Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -10

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -10

அவன் எதிர் பார்த்த நாளும் வந்தது... இன்று பௌர்னமி எல்லா தெய்வங்களிடமும் வேண்டிக்கொண்டான்.. அவனின் உயிர், தேவதை வரவேண்டும் என்று...

பர்தா அணிந்த பெண் தேனுவாக இருக்க வேண்டும் என்று... விடியற்காலையிலே எழுந்து, கோவிலுக்கு சென்றான் அவளுக்கு பிடித்த அம்மன் சாமியிடமே முறையிட்டான்..

தன் மனைவி என்று உணர்ந்த பிறகு, அவளுக்கு பிடித்த க்ரே கலர் முழுக்கை சட்டை அணிந்தான். தலையை பத்துமுறைக்கு மேல் கலைத்து கலைத்து வாரினான்...

சரியாக பத்து மணிக்கு அவனின் கார் கலெக்டர் ஆபிஸில் நுழைந்து.. அன்று பத்திரிக்கைகார்கள் வழக்கம்போல் போதை மருந்து விற்கும் கும்பலை பற்றி கேட்க வந்திருந்தனர்..

அவர்கள் ஓடிவந்து மைக்கோடு நிற்க... கூட்டம் கூடியது... காவலர்கள் அவர்களை தள்ளினர்.. அதே பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள்... கூட்டத்தை பார்த்தவுடன் எழுந்து வந்து கூட்டத்தில் புகுந்து பொக்கையை கொடுக்க வந்தாள்...

காரை விட்டு இறங்கும்போதே பார்த்துவிட்டான் கள்வன்..

பத்திரிக்கை கார்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தபடி தேனுவை நோட்டம் விட்டான்...

மெல்ல கூட்டத்தில் புகுந்தாள்.. பொக்கேவை நீட்ட அவளிள் விரல்களின் மேல் தன் கையை வைத்து அழுத்தி பிடித்தான்.. தெரிந்து கொண்டாள் பெண் தன்னவன் உணர்ந்துக்கொண்டான் என்று

சட்டென்று கையை விலக்கினாள்... அவளை பின் தொடர முடியவில்லை இனியனால் ,மறுபடியும் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்...

கூட்டத்திலிருந்து வெளியேறி மாயமானாள் தேனு... அனைவருக்கு பதில் அளித்துவிட்டு உள்ளே சென்றான் இனியன்...

தன் அலைபேசியில் மோகனை அழைத்தான்...

டேய் மோகன் என்னாச்சு..

காலையிலே அம்மா கிளம்பிட்டாங்க மாமா, பப்புவ கூட்டிட்டு... நான் அக்காவ தான் பாலோ செய்றேன்.. அவங்க வந்த கார்ல என் மொபைல் போட்டுட்டேன் மாமா...

பழைய மொபைல்தான்.. இதோ ட்ராக் பண்ணிட்டே போறேன்..

சீக்கிரம் டா அவ திருக்கோவிலூருக்கு தான் போவா.. பார்த்து ஜாக்கிரத்தை...

ம்ம்... சரி மாமா என்று போனை அனைத்தான்..

அப்பா சிக்கிரம் காரை ஒட்டுங்க.. ரெட்டியிடம் கூறினாள் தேனு என்கின்ற ஐலா..

நீ பயப்படாத அவங்களால உன்னை பிடிக்க முடியாதுடா..

அமைதியானாள் தேனு..

அவளை பார்த்து ரெட்டி... என்னம்மா என்றார்..

ப்ச் அப்பா உங்களுக்கு அவரை பற்றி தெரியாது... இன்னும் ஒன் ஹவர்ல எல்லாத்தையும் தெரிந்துக்கொள்வார்..

இது ஆந்திரா வண்டியில்லமா, தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரஷன் செஞ்ச வண்டி.. அவரால கண்டுபிடிக்கமுடியாதுமா..

தன் அம்மாவை அழைத்தாள்... அந்த பக்கம் ரேனுவோ...

ஹாங்... வந்துட்டோம்..

அம்மா காலையில நம்ம வீட்டுல என்ன நடந்துச்சு சொல்லு..

காலையில நிறைய வேலைடி, உன் பையனை இன்னைக்கு மோகன்தான் ரெடி செஞ்சான்... எதுக்கு அவனை கூட்டிட்டு போறேன்னு கேட்பான்.. இன்னைக்கு பப்புவ கூட்டிட்டு போகலையா கேட்டான்..

அப்பறம்...

இனியன் கேசரியும், வடையும் செய்ய சொன்னான்டி.. ரொம்ப நாள் கழிச்சு வயிறு நிறைய சாப்பிட்டான் தேனுமா..

அம்மா உன் மாப்பிள்ளைக்கு தெரிஞ்சிடுச்சு... கேட்டா எதுக்கும் வாயை திறக்காதே.. முதல்லே சொல்லக்கூடாதா.

எனக்கு எப்படி தெரியும் தேனு..

ம்ம்.. என் கடைசி தம்பி ஒருத்தன் இருக்கானே அவன் தன் மாமனுக்காக உயிரே தருவான்.... நான் வரல நீ வீட்டுக்கு போயிடுமா..

சரிடி.. பார்த்து, சாப்பிட்டியா நீ, உனக்கு பிடிச்சதை செய்து எடுத்துட்டு வந்தேன்.. போக சொல்ல வாங்கிட்டு போடி..

அம்மா நிலைமை தெரியாம பேசாதே நான் போனை வைக்கிறேன்... நீ வேற சிம்மை மாத்து.. என்கிட்ட பேசனுமுன்னா நான் கொடுத்த போனிலிருந்து பேசு வைக்கவா...

ம்ம்.. சரிடி.

...

மதியம் மூன்று மணிக்கு.... மோகன் இனியனுக்கு போன் செய்தான்..

மாமா.. காரை இங்கே விட்டு வேற காருல போயிட்டாங்க...நான் என் போனை எடுத்துட்டேன்...

மோகன் சீக்கிரம்டா எங்க போறான்னு பாருடா..

எங்க பிரண்ட்ஸ் பாலோ செய்றாங்க மாமா...

அன்று இரவே எல்லா டிடைலும் இனியனுக்கு வந்துவிட்டது... அவள் விசாகபட்டினத்தில் வசிக்கிறாள் என்று தெரிந்த அடுத்த ஒருமாதத்தில் , யார் யாரை பிடிக்கனுமோ அவர்களை பிடித்து டிரான்ஸ்பர் வாங்கி வைசாக் வந்துவிட்டான்.. போகும் முதல்நாள் தான் ரேனுவிற்கே தெரியும்...

என்னடா சொல்லுற, எங்களால பப்புவ விட்டு இருக்க முடியாது நானும் கூட வரேன் ரேனு சண்டை போட...

அத்தே, சக்திக்கு குழந்தை பிறந்தவுடன் வாங்க என்று சமாதானம் படுத்தினான்... தன் அத்தையிடம் தேனுவை பற்றி கேட்கவில்லை...

தான் தங்க போகும் இடம், உங்க தூரத்து உறவினர் என்று ரெட்டி பற்றி கூறினான்... சென்னையில் ரயில் ஏறும்போதும் கேட்கவில்லை...

ஆனாலும் ரேனுக்கு சந்தோஷமே, எப்படியாவது இனியன் தேனுவை பார்ப்பான், அவளின் மனதை மாற்றி கூட்டிட்டு வருவான் என்று நம்பிக்கை பிறந்தது அவளுள்..

.....

விடியற்காலையில் வீடே பரப்பரப்பாக இருந்தது, பெண்கள் பட்டுபுடவை சகிதமாக அங்கே இங்கே பொருட்களை எடுத்து வைக்க, இளவயது பெண்கள் பட்டுபாவாடை, லேஹாங் போன்ற உடைகளை உடுத்தி பேஷன் ஷோவில் நடப்பது போல் நடந்துக்கொண்டிருந்தன...

நல்ல நேரம் முடியபோகுது ,சீக்கிரம் எல்லோரும் ரெடியாகுங்க பெரியவர் ஒருவர் குரல் கொடுக்க..

இரண்டு வேன்ல உறவினர்கள் ஏறி அமர்ந்தனர்... ரெட்டி அவரின் மனைவி துளசியிடம் எல்லாவற்றையும் எடுத்துவைத்தியா கேட்டுக்கொண்டிருந்தார்...

ஹாலில் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி அசோக் மாடிபடியில் நிற்க, பட்டிவேட்டி சகிதமாக ஆணழகனாக நின்றான் இனியன்..

அவனின் கண்கள் அலைபாய்ந்தன , தன்னவளின் தரிசனைத்தை காண, ரூமிற்கும் ஹாலுக்கு பார்த்துக்கொண்டிருந்தான் இனியன்..

துளசி வெளியேயிருந்து குரல் கொடுத்தாள், அம்மா ஐலா சீக்கிரம் வாடா என்க.

ஆரஞ்சு நிறத்தில் பட்டுபுடவை அணிந்து மணப்பெண் கோலத்தில் நந்தினி வெளிவந்தாள், அவளின் பின்னாடி ஊதாநிறத்தில் பட்டுபுடவையில் பப்புவை கையில் பிடித்து நடந்துவந்தாள் ஐலா..

அவளை பார்த்தவுடனே ஜர்க்காகினான் இனியன்.. தேனுவை மணக்கோலத்தில் கல்யாணத்தன்று பார்த்தது போல் இருந்தாள் பெண்ணவள்...

மயங்கிதான் போனான்... தேனுவின் அழகில்.. ஐய்யோ என் பொண்டாட்டி வரவர இவ்வளவு அழகாயிட்டே வராலே, நான் ரொம்ப லவ் பண்ணுறேன்டி அவன் உருகி மனதில் சொல்ல..

தலை நிமிர்ந்து மாடியை பார்த்தாள். தன் உதட்டை குவித்து முத்தமிட்டான்... அவனை முறைத்தபடியே நடந்தாள். மச்சான் அசோக்கு உன் தங்கச்சி முறைச்சிக்கிட்டே சைட் அடிக்கிறா பாரு, திறமைதான்டா..

தேனுவிற்கு ரொம்ப பிடிக்கும் இனியன் பட்டுவேட்டி அணிந்துவந்தால்...

கண்ணத்தில் கையை வைத்துக்கொ ண்டு யோசித்துக் கொண்டிருந்தான் அசோக்.. இனியனை எழுப்பும் போது நடந்ததை நினைத்து..

டேய் இனியா உன் கண்ணம் ரோஸ் கலர்ல இருக்குடா.. அப்ப தேனு வந்துச்சா..

வந்தாளே, இங்க கொடுத்தா, அங்க கொடுத்தா என்று கண்ணத்தை திருப்பி திருப்பி காட்டினான் இனியன்..

மச்சான் தேனுவ கையும் களவுமா பிடிக்க வேண்டியதுதானே..

அவ கிஸ்ல மயங்கி போயிட்டேன்டா... அப்பறம் கண்ணை திறந்தா ஆளே காணோம்டா..

இப்ப எப்படிடா நிருபிப்ப போடா, என்னத்த கலெக்டருக்கு படிச்சியோ. இன்னொரு பிள்ளையை வேற நிச்சியம் செய்யபோறான்..

அசோக்கின் செல் ஒலிக்க... எடுத்து ஹலோ என்றான்..

அந்தபக்கம் நம்ம மோகன் பேச... எப்படா வர... நாளைக்கா ,சொல்லிடுறேன்..

இவனையே சமாளிக்கமுடியல .. இதுல அவன் ஜெராக்ஸ் வருது... என்ன ஆகபோதோ இப்பவே கண்ணுகட்டுதே சத்தமாகவே சொன்னான் அசோக்..

அசோக்கும், இனியனும் காரில் செல்ல மற்ற அனைவரும் வேனில் வந்தார்கள்... காலை எட்டு மணிக்கு கோவிற்கு வந்து சேர்ந்தார்கள்..

காலையிலே பூஜையை ஆரம்பம் ஆனது... பிறகு பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் பட்டுவேட்டி, புடவை கொடுத்த கட்டிவர சொன்னார்கள்.. இருவருக்கும் நிச்சியம் நடந்தது.. கையில் மோதிரத்தை அணிவித்தான் இனியன்..

அப்போது அவனின் கண்கள் தேனுவை மட்டுமே பார்த்தது.. எதற்கும் கலங்கவில்லை பேதை.. மகிழ்ச்சியாகவே இனியனை ஏறிட்டாள் ஐலா...

கோவம் இனியனுக்கு தன்னை கண்டுகொள்ளவில்லை யாரோ மாதிரி பார்க்கிறாள் என்று..

நந்தினியும் இனியனை பார்க்க வெட்கப்பட்டு நிமிராமலே அவன் விரலில் மோதிரத்தை போட்டாள்.. அங்கே கூடியிருக்கும் அனைத்து உறவினர்களும் கையை தட்டினர்..

இவர்கள் இருவரின் ரியாக்ஷனை மட்டுமே மாறி மாறி பார்த்து நின்றான் அசோக்...

என்ன நடக்கும் தெரியலையே... அவங்க அம்மா சொல்லுச்சு சொல்லுவானே, ஜாதகத்தில இரண்டு முறை கல்யாணம் நடக்குமுனு... அசோக் மெயின்ட் வாய்ஸ்..

இனியன் அசோக்கை பார்த்து, ஏன்டா நான் பத்துவாட்டி கூட கல்யாணம் செஞ்சிப்பேன்.. ரொம்பதான் அலுத்துக்கிறா உன் தங்கச்சி.. இங்க பாரு எண்ணி எட்டுமாசத்தில ஒரு பெண்குழந்தையை பெத்துகாட்டுறேன் பாரு... மையின்ட் வாய்ஸூன்னு சத்தமா சொல்லுறான்..

---உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
என்ன நிச்சய மோதிரத்த
போட்டுட்டான்
என்னடா நடக்குது
 
மறைந்து நின்று பார்த்தாலும்
மறந்து விட்டேன் என சொன்னாலும்
மனதில் என்றும் உன் நினைவில்....
மறக்க மாட்டேன் கண்ணே
மறந்தும் விட்டுச் செல்ல மாட்டேன் ......
மறுபடியும் கரம் பிடிப்பேன்
மனைவி என்றும் நீ மட்டுமே....
 
Super ma'am ??
நன்றி சிஸ்
மறைந்து நின்று பார்த்தாலும்
மறந்து விட்டேன் என சொன்னாலும்
மனதில் என்றும் உன் நினைவில்....
மறக்க மாட்டேன் கண்ணே
மறந்தும் விட்டுச் செல்ல மாட்டேன் ......
மறுபடியும் கரம் பிடிப்பேன்
மனைவி என்றும் நீ மட்டுமே....
நன்றி சிஸ்
 
Top