Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் அழகிய தேடல் நான்…07

Advertisement

niranjana subramani

Well-known member
Member
hi friends ஒருவழியா வந்துட்டேன் அழகியோட

உன் அழகிய தேடல் நான்…07

குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்த வேதானந்தன் எதோ யோசனை தோன்ற உடனடியாக மாதுரியை அழைத்தார்.

“ மாமா கூப்பிட்டீங்களா??.....”

“ ஹ்ம்ம் ஆமா எங்க மேகா??”

“ அவரு இப்போதான் சாப்பிட்டு கொஞ்சம் நேரம் தூங்குறேன்னு ரூம்க்கு போனாரு”

“ எது தூங்கவா??. இந்த வயசுல நான் தூக்கம் இல்லாம என்ன செய்றதுன்னு யோசிக்குறேன் அவனுக்கு என்ன???... முதல்ல கூப்பிடுமா அவனையும்”

“ சரி மாமா” என மாதுரி மேகனந்தனையும் அழைத்துவர

“ நீங்க ரெண்டு பேரும் வீட்டுல என்ன செய்றீங்க கொஞ்சமாது பொறுப்பு இருக்கா??” என எரிந்துவிழுந்த வேதனந்தனை கண்டு மாதுரியும் மேகனந்தனும் ஒருவர் ஒருவரை நோக்க

“ அங்க என்ன பார்வை உங்க மூத்த பிள்ளை என்ன பண்ணிவச்சுருக்கான் தெரியுமா??... காதலிக்குறானாம். அதுவும் அவன் வாழ்க்கை அவன்தான் முடிவெடுப்பானாம். எதாவது நாம செஞ்சா துரை அவரு கம்பனிய பார்க்க போய்டுவானாம் மிரட்டுறான்” என கத்திய வேதனந்தனை கண்டு மாதுரியும் மேகனந்தனும் ஒரு சேர

“ என்ன ஜெகா காதலிக்குறானா!!!.....” என கேட்க

“ என்ன நீங்க கேட்குற தோரணையே ரொம்ப சந்தோசமா இருக்குறாப்புல இருக்கு??” என கூர்மையாக கேட்ட வேதனந்தனிடம்

“ மாமா அது… அது… ஜெகா விரும்புற பொண்ணையே கட்டிவச்சா அவனும் சந்தோசப்படுவான் அவன் வாழ்க்கையும் நல்லா இருக்கும்” என மாதுரி பேசிக்கொண்டிருந்தவரிடம்

“ என்ன மகன் பாசமோ??.... இங்க பாருங்க என்னைய பொறுத்தவரைக்கும் என் கவுரவம் ரொம்ப முக்கியம். நான் என் மகனோட காதலையே ஒத்துக்காதவன் என் பேரனுக்கு மட்டும் ஒத்துக்குவேனா. அதுவும் பார்க்க நல்லா இருந்தாலாவது எதோ சொத்து இல்லைனாலும் சரி தூரத்து சொந்தம்ன்னு பொய் சொல்லி நாம கெத்தா இருக்கலாம். ஆனா இவன்……..” பல்லைக்கடித்தவர் வேகமாக தனது போனில் இருந்த அழகம்மாளின் புகைப்படத்தை காட்டினார்.

அதனை கண்டு இருவரும் முக சுளிப்புடன்,

“ இது யாரு மாமா??” என மாதுரி வினவ

“ ஹ்ம்ம் இந்த பொண்ணுதான் உனக்கு மருமகளா கொண்டுவர உன் பையன் காதலிக்கிற பொண்ணு”

“ மாமா என்ன சொல்லுறீங்க??”

“ என்ன என்னத்த சொல்லறீங்க??. உள்ளததான் சொல்லுறேன் இங்க பாருங்க நீங்க ரெண்டு பேரும் எதாவது சொல்லி இந்த காதலை இதோட நிப்பாட்டிட்டு அவனை நான் பார்த்துருக்குற என் பிரென்ட் பேத்தி வினையாவ கட்டிக்க சொல்லுங்க. என்னைய மீறி இங்க எதுவும் நடக்க விடமாட்டேன் சொல்லிட்டேன்” என கூறி அவர் அறையைவிட்டு வெளியேற மாதுரியும் மேகனந்தனும் அவரவர் யோசனையில் அவர்கள் அறைக்கு செல்ல மேகனந்தன்,

“ மாது” என மாதுரியை அழைக்க

“ ஹ்ம்ம் என்னங்க??”

“ இவனை எப்படி சமாளிக்குறது எப்படியும் அப்பா ஒத்துக்க மாட்டாங்க அதோட எனக்கும் இந்த பொண்ணை பிடிக்கல என்கூட பேசவும் மாட்டான். நீவேனா பொறுமையா தெளிவா சொல்லி புரியவைக்குறியா??”

“ நான் சொன்னா மட்டும் கேட்டுடுவானா??.”

“ அப்படியே விடவும் முடியாதுல மாது”

“ ஹ்ம்ம் என்ன சொல்ல அன்னைக்கு உங்க அப்பா கட்டாயத்துல உங்க காதலை மறந்துட்டு நீங்க உங்க அப்பா பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணி குடும்பம் குழைந்தைகள்ன்னு நிம்மதியா இருக்கீங்க. ஆனா அந்த காதலிச்ச பொண்ணு மனசு எல்லாம் முக்கியம் இல்ல.

காதலிக்கும் உண்மையா இல்லாம மனைவிக்கும் உண்மையா இல்லாம ஏன் கோழைகள் எல்லாம் காதலிக்குறாங்களோ” என மேகந்தனை முறைத்துக்கொண்டு புலம்பிய மாதுரியிடம்

“ இப்போ என்ன செய்ய சொல்ற அந்த பொண்ணையே ஜெகாவுக்கு கட்டிவச்சுடுவோம்ன்னு சொல்றியா??” என கூர்மையாக கேட்ட மேகனந்தனிடம்

“ நான் தத்துவம் பேசுனாலும் நானும் சராசரி அம்மாதான் எனக்கும் சில ஆசைகள் இருக்கு. என் பையனுக்கு எப்படி பொண்ணு பார்க்கணும்ன்னு எனக்கு தெரியும். நான் அவன்கிட்ட பேசி பார்க்குறேன்” என கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

‘ இந்த குடும்பத்தில பிறந்தவங்களுக்கே காதல் நிறைவேறாம அவுங்க வாழ்க்கை சாபக்கேடா போயிடும் ஜெகா உனக்கும் அந்த வேதனை. எப்படி அனுபவிப்பியோ??’ என மகனிடம் மனதோடு பேசிக்கொண்டிருந்தார் மேகனந்தன்.

ஜெகனந்தன் மேகனந்தனோடு பேசுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆனாலும், ஏனோ மேகனந்தனும் அவருக்கும் அவனுக்கும் ஆன இடைவெளியை குறைக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

அவருக்கு இன்றுவரை ஏன் ஜெகனந்தன் தன்னை ஒதுக்குகிறான் என்பதும் தெரியவில்லை. ஆனால் அது தெரிய வரும்போது இவரின் நிலை????......

ஜெகனந்தன் போனில் அழைத்து பேசிய பின் ஒருவித கடுப்பில் அமர்ந்திருந்த அழகம்மாள் வெளியே கேட்ட முனியம்மாள் குரலில் வாசல் கதவை திறந்துகொண்டு வெளியே வர முனியம்மாள் பதட்டத்தோடு,

“ அழகு என்னைய மன்னுச்சுடு ஆத்தா. இந்த பைய இப்படி குடிகாரனா இருப்பான்னு எனக்கு தெரியலையே. வரும்போது நல்லாத்தான் வந்தான் நீ வர லேட் ஆச்சுன்னு வெளிய போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போயிட்டு வந்தவனை பார்த்தா தண்ணிய போட்டிருக்கான்.

எனக்கு இவனை பத்தி தெரியாதுத்தா. இல்லைனா உனக்கு இவனை பார்த்துருக்கவே மாட்டேன் என்னைய மன்னுச்சுக்க அழகு” என முனியம்மா பதட்டத்தோடு பேச

“ ஐயோ அக்கா!!!... என்ன மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு எதோ நல்லது செஞ்சு பார்க்கணும்ன்னு நினைச்சீங்க. உங்க மனசே பெருசுக்கா. உங்களுக்கு என்ன தலையெழுத்தா எனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு விடுக்கா.

ஆனா தயவு செஞ்சு அவனை என் கண் முன்னாடி வர வச்சிடாத” என அழகம்மாள் முனியம்மாவை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு,

“ எனக்குன்னு வந்து சேருதுங்க” என மனதில் சலித்துக்கொண்டு அழகம்மாள் தனது வேலையை தொடர சிறுது நேரத்தில் மீண்டும் ஜெகனந்தனிடம் அழைப்பு வர இந்தமுறை கடுப்புடன் அழைப்பை ஏற்றவள்,

“ யோவ் என்னையா உன் பிரச்சனை??.... எனக்கு உன் வேலையும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் நீ கூப்புடுற இடத்துக்கு எல்லாம் நான் வர முடியாது. உன்னால ஆனதை பார்த்துக்க” என அழகம்மாள் கத்த”

“ ஹ்ம்ம் பேசிமுடிச்சுட்டியா அழகி” என ஜெகனந்தன் வெகு சாதரணமாக பேச அதில் கடுப்பானவள் பல்லைக்கடித்துக்கொண்டு கண்ணைமூடி தன்னை சமன் செய்தவள்

“ சார் இன்னா வேணும் உனக்கு??...” என கேட்க

“ ஹ்ம்ம் இது அழகிக்குட்டிக்கு அழகு. இப்போ நீ என்ன செய்ற நான் சொல்ற இடத்துக்கு வர. நான் உன்கூட பேசணும் அவ்வளவுதான் இல்ல போலீஸ மறந்துடமாட்டன்னு நினைக்குறேன்” என கூறி ஜெகனந்தன் அழைப்பை துண்டிக்க,

அதில் கடுப்பானவள் கோவத்தில் போனை கீழ போட்டவள்,

“ ஆஆ…….” என கத்திவிட்டு சுவற்றில் சிரித்துக்கொண்டிருந்த அவளின் தாத்தா படத்தை பார்த்து,

“ எல்லாம் உன்னாலதான்யா கிழவா. நீ மட்டும் நல்ல உன் கிழவிகூட டூயட் பாட போயிட்ட .இங்க நான் படுற பாட்டை பாருய்யா” என வழக்கம் போல் புலம்பிவிட்டு ஜெகனந்தன் வர சொன்ன இடத்திற்கு கிளம்பிச்சென்றாள் அழகம்மாள்.

ஒரு பெரிய உணவத்திற்கு சென்று வாசலில் நின்று ஜெகானந்தனுக்கு அழைக்க ஐயோ பாவம் கீழே தூக்கி போட்டதில் தனது வேலையை நிறுத்தி இருந்தது அலைபேசி

அதை அப்பொழுதுதான் கண்டவள் ‘ இதுவும் போச்சா’ என அழகம்மாள் பல்லை கடித்துக்கொண்டு நிற்கையில்,

அவளின் அருகில் ஒரு உயர்தர கார் ஒன்று நிற்க அதனை கண்டு நிமிர்ந்து பார்த்த அழகம்மாள் கண்களுக்கு மிகவும் ஸ்டைலிஷாக எப்பொழுதும்போல பார்மலில் இல்லாமல் இலகுவான கழுத்து பட்டை இல்லாத முழுக்கை டீ ஷர்ட்டும் ஜீன்ஸ் என இறங்கி வந்த ஜெகனந்தன் தெரிய,

‘ ப்பா செமையா இருக்கறாரு இந்த மனுஷன்’ என திகைப்புடன் தன் கண்களை விரித்துகொண்டு சிறுது வாயை பிளந்து ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தவளிடம் வந்த ஜெகனந்தன்

“ ஹும்…. ஹூம்….” என செரும,

அந்த சத்தத்திலும் அழகம்மாள் தனது நிலையில் இருந்து மாறாமல் இருக்க அவளின் தோளினை தட்டி,

“ ஏய்!!.. அழகி என்ன பார்க்குற??....” என கேட்க அதில் அவனை பார்த்து முழித்தவள் பின் சுற்றம் உணர்ந்து

“ ஆன் ஒன்னும் இல்ல சார். அது அது உனக்கு போன் பண்ணலாம்ன்னு பார்த்தே போன் எடுக்கல. அதுக்குள்ள நீங்க வந்திட்டீங்க அதான்…. அதான்…. ஷாக் ஆஹி பார்த்தேன்” என அழகம்மாள் பேச

“ ஹ்ம்ம் நம்பிட்டேன் நம்பிட்டேன்” என சிறு சிரிப்புடன் கூறிய ஜெகனந்தன்

பின் அழகம்மாளிடம், “ ஏய் என்ன இன்னைக்கும் இந்த வேஷத்தை போட்டு வந்துருக்க. போ போய் உள்ள இருக்குற ரெஸ்ட் ரூம்ல மூஞ்சிய கழுவிட்டு வா. நான் உன் மூஞ்சிய எப்பிடி இருக்குன்னு பார்க்கணும்” என கூறிக்கொண்டே ஹோட்டல்க்குள் நுழைந்த ஜெகனந்தனை பின் தொடர்ந்தவள்,

“ சார் இங்க பாரு சார்……” என எதோ அழகம்மாள் பேச வர அதனை காதில் வாங்காமல் போனை காதில் வைத்தவன்,

“ ஹலோ வினோத் DSP கிட்ட பேசிட்டியா என்ன சொன்னாரு” என கேட்டுக்கொண்டே ஒரு இருக்கையில் அமர்ந்து ரெஸ்ட் ரூம் திசையை கண்களால் காட்டிய ஜெகனந்தனை ஏதும் செய்ய முடியாத கோவத்தில் வேகமாக ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை கழுவிக்கொண்டு வர,

அதுவரை போன் பேசிக்கொண்டிருந்தவன்
எதார்த்தமாக நிமிர்ந்து பார்க்க முகத்தை துடைத்துக்கொண்டே வந்த அழகம்மாளை கண்டான். இந்த முறை அதிர்ந்து ரசனையுடன் சுற்றம் மறந்து நின்றது ஜெகனந்தன்.

அவனின் அருகில் வந்த அழகம்மாள் அவனின் எதிர் இருக்கையில் அமர்ந்து தன்னை சுற்றிபார்த்துக்கொண்டே,

“ சார் இன்னா பேசணும் டக்குன்னு பேசு நான் கிளம்பனும்” என பரபரப்பாக பேச அதுவரை ரசனையுடன் இருந்தவன் சிறு சிரிப்புடன்,

“ நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என மென்மையாக கேட்க

அதுவரை தன்னை யாரேனும் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் இருந்தவள் ஜெகனந்தன் சொன்ன விஷயத்தில் வேகமாக அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“ சார் பாரேன் பயத்துல நீ என்னமோ சொன்னிங்க எனக்கு அது ஏதோ தப்பா கேட்குது” என கூற

“ தப்பா கேட்கல சரியாதான் கேட்குது. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என ஜெகனந்தன் மீண்டும் கூற அதில் கடுப்பானவள்

“ ஏன் சார் உனக்கு எதுவும் பிரச்சனையா என்ன??....” என அழகம்மாள் கடுப்புடன் கேட்க

“ ஏன் அழகி பிரச்சனை இருக்குறவன்தான் உன்னைய கட்டிக்கணுமா என்ன??...” என ஜெகனந்தன் கேட்க

அதில் கோவமானவள்,

“ எனக்கு என்ன சார் குறைச்சல் பிரச்சனை இருக்குறவனை கட்டிக்குறதுக்கு. எனக்கு மாப்பிளை கியூல நிக்குறாங்க. நீயாவது ஏன் மூஞ்சிய பார்த்துதான் கல்யாணம் செஞ்சுக்கலாம்ன்னு கேட்குற.

ஆனா பாரு சார் நேத்து என்னைய பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை நான் கருப்பா வேஷம் போட்டப்பவே என்னைய ரொம்ப பிடிச்சுருக்கு உன்னையேதான் கட்டிக்குவேன்னு ஒத்த காலுல நிக்குறாரு” என பழனியை மனதில் திட்டிக்கொண்டு ஜெகந்தனை அழகம்மாள் வெறுப்பேத்த

“ என்ன மாப்பிள்ளையா!!.... சும்மா கதை விடாத அழகி” என கடுப்புடன் பேசிய ஜெகனந்தனை கண்டு

“ நான் எதுக்கு சார் கதை சொல்லப்போறேன். நிஜம்தான் சொல்லுறேன். அவரு பேரு கூட நான் கும்புடுற என் அப்பன் முருகன் பேருதான்” என சொல்லி வெட்கம் வருவதுபோல சிரிக்க

அதில் எரிச்சல் ஆனவன், “ ஏய்!!... சும்மா நிறுத்து உன் பொய்ய” என பல்லைக்கடித்துக்கொண்டு பேச

“ பொய்யா!!!... நீ நம்புனா நம்பு இல்லாட்டி போ சார். எனக்கு என்ன??... நான் இனிமே உன்கிட்ட வேலைக்கு வரல” என அழகம்மாள் பேச

“ இங்க பாரு அழகி சும்மா எதாவது உளறாம நான் சொல்றதை கேளு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என மீண்டு ஜெகனந்தன் கேட்க

“ என்ன சார் நீ என்னையா காதலிக்குறியா??..” என கேட்ட அழகம்மாளிடம்

“ ச்சீய் தப்பா பேசாத”

“ ஏதே!!.... தப்பா பேசுறேன்னா??... சார் உனக்கு என்ன சார் பிரச்சனை??...” என அழகம்மாள் சலிப்புடன் பேச

“ இங்க பாரு இந்த காதல் கன்றாவி எல்லாம் எனக்கு பிடிக்காது. என்னமோ எனக்கு உன்கிட்ட பேசுறப்போ மனசுக்கு நல்லா இருக்கு. அதோட நேத்து நீ பண்ணுன வேலைல என் தாத்தா எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாரு. அதான் உன்னைய கட்டிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்” என கூறிய ஜெகானந்தனை கண்டவள்

“ ஹ்ம்ம் சார் நான் ஒன்னு கேட்கவா??...” என அழகம்மாள் கேட்க

“ ஹ்ம்ம் கேளு”

“ இல்ல நீங்க ரொம்ப கொரியன் சீரியல் பார்ப்பீங்களோ??...” என கேட்டவளிடம்

“ இல்ல. ஏன் கேட்குற இல்ல??....” என புரியாது கேட்டவனிடம்

“ அதுல தான் கரணம் இல்லாம இப்படி பாஸ் அவருக்கு கீழ வேலை பார்க்குற பொண்ணை கல்யாணம் பண்ணி அப்புறம் அவுங்களுக்குள்ள லவ் வரும் ஒரு வேலை நீயும் அதைத்தான் பண்ணபோரியோன்னு நினைச்சேன் சார்” என அழகம்மாள் நக்கலுடன் கூற

“ என்ன கிண்டல் பண்ணுறியா???...”

“ சார் இங்க பாருங்க….”

“ ஏய் என்ன ஒரு நேரம் மரியாதையா பேசுற அப்புறம் மரியாதை இல்லாம பேசுற” என ஜெகனந்தனின் கேள்விக்கு

“ சார் எனக்கு அப்பிடித்தான் வருது கண்டுக்காதிங்க. அப்புறம் இந்த கல்யாணம் எல்லாம் ஒன்னும் நடக்காது சொல்லிட்டேன்” என கூறிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்று கையில் வைத்திருந்த மேக்அப் கிட் கொண்டு தனது வேஷத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த அழகம்மாளை கண்டவன்,

“ அழகி” என அழைக்க இதில் திரும்பி அவனை பார்த்தவள்,

“ என்ன??...” என கண்களால் வினவ அவளின் அருகில் வந்தவன்,

“ நீ சொன்ன மாப்பிள்ளை என்ன வேலை பார்குறான்” என கேட்க அவனின் குரலில் சிறு பொறாமையுடன் கேட்க அதை இருவரும் உணரவில்லை

“ ஹ்ம்ம் அவரு…. அவரு… ஹ்ம்ம்… ஹான் நான் எப்பிடி என்னத்த சொல்லுவேன். ஹான் அது தண்ணி…. தண்ணி…. பிசினஸ் பண்ணுறாரு” என கூறிக்கொண்டு வேகமாக அழகம்மாள் வெளியே வர வாசலில் ஒருத்தனிடம் மோதி நின்றாள்.

அதில், “ சாரி…. சாரி….” என கூறி நகர பார்த்த அழகம்மாளை கண்டு,

“ அலகுமா…..” என அழைத்த குரலில் நிமிர்ந்து பார்த்தவள் அப்பொழுதுதான் கண்டாள் அவள் இடித்தது பழனியை என. அதில் பதட்டமானவள் வேகமாக திரும்பி பார்க்க ஜெகனந்தன் அழகம்மாளை பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான்.

அதில் மேலும் பதட்டமானவள் வேகமாக அங்கிருந்து நகர பார்க்க பழனியோ அவளின் கையை பிடித்துக்கொண்டு,

“ என்ன அலகுமா நீஈஈ என்னைய வேணாம்ன்னு ஜொல்லிப்புட்டியாம்ல மினியம்மாக்கா ஜொள்ளுச்சு. இன்னாத்துக்கு இந்த மாமனை வேணாம்ன்னு ஜொன்ன. எனக்கு அதுல பீலாகி இப்பதான் கொஞ்சமா சரக்கடிச்சுட்டு வரேன்” என போதையில் புலம்பிக்கொண்டிருக்க,

அதனை கேட்டுக்கொண்டே வந்த ஜெகனந்தன் சிறு நக்கல் சிரிப்புடன் அழகம்மாள் கையை பழனியிடம் இருந்து எடுத்துவிட்டு அவளின் கையை பிடித்துக்கொண்டு,

“ ஆஹா அப்போ நீங்க தான் இவளுக்கு பார்த்த மாப்பிள்ளையா??...” என கேள்வி பழனியிடம் இருந்தாலும் பார்வை என்னமோ அழகம்மாளிடம் இருந்தது.

அதில் அதுவரை பதட்டத்துடன் இருந்தவள் கோவமாக ஜெகனந்தனிடம் கையை உருவிக்கொண்டு எதோ பேச அதற்குள் பழனியோ,

“ ஹ்ம்ம் ஆமா ஜார் நான்தான் மாப்பி. இந்த பிளாகிக்கேத்த மாப்பி. பேரு பழனி” என கூறிக்கொண்டு தள்ளாடியவனை கண்ட ஜெகனந்தன்,

“ பாரு அழகி நீ சொன்ன சாமி பேருதானே. ஆனா பாரு இவரு தண்ணி பிசினஸ் பண்ணல தண்ணியே இவரை வச்சுதான் பிசினஸ் நடக்குது போல.
அப்புறம் இவரு மாப்பிளை கியூல நிக்கமாட்டாரு போல ஒயின்சாப் கியூல தான் அதிகம் நிப்பாரு போல” என நக்கலுடன் பேசிய ஜெகனந்தனை கண்டு அழகம்மாள் ஒன்றும் கூறாது பல்லைகடித்துக்கொண்டு அவனை முறைத்துக்கொண்டு அங்கிருந்து நகர,

பழனியோ, “ அலகுமா…..
என்னடா மாமனை விட்டுட்டு போற??..” என கத்த அதில் வெகுண்ட அழகம்மாள் கீழே இருந்த சிறு கல்லை எடுத்து அவனை நோக்கி எரிந்துவிட்டு,

“ போடா எரும மாடு. உன் தலையில தீயை வைக்க” என கத்த அதற்கு பழனியோ,

ஆகாயம் தீப்பிடிச்சா…

நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…

நெஞ்சம் தாங்குமா

பாட ஜெகனந்தனோ சத்தமாக சிரித்துவிட்டான். அதில் மேலும் கோபமடைந்த அழகம்மாள் இருவரையும் முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட ஜெகனந்தனோ ,

‘ அழகி நீ எனக்குதான் நான் முடிவு பண்ணிட்டேன். நான் காதலிக்குறேனோ என்னமோ தெரியல. ஆனா எனக்கு உன்கூட இருக்குறப்போ எனக்கு பிடிச்சுருக்கு. மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு. நீ எனக்கு தான்’ என அழகம்மாள் சென்ற திசை நோக்கி சிரிப்புடன் மனதில் ஜெகனந்தன் எண்ணிக்கொண்டிருக்க அருகில் இருந்த பழனியோ,

“ அலகுமா உன்னைய பார்த்து மாமன் மெர்சல் ஆகி இருக்கேன். நீ என்குதான் நா முடிவு பண்ணிட்டேன். உன்னிய கண்ணாலம் பண்ணுறேன்.
ஜும்மா …..” என சத்தமாக பழனி போதையில் பேசிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஜெகனந்தனோ வேகமாக அவனை அடித்திருந்தான்.

thanks for the supporting friends.....
please share your thoughts.....

thank you very much :love: :love: :love:
 
Nirmala vandhachu 😍😍😍
 
Top