்டல்காரங்க தினம் தினம் வாங்கற ஐடம்ஸ் பிராடு பண்ணியிருக்கான். V.D.CONSTRUCTORS என்ன வாங்கறாங்க.

அவங்க ஓல்டு ஏஜ் ஹோம்ஸ் க்காக மாதம் மாதம் நம்மகிட்ட தான்

மளிகை பொருள் 25000 க்கு வாங்குவாங்க, நம்மதான் டேலிவரி செய்வோம்.ஆனா அவங்கிட்டே மூனு வருசமா 60,000 பில் போட்டு வாங்கிருக்கான்,அவங்க அகௌண்டட் உடந்தை.

அந்த M.D கூட கண்டுபிடிக்க முடியில, ஆபிஸ எப்படிதான் நடத்தறாரு இதுல வெளிநாட்டுல போயிபடிச்சிட்டு வந்தாருன்னு தாத்தா சொன்னாரு.

நானும் விசாரிச்சேன் மித்ரா, ஏதோ பொண்ண லவ் பண்ணறானாம்,அதான் அவன் பிஸி.

பாரேன் வாசு ,அவன் வெளிநாட்டுல படிச்சி என்ன பிரயோசனம் பொண்ண பார்த்தவுடனே விழுந்துடறாங்க.

ஏன்டி, காதலிக்க கூடாதா.

இப்போ நீயே எடுத்துக்கோ, எவ்வளவு புத்திசாலி,திறமைசாலி நீ, என்ன பார்த்து கல்யாணம் பண்ணி உன் கரியரே போச்சு.

அப்படியா

ஆமாம் வாசு , இதே நீ கடையில வேல செஞ்சு படிபடியா முன்னேறி ஆறு, ஏழு வருஷம் கழிச்சி இந்த மாதிரி சூப்பர் மார்கெட் வைக்கலாமில்ல.நீயும் முட்டாள்தான.

ஹாஹா என்று சிரித்தான் வாசு, வண்டியை ஓரத்தில் நிறுத்தி மித்ரா தோளில் கையை போட்டு, படிபடியா முன்னேறி ஆறு, ஏழு வருஷம் கழிச்சி இந்த மாதிரி சூப்பர் மார்கெட் வைக்கிறதுக்கு, பத்து நாள்ல உன்னை கல்யாணம் பண்ணி அந்த சூப்பர் மார்கெட்டுக்கு ஓனர் ஆன நான் முட்டாளா , புத்திசாலியா சொல்லுடி என் பொண்டாட்டி.

இந்த வாசு தோற்று போறானா அவன் பொண்டாட்டி ராங்கிட்ட மட்டும்தான் . என் விக்னஸ் நீ.

ஆமாம் நம்பிட்டோம், என்னடி முனுமுனுக்கிற. சரி விஷியத்துக்கு வரேன்.

அவன் மச்சான் கூட சேர்ந்து அம்பத்தூர்ல மளிகைக்கடை வச்சிருக்கான்.

மித்ராவின் கையை பிடித்து அந்த கடைக்குள் நுழைத்தான், ஏய் எதுக்கு வர அஷோக் வாசுவை நெருங்கி வந்தான், வாசு கை சட்டையை மடித்துவிட்டு, அஷோக் கையை முறுக்கி இப்ப சொல்லுடா எனக்கு கேட்க உரிமை இருக்கா இல்லையா ,இங்க இருக்கறது எல்லாம் என்னுடைய பணம். அன்னிக்கு என்ன சொன்ன உனக்கு இதுக்கு எந்த சம்மதமில்லன்னு.

அஷோக் அவன் மச்சான், இரண்டு ஆட்களை அழைக்க, அவர்களையும் அடித்து கீழே உட்கார் வைத்தான்.என்னடா பார்க்க டிசண்டா இருக்கேன் ஓண்ணும் தெரியாது நினைச்சியா பக்கா ரௌடிடா. அம்மா, ஐயாவ விட சொல்லுங்கமா ,எங்களுக்கு இரண்டு பெண் குழந்தை இருக்கு என்று அஷோக்கின் மனைவி கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

வாசு , அவனவிடு ,அஷோக் நீயே கேட்டாலே நான் உதவி செஞ்சிருப்பேன், கண்ணு இல்லதான ஏமாத்திருக்க.

இந்த கடைய மித்ரா பேருல எழுதி குடுடா, இதவிட்டா எனக்கு பொழைப்பில்ல சார்,

வாசு மூனுமாசம் டைம் கொடு பணம் செட்டில் பண்ண. அவன் கடை நமக்கு வேணாம்.



ரொம்ப தேங்க்ஸ் மேடம். சரி, வாசு மித்ரா கையை பிடித்துக்கொண்டு காரில் ஏறினான்.

உனக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது வாசு ,கூலா இரு வாசு.

மித்ரா ஹோட்டல சாப்பிட்டு வீட்டுக்கு போகலாமா பசிக்குது ரொம்ப.

அது வாசு நான் ஹோட்டல சாப்பிட கொஞ்சம் தடுமாறுவேன்.ரேஸ்ட் ரூம் வேற போனோம் .

பைவ் ஸ்டார் ஹோட்டல் முன்னால் காரை நிறுத்தினான். ரூம் புக் பண்ணி,மித்ராவை ரூமுக்குள் அழைத்து சென்றான்.மித்ரா உனக்கு என்ன லன்ச் ஆடர் செய்யிரது.

சாம்பார் சாதம் நெய், தயிர் போதும் வாசு, அவனுக்கு பிடித்த நான்-வெஜ் ஆடர் செய்தான். மித்ரா வா என்று ரேஸ்ட் ரூமை காட்டினான். சிறிது நேரத்தில் ஆடர் செய்த உணவு வர மித்ராவுக்கு பரிமாறினான்.

மித்ரா ,"உன் சாப்பாடு சல்லுனு இருக்கு",

காரமாதான் சாப்பிடுவியா வாசு, ஆமாம், நீயேன் இப்படி சாப்பிடுற.

முதல்ல லன்சு முடி அப்பறம் சொல்றேன்.

கால்ல நல்லா நீட்டி பெட்ல சாஞ்சி உட்கார்ந்துகோ மித்ரா , அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

வாசு அப்பா இறந்துட்ட பிறகு சித்தாப்பா வீட்ல இருந்தேன்,ரூம்ல அடைச்சி வைச்சாங்க,ஓரே இருட்டா இருக்கும், பைத்தியமாதிரி கத்துவேன்.யாரும் பேச மாட்டாங்க சாப்பாடும் கொடுக்க மாட்டாங்க, நைட்தான் வச்சிட்டு போவாங்க கண்ணு வேற தெரியாதா,

வாசு அவளை தோளில் சாய்த்துக்கொண்டான்.

எங்க சாம்பார் இருக்குன்னு தெரியாது, வேறும் சாதம் மட்டும் சாப்பிடுவேன், ஓர் டைம் ஏன் உயிர் வாழனும் தோனும் யோசித்து யோசித்து பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கும், யாருக்கும் தெரியாத சித்தி ஹெல்ப் பண்ணுவாங்க, நாலுமாசமா இப்படி சாப்பிட்டு காரம் எடுக்கமுடியல, ரூசியா சாப்பிட இன்ரஸ்ட்டும் வரல. ஒரு நாள் கதிரேசன் தாத்தா என்னை பார்க்க வந்தாரு,நான் ஆளே தெரியதா அளவுக்கு ஒல்லியா போயிட்டேன்.அவரு உடனே பெரியப்பாவை கூட்டிட்டு வீட்டுக்குவந்தார். பெரியப்பா சண்ட போட்டார் சித்தாப்பாகிட்ட ,அப்பறம் என்னை அவங்க வீட்டு வர சொன்னாரு நான் யாருக்கும் பாரமா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன். எங்க அப்பா முதல்ல ஆரம்பிச்ச கடையை கேட்டேன். தாத்தாவுடன் கடைய ரண் பன்னேன். சோ, அப்ப இருந்து காரம் எடுக்கிறதுல்ல.

வாசு ஃபில் பண்ணறீயா,அவள் முகத்தை கையில் ஏந்தி,ரொம்ப கஷ்டபட்டியா, ம்ம் அவன் கண்ணீர் அவள் இதழ்மேல் விழுந்தது. அவன் கண்ணீரை ரூசித்தாள். ஏய் உப்பு கரிக்கும்டி,

பரவால்ல எனக்கான கண்ணீர். கண்ணத்தில் முத்தமிட்டான், இப்படி பண்ணாதே வாசு எனக்கு பிடிக்கல ,

போடி, ஆங் உனக்கு ஓரு கிப்டு வாங்கன. "என்னது"

காலில் கொலுசு அனுவித்தான்.

"கொலுசா ,சல்சல் சத்தம் நிறைய வருமா, ரொம்ப சத்தம் எனக்கு பிடிக்காது வாசு" தொட்டு பார்த்தாள் இது கோல்டா.

ஆமாம் , சத்தம் எனக்கு மட்டும் கேட்கும்.

எப்படி?

டேமோ காட்டடா, என் கால், உன் காலுமேல இப்படி உரசினா ,

டேய் கால எடுடா!

"ரொமன்ஸ் பண்ண விடமாட்டியே"

ஏமாத்தி கல்யாணம் செஞ்சுட்டு ,ரொமன்ஸ் வேற கேடு, மொதல்ல பிரண்டு ஆகு , ஓகேண்ணா லவ்வராகு, பிறகு புருஷனா நீ செட்டாகுறீயா யோசிக்கிறேன்.

ஏன்டி நான்தான் தாலி கட்ட சொல்ல ப்ரபோஸ் செஞ்சேனே,

அதுவரைக்கும் உன்மேல கோவமில்லடா, உன் ப்ரபோஸல்ல கேட்டு ஐயரே மந்திரத்தை சொல்லறத நிறுத்திட்டாரு. செம டென்ஷன் ஆனேன்.

(அப்படி என்னங்க வாசு சொன்னான் கெஸ் பண்ணுங்க.)

மித்ராவை வீட்டுல டராப் பண்ணிட்டு ஆபிஸ் சென்றான்.இரவு 9 மணிக்கு வாசுவும், மனோவும் வீட்டில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்துக் கொண்டிருந்தார்கள்.

மித்ரா உனக்காக மல்லிப்பூ, அல்வா வாங்கிட்டு வந்தேன் இந்தா.

தேக்ஸ் வாசு. பாட்டி இந்தாங்க அல்வா.

ஏண்டா பாட்டி சாப்பிடதான் அல்வா வாங்கின,த்தூ இதுல என் பொண்டாட்டிக்காக வாங்கறன்டா பில்டப்பு.

பாட்டி இவங்க என்ன வேலை செய்யறாங்க, அதுவா ஒரு பொட்டி மாதிரி வச்சிருங்காக இல்ல ,அது வச்சி நாங்க பேங்க்லிருந்து போன் பண்றேன் உங்களுக்கு லோன் வேனுமா கேட்பாங்க ஏதோ கால் செண்டர்

"டேய் உன் சிலுக்க அடக்கிவை"-மனோ

நம்ம பண்னையிலே நிறைய வெகண்ட் இருக்கு மித்ரா எங்க வரானுங்க. இவங்க அப்பன் இருக்கானே அவனும் வாசு மாதிரியே, கட்டடம் கட்டிறேன் மேஸ்திரி வேல செஞ்சான்,வாசு பிளவர் வாஸ் எடுத்து வீசினான், மித்ரா கீழ குனிஞ்சுக்கோ நம்மளை நோக்கி ஏவுகனை வருகிறது.

"ஏய் சிலுக்கு எங்க அப்பா இஞ்சினியர்" ,

தெரியுமுடா, வீடுதான கட்டனா.

வந்தா கொண்ணுடுவேன் .

ஏன்டா! மனோ உனக்குகூட அறிவுயில்ல, புதுசா கல்யாணம் ஆனவங்க தொந்தரவு செய்யறே.

அப்படியே உன் பேரன் எல்லா செஞ்சிட்டான் ம்கும்.

நாளைக்கு ஆடிட்டிங், என்னை கொஞ்சம் வேல செய்யவிடு சிலுக்கு.

வா மித்ரா நீ ஏன்கூட படுத்துக்கோ ,பாட்டியின் ரூமில் மித்ரா தூங்கினாள்.
 
thks sathya sis, chitra sis, pooja mam, banu mam for giving support to this story.
 
Top