Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 6

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 6
சம்யுக்தாவின்மீது பார்வையை வைத்துகொண்டே, "இங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க ரெண்டு பேரும்" என்று கண்ணன் கேட்டான்.

தாரா பதில் சொல்ல வருவதற்குள் அவள் கையை அழுத்தி பிடித்துக்கொண்டு "சும்மா இந்த இடமெல்லன் நல்லா இருக்கேனு பாத்துட்டு இருந்தேன்..", என்று சம்யுக்தா கூறினாள்.

நீ சொல்லும் பொய்யை கேட்க நான் ஆள் இல்லை என்பது போல் ஒரு அலட்சிய பார்வையை அவள் மீது வைத்து கொண்டே "இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கனு கேட்டேன் தாரா", என்றான் அழுத்தமாய்.

"அண்ணா அந்த மாரி எங்க கிட்ட வம்பு பண்ணிட்டு இருந்தான்..உங்க மேல உள்ள கோவத்துல நா போற வழிலான் வந்து என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்தான். இன்னைக்கு சதா கிட்டயே அவன் வேலைய காமிச்சிட்டான்.அவ கைய புடிச்சான்", என்று அவள் சொன்னதும்..கண்ணனுக்கு அவனை கொள்ளும் அளவு கோவம் வந்தது.முகம் அதை பிரதிபலிக்க கண்கள் சிவந்து பயங்கரமாக இருந்தான்.

"சதா மாரிய அறஞ்சிட்டா", என்று பயத்துடன் சொல்லி முடித்தால்.

இதை கேட்டதும் அவன் முகம் ஒரு நொடியில் மாறியது.பாராட்டும் விதமாக அவன் கண்கள் அவளை பார்க்க சம்யுக்தவோ இவன் பார்ப்பதை பார்த்துவிட்டு "இவ்ளோ நேரம் மொறச்சிட்டு இப்போ எதுக்கு இந்த பார்வை..தேவை இல்லை ஹிட்லர்", என்று வாயால் அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

"அப்படியா..அப்போ அவன் இன்னும் கோவமா எதனா பண்ணி இருக்கணுமே..இவள எதுக்கு அப்படி மொறச்சிட்டு போறான் ", என்று வினவினான்.

"கோவமா தான் வந்தான் அண்ணா..உங்கள பாத்ததும் போய்ட்டான்..எதுக்கு மொறச்சான்னா", என்று தாரா சொல்வதற்குள் அவளின் வாயை தன் வலது கையால் மூடியபடி "அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு.. இப்போ என்ன ஸ்கூல்கு போகணும் அவ்வளவுதானே..கெளம்பறோம்", என்று அவனிடம் சொல்லிவிட்டு தாராவை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

எங்கே அவனை மாமா என்று அவள் சொன்னதை சொல்லிவிடுவாளோ என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.இதை உணர்த்த கண்ணன் அவளை பார்த்து புன்னகையுடன் நின்றிருக்க போனவள் அவனை திரும்பி பார்த்தாள்.அவளை பார்த்து இவன் கண் அடிக்க அவனை முறைத்துவிட்டு திரும்பி நடக்கலானாள்.

இவர்கள் ஸ்கூலுக்கு செல்வதற்குள் கண்ணன் சென்றிருந்தான்.

"சதா நீ MD ரூம் போ..அங்க அண்ணா இருப்பாரு..உன்னோட ஒர்க் பத்தி சொல்வாரு..நா கிளாஸ்க்கு போறேன்..டைம் ஆயிடுச்சு", என்றாள்.

"ஓகே தாரா..நா பாத்துக்கிறேன்..நீ போ", என்றாள்.

அந்த பள்ளியின் அழகை ரசித்தபடி MD அறையின்முன் நின்றாள்.கதவை இரண்டு விரல்களால் தட்டி "மே ஐ கம் இன் ", என்றாள்.

"எஸ் கம் இன்", என்றான் கம்பீரமாக.

அவள் உள்ளே சென்றாள்.அவன் சூழல் நாற்காலியில் கால்மேல் கால் போட்டுகொண்டு தோரணையாக அமர்ந்திருந்தான்.

"ஆள பாரு..எவ்ளோ ஸ்டைல்.. திமிரு இவன பாத்து எல்லாரும் பயபடரங்கனு"என்று மனதில் அவனை தாளித்து கொண்டே அவன் முன் நின்றாள்.

"மிஸ் சம்யுக்தா உங்க ரெசூயும் குடுங்க"என்றான் அவளை யார் என்று தெரியாதது போல்.அவளும் கொடுத்தாள்.

"ஹிட்லர்..கொஞ்சமாச்சும் மேனர்ஸ் இருக்கா..உக்கார சொல்றனா பாரு..அவ்ளோ கொழுப்பு..இவ்ளோ தூரம் நம்பள நடக்க வச்சதே இல்ல நம்ப வீட்ல..அதான் இந்த கொஞ்ச தூரம் கூட நடக்க முடில..", என்று அவனை வசைபாடி கொண்டே அங்கு இருந்த நாற்காலியை பார்த்தாள்.

பார்வையை உயர்த்தியவன் அவள் மனதில் நிபைப்பதை அறிந்து "மிஸ் சம்யுக்தா யு மே சிட் டவுன்" என்றான்.

"இங்க ஒர்க் பண்ணிட்டு இருந்த ஸ்டாப் மேரேஜ் ஆயிடுச்சுனு வேலைய விட்டுட்டு போய்டாங்கு..அதான் அர்ஜென்டா உங்கள அப்பாயிண்ட் பண்ற சிட்டுவேஷன்.."என்று அவளின் வேலைக்கான காரணத்தை கூறினான்.

"மிஸ் சம்யுக்தா 12th std மேக்ஸ் டீச் பண்ணனும்..உங்க ஷெடியூல் ஆபீஸ் ரூம்ல கேட்டு வாங்கிகோங்க..உங்களுக்கு எதனா டவுட் இருந்தா என்கிட்ட தயங்காம கேக்கலாம்..யு மே கோ நவ்", என்று அவளின் ரெசூயுமை அவளிடம் கொடுத்துவிட்டு தன் வேலையில் கவனமானான்.

அந்த அறையிலிருந்து வெளியே வந்தவள் "இவன் அவன் தானா..பார்வையில் ஒரு மிடுக்கு, அலட்சியம்..நீ யார் என்பது போல் நடந்துகொள்கிறான்...என்னை எப்பொழுதும் பார்க்கும் அந்த அர்த்தம் புரியா பார்வை இல்லையே.."என்று சிறிது வருந்தினாள்.பின் தன் மனம் என்னும் நினைவை நினைத்து தன்னையே கடித்து கொண்டாள்.

"திமிரு.. ஹிட்லர் நீ மட்டும் தான் தெரியாத மாரி நடந்துப்பியா..இனிமே என்னோட விளையாட்ட பாரு", என்று எண்ணிக்கொண்டு தன் வேலையை செய்ய சென்றுவிட்டாள்.

வகுப்பின் உள்ளே சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.மாணவர்களை பற்றியும் தெரிந்து கொண்டாள்.அதன் பிறகு நேரத்தை வீன் செய்யாமல் பாடம் நடத்த தொடங்கினாள். மாணவர்களும் அவள் பாடம் எடுக்கும் விதத்திலும் அவளின் அழகிலும் மெய் மறந்து கவனித்துக்கொண்டு இருந்தனர்.

எப்பொழுதும் போல் அணைத்து வகுப்பையும் ஒருமுறை பார்வையிடுபவன் இன்றும் வந்தான்.சம்யுக்தாவின் வகுப்பை கடக்கும்பொழுது சிலகணம் நின்று அவள் பாடம் எடுக்கும் அழகை அவனும் ரசித்தான்.ஒரு சில கணங்களே நின்றவன் நகர்ந்துவிட்டான்.

உணவு இடைவேளையில் தாராவும் சம்யுக்தாவும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.

"உன் அண்ணா எங்க சாப்பிடுவாரு", என்று கேட்டாள் சம்யுக்தா.

"அண்ணா வீட்ல போய் சாப்பிட்டு வருவாங்க", என்றாள் தாரா.

நேரம் குறைவாக இருப்பதால் வேறு எதுவும் பேசாமல் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினர்.

அன்றய நாள் பள்ளி முடிந்து இருவரும் வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்தனர். அப்பொழுது தாரா அவளிடம் "உன்கிட்ட கேக்கணும்னு நெனச்சேன்..காலைல அண்ணாவை மாமானு ஏன் சொன்ன "என்றாள்.

"உன்னோட அப்பா அம்மாவ மாமா அத்தனு கூப்பிட்டா அப்போ அவர் எனக்கு மாமா தான..அதான் சொன்னேன்", என்று சொன்னாள்.

"சதா உங்க அண்ணாவை ஹிட்லர் அளவுக்கு சொல்லிட்டு இருந்த..காலைல அந்த மாரிய பத்தி சொல்லியும் ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல".

"நீ வேற..அண்ணா அப்படி அமைதியா போனது தான் இன்னும் பயமா இருக்கு..கண்டிப்பா ஒரு டெசிஷன் எடுத்து இருப்பாரு இவ்ளோ நேரத்துக்கு..வீட்டுக்கு போன உனக்கே தெரியும் பாரு".

இவர்கள் வீடு வந்ததும் சம்யுக்தாவை வழி மறித்து ஒரு இளம் பெண் அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்தாள்.

"யாரு இவ..எதுக்கு இப்படி பாக்குறா.. காலைல ஒரு அம்மா என்ன மொறச்சிச்சே அதே பார்வ.. "என்று நினைத்துக்கொண்டு எதிரில் நின்றவளை எடை போட்டாள்.
அறை குறையான ஆடை, முகத்தில் உதட்டில் சாயம், தோள்பட்டை வரை வெட்டப்பட்ட முடி..மேல் தட்டு வர்கம் போல் இருந்தாள்.ஆனால் பேச்சில் அது துளி கூட இல்லை.

"நீ தான் புதுசா வந்து இருக்க டீச்சரா..இங்க இருக்க வரைக்கும் ஓழுங்க இருக்கனும்..வந்த வேலைய மட்டும் தான் பாக்கனும்..வேற எதனா பண்ணிட்டு இருக்கனு தெரிஞ்சது அவ்ளோதான்", என்று எச்சரித்தாள்.

"இவன் என்ன லூசா..இப்போ தான் இவள பாக்குறனே..என்கிட்ட வந்து என்ன என்னமோ சொல்லிட்டு இருக்கா..இருந்தாலும் இவள விட கூடாது..", என்று மனதில் நினைத்து கொண்டு...

"நா என்னவேனாலும் பண்ணுவேன்..அதுல உனக்கு என்ன பிரச்சனை..இனிமே என்கிட்ட இப்படி மரியாதை இல்லாமா பேசின அப்புறம் பேச வாய் இருக்காது..பாத்து நடந்துக்கோ..வரட்டா", என்று அவள் கன்னத்தை தட்டிவிட்டு சென்றாள் சம்யுக்தா.

"நீ இப்படி பேசுனது மட்டும் தாத்தாக்கு தெரிஞ்சது அவ்ளோதான்", என்று தாராவும் அவள் பங்கிற்கு சொல்லிவிட்டு சென்றாள்.

கன்னத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு அவர்கள் பின்னே உள்ள சென்றாள் அந்த பெண்.

தாராவும் சம்யுக்தாவும் உள்ள சென்றவர்கள் அனைவரும் ஹாலில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து முக்கியமான விஷயம் பேசி கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டார்கள்.

இருவரும் மாடிக்கு செல்ல முற்பட ஜனார்த்தனன் அவர்களை தடுத்தார்.நில்லுங்கம முக்கியமான விஷயம் பேசிட்டு போலாம் என்றார்.
தாரா அமைதியாக நின்று கொண்டாள்.

"நம்ப கிட்ட இவர் என்ன முக்கியமா பேச போறாரு..கண்டிப்பா இவங்க குடும்ப விஷயம் தான் பேச போராங்க..நாம எதுக்கு இங்க..பேசும்போது அப்படியே போய்டணும்..", என்றெண்ணினாள்.

"தாரா உனக்கு கல்யாணம் பண்ணலானு கண்ணா சொல்றான்..எங்களுக்கும் அதுவே சரினு படுது..நீ என்னமா சொல்ற", என்று பார்வையை அவள் மீது வைத்து கேட்டார் தாத்தா.

கல்யாணம் என்று சொன்னதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அதில் தாரா சொல்ல வரும் செய்தி சம்யுதாவுக்கு புரிந்தது..காலையில் நடந்த சம்பவம் இங்கு கொண்டு வந்து விட்டு இருக்கு என்று.

தாரா எதுவும் யோசிக்காமல் உங்க இஷ்டம் தாத்தா என்றாள். அதுவே அனைவருக்கும் மகிழ்வை தர..."அப்போ மாப்ள பாக்க ஆரம்பிக்கலாம் தயாநிதி ", என்று தன் மகனிடம் சொன்னார்.அவரும் சரி என்று தலையை ஆட்டினார்.

சம்யுக்தாவுக்கும் மிகவும் சந்தோஷம்.அவள் தாராவின் கையை அழுத்தி அவளின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.தாராவை பார்த்துகொண்டே திரும்பியவள் பார்வதி இவளை முறைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாள்.

"இந்த அம்மாக்கு வேற வேலையே இல்ல போல..நம்பலையே மொறச்சிட்டு இருக்கு எப்பவும்..", என்று அவள் நினைத்துக்கொண்டு இருக்க.. பார்வதி பக்கத்தில் அந்த பெண் நின்றிருந்தாள்.
அவளும் இவளை தான் முறைத்து கொண்டு இருந்தாள்."இவ வேறயா", என்று சலித்து கொண்டாள் சம்யுக்தா.

"அப்பா உங்க கிட்ட பேசணும் ", என்றார் பார்வதி.

"ரைட்டு..அப்போ நாம இடத்த காலி பண்ணனும்..இல்லனா இந்தம்மா நம்பள முறைக்கும்", என்று கிச்சனுக்குள் சென்று தண்ணி குடிப்பது போல் நின்று கொண்டாள் சம்யுக்தா.

"என்ன பேசணும் ", என்றார் தாத்தா.

"தாராக்கு கல்யாணம் பண்ண தோணி இருக்கு என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்னு கொஞ்சம் கூட நெனப்பு இல்லையா", என்றார் கோவமாக.

"பார்வதி இந்த முடிவு கண்ணனோடது..இதுல நாங்க செய்ய ஒன்னும் இல்ல ", என்றார் பொறுமையாக.

"யாரோட முடிவ இருந்தா என்ன..வைஷு பத்தி யாரும் யோசிக்கலயா அப்போ", என்று கண்ணனை பார்த்து கொண்டே கேட்டார்.

வைஷு என்கிற வைஷாலினி பார்வதியின் மகள்.உருவத்திலும் சரி குணத்திலும் சரி அப்படியே அவள் அம்மாவை போன்றவள்.

தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் கண்ணன் அமர்ந்திருந்தான்.

"பார்வதி இப்போ என்ன தான் உனக்கு வேணும்..அத மட்டும் சொல்லு..சுத்தி வளைக்காம", என்று எரிச்சளுடன் கேட்டார் ஜனார்த்தனன்.

"அப்பா புதுசா சொல்ல என்ன இருக்கு..என் பொண்ண கண்ணனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கணும்னு எனக்கு ஆசை..எல்லாருக்கும் சம்மதமா", என்று கேட்டு விட்டார்.

அனைவருக்கும் அவர் கேட்பதில் தவறு இல்லை என்று தோன்ற கண்ணனின் முடிவை எதிர் பார்த்து அவன் முகம் பார்த்தனர்.

சமயலறையில் இருந்த சம்யுக்தாவிற்கு ஒரு கணம் ஒன்றும் பிரியவில்லை."இவனுக்கு அவளா..கொஞ்சம் கூட பொறுத்தம் இல்லை..அப்போ அவனுக்கு யார் பொருத்தமா இருப்பாங்க என்று மனசாட்சி கேட்க..ம்ம்ம்..என்று யோசித்தவள் தன்னை போல இருப்பவர்கள் தான் அவனுக்கு சரி என்று எண்ணினாள்..மறுகணம் என்ன இது சிந்தனை..அந்த ஹிட்லர் கூட நாம ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டோம்..", என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே கண்ணனின் கோவமான பேச்சு கேட்டது.

இருக்கையை விட்டு வேகமாக எழுந்தவன்"எனக்கு இப்போ மேரேஜ் பண்ணிக்கிற தாட் இல்ல..உங்களுக்கு யாருக்கு மேரேஜ் பண்ணணுமோ பண்ணிவச்சுக்கோங்க..தேவ இல்லாம என்ன பத்தி பேசவேனா..எல்லாருக்கும் புரிஞ்சி இருக்கும்.."என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு செல்ல மாடி படி ஏற சென்றான்.

"ஹ்ம்ம்...ஹிட்லர்கு கொஞ்சம் அறிவு இருக்கு..ஓகே சொல்லல ", என்று சந்தோஷ பட்டாள். எதற்கு இந்த சந்தோஷம் என்று அவளுக்கே தெரியவில்லை.

அவன் மாடி படி அருகில் போக வைஷு அவன் முன் வந்து "என்ன மாமா..என்ன பிடிக்கலையா..நா உங்க மேல ரொம்ப ஆசை வச்சி இருக்கேன்..லவ் யு சோ மச்..", என்று வழிந்து கொண்டே அவனை தொட பார்த்தாள்.

இரண்டு அடி பின் சென்றவன்.."இப்படிலான் பேசிட்டு என்கிட்ட வந்த அவ்ளோதான்..ஜாக்கிரதை", என்று விரலை நீட்டி எச்சரித்து திரும்ப அங்கே சம்யுக்தா நின்றிருந்தாள்.அவளை பாத்தவன் உடனே முகம் மலர ஒரு புன்னகையுடன் அவளை பார்த்து கண் அடித்து விட்டு படிகளில் தாவி தாவி ஏறிச்சென்றான்.

"ஹிட்லருக்கு திமிர பாரு..ஸ்கூல்ல என்ன கண்டுக்கவே இல்ல..இப்போ அதே பார்வை"..அவள் மனம்"இப்போ பாக்க சொல்றியா இல்ல வேணான்னு சொல்றியா என்று கேட்டக",அப்பொழுது தான் அவள் மனம் போகும் போக்கை கவனித்தாள்.இது ரொம்ப தப்பு..ஆரம்பத்துலயே வெட்டி விடணும்.கல்யானம் வேண்டான்னு எதுக்கு வீட்ட விட்டு வந்தோம்..இப்போ இந்த பிரச்சனை எனக்கு தேவையா என்று அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓட பார்வையை நிமிர்த்தியவள் அப்பொழுது தான் பார்த்தாள். வைஷு அவளை கொலை செய்யும் வெறியோடு பார்த்துக்கொண்டு இருப்பதை.

"இவனால தான இவ்ளோ பிரச்சனை..", அவள் கோவம் அனைத்தும் கண்ணனிடம் திரும்பியது.
 

Advertisement

Top