Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் அழகிய தேடல் நான் .....03

Advertisement

niranjana subramani

Well-known member
Member
correction பார்க்கல எதாவது mistake இருந்தா சொல்லிடுங்கோ

உன் அழகிய தேடல் நான்…03




சிறுது நேரத்தில் கண்விழித்த அழகம்மாள் எங்கிருக்குறோம் என புரியாது மேஜையில் உறங்கியதால் வலித்த கழுத்தை இடம் வலமாக அசைத்து சுற்றிலும் பார்க்க அப்பொழுதுதான் மாணிக்கம் சொன்னது, இன்னும் தான் வீட்டுக்கு செல்லாதது என அனைத்தும் நினைவு வந்தது.


உடனடியாக தன் மொபைல் மூலம் மணியை பார்க்க ஒன்பதரை என காட்டியது. அதனை கண்டு மேலும் பதட்ட மடைந்த அழகம்மாள்,

“ அச்சச்சோ இம்ம்புட்டு நேரம் தூங்கிருக்கேன். அப்போ அந்த வீணா போன முதலாளி வரவே இல்லையா??. இல்ல நான் பார்க்கலையா??” என யோசித்த அழகம்மாள் பின்

“ இல்ல இல்ல இங்க எதுவும் யோசிக்கவேணாம் வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம். முதல்ல வீட்டுக்கு போகணும்” என தனக்குள் கூறிக்கொண்டு தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைய அங்கு கதவு மூடப்பட்டதை கண்டு அதிர்ச்சியில் “ ஆ!!!....” வென கத்திய அழகம்மாள்

“ ஐயோ!!!... ஐயோ!!... நான் என்ன செய்வேன் எந்த கூறுகெட்ட கிறுக்கு இப்படி ஆளு இருக்குறது தெரியாம கதவை மூடுச்சுன்னு தெரியலையே. இப்போ நான் என்ன செய்ய யாருக்கு கூப்புடுறது.

ஹ்ம்ம் மாணிக்கம் அண்ணன் அப்புறம் முனியம்மா அக்கா நம்பர் மட்டும் தான் இருக்கு என்கிட்ட” என கூறிக்கொண்டு மாணிக்கத்திற்கு போன் செய்ய சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக வர வேகமாக முனியம்மவிற்கு கால் செய்ய பிஸி என வந்தது அதில் கடுபடைந்த அழகம்மாள்,

“ ஐயோ எனக்கு தெரிஞ்ச ரெண்டும் போன் எடுக்கமாட்டேன்குதுகளே. இப்போ நான் என்ன செய்ய. போச்சு போச்சு எல்லாம் போச்சு” என புலம்பிய அழகம்மாள்

“ இன்னும் கொஞ்சம் நேரத்துல என் மேக் அப்பு கலஞ்சுடும். நாளைக்கு நான் வீட்டுக்கு போறதுக்குள்ள எவனாவது பார்த்தான் அம்புட்டுதான். ஒரே சீவு என் கழுத்தை. சோலி முடிஞ்சுடும்.

யோவ் கிழவா உனக்கு பேத்தியா பிறந்ததுக்கு நானும் இந்த சின்னவயசுலையே சாகபோறேனே…..” என கத்த ஆரம்பித்த அழகம்மாள் அங்கிருந்த முட்டைகளின் மேல் ஒரு காலை மடக்கி அமர்ந்து தலையில் கை வைத்து கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

“ என்ன பெத்த மகராசி……. என்னைய பார்க்கும் முன்ன போய் சேர ….. போய் சேர …..


என்ன வளர்த்த மகராசன் எனக்கு செய்வினை வச்சுட்டு போய்ட்டானேனேனே………..”


என ஒப்பாரி வைத்து அழுத அழகம்மாள் சத்தத்தில் அவளின் பக்கத்தில் தரையில் கிடந்த ஜெக நந்தன் லேசாக கண் இமைகளை திறக்க பார்க்க கண் கட்டப்பட்டிருந்தது அறிந்து எரிச்சல் அடைய அதே நேரம் தனக்கு நேர்ந்ததையும் நினைவு கூர்ந்தவன்.

‘ எதுக்கு என்னைய கடத்திருக்காங்க??’ என புரியாது சத்தம் வந்த திசையை நோக்க சத்தம் மிக அருகில் கர்ணகொடூரமாக கேட்டது.

அழகம்மாள் மேலும்,

“ அந்த வீணா போன முதலாளி இங்க வரலைன்னு யாரு அழுதா யாரு அழுதா…….


இன்னைக்கு அந்த கிறுக்கு வந்திருந்தா நான் வாழ்ந்திருப்பே வாழ்ந்திருப்பே”

என மீண்டும் அழகம்மாள் அழ அதனை கேட்டு பல்லை கடித்த ஜெக நந்தன்,

“ ஏய்!!!... நிறுத்து முதல்ல” என கத்தினான் அந்த சத்தத்தில் தனது அழுகையை நிறுத்திய அழகம்மாள்,

“ யா…. யாரு???….” என பயத்துடன் கேட்க

“ ஏன் உனக்கு தெரியாத??... என்னைய கடத்த தெரிஞ்சுச்சு யாருன்னு தெரியாத??....” என கேட்ட ஜெக நந்தனிடம்

“ அட எவன்டா இவன்??... என்னைய எவன் கடத்தப்போறன்னு நானே பயத்துல இருக்கேன். இதுல இவனை நான் கடத்திருக்கேனா??... கால கொடுமைடா சாமி”
என அழகம்மாள் சத்தமாக புலம்ப

“ ஏய்!!... என்ன புலம்புற முதல்ல என்னோட கட்டுகளை அவிழ்த்துவிடு” என கூறிய ஜெக நந்தனின் அதிகார குரலில் கடுப்பான அழகம்மாள்

“ ஏய் லூசு நீ முதல்ல எங்க இருக்கேன்னு சொல்லுய்யா .நான் எதுக்கு உன்னைய கடத்த போறேன். நானே வீட்டுக்கு போணும்ன்னு அழுதுகிட்டு இருக்கேன்” என கடுப்புடன் கேட்ட அழகம்மாளிடன்

“ அடிங்க யாரு லூசு??... எனக்கு கண்ணை கட்டி இருக்கு இல்ல உன்னைய என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என் சத்தத்தை வச்சு நான் எங்க இருக்கேன்னு பார்த்து கிட்ட வா” என கூறிய ஜெக நந்தனிடம்

“ சரி சரி எதாவது பாட்டு பாடு சத்தம் எந்த மூட்டை கிட்ட வருதுன்னு பார்க்குறேன்” என கூறிய அழகம்மாளிடம்,

“ நான் என்ன சிங்கர் போட்டிக்கா வந்துருக்கேன் ஒழுங்கா என் பேச்சு சத்தத்தை வச்சு வா” என கடுபடிக்க அதில் எரிச்சலுடன் ஒவ்வொரு மூட்டைகளுக்கும் இடையில் பார்க்க அங்கு தரையில் இருந்த குப்பற கிடந்த ஜெக நந்தனை கண்ட அழகம்மாள்,

“ யோவ் இந்த வெள்ளை சட்டை கறுப்பு பாண்ட் போட்ட ஆளு நீதானா??” என கேட்ட அழகம்மாளிடம்

“ ஏன் வேற யாராவது பக்கத்துல இருக்காங்களா??” என எரிச்சலுடன் கேட்ட ஜெக நந்தனிடம்

“ இல்லையே”

“ அப்புறம் என்ன ஹெல்ப் பண்ணு” என எறிந்துவிழுந்தான்

“ பார்றா” என அழகம்மாள் ஜெக நந்தனுக்கு உதவ மெதுவாக எழுந்தமர்ந்த ஜெக நந்தனின் கை கால்களில் இருந்த கட்டை அவிழ்த்த அழகம்மாள்,

“ உன்னைய கடத்துனவன் சரியான கேனையா இருப்பான் போலையா”

“ ஏன்??”

“ பின்ன நகராமா இருக்க கை கால்ல கயிறும் இடத்தையும் ஆளையும் பார்க்காம இருக்க கண்ணுல துணியும் கட்டுனவன் உன் வாயை கட்டிருந்தா நீ காத்திருக்க மாட்ட இப்போ தப்பிக்க முடியாம போயிருக்கும்ல” என கூறிக்கொண்டு கண்களின் துணியை கழட்ட

“ ஏன் நீயே போய் சொல்லுவ போல??” என கூறிய ஜெகனந்தன் கண்களில் துணியை அகற்றிய பின் இரு கைகளால் தேய்த்து அருகில் இருந்த அழகம்மாளை பார்த்தான் இரண்டு நிமிடம் அழகம்மாள் முகத்தை பார்த்தவன்,

“ கொஞ்சம் தண்ணி கிடைக்குமா??” என கேட்டுக்கொண்டே எழுந்து சுற்றிலும் குடோனை பார்த்தான்.

‘ ஆஹ எனக்கு தெரிஞ்சவந்தான் யாரோ என்னைய கடத்திருக்கான். ஹ்ம்ம் ஓகே. இனிமே என்னைய ஏண்டா பகைச்சோம்ன்னு நீ கதறுவடா’ என மனதில் கோவத்தோடு எண்ணிக்கொண்டிருந்தவனிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டியவளிடம் வேகமாக வாங்கி அருந்தியவன் ஒரு பெருமூச்சை விட்டவன்

“ சரி சொல்லு நீ என்ன பண்ணுற இங்க??” என கேட்க

“ அதை ஏன்யா கேட்குற இங்க தான் நான் வேலை பார்க்குறேன். இன்னைக்கு அந்த முதலாளி வரதா இருந்துச்சு அந்தாளு வந்தாரா இல்ல வரலையான்னு தெரியல. இந்த சூப்பர்வைசறால நான் மாட்டிகிட்டே. இந்த வாட்ச்மன் நான் இங்க இருக்குறது தெரியாம பூட்டிட்டான். இப்போ என்ன செய்றதுன்னு தெரியல” என கூறிய அழகம்மாளிடம்

“ உன்கிட்ட போன் இருக்கா??”

“ ஹ்ம்ம் இருக்கு.”

“ குடு போன் பண்ணிட்டு தரேன்”

“ ஏன் உன்கிட்ட போன் இல்லையா??”

“ லூசு கடத்துனவன் போனை என்கிட்டையா குடுப்பான்” என கடுபடிக்க

“ நீ வெளிநாட்டுல படுச்சவனா??” என சம்மந்தமில்லாமல் கேட்ட அழகம்மாளிடம்

“ ஏன் கேட்குற??”

“ இல்ல பார்க்க நல்லா இருக்க. உன் லுக் எல்லாம் ரொமப ஹை கிளாஸா இருக்கு அதான். அங்க எதுவும் பிரச்சனையா அதான் உன்னைய கடத்திட்டாங்களா??” என கேட்ட அழகம்மாளிடம்

எதுவும் கூறாது போனை கேட்க அமைதியாக போனை நீட்டினாள். அதில் அவன் வினோத்திற்கு அழைக்க

“ ஹலோ” என கூறிய வினோத்திடம்

“ நான் ஜெகா பேசுறேன் வினோத்”

“ ஹான் சொல்லுங்க சார். உங்க நம்பர்க்கு கால் பண்ணுனே எடுக்கல. இது யாரு நம்பர்??”

“ அதை அப்புறம் சொல்லறேன். இப்போ நீ…..” கூறிக்கொண்டிருக்கையில் போன் காசு இல்லாததால் கால் இணைப்பு துண்டிக்க பட்டது. அதனை கண்ட ஜெகனந்தன்,

“ ஏய் காசு இல்லாம இந்த போனை எதுக்கு குடுத்த??” முறைப்புடன் கேட்க

“ நீ போன் இருக்கான்னு கேட்ட காசு இருக்கான்னு கேட்டியா நானே ரெண்டு ரூபாதான் வச்சுருப்பேன் அதுவும் இப்போ காலியா” என புலம்பிக்கொண்டு செல்லை பார்க்க ஜார்ஜ் இல்லாமல் அணைந்தது.

போச்சு இதுவும் போச்சா” என தலையில் அடித்த அழகம்மாளிடம்

“ இந்த குடோன்ல இருந்து வெளிய போக இன்னொரு பாதை இருக்கணுமே” என ஜெகனந்தன் கேட்க

“ என்னமோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி கேட்குற. இங்க ரெண்டு வருஷம் வேலை பார்க்குறேன் எனக்கு தெரியாததா. இந்த குடோன் முதலாளிக்கு தெரியாதது எல்லாம் இந்த அழகம்மாளுக்கு அத்துப்பிடி. அப்படி எல்லாம் இன்னொரு பாதை இல்ல.ஒரு வேளை இருந்திருந்தா இந்நேரம் நான் வீட்டுக்கு போயிருப்பேன்” என கூறிய அழகம்மாளிடம் எதுவும் கூறாது குடோனில் பின்புறம் இருந்த ஒரு அறையின் அலமாரியை திறக்க அங்கு நம்பர் லாக் போட பட்ட கதவு ஒன்று இருந்தது.

அதனை கண்டு,

“ யோவ் உனக்கு எப்படி இது தெரியும்??. ஒரு வேளை நீ திருடனா??. என்னைய பார்த்தவுடன் எங்க மாட்டிக்குவோன்னு கடத்துன மாதிரி நடிக்குறியா??. உண்மைய சொல்லு” என அழகம்மாள் மிரட்டலுடன் கேட்க

“ இங்க பாரு எதாவது இனிமே உளறின நான் வெளிய போயிட்டு உன்னைய மட்டும் உள்ள வச்சு பூட்டிட்டு போயிடுவேன் பார்த்துக்க” என ஜெகனந்தனின் மிரட்டலுக்கு பயந்து அமைதியானாள்.

மௌனமான
நேரம் இள
மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில்
மௌனங்கள் மனதில்
ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள் இது
மௌனமான நேரம் இள
மனதில் என்ன
பாரம்

என சத்தமாக அழகம்மாள் கர்ன கொடூரமாக பாட அதில் எரிச்சல் உற்றவன்,

“ ஏய் நிறுத்து முதல்ல. கருமம் நல்ல பாட்டை எதுக்கு இப்படி பாடி கொலை பண்ணுற. என்னோட favourite song இது. இனிமே நீ பாடுன உன்னைய இதுக்குள்ள பூட்டிட்டு நான் போயிடுவேன். ஒழுங்கா வராத இருந்தா வா சொல்லிட்டேன்” என கோவமாக கூறிய ஜெக நந்தனிடம்

“ யோவ் இன்ன ரொம்ப பேசுற. நான் பாடுனா ஊரே மயங்கிடும்ன்னு என் தாத்தா சொல்லுவாரு அதோட நான் பாடுனத கேட்டா சொர்கத்துக்கே போற மாதிரி இருக்குத்தான்னு ரசிச்சு சொல்லுவாரு” என உணர்ச்சியுடன் கூறிய அழகம்மாளிடம்

“ அடிப்பாவி ஒரு மனுஷன் நீ direct டா கொல்ல பார்த்துருக்கன்னு indirect டா சொல்லிருக்காரு அது புரியாம பேசுறாளே” என புலம்பிக்கொண்டு நம்பர் அழுத்தி கதவை திறந்தான்

plz drop ur comments and thanks for the supporting friends
 
Top