Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 5

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 5
சம்யுக்தாவின் டிராவல் பேகை எடுத்துக்கொண்டவன் மாடி அறையில் வைக்க சென்றான்.மாடி படியின் வழியை மறைத்து நின்றுகொண்டு அவனையே பார்த்து கொண்டிருந்தவளிடம்,"எதுக்கு இப்படி பாத்துட்டு இருக்க.. வழிவிடு..", என்றான்.

அப்பொழுது தான் சிந்தனை கலைந்தவள்.."பரவாயில்லை நானே பேகை எடுத்துகிறேன்", என்றாள்.

"ஓஓ..மேடம்கு இப்போ தான் அறிவு வேல செய்து போல ", என்று நக்கலாக கேட்டான்.

அதில் எரிச்சலானவள்.."போனபோதுன்னு கேட்டேன் பாரு..என்ன சொல்லணும்",என்று மனதில் நினைத்துக்கொண்டு அவனை முறைத்துவிட்டு படியேறினாள். அவனும் அவள் பின்னே சென்றான்.

மாடியின் முதல் அறையினுல் சென்றவன் அவள் பேகை மேஜையின் மேல் வைத்தான்.அரவம் கேட்டு தாரிகா படுக்கையில் இருந்து எழுந்தாள். கண்ணனின் தங்கை.

கண்ணனை பார்த்தவள் வேகமாக எழுந்து நின்று "அண்ணா ", என்றாள் அந்த பேகை பார்த்தவண்ணம்.

அப்பொழுது உள்ளே வந்த சம்யுகதாவை பார்த்ததும் அவளின் எழிலில் இவள் மயங்கி விட்டால்.தாரிக்காவிற்கு பார்த்ததும் பிடித்துவிட்டது சம்யுக்தாவை.ஆனாலும் இவள் யார் என்ற கேள்வியுடன் தன் அண்ணனை பார்த்தாள்.

அதை புரிந்து கொண்டவன் "நம்ப ஸ்கூலுக்கு புதுசா வந்து இருக்க டீச்சர்..பேரு சம்யுக்தா..நம்ப சொந்தம்னு தாத்தா சொன்னார்", என்று அவளை அறிமுகம் செய்தான்.

அவளை பார்த்து சிநேகமா மென்னகை புரிந்தாள் தாரிகா.சம்யுக்தாவும் தனக்கு ஒரு ஜோடி கிடைத்து விட்டது என்று சந்தோஷமாக அவளை பார்த்து புன்னகைத்தாள்.

"இங்க இருக்க வரைக்கும் உன்னோட ரூம்லே தங்கட்டும்", என்றான்.

"சரிங்க அண்ணா ", என்றாள்.

"சீக்கிரமா கெளம்பி கீழ வாங்க ரெண்டு பேரும்", என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் சென்று மறுகணம் இவர்கள் இருவரும் ஒன்றாக "உஸ்ஸ்ஸ்.. அப்பாடா!", என்று மெத்தையில் உக்கார்ந்தனர்.

இருவரும் தங்களுக்குள் அறிமுக படலம் நடத்தி பிடித்தது, பிடிக்காதது, படித்தது வரை அணைத்து ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்து கொண்டனர்.அந்த குறுகிய நேரத்தில் அவர்களுக்குள் நல்லா சிநேகம் உருவானது.

ஜனார்தனனும் தயாநிதியும் வயலுக்கு சென்றிருக்க உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான் கண்ணன்.தாரிகவும் சம்யுக்தாவும் சிரித்து பேசி கொண்டு வருவதை பார்த்தவன் "இவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள் பழக்கம் ஆனவங்க மாறி பேசிட்டு வராங்க", என்று நினைத்தான்.

துளசி அவர்களை பார்த்ததும் "வாங்க ரெண்டு பேரும்..சாப்பிடலாம் ", என்றார்.அவர்களும் வந்து அமர்ந்தனர்.

"சதா உனக்கு என்ன டிஷ் ரொம்ப பிடிக்கும் ", என்று கேட்டாள்.

சதா என்ற அழைப்பை கேட்டதும் கை கழுவ சென்ற கண்ணன் திரும்பி பார்க்க..அதை பார்த்த தாரிகா "இல்ல அண்ணா, அவங்க பேரு சம்யுக்தா தான..அதான் முதலும் கடைசியும் இருக்க எழுத்த சேர்த்து கூப்பிட்டேன்", என்றாள் பயத்துடன்.

அவள் சொல்வதை கேட்டவன் "ஸ்கூல்கு டைம் ஆச்சு..சீக்ரம் சாப்பிட்டு கிளம்புங்க", கட்டளையிட்டு சென்றான்.

"இவ எதுக்கு இவனுக்கு இவ்ளோ பயப்படறா..அவனும் நமக்கு ஆர்டர் போடறான்..டைம் ஆச்சு வெட்டிய பேசாதிங்கணு சொல்ற மாறி"என்று மனதில் வெகுண்டாள்.அதன் பிறகு தாரிகா பேசவே இல்லை.

"அம்மா"....என்று அவன் கத்தியதில் இருவருமே ஒரு நிமிடம் பயந்து தான் போனார்கள். துளசி என்னவோ ஏதோ என்று வேகமாக ஓடினார்.

"என்ன கண்ணா ", என்றார் பயந்தவராய்.

"கை கழுவிட்டு துடைக்காம போணுமா..டவல் எங்க"...என்று உறுமினான்.

"இதோ எடுத்து வரேன்பா", என்று ஓடிச்சென்று அவன் கையில் வந்து குடுத்தார்.

கையை துடைத்தவன் கிளம்பிச்சென்றுவிட்டான்.அவன் சென்றதும் இவர்களும் பள்ளிக்கு கிளம்பினார்கள்.தாரிகவும் சம்யுக்தாவின் வயதுடையவள் தான்.தாரிகாவும் அவர்கள் பள்ளியில் தான் ஆசிரியையாக பணிபுரிகிறாள்.

இருவரும் நடந்தே பள்ளிக்கு சென்றார்கள். ஒரு பத்துநிமிட நடைபயணத்தில் தான் அவர்களின் பள்ளி உள்ளது.

துளசியிடமும் கோதை பாட்டியிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.போகும் வழியில் உள்ள அணைத்து கிராமத்து அழகையும் ரசித்து கொண்டு வந்தாள் சம்யுக்தா.

அவள் சிந்தனையை கலைத்தாள் தாரிகா.."சதா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..என்கூட தொணைக்கு ஒரு ஆள் கெடச்சது..இல்லனா டெய்லி இப்டியே போற போகும் இந்த பத்துநிமிட நடைபயணம்", என்றாள் முகத்தில் அவ்வளவு புன்னகையுடன்.

"எனக்கு இதெலாம் ரசிக்கவே இந்த பத்து நிமிஷம் போதாது ", என்றாள் சம்யுக்தா.

"உங்கிட்ட ஒன்னு கேக்கணும்னு நெனச்சேன்..உன் அண்ணாவை பார்த்து ஏன் அப்படி பயப்படற..துளசி அத்த கூட பயபடரங்க..", என்றாள்.

"ஐயோ.. உனக்கு அண்ணாவை பத்தி தெரியாது..ரொம்ப ஸ்ட்ரிக்ட்..பயங்கரமா கோவம் வரும்..ஊர்ல எல்லாரும் அண்ணாவை பாத்து பயப்படுவாங்கு..இருந்தாலும் மரியாதை கலந்த பயம் தான் எங்க எல்லாருக்கும்", என்று தன் அண்ணனை பற்றி சொன்னாள்.

இதை கேட்டதும் சம்யுக்தாவுக்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.அவள் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்து கோவம் கொண்டவள் "எதுக்கு இப்படி சிரிக்கிற ", என்றாள்.

"உங்க அண்ணா என்ன அவ்ளோ மாஸ்ஸா..பாக்க எனக்கு காமெடியா தெரியறாரு ", என்றாள் கிண்டலாய்.

"உனக்கு இன்னும் அவர பத்தி சரியா தெரியாதுல..சொல்றேன் கேட்டுக்கோ..ஒரே ஒரு சாம்பிள் கேளு..அங்க ஒருத்தன் நம்பள வச்ச கண்ணு வாங்காம பாக்குறான்ல", என்று அவன் இருக்கும் திசையில் தன் கண்களால் சுட்டிக்காட்டினால் தாரிகா.

அவள் காட்டிய திசையில் சம்யுக்தாவும் பார்த்தாள்..அங்கே ஒருவன் இவர்களை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.அவனை பார்க்கும்பொழுதே அவனின் குணம் நமக்கு தெளிவாக தெரிந்துவிடும்.அவன் நல்லவன் இல்லை என்று..அவன் பார்க்கும் பார்வை கண்டவளுக்கு கோவம் வந்தது.ஒரு பெண்ணை இப்படியா பார்ப்பான்.

"இவன் எதுக்கு நம்பள இப்படி பார்கரான்", என்று கேட்டாள்.

"என்ன தான் பாக்கா வந்து இருக்கான்.தினமும் இப்படி தான்.என் அண்ணா மேல உள்ள பகையினால".

"எனக்கு நீ என்ன சொல்றனே புரியல ".

"எங்க ஊரு பொண்ணுக கிட்டலான் இவன் தப்பு தப்பா பேசிட்டு வம்பு பண்ணிட்டு இருந்தான்.அண்ணா பலமுறை சொல்லி பாத்துடுச்சு..மிரட்டியும் பாத்தாச்சு..அவன் கேக்கவே இல்லை..ஒரு நாள் அவனோட எள்ளையும் மீறி பெரிய தப்பு பன்னான்.

"பக்கத்துல ஒரு ஓட இருக்கு.. அங்க போய் தான் எல்லாரும் குளிப்போம்..அது காட்டுக்குள்ள இருக்கு..ஒரு நாள் சாயந்தரம் என் சித்தப்பா பொண்ணு அங்க குளிச்சிட்டு இருக்க அப்போ இவன் போய் அவள கெடுக்க பாத்து இருக்கான்.நல்லா வேல அவ கத்துனதால அண்ணா பக்கத்துல வேலையா போன அப்போ சத்தம் கேட்டு போய் பார்த்தா இவன் இப்படி பண்ணிட்டு இருந்து இருக்கான்.அவனை பயங்கரமா தொவச்சு எடுத்துடுச்சு.அவன் பயந்து ஓடிட்டான்.அப்புறம் ஊர்ல ஒருத்தர் இத பார்த்துட்டு ஊரெல்லாம் அந்த புள்ளய தப்பா பேசினாங்க.அது தற்கொலை பண்ணிக்க போய்டுச்சு.அப்போ எங்க இருந்தோ கடவுள் மாறி ஒருத்தர் வந்து அவளை காப்பாத்தி கல்யாணமும் பண்ணிகிட்டாரு..ரொம்ப நல்லா மனுஷன்.

"இப்போ சொல்லு என் அண்ணா எப்படினு", என்று பெருமிதமாக சொன்னாள்.

"சரி விடு..ரொம்ப நல்லவர் வல்லவர் தான் உங்க அண்ணன் ", என்று கிண்டலாக சொன்னாலும் அதை உணர்ந்து சொன்னாள் சம்யுக்தா.மனதில் அவனின் மீதான மதிப்பும் கூடியது.

இவர்கள் அவனை நெருங்கியதும் இவர்களின் வழியை மறைத்து நின்றான் அந்த கெட்டவன் என்கிற மாரி.

"ஹலோ..மிஸ்டர் கண்ணு தெரில..வழிய மறச்சிட்டு மேலவிழற மாறி நிக்கிற", என்று பொரிந்தாள் சம்யுக்தா.

"ஏய் பாப்பா..என்னத்துக்கு கத்துற...இந்த புள்ள மாறி இருக்க கத்துக்கோ..இவ்ளோ நாள்ல என்ன ஒரு வார்த்தை சொன்னது இல்ல.. நீ என்ன இப்படி எகுறின்னு வர", என்று ஜொள்ளினான்.

அவனை வெட்டுவது போல் பார்த்தவள்.."இங்க பாரு மரியாதையா பேசு..போற வழியா மறிச்சி பேசிட்டு இருக்க", என்றாள்.

"ஏன் பாப்பா இவ்ளோ சூடா இருக்க..இங்க பாரு என் செல்லம் எப்படி அமைதியா அடக்க ஒடுக்கமா பொண்ணு மாறி இருக்கா..நீ என்ன இப்படி துள்ர", என்றான்.

தன்னை ஒருவன் பெண்போல நடந்துகொள் என்று சொல்கிறான் அதுவும் ஒழுக்கமற்ற ஒருவன் என்னை சொல்கிறான் என்று வெகுண்டவள் "இதுக்கு மேல பேசின அவ்ளோதான்..என்ன பண்ணுவேன்னு தெரியாது", என்று எச்சரித்தாள்.

"சரி பேசல பாப்பா..உன் கைய இப்படி புடிச்சிக்கிறேன்"..என்று சொல்லி அவளின் கையை பிடித்துக்கொண்டான்.

அதில் ரௌத்திரம் ஆனவள் அவனை ஓங்கி பளார் என்று கன்னத்தில் அறைந்தாள்.

இதை சற்றும் எதிர் பாக்காத மாரி அவளை கொலை செய்யும் அளவிற்கு கோபம் கொண்டான்.

தாரிகா இருவரின் உரையாடலை கேட்டு கொண்டு இருந்தவள் இப்படி அரைவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை.அவள் பயத்துடன் இருவரையும் மாறி மாறி பார்க்க..சம்யுக்தாவோ அவனை வசை பாட துவங்கி விட்டாள்.

"பொறுக்கி என் கைய புடிக்க உனக்கு எவ்ளோ தைரியம்..நா யாருனு தெரியுமா..மரியாதையா ஓடி போய்டு..உயிர் மேல ஆச இருந்தா",என்று தன் ஆள்காட்டி விரலை உயர்த்தி மிரட்டினாள்.

"சதா என்ன பண்ற..அவன் கிட்ட நமக்கு எதுக்கு பிரச்சனை..அமைதியா இரு", என்று மெதுவாக சொன்னாள்.

"நீ சும்மா இரு...இவன மாறி ஆளுங்கள பாத்து பயப்பட கூடாது..பொண்ணுகனா அவ்ளோ இளக்காரமா இவனுக்கு", என்று அவனை தீயில் இடும் பார்வையால் எரிந்துகொண்டு சொன்னாள்.

"ஏய்!பொண்ணு உன்ன என்ன பண்றேன் பாரு", என்று அவன் அவளை நெருங்கும் நேரம் கண்ணனின் கார் சாலையில் வருவது தெரிந்தது.உடனே மாரி தன் வண்டியை உதைத்து வேகமாக சென்றுவிட்டான்.கண்ணனின் மேல் அவ்வளவு பயம்.

இதை புரிந்து கொண்ட சம்யுக்தா அவனை சீண்டினால்."என்னடா எங்க மாமா வண்டிய பாத்ததும் இப்படி பயந்து ஓடுற..அவர பாத்து நாலு வார்த்தை பேசிட்டு போடா பயந்தாங்கொள்ளி".

இதில் இன்னும் கோபம் கொண்டவன் மனதில் வஞ்சம் கொண்டான் சம்யுக்தாவின் மேல்..அதுவும் அவள் அறைந்த கன்னம் இன்னும் தீயாக தகித்துக்கொண்டு இருந்தது.அவளை ஒரு பார்வை பார்த்து கொண்டே சென்றான்.

"என்னடா பார்வ..போடா போடா", என்றாள்.

"மாமா வா...யார சொல்ற நீ ", என்று ஆச்சர்யமாக கேட்டாள் தாரிகா.

"வேற யாரு உன் அண்ணனா தான் தாரா", என்று கண்ணடித்து சொன்னாள்.

"கொஞ்சம் கூட பயமே இல்லை உனக்கு..இவன் சும்மா இருக்க மாட்டான்..மறுபடியும் பிரச்சனை பண்ணுவான்", பயத்துடன் சொன்னாள்.

"அவனை பிறகு பாக்கலாம்..இப்போ நமக்கு முன்னாடி வர ஹிட்லர பாப்போம்", என்றாள்.

இவள் சொல்வதை கேட்டு தாரிக்காவிற்கு சிரிப்பு தாங்க வில்லை..அவள் மனநிலையும் மாறியது..மாரியை மறந்து அவள் ஹிட்லரை பார்த்து சிரித்துகொண்டு இருந்தாள்.சம்யுக்தாவும் இணைந்து கொண்டாள்.

இவர்கள் சிரிப்பதை பார்த்துக்கொண்டே காரை இவர்கள் அருகில் நிறுத்திவிட்டு..கார் கதவை திறந்து கொண்டு சம்யுக்தாவை பார்த்து கொண்டே வந்தான் கண்ணன்.

சிரிப்பதை நிறுத்தி விட்டு "இவன் எப்போவும் என்ன இப்படியே தான் பார்க்கிறான்.அந்த பார்வைக்கான அர்த்தம் தான் புரியமட்டிங்க்குது", என்று யோசிக்கலானாள்.

கண்ணனோ அவள் மாமா என்று அவனை சொன்னது கேட்டுவிட்டு தான் அப்படி பார்த்து கொண்டு இருந்தான்.ஆளை இழுக்கும் பார்வை..பாவம் சம்யுக்தவிற்கு தான் புரியவில்லை.புரியவில்லையா அல்லது புரிந்துகொள்ள முற்படவில்லையா அவளுக்கே தெரியவில்லை.
 
Top