Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் அழகிய தேடல் நான் ....06

Advertisement

niranjana subramani

Well-known member
Member
உன் அழகிய தேடல் நான்…06

அழகம்மாள் தனது கதையை கூறிமுடித்தவுடன் அமைதியாக ஜெகனந்தனை நோக்க,

“ அப்போ நீ உன் உயிருக்கு பயந்துதான் இப்படி வேஷம் போட்டு தெரியுற??” என நம்பிக்கை இல்லாத குரலில் கூறியவனை கண்டு கடுப்பான அழகம்மாள் முறைக்க

“ என்ன முறைக்குற??. நீ சொல்றது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. ஒரு வேலை உனக்கு உயிருக்கு ஆபத்துனா போலீகிட்ட போயிருக்க வேண்டியதுதானே” என கூறியவனை கண்டு கோவமாக எழுந்தவள்

“ யோவ் நீ எதோ கேட்ட மிரட்டுனன்னு மட்டும் நான் உண்மைய சொன்னேன்னு நினைக்காத. உன்கிட்ட நான் பொய் சொல்லி வேலை பார்த்திருக்கேன் அது எனக்கே குற்றஉணர்ச்சியாவும் ரெண்டு வருசமா யாருகிட்டயாவது மனசுல இருக்கறதை சொல்லமாட்டோமான்ன்ற ஆதங்கத்துலதான் நான் சொன்னே.

நீ நம்புனா நம்பு நம்பாட்டி போயா. போலீகிட்ட போய் என்ன சொல்ல சொல்லுற யாரு என்னனு தெரியல யாரோ என்னை கொலை பண்ண பார்க்குறாங்க. எனக்கு பாதுகாப்பு குடுங்கண்ணா??. அப்டியே நான் கேட்டுட்டாலும் எல்லாம் உடனே நடந்துடுமா??. எனக்கு பாதுகாப்பு குடுக்குறதுக்குள்ள நான் பரலோகம் போய்ட்டா என்ன பண்ணுறது??.

உனக்கு தெரியுமாய்யா உலகத்துல கொடுமையான விஷயம் தனிமை. அதுல இன்னும் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா பயத்தோட இருக்குற தனிமை. அதுவும் உயிர் பயம்.

யோசிச்சு பாருயா எப்போ எவன் கொல்லுவான், எதுக்கு துரத்துறாங்க, எப்போ மேக் அப் கலையுமோ எப்போ மாட்டிக்குவோமோன்னு எப்படி நடுங்கி பயப்புடுவேன்னு தெரியுமாய்யா??.

எத்தனையோ நாள் நான் தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு நினைச்சு அழுத்துருக்கேன். ஆனா இப்படி அலுப்பாயிஸுல போறதுக்கா என் அம்மா என்னைய பெத்துப்போட்டு செத்துப்போச்சு.

என்னை பார்த்துக்க எனக்கு சம்பாரிக்கனு உழைச்சு கார் ஆக்சிடெண்ட்ல செத்துபோனாரு என் அப்பா. இப்படி கோழையான முடிவை எடுக்கவா என்னைய என் தாத்தா அந்த தள்ளாத வயசுலயும் ரிக்ஷா ஓட்டி சம்பாரிச்சு என்னைய காப்பாத்துனாரு??.

இப்படி பல விஷயங்களை யோசிச்சு வாழணும்ன்ற ஆசையை தினம் தினம் என் மனசுல நான் விதைச்சுக்குவேன். எனக்கு தெரிஞ்ச வழில நான் தப்பிச்சு வாழணும்ன்னு ஆசைப்பட்டேன். அப்படி பண்ணுறேன்.

அதோட எனக்கும் கனவு இருக்குயா. என் அம்மா செத்தவுடன் என் அப்பா சாகுறவரைக்கும் என் அம்மா நினைவோட என் அம்மாவை மட்டும் காதலிச்சுக்கிட்டு இருந்தாரு.

என் தாத்தா வீட்டுல அடிபட்டு சாககிடக்குறாரு ஆனா கைல என் ஆயா போட்டோவை வச்சிக்கிட்டு இருந்தாரு. அம்ம்புட்டு காதல், எனக்கும் அப்படி காதல் பண்ணி வாழணும்ன்னு ஆசை ஆனா………” என அழகம்மாள் உணர்வுபூர்வமாக பேசிக்கொண்டிருக்கையில்

“ ஓஹோ!!... அதான் சார் என் போனைக்கூட எடுக்காம இருந்திங்களோ???. இதான் உன் முக்கியமான மீட்டிங்கு…..” என கோவமான குரலில் திட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தார் வேதனந்தன்.

அவரை கண்டு வேகமாக ஜெகனந்தனும் அழகம்மாளும் எழுந்து நிற்க வேதனந்தன் அழகம்மாளை உக்கிரமாக முறைத்துக்கொண்டிருந்தார்.

பேரன் போன் எடுக்காதது மேலும் அவன் போலீஸ் கம்பளைண்ட் செய்துருப்பது என அவனின் மீது அதிருப்தியுடன் வந்தவரை வினோத் ஜெகனந்தனின் கட்டளையின் பெயரில் உள்ளே விடாது தடுக்க அது மேலும் அந்த பெரியவரை கோவம் கொள்ளசெய்ய வேகமாக பேரனின் அறைக்கு நுழைந்தவரின் காதில் விழுந்த ‘ காதல் பண்ணி வாழணும்னு ஆசை’ என்ற அழகம்மாளின் குரல் வேதனந்தனை கொதிநிலை அடைய செய்தது.

“ என்ன என்ன தாத்தா எதுக்கு இவ்வளவு கோவம்??”

“ ஹ்ம்ம் கோவமா நீ பண்ணுன காரியத்தை பார்த்து எனக்கு நெஞ்சு வலி வந்துடும் போல. காதலாம் காதல் ஒரு தகுதி வேணாம். இல்ல ஒரு ரசனை வேணாம்” என மீண்டும் எரிந்து விழுந்தார் வேதநந்தன்.

‘ இந்த வெள்ளை மண்டை நானும் இந்த நெட்டையனையும் காதலிக்குறோம்ன்னு நினைக்குது போல’ என சரியாக வேதனந்தனின் எண்ணத்தை படித்தவள் ஜெகனந்தனை காண அவன் குழப்பத்தோடு தாத்தாவை பார்த்துக்கொண்டிருந்தான்.

அதனை கண்டவள் நமட்டு சிரிப்புடன்,
‘ துரை இம்புட்டு நேரம் என்னைய படுத்துனான்ல இப்போ பாரு இந்த அழகோட வேலைய. எப்பிடியும் நான் வேலையை விட்டு நின்றுடுவேன். நீயும் என்னைய துரத்திடுவ. அப்புறம் எதுக்கு சும்மா போனும்’ என மனதில் எண்ணிக்கொண்டிருந்தவள் வேகமாக ஒரு முடிவுடன் “ ஹம்ம்ஹும்….” என செருமினாள் அழகம்மாள்.

அந்த சத்தத்தில் மற்ற இருவரும் இவளை நோக்க அழகம்மாள் வேதனந்தனை நோக்காது ஜெகனந்தனை கண்டு

“ நான் வரட்டுங்களா. அப்புறம் நம்ம விஷயம் பேசுவோம்” என சன்ன சிரிப்புடன் சற்றே கொஞ்சல் குரலில் அழகம்மாள் பேச அதனை கேட்டு வேதனந்தன் அழகம்மாளை பார்வையால் எரிக்க.

ஆனால் அவளின் குரலில் இருந்த கொஞ்சலை கவனிக்க வேண்டியவனோ அதனை பற்றி யோசிக்காது வேற சிந்தனையில்,

“ ஹ்ம்ம் நீ இப்போ போகணுமா??” என கேட்க

“ ஹ்ம்ம் நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சுல்லங்க” என மீண்டும் அதே கொஞ்சல் குரல்

“ ஹ்ம்ம் அதுவும் சரிதான் எனக்கும் இப்போ வேலை இருக்கு. ஆனா உன்னைய விட்டா நான் மறுபடியும் கூபிடுபோது வரமாட்ட” என ஜெகனந்தன் வேலையை மனதில் வைத்து கூற

“ என்னங்க நீங்க??. நீங்க கூப்பிட்டு நான் வராம இருப்பேனா நான் அப்பவே போறேன்னு சொன்னேன் நீங்க தான் இருக்க வச்சீங்க”

“ ஹ்ம்ம் உன் மனசுல இருக்குற காரணத்தை வாங்கணும்ல அதான் சரி சரி நீ கிளம்பு அழகி” என கூற
அழகம்மாள் வாசலை நெருங்கும் போது “ ஏய் அழகி!!” என ஜெகனந்தனின் குரலில் திரும்பி நோக்க

“ உன்னோட போன் நம்பர் குடு. நான் அப்புறம் கால் பண்ணி எப்போ பேசுறதுன்னு சொல்றேன்” என கூறியவனிடம்

‘ இன்னும் என்ன பேசப்போறான் இவன்’ என அழகம்மாள் மனதில் எண்ணிக்கொண்டிருக்கையில்

“ என்ன யோசிக்குற??. ஹ்ம்ம் குடு. நான் இப்போவே கால் பண்ணுறேன் உன்னைய நம்ப முடியாது வேற நம்பரை குடுத்தாலும் குடுத்துடுவ” என கேட்டவனிடம் வேதனந்தன் முன்னிலையில் எதுவும் பேசமுடியாது போனில் எதோ செய்துகொண்டே அவள் நம்பரை குடுக்க உடனே ஜெகனந்தன் கால் செய்துவிட்டான்.

ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க

என அழகம்மாளின் போன் அழைப்புமணி இசைக்க ஒரே நேரத்தில் தாத்தாவும் பேரனும் அழகம்மாளை முறைத்தனர்.

‘ இந்த பாட்டைத்தான் இப்போ செட் பண்ணிக்கிட்டு இருந்தியா??’ என்ற கேள்வியை கண்களில் கேட்டு ஜெகனந்தன் முறைக்க,

வேதனந்தனோ ‘ என் முன்னாடியே டூயட் படுறீங்களா??’ என முறைத்துக்கொண்டிருந்தார்.

‘ இன்னைக்கு இந்த வெள்ளை மண்டை இவனை பாயாசம் போடாம விடமாட்டாரு. நல்ல மாட்டுனாண்ட இவன் இன்னைக்கு யாருகிட்ட இந்த அழகுகிட்டையேவா’ என மனதில் சிரித்துக்கொண்டு தனது வீட்டிற்கு கிளம்பினாள்.
ஜெகனந்தனை தாத்தா முக சுளிப்புடன் முறைத்துக்கொண்டிருக்க

“ என்ன என்ன தாத்தா??. ஏன் முறைக்குறிங்க??” என கேட்டுக்கொண்டிருக்கையில்

“ என்ன முறைக்குறேனா?. ஏண்டா இது எத்தனை நாளா நடக்குது??”

“ எது??”

“ டேய் இந்த காண்ட்ராவிதான். நான் ஒரு நாளும் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்” என கூறியவரிடம்

“ ம்ப்ச் தாத்தா நீங்க என்ன கேட்கணுமா என்ன சொல்லணுமோ தெளிவா சொல்லுங்க. இல்ல கிளம்புங்க எனக்கு நிறைய வேலை இருக்கு” என ஜெகந்நாதன் கடுபடிக்க

“ ஓ!!.... அப்போ அவகிட்ட பேசைல மட்டும் உனக்கு வேலை இல்லையா??”

“ எவகிட்ட??”

இந்த இப்போ போனாலே ஒருத்தி பார்க்க சகிக்கமா இதுல கொஞ்சி கொஞ்சி பேசுற. ஒரு பெரிய மனுஷன் இருக்கேன்னு ஒரு மரியாதை வேணாம்” என கோவமாக கூறியவரிடம்

“ ஓ!!... அழகிட்ட பேசுனதுக்குத்தான் இவ்வளவு கோவமா தாத்தா. அவகூட ஒரு விஷயமா எனக்கு…..”

“ எல்லாம் தெரியும் காதல் விஷயம்தானே??. ஆனா ஒத்துக்க மாட்டேன் நீ உன் மனசை மாத்திக்கிட்டு நான் சொல்ற பொண்ணை கட்டிக்க” என கூறியவரிடம்
மறுபடியும் கல்யாணம்ன்னு பேசுறாங்களே என எரிச்சல் அடைந்தவன்,

“ நான் யாரை கட்டனும்ன்னு எனக்கு தெரியும். ஒரு தடவை உங்களால நான் பட்டது போதாதா மறுபடியும் உங்க மூலமா அசிங்க படணுமா. இது பத்தி பேச வந்திங்கன்னா தயவு செய்து இப்போ எனக்கிட்ட பேச வேணாம்” என எரிந்து விழுந்தான் கோவத்தில்

“ ஓ என்னால பட்ட அவமானத்தை விட இப்போ போனாலே ஒருத்தி அவளை கட்டிக்கிட்டு ஊரு முன்னாடி போய் நில்லு எல்லாரும் அப்படியே உன்னைய மதிப்பாங்க”

‘ நான் எதுக்கு அவளை கட்டிக்கணும்??’ என புருவம் சுருக்கி யோசித்தவன் அப்பொழுதுதான் தாத்தாவின் குற்றச்சாட்டும் அழகம்மாளின் திடீரென்ற கொஞ்சல் குரலும் நியாபகம் வர

‘ அடியே உன் வேலைய எனக்கே காட்டுற. ஆனா பாரு நீ ஆரம்பிச்சதை நான் முடிக்கிறேன்’ என எண்ணிக்கொண்டு ஜெகனந்தன்

“ தாத்தா என் கல்யாணம் விஷயம் பத்தி அப்புறம் பேசுவோம் இப்போ வந்த விஷயத்தை பத்தி மட்டும் பேசுங்க” என வழகம்மான தன் அழுத்த குரலில் வினவியனிடம் ஒரு முறைப்புடன்

“ நீ இப்போ போலீகிட்ட கம்பளைண்ட் பண்ணுன அதோட பின் விளைவுகள் பத்தி யோசிச்சியா??”

“ எல்லாம் யோசிச்சுட்டுதான் முடிவு பண்ணுனேன். இதுக்கு மேல உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னா நான் ஒத்துக்கிங்குறேன். நீங்க உங்க மத்த ரெண்டு பேரன்களை வச்சு உங்க தொழிலை பார்த்துக்கோங்க” என தீர்க்கமாக கூறியவனிடம்

“ ம்ப்ச் உடனே ஏன்டா போறேன்னு சொல்ற??” என சலித்துக்கொண்ட வேதனந்தனிடம்

“ அப்போ இனிமே இது சம்மந்தமா கேள்வி கேட்காதீங்க எனக்கு பதில் சொல்லணும்ன்னு எந்த அவசியமும் இல்ல” என கூறியவனிடம் எதுவும் கூறாது அறையைவிட்டு வெளியேற எண்ணி வாசல்வரை சென்றவர்,

“ ஆனா தொழில்ல நீ என்ன முடிவு வேணும்ன்னாலு எடு ஆனா உன் வாழ்க்கைல நான் தான் எடுப்பேன்” என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் வேதனந்தன்.

‘ அதையும் பார்க்கலாம் தாத்தா’ என மனதில் கூறிக்கொண்டு ஒரு புன்னையுடன் SP யை சந்திக்க சென்றான்.
sp நடராஜனை அவரின் இல்லத்தில் சந்தித்தான் ஜெகனந்தன்.

“ ஹ்ம்ம் சொல்லுங்க ஜெகா என்ன விஷயமா என்கிட்டே பேசணும்?”

“ சார் ரெண்டு வருஷம் முன்னாடி எங்க தொழில்ல சில நரிங்க வேலை பார்த்துச்சுங்க. அதனால நிறைய போலியான தரமற்ற ஆடைகளை மாத்தி வச்சு தொழில்ல சரிவை ஏற்படுத்த பார்த்தாங்க. நான் கண்டுபிடிச்சு எல்லாத்தையும் சரி பன்றதுக்குள்ள பத்துகோடி ரூபாயும் கையாடல் பண்ணிருக்காங்க. இதுவிஷயமா அந்த நரிகளை கண்டுபிடிக்க ஏற்பாடு பண்ணுனேன்.

அதுக்குள்ள என் PA ஜனனியையும் காணோம். அவங்ககிட்ட நிறைய டீடெயில்ஸ் இருந்துச்சு. ஒரு வேலை அவுங்க கூட அந்த நரியா இருந்துருக்கலாம்ன்னு எனக்கு சந்தேகம். அதனால என் ஆளுங்களை விட்டு விசாரிக்க சொன்னேன்.
அப்போ தான் தெரிஞ்சுச்சு ஜனனியும் ஒரு விபத்துல கோமால இருக்காங்கன்னு”

“ சரி இதுவிசயமா எதாவது கேஸ் குடுத்திருக்கிங்களா ஜெகா??”

“ இல்ல சார் இது விஷயமா நான் போலீஸ் கம்பளைண்ட் குடுத்தா என் வாடிக்கையாளர்கிட்ட தேவை இல்லாம சல சலப்பு வரும்ன்னு அமைதியா நானே விசாரிக்க ஆரம்பிச்சேன். ஆனா ஒன்னும் க்ளூ கிடைக்கல.

“ அதனால இப்போ இதை நான் கம்ளைண்ட்டா எடுத்து விசாரிக்கட்டுமா ஜெகா?”

“ நோ நோ சார் நேற்றுக்கு முதல் நாள் என்னோட காரை இடிச்சு என்னைய மயக்கமாக செஞ்சு என்னோட குடோன்லையே கடத்தி வச்சுருந்தாங்க. அப்புறம் ஒரு வழியா அங்கிருந்து தப்பிச்சுட்டேன்” என அழகம்மாளின் பெயர் வராதவாறு உண்மையை ஓரளவுக்கு கூறினான் ஜெகனந்தன்.

“ ஹ்ம்ம் அப்போ இதை கடத்தல் வழக்கா எடுத்து அப்படியே சீக்ரட்டா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி உங்க கம்பெனில அந்த பணத்தை எடுத்தது யாரு என்னன்னு கண்டுபிடிப்போம் ஜெகா”

“ ஹ்ம்ம் ok சார்” என சில விஷயங்களையும் பேசிவிட்டு அங்கிருந்து விடைபெற்று சென்றான் ஜெகனந்தன்.

அதே நேரம் ஜெகனந்தனிடம் விடைபெற்று வீட்டிற்கு சென்ற அழகம்மாள் செம கோவத்தில் இருந்தாள்.

“ இந்தாளு என்ன நினைச்சுகிட்டு இருக்கான். கேட்டான்னு உண்மைய சொன்னா அதுலயும் கேள்வி கேட்குறான். எல்லா நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி. அப்புறம் அந்த வெள்ளை மண்டை எதோ பார்க்க கூடாததை பார்த்த மாதிரி என்னா ஒரு லுக்கு. இன்னைக்கு இருக்கு அந்த நெட்டையனுக்கு” என திட்டிக்கொண்டிருக்கையில்

தீடீரென வீட்டு கதவு தட்ட பட

“ யாரு இது?” என எண்ணிக்கொண்டு கதவை திறக்க
கசங்கிய சட்டை மேல் ரெண்டு பட்டன்கள் கழண்டிருக்க பேண்ட்டில் ஒரு கால் முழங்கால் வரை முடித்துவிட்டு மற்றொரு கால் பாதம் வரை நீண்டு இருக்க கதவின் நிலையில் சாய்ந்து கொண்டு ஒரு கண் மூடி ஒரு கண்ணால் பார்த்து கொண்டிருந்த ஒரு முப்பத்தைந்து வயது மதிக்க தக்க வாலிபனை கண்டவள் அவன் மீது வந்த மது வாடை அவன் முழு போதையில் இருப்பதை அறிந்து,

“ யோவ் யாருய்யா நீ??” என கேட்க

“ அடி என் கருப்பு நிறத்தலகி. மாமனை தெரியல நான்தான் உன்னைய கட்டிக்கப்போற பழனி” என கூற

“ பழனியா??. யாருய்யா நீ முதல்ல இடத்தை காலி பண்ணு” என எரிந்து விழுந்தவளிடம்

“ என் அலகுமா நான்தான்டா மினிமாக்கா சொன்ன உனக்கு பார்த்த மாப்பிள்ளை” என போதையில் தடுமாறிக்கொண்டு கூறியவனிடம்

“ ஏதே இன்னைக்கு சோதனை இன்னும் எனக்கு முடியல போல” என முணுமுணுத்துக்கொண்டு

“ இங்க நான் யாரையும் கட்டிக்குற எண்ணத்துல இல்ல முதல்ல கிளம்புயா??”

“ அப்டி சொல்லப்புடாது வாயில அடி வாயில அடி. இங்க பாரு எனக்கு மூணு தடவை……. த்ரீ டைம்ஸ்…… ஹ்ம்ம் கண்ணாலம் ஏற்பாடு செஞ்சு நின்னுபோச்சு. மூணு பேரும் என்னைய வேணாம்ன்னுட்டு சொல்லிட்டாங்க. அந்த வருத்தத்துலதான் நான் நிறைய குடிக்க ஆரம்பிச்சேன்” என தள்ளாடிக்கொண்டு கூறிக்கொண்டிருந்தவன் அங்கேயே சரிந்து அமர

“ ஏய் ஏய் இன்னாயா செய்ற கிளம்பு முதல்ல கருமம் கருமம் எங்க இந்த முனியம்மா அக்கா” என கத்தியவளிடம்

“ அலகுமா நான் சொல்லுறதை ஒன்னு நிமிட் கேளு பிலீச் முதல்ல ஒரு பொண்ணை பார்த்து பேசி கண்ணாலம் ஏற்பாடு பண்ணுனப்போ கண்ணாலம் சந்தோசத்துல கொஞ்சம் அதிகமா குடுச்சுட்டு காலைல தாலிகட்ட சாயங்காலம் போய்ட்டேன்னா கண்ணாலம் நின்னுடுச்சு.

அப்புறம் மறுக்கா பொண்ணை பார்த்து கண்ணாலம் ஏற்பாடு பண்ணுறப்போ தாலிகட்டுறதுக்கு முன்னாடி போதையில மயங்கி விழுந்துட்டேன்.

அப்புறம் மூணாதடவை கொஞ்சம் ஸ்டடி யாதான் இருந்தேன் ஆனா தாலி கட்டும்போது கொஞ்சம் பார்வை மங்கி பொண்ணு பக்கத்துல இருந்த பாட்டி மேல கட்ட போய்ட்டேன் அன்னைக்கு அடிச்சாங்க பாரு அன்னைக்கு முடிவு பண்ணுனே கண்ணாலம் வேணாம்ன்னு."

" அப்டியே கல்யாணம் ஏற்பாடு பண்ணுனாலும் நீயே கெடுத்துடுவ அந்த கல்யாணத்தை . அப்புறம் எப்படி எவன் உனக்கு பொண்ணு குடுப்பான்" என அழகம்மாள் முணுமுணுக்க அதனை கண்டுகொள்ளாது பழனி உளறிக்கொண்டிருந்தான்

" ஆனா எப்போ உன்னைய பார்தேனோ இப்போ முடிவு பண்ணிட்டேன் உன்னையதான் கட்டிக்கணும்ன்னு. நீ பொறுமையா சாவுகாசமா யோசிச்சு சொல்லு மாமன் உன்னைய கட்டிக்கட்டுமா இல்ல உன்னைய மாமன் கட்டிக்காட்டுமான்னு சரியா. அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் நீ இந்த வேலைய விட சம்பளம் அதிகம் குடுக்குற வேலைக்கு போ இப்போ எல்லாம் சரக்கு விலை ஏறிடுச்சுடா”
என உளறிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றவனை கண்டவள்

“ அட ஆண்டவா இன்னும் எனக்கு என்ன செய்ய நினைச்சுருக்க உள்ள தொல்லை பத்தாதுன்னு புதுசா ஒன்னு தொல்லை குடுக்குதே” என அழகம்மாள் புலம்பிக்கொண்டிருக்கையில் அவளின் அலைபேசி அழைக்க அதில் இருந்த வீணா போன முதலாளி காலிங் என்பதை கண்டு எடுப்பதை வேண்டாமா என யோசனைக்கு பின் எடுத்து காதில் வைத்தவளிடம் ஜெகனந்தன் கூறிய செய்தியை கேட்டு,
“ போயா என்னால முடியாது முடிஞ்சதை செஞ்சுக்கோ” என கோவமாக கத்திவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.

அதே நேரம் வேதனந்தன் தனது அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தார்.

" என்னைய மீறி ஒன்னும் நடக்காது இங்க. எப்படி எப்படி அவ இங்க இந்த வீட்டுக்குள்ள வரான்னு பார்க்குறேன். என்ன என்ன பாட்டு அது ஹான்
ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதா நீ ரோஜாப்பூவா இரு என்ன செய்றேன்னு மட்டும் பாரு" என கோவத்தில் புலம்பிக்கொண்டிருந்தார் .

ஒன்னும் இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணி தேவை இல்லாத சந்தேகத்தாலும் அவசரத்தாலும் இரு உள்ளங்களை சேர்க்க முதல் அடியை எடுத்துவைக்க உதவிவிட்டார் அவர் அறியாமல்.

thanks for the supporting friends
&
plz drop ur comments :love: :love: :love:

next update will be on tuesday (எதோ ஒரு நம்பிக்கைல சொல்லிட்டேன் update கொடுத்துடுவேன் கொடுத்துடுவேன் )
 
Nirmala vandhachu ???
 
Nice epi dear.
Tq for loooooooong epi author ji.
Nangalu marakkutilla neega Tuesday sure ah ud podungo.
So kalayila koopittu vantha Azhaku day full ah katha solli pozhutha kazhichuttu evening veetu poitta??
Ringtone super.
Yedo Pazhani intha jenmathula unn kalyanam illa.
Vella manda yen panic aaguthu thevai illama.
 
Thanks sis ?
 
Top