உன்னில் தொலைந்தேனே

Advertisement

SHANMUGALAKSHMI

Member
Member
"ஒரு நொடி கண்ட
உன் பிம்பத்தில்
பித்தாக்கினாய் என்னை"

"பிரியாத வரம்
வேண்டும்
உன்னை
பிறவி முழுக்க
பெரிதான வரம்
வேண்டும்
என் பேரழகே அதை
நீ தர வேண்டும்"

"திமிறாய் நிற்கும்
என் பெண்மை
திணறிதான் போனது
உன்னிடத்தில்
ஓர் வார்த்தை பேசிடவே"

"ஆண்களுக்கு
மட்டும் தான்
கண்டதும் காதலா?"

"கன்னிநான்
உன்னில் தொலைந்தேனே
கண்ட நொடிமுதலாய்
காதல் கொண்டு"

"காற்றில் கரையும்
கற்பூரமாய்
உன் கண்ணில்
தொலைந்தேனே
கன்னி நான் வெகுநேரமாய்"

"உன்னில் தொலைந்த
என் உயிர்மீட்க
உறவாய் வருவாயோ
என் கரம் கோர்க்க?"
 

Advertisement

Advertisement

Back
Top