Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் அழகிய தேடல் நான் .....05

Advertisement

niranjana subramani

Well-known member
Member
உன் அழகிய தேடல் நான்…05

தனது அறைக்கு சென்றவனோ அங்கு ஒருத்தியை மிரட்டியது பற்றி சிறுதும் கவலை கொள்ளாது வினோத்தை அழைத்தான்.

“ சார்!!...” என வந்து நின்றவனிடம்

“ வினோத் நம்ம sp நடராஜன் சாரை பார்க்க முடியுமான்னு கேட்டு appointment வாங்கு”

“ சார் இதை போலீஸ் வரைக்கு கொண்டு போன நம்மளோட தொழில பிரச்சனை ஏற்படலாம் சார். அதோட நம்மளோட shares போட்டுருக்கவங்களுக்கும் உங்க வீட்டுல இருக்குறவங்களுக்கும் நீங்க பதில் சொல்லணுமே. அப்போ நிறைய விஷயம் தெரிய வருமே சார்” என தயங்கி கூறிய வினோத்திடம்

“ இதை நான் யோசிக்காம இருந்துருப்பேன்னு நினைக்குறியா வினோத்”

“ இல்ல சார்…..”

“ நான் நல்லா யோசிச்சுட்டேன். எப்போ என் மேலை கை வைக்குற தைரியம்
வந்துச்சோ அப்போவே நான் யாருனு அந்த முகம் தெரியாத கோழைக்கு காட்டணும். மிச்ச எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் நீ நான் சொல்றதை மட்டும் செய்”

“ சார் இருந்தாலும் உங்க தாத்தாகிட்ட……” என இழுத்து தயங்கிய வினோத்திடம் எதுவும் கூறாது தனது அழுத்தமான பார்வை பார்க்க. அதில் இருந்த மிரட்டலில் எதுவும் கூறாது அமைதியாக ஜெகனந்தன் கூறிய வேலையை பார்க்க அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் வினோத்.

சரியாக பத்து நிமிடம் கடந்த நிலையில் மேஜையில் தலை வைத்து படுத்திருந்த அழகம்மாளிடம் வந்த ஜெகனந்தன்,

“ தூங்கி எழுந்தவுடன் டி குடிக்குறியா இல்ல நேரா லன்ச் சாப்பிடுறியா அழகிக்குட்டி” என நக்கல் குரலில் கேட்ட ஜெகனந்தனின் திடீர் வருகையில் வேகமாக எழுந்தவள் தடுமாறி ஜெகனந்தன் மேல விழ பார்க்க அதில் சுதாரித்த ஜெகா ஓரடி பின்னால் நகர்ந்தான்.

ஆனால் அதற்குள் தனது காலை ஊன்றி நாற்காலியை பிடித்துக்கொண்டு நின்ற அழகம்மாள் ஜெகனிடம்,

“ படாது படாது” என கூற

“ என்ன படாது??” என கேட்டவனிடம்

“ ஹ்ம்ம் நான் எங்க உங்களை பிடிச்சுடுவேன்னு தானே நகர்ந்திங்க. அதன் என் கை உங்க மேல படாது படாதுன்னு சொன்னேன்” என கூறிய அழகம்மாளிடம்

“ நீ கைய பிடிக்குறதுக்காக நகரல நீ ஒரு வேளை என் மேல விழுந்துட்டா தேவை இல்லாம உன் குரலால் பாடுவ அந்த கொடுமையை கேட்கணுமான்னுதான் நகர்ந்தேன்” என கூறிக்கொண்டு அவன் நாற்காலியில் அமர்ந்தான் ஜெகனந்தன்.

சிறுவயதில் இருந்து தனிமையிலும் யாருடனும் ஒட்டாமலும் இருந்தவனிற்கு ஏனோ அழகம்மாள் பேச்சும் அவளுடன் வாக்குவாதம் செய்வது கிண்டல் அடிப்பது என ஒரு சுவாரஸ்யத்தையும் ஒரு பிடித்ததையும் குடுக்க அதனால் அவளை வம்பிழுத்துக்கொண்டிருதான்.

ஹ்ம்ம் நான் ஏன் சார் உன் கையை பிடிச்ச பாடப்போறேன் இப்போவே எனக்கு மனசுல ஒரு பாட்டு ஒன்னு தோணுது சார் அதோட உன்னைய முதல் முதல்ல பார்த்தேன்ல சார் அப்பையும் எனக்கு ஒரு பாட்டு தோணுச்சு சார்” என கூறிக்கொண்டு அவனின் எதிரில் அமைதியாக அமர

அவளின் முகத்தை பார்த்த ஜெகனந்தன்,
‘ ஆக மேடம் எதோ பிளான் போட்டாங்க போல’ என மனதில் எண்ணிக்கொண்டு

“ ஹ்ம்ம் அப்படியா அழகி குட்டி” என நக்கல் தொனியில் கூற
அந்த நக்கலை உணர்ந்த அழகம்மாள்,‘ குட்டியாம்ல குட்டி’ என மனதிற்கு பல்லை கடித்தவள்

‘ ஹ்ம்ம் அழகு இவன்கிட்ட இப்போ தப்பிக்குறதுதான் புத்திசாலித்தனம் அதால கோவப்படமா இங்க இருந்து வெளிய போணும். அப்புறம் இவனாச்சு இவன் வேலை ஆச்சுன்னு வேற எங்கயாவது போயிட வேண்டியதுதான்’ என எண்ணிக்கொண்டிருந்தவளிடம்

“ என்ன யோசனை பலமா இருக்கு??” என ஜெகனந்தன் கேட்க

“ ஹ்ம்ம் அது அது நான் என்ன பாடுறது யோசிச்சுகிட்டு இருந்தேன் சார்”

“ ஓ!!... ஆனா நான் உன்னைய பாட சொல்லி கேட்டதா எனக்கு நியாபகம் இல்லையே” என தாடையை தடவியவாறு யோசித்தவனிடம்

“ சரியான காரியவாதி” என முணுமுணுக்க

“ என்ன சொன்ன அழகிக்குட்டி??”

“ சார் முதல்ல இந்த குட்டி கிட்டி சொல்றதை நிறுத்துங்க கேட்க சகிக்கல” என கோவமாக சொன்னவளிடம்

“ ஆனா கூப்பிட எனக்கு சகிக்குதே”

“ ம்ப்ச்”

“ சரி சரிம்மா டென்ஷன் ஆகாம நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு நீ கிளம்பிகிட்டே இருக்கலாம் நான் ஏன் உன்னைய இப்படி கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்”

“ என்ன என்ன தெரியணும் உங்களுக்கு. நான் ஏன் இப்படி மேக்கப் போட்டுருக்கேன்னு அதானே. என்னோட பாதுகாப்புக்குத்தான் வேற என்ன” என சிடுசிடுத்தாள் அழகம்மாள்.

அதனை கேட்டு ஒன்றும் கூறாது அமைதியாக வினோத்திற்கு போன் செய்தான். அவனிடம்,

“ என்ன வினோத் sp சார் கிட்ட சொல்லிட்டியா??

“ ......... ……. ………”

“ ஹ்ம்ம் சரி சரி இன்னைக்கே இந்த விஷயத்தை முடிக்கணும்”

“……… ……”

“ ஹ்ம்ம் சரி” என போனை வைத்தவன்

“ ஹ்ம்ம் சொல்லு அழகிக்குட்டி எதோ காரணம் சொன்னியே சொல்லு” என கேட்ட ஜெகனந்தனிடம்.

இனிமே தப்பிக்க முடியாது என அறிந்த அழகம்மாள் அவளின் செயலுக்கான காரணத்தை கூற ஆரம்பித்தாள்.

“ எங்க அம்மா தஞ்சாவூரு பக்கம் ஒரு கிராமத்துல பிறந்தவங்க. இங்க வீட்டு வேலைக்கு சென்னைக்கு தெரிஞ்சவங்க மூலமா வந்துருக்காங்க.எங்க அம்மா வேலை பார்த்த அந்த வீட்டுல கார் ட்ரைவரா இருந்த எங்க அப்பாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அது பிடிக்காம எங்க அம்மா குடும்பம் ஏத்துக்கல.

ஆனா எங்க அப்பாவுக்கு அப்பா மட்டும்தான் அவரு எங்க அம்மாவ மருமகளா ஏத்துக்கிட்டாரு. அப்புறம் கல்யாணம் ஆகி ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு தான் நான் பிறந்தேன். நான் பிறந்தவுடனே பிரசவத்துலையே என் அம்மா இறந்துடுச்சு.

அதுக்கப்புறம் எல்லாம் என் அப்பத்தான். அதுவும் அஞ்சு வயசுவரைக்குத்தான் ஏன்னா எனக்கு அஞ்சு வயசு இருக்கும் போது அவரு ஒரு கார் விபத்துல இறந்துட்டாரு. அப்புறம் நான் என் அப்பாவை பெத்த அப்பா பிச்சைமுத்து தாத்தா கிட்ட போய்ட்டேன். அவரு என்னைய ராணி மாதிரி பார்த்துக்கிட்டாரு.

அவர்தான் எனக்கு அம்மா அப்பா எல்லாம். நாங்க ஒரு சேரி பகுதிலதான் இருந்தோம். தாத்தா ரிக்ஸா ஓட்டித்தான் சம்பாரிப்பாரு. நானும் பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு ஒரு மளிகை கடைல வேலை பார்க்க ஆரம்பிச்சேன். எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு.

ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நான் வேலை முடிச்சுட்டு எட்டு மணி போல வீட்டுக்கு வந்தா வீட்டுல சாமான் எல்லாம் உடச்சுக்கிடந்துச்சு. நான் பதறிக்கிட்டு உள்ள போய் பார்த்தா தாத்தாவை யாரோ அடிச்சு காய படித்துருக்காங்க.

அதுல மயங்கி இருந்தவர வேகமா பக்கத்துல இருந்தவங்களோட உதவியோடு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுபோனே ஆனா அங்க போய் கொஞ்ச நேரத்துல ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாரு” என கூறிவிட்டு அமைதியாக தனது கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டிருந்தாள் அழகம்மாள்.

ஜெகனந்தனும் முகத்தில் எந்த பாவமும் காட்டாது அமைதியாக அழகம்மாளை நோக்கிக்கொண்டிருக்க அதனை கண்டு,

“ ஒருத்தி அழுகுறாளே கொஞ்சமும் கண்டுக்காது கல்லு மாதிரி இருக்குறான் சரியான ராட்சசன்” என முணுமுணுத்துக்கொண்டே கண்ணீரை தன் கைகளால் துடைக்க அவளின் முணுமுப்பை கேட்டவன்

“ இப்போ நான் உன்னைய கண்டுக்கலைன்னு அழுகுறியா இல்ல உன் கஷ்டத்தை நினைச்சு அழுகுறியா குட்டி நான் வேணும்ன்னா உன்னைய கட்டிபிடிச்சுக்கிட்டு ஆறுதல் சொல்லட்டுமா” என கேட்ட ஜெகனந்தனிடம்

“ ஏதே!!!....” என அதிர்ந்து விழித்தாள்

“ என்ன முழிக்குற??. நீ காரணம் சொல்லாம அழுதுகிட்டே இருந்தா அதான் நடக்கும்” என அலட்சியமாக கூறியவனிடம் மீண்டும் தொடர்ந்தாள் அழகம்மாள்.

“ என் தாத்தா இறந்தவுடன் எனக்கு அங்க இருக்க பிடிக்கல. அதோட அந்த வீடும் தேவை படல. அதான் ஒரு பத்து நாளுல வீட்டை காலி பண்ணிட்டு என்னோட சம்பளத்துக்கு ஏத்தமாதிரி ஒரு ஹாஸ்டெல்ல தங்கிட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சேன். ஆனா ஒழுங்கா கடைல இருந்தவன் எல்லாம் ஆதரவு இல்லாதவ கேட்க ஆளு இல்லாதவன்னு தெரிஞ்சவன் கடைக்கு ஜாமான் வாங்க வர சில பரதேசிங்க அசிங்கமா பேசுறது எதாவது சீண்டுறதுன்னு எதாவது பண்ண ஆரம்பிச்சவுடன் கடை முதலாளி என்னால கடைல பிரச்சனை வரக்கூடாதுன்னு வேலையைவிட்டு நிக்க சொன்னாரு.

எனக்கும் அங்க இருக்க பிடிக்காததால் நானும் வேற வேலை தேடி ஒரு வழியா பெண்கள் அழகுநிலையத்துல எடுபிடி வேலைல சேர்ந்தேன் அங்கதான் கொஞ்சம் கொஞ்சம் மேக்கப் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன்”
என கூறிக்கொண்டிருக்கையில்,

“ excuse me சார்” என கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்த வினோத்தை கண்டு கண்டன பார்வை பார்த்த ஜெகனந்தனிடம்

“ சார் சாரி சார் தாத்தாவுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சு. உங்களுக்கு போன் பண்ணுனாங்களாம் நீங்க எடுக்கல. அதான் உடனே நேர்ல பேச வராதா சொல்லி உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க” என வினோத் கூறிமுடிக்க

“ ஓ!!.. நான் பார்த்துக்கறேன் வினோத். தாத்தா வந்தாலும் நான் சொல்ற வரைக்கும் யாரையும் உள்ள விடவேண்டாம்” என அழுத்தமான குரலில் கூறிய ஜெகனந்தனிடம் எதுவும் கூற முடியாது அங்கிருந்து விடைபெற்று வினோத் சென்றான்.

ஜெகனந்தன் அழகம்மாளிடம் “ ஹ்ம்ம் சொல்லு….” என கூறும்பொழுது

நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தர பாத்தோம்

பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

பாட்டுத்தான் புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்ககூட்டுத்தான்

இணைஞ்சதொருகூட்டுத்தான்

என அழகம்மாளின் போன் அழைப்பு ஒலிக்க அந்த பாடல் வரிகளைக்கேட்டு ஜெகனந்தன் அழகம்மாளை முறைத்துக்கொண்டிருந்தான்.

அழகம்மாள் வேகமாக தன் ஓவர் கோட் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து அழைப்பை ஏற்க,

“ ஹலோ இந்தா பிள்ளை அழகு நான் முனியம்மா பேசுறேன்”

“ ஹான் தெரியுதுக்கா சொல்லுங்க”

“ அதான் என் ஒன்னுவிட்ட தம்பி வரான்னு சொல்லிருந்தேன்ல அவன் வந்துட்டான். நீ எப்போ பிள்ளை வர”

‘ ஐயையோ இதை மறந்துட்டேன்னே’ என மனதில் எண்ணிக்கொடு

“ ஹான் அக்கா நான் இப்போ முக்கியமான வேலைல இருக்கேன் சீக்கிரம் வறேன்க்கா”

“ சீக்கிரம் வந்திருவில??”

“ ஹ்ம்ம் ஆமா ஆமா கண்டிப்பா வந்துடுவேன்க்கா” என அழகம்மாள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு ஜெகனந்தனை நோக்கினாள்.

‘ அழகு இதை காரணமா வச்சு தப்பிச்சுடு’ என எண்ணிக்கொண்டு

“ சார் இன்னைக்கு என்னைய பொண்ணு பார்க்க வராங்க அதான் சீக்கிரம் வர சொல்றாங்க. மிச்சத்தை நாளைக்கு சொல்லவா?. நேரம் ஆச்சு”

“ ஓ உனக்கு கல்யாணமா அழகிக்குட்டி சொல்லவே இல்ல.
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள். சரி சரி உன்னைய கல்யாணத்துக்கு ஜாமின்ல விடுவாங்களான்னு என் வக்கீல்கிட்ட கேட்டு சொல்றேன்” என நிதானமாக கூறியவனிடம் பல்லைக்கடித்துக்கொண்டு கூற ஆரம்பித்தாள் .

" நான் வேலை பார்த்துகிட்டு இருந்த கடைப்பக்கம் இருந்தவங்ககிட்ட எல்லாம் என் போட்டாவை காட்டி யாரோ தேடிகிட்டு இருந்தாங்க. எதர்ச்சையா என்னைய பார்த்தவங்க என்னைய துரத்த ஆரம்பிச்சாங்க. எனக்கு என்ன செய்றதுன்னு அன்னைக்கு தெரியல.

ஒரு வழியா தப்பிச்சு என்னோட ஹாஸ்டெல்கு போய்ட்டேன். ஆனாலும் அவுங்க கைல இருந்த கத்தி அப்புறம் அவுங்க பேசிக்கிட்டதை வச்சு அவுங்க என்னைய கொலை செய்ய முயற்சி பண்றாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

அதோட சும்மா செவனேனு இருக்குற என் தாத்தாவையும் வீடு தேடி யாரோ அடிச்சுருக்காங்கன்னா அதுக்கு காரணமும் எனக்கு தெரியல. என்ன செய்றதுன்னு புரியாம நான் கொஞ்ச நேரம் திகைச்சு இருந்த நேரத்துக்குள்ள என்னைய பத்தி விசாரிச்சு ஹாஸ்டல்க்குள்ளையும் வந்துட்டாங்க.

அப்போதான் என் கிட்ட இருக்குற மேக் அப் ஜாமனை வச்சு இந்தா மாதிரி makeup போட்டுக்கிட்டு அங்க இருந்து அவுங்ககிட்ட இருந்து தப்பிச்சேன். இங்கயும் ரெண்டு வருசமா எந்த பிரச்சனையும் இல்லாம வேலை செய்றேன்" என அழகம்மாள் கூறி முடித்தாள்.

thanks for ur supporting friends

&
Plz drop ur comments ...... :love:

Nirmala vandhachu ???
 
Top