Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 13

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 13



மாட்டேன், அவன் எனக்கு வேணாம் பாட்டி.


அப்படி சொல்லாதடா , நீ எங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி. வேணும்னா அவன வீட்ட விட்டு தொறத்திடலாம்.

கண்ணுதெரியாத மகாலட்சுமி -மித்ரா,

டேய் செல்லம் இப்படி பேச கூடாதுடா.

.அக்கா , மாமா ரூம்ல வேல இருக்கு நான் போறேன் என்று சின்னா மேல சென்றான். சரிடா.

பாட்டி நீங்கதான் சொன்னீங்க அவன் நம்ம எதிரின்னு.

ஆமாம் யாரு இல்லன்னா, எதிரிய எப்போதும் பக்கத்தில வச்சி செய்யனும். உனக்கு வாய்த்த அடிமை ,உனக்குனு ஒரு அடிமை சிக்கிட்டான்ல பிறகு என்ன.

யாரு உன் பேரனா, இந்த ஊரையே ரூபாய்க்கு இரண்டுன்னு வித்திடுவான்.அவன் எனக்கு அடிமையா.

உன் அன்புக்கும், காதலுக்கும் அவன் அடிமையாவான்,ஏற்கனவே உன்ன பார்த்து மயங்கிதான் இருக்கான்.என் செல்லம் இந்த பாட்டிக்காக இதுக்கூட செய்ய மாட்டியா, அப்பறம் எப்படி பழிவாங்குறது.

உனக்காகதான் அவன விட்டுவெச்சிருக்கேன், ரொம்ப ஓவரா பண்ணா பழிக்குப்பழி கான்சப்ட் கிடையாது. சரி எனக்கு டைம் குடுங்க,

ஏய் மித்ரா அதுக்கு டைமே இல்ல

என்னடி சொல்ற

இன்னிக்கு உனக்கும், அண்ணாவுக்கும் என்ன

என்ன

பஸ்ட் நைட்டு, அய்யயயோ பாட்டி காலையில நான் பேசணதுக்கு

வச்சி செய்வானே , தனியா சிக்கின சிக்கன் 65 தான், என்ன பண்ணறது கையை பிசைந்தாள்.

கெத்த மைன்டைன் பண்ணு இன்னிக்கு எப்படி வெரப்பா பேசினியோ , அதுப்போல நடந்துக்கோடி.

பாரும்மா கதவை திறந்து உள்ளே வந்தார் மித்ரா ரெடியாகுடா , ஊருக்கு கிளம்ப முன்னாடி சொந்தகாரங்க எல்லாம் உன்ன வந்து பார்ப்பாங்கடா, வேற சாரி மாத்திக்கோ, ரம்யா கூட ஹல்ப் பண்ணம்மா, சரி ஆன்ட்டி.

நைட்டு ப்ளான சொல்லுறேன், பானுமதி

வெளியே பாருக்கு உதவ சென்றார்.

சிறிது நேரம் கழித்து அனைவரும் வந்தார்க்ள், மித்ராம்மா ,சொல்லுங்க பெரியப்பா,வாசு தம்பி ரொம்ப நல்ல தம்பிடா, தீடிரென்று இப்படி கல்யாணம் நடந்துச்சே என்று மனசல ஏதுவும் நினைக்காதே, தம்பிக்கிட்டே அனுசரனையா நடந்துக்கோடா.

எனக்கு அப்பறம் என் பிள்ளைகள் உன்ன பார்க்க மாட்டாங்கடா, அதனால தான் இந்த கல்யாணத்துக்கே ஓத்துக்கிட்டேன்.ஆமாம் பாப்பா உனக்குன்னு ஓரு எதிர்காலம் வேணாமா .என்று கதிரேசன் தாத்தாவும் கூறினார். பாப்பா நான் கொஞ்ச நாள் கேரளா இருக்கிற அக்காவீட்டுக்கு போய்யிட்டு வரட்டாம்மா.அக்கா கூப்பிட்டே இருக்காங்க,

சரிங்க தாத்தா,

மித்ரா,என்ன வாசு,பெரியப்பா,பெரியம்மா,தாத்தா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கனும். இருவரும் விழுந்து எழுந்தார்கள். வாசு வை அனைத்து தம்பி எப்படி நான் நடிச்சேன்,சூப்பர் மாமா என்று மெதுவாக சொன்னான். அதேன்ன புள்ள வாசுன்னு புருசன் பேரு விட்டு கூப்பிடறது, மாமா சொல்லி கூப்பிடனும் என்று பெரியம்மா அவள் கண்ணம் தொட்டு கூறினார். மித்ரா நாங்க போயிட்டு வரட்டுமாடா. ம்ம் பெரியப்பா.

இரவு மணி 10.30 க்கு மித்ராவை அலகரித்து அவள் ரூமில் அனுப்பினார்கள். போகலாமா, வேணாமான்னு மெல்ல அடிவைத்து நடந்து வந்தாள். தனியாக வாழ்ந்த அவள் ரூமில் இன்று ஒரு ஆண்ணுடன் , கணவன் என்னறாலும் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.ஆனால் வாசு காலை நீட்டிக்கொண்டு பெட்டில் சாய்ந்திருந்தான்.

இந்தா வாசு பால், பாலா

ம்ம் பாட்டி கொடுக்க சொன்னாங்க, சரி பாலை வாங்கி டேபிள்மேல் வைத்தான். அப்பறம்,

அப்பறம், ஹாங், கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொன்னாங்க .ஏன்னாம்-வாசு.

நீ என்னவிட பெரியவனாம் அதனால,

காலையில 'டா' போட்டுபேசினியே அப்ப பெரியவன் தெரியில.

அது அது ,ஆரம்பிச்சிட்டான் மனத்திற்குள் நினைத்தாள்.

அப்பறம்!

அப்பறம், தூங்க சொன்னாங்க வாசு.

அப்படியா சொல்லிச்சு , உன் பாட்டிடி!

ஆமா வாசு, நான் போய் தூங்கட்டா,சரி தூங்கு,

அப்பாடி விட்டுட்டான். லைட்ட அனைச்சிட்டு, பெட்டில் மித்ரா பக்கத்தில் படுத்தான்.

டேய் ஏன்டா என் பக்கத்தில படுக்கற.

என்னது டேயா, ஆமாண்டா கீழே போய்படு.

நான் ஏன்டி கீழ போய்படுக்கனும்,

இது என் பெட் , யாரும் என் பெட்ல நான் அலோ பண்ண மாட்டேன் உனக்கும் எனக்கும் ஓத்துவராது ,நீ கீழே படு ,

இது வேணா உன் பெட்டா இருக்கலாம், நீ என் பொண்டாட்டி, அதுமட்டுமில்லாம எனக்கு கீழ தூங்கி பழக்கமில்ல. நான் உன்கூடதான் தூங்குவேன். என்ன பண்ணவ.

சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர். ஜல் ஜல் ஜல் சத்தம், வாசு

என்ன!

ஜல்ஜல் கொலுசு சத்தம் கேட்டதுதான.

ஆமா, என்ன இப்போ,வாசு மல்லிபூ வாசன வருதா ,ஆமான்டி,ஆனா நீ தான் தலையில வச்சிருக்கியே, செம்ம மூட் வருது.

வாசு இது மல்லிபூ இல்ல , இது முல்லைப்பூ.

அப்படியா, ஆமாம் வாசு,நான் உன் நல்லதுக்கு சொன்ன என் பக்கத்தில படுக்காதனு,


என் நல்லதுக்கு ஹம் நம்பிட்டேன்,


வாசு நான் ஒண்ணு சொல்லுவேன் நீ நம்புவியா, 'சொல்லு' , நானும், அஞ்சலியும் டியர் ப்ரண்டு,ஓருநாள் அஞ்சலி தூக்குமாட்டி செத்துட்டா.

ஏன் சூஸ்சைட் பண்ணிகிட்டா!

காதல் தோல்வி,

அச்சசோ அப்பறம்,

அல்பாயுசுல செத்திட்டால்ல பேயா அலையறா , அதுவும் ஹான்டுஸம்மா பசங்கள பார்த்தா விட மாட்டா ,தினமும் என் பக்கத்தில வந்து படுப்பா, அந்த இடத்தில தான் நீ படுத்துக்கிற.

அதுக்குதான் சொன்ன. இப்ப டைம் என்ன வாசு. டைம் 12 ஆகுது. நரி ஊள விடற சத்தம் கேட்குதா! , யாரோ அழற சத்தம் கேட்குதா!

ஆமாண்டி,


அவ வர நேரம் வாசு இனிமே என் பக்கத்தில படுக்காதே என்ன.

சரிடி, நான் கீழே போய் படுக்கவா

சரி வாசு . அப்பாடா பயபுள்ள பயந்துட்டான்.திடீரென்று அவளை நெருங்கி கட்டிக்கொண்டான்.டேய் என்னடா பண்ணற, அய்யோ மித்ரா என் பக்கத்தில அஞ்சலி பேய் படுத்திருக்குடி, எனக்கு பயமா இருக்குடி சொல்லி டைட்டா கட்டிக்கொண்டான். ஏய் விடுடா என்னை, மூச்சு மூட்டுது.

உன் பக்கத்தில பேயா, பொய் சொல்லாதடா, ஏய் என்ன தொட்டு கூப்பிடுதுடி.எங்கடா அங்க பேயிருக்கு,

உனக்கு எப்படி தெரியும் மித்ரா. என் கண்ணுக்குதான் தெரியுது. அவனுடைய ஸபரிஸம் இவளுக்கு ஏதோ செய்ய. வாசு , நான் போய் சொன்னேன் என்ன விட்டுடு ப்ளிஸ்.

ஏய் தேனு மிட்டாய் , யாருடி இந்த ஐடியா கொடுத்தது. செமயா,ஜாலியா இருந்தது. அது யாருன்னு சொல்ல மாட்டேன். பாட்டி தெளிவா சொல்லிச்சு என்ன மாட்டிவிடாதன்னு என்று நினைத்தாள்.

சொல்றீயா இல்ல லிப் –டு-லிப் கிஸ் அடிக்கவா.

அய்யோ வேணா, பாட்டிதான் சொன்னாங்க.
சிலுக்கா இவ்வளவு வேல பண்ணுது.......
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
ஹா ஹா ஹா
பெருசுங்கெல்லாம் செம கேடியா இருக்காங்களே
மித்ராப் புள்ளையை எல்லோரும் ஏமாத்துறாங்களே
அக்கா வீட்டுக்கு போறீங்களா தாத்தா?
ஹா ஹா ஹா
அஞ்சலிப் பேய் இருக்குதா?
மித்ரா பக்கத்துலதான் படுக்குமா?
சில்க் பாட்டி வாசுவிடம் மாட்டிக்கிட்டாங்க
ஹா ஹா ஹா
 
Top