Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -04

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -04

அடுத்த நாள் ஊருக்கு சென்ற அசோக் திரும்பி இனியன் வீட்டிற்குள் வர..

வாடா தங்கச்சி, குழந்தைங்க நல்லாயிருக்காங்களா..

ம்ம்... சாப்பிட்டுக்கொண்டிருந்த இனியன் பக்கத்தில் உட்கார்ந்து தட்டை எடுத்து இட்லி, சாம்பார் ஊற்றி சாப்பிட ஆரம்பித்தான் அசோக்...

டேய்.. நாளைக்கு பொண்ணு பார்க்கவா போறே...

ஆமாம்...

இல்ல ஐலா தான் உன் பொண்டாட்டி அப்படி சொன்ன தீடிரென்று அத்தை சொல்லிச்சு அதான் பொண்ணு பார்க்க போறேன் சொல்லுற..

டேய் மச்சான், உன் தங்கச்சி சப்ப பிகரு... ஆனா அவ அக்கா இருக்காளே நந்தினி அரபிக்குதிரை மாதிரி...செம கட்ட மச்சான்... அதான் போட்டோவை பார்த்தவுடனே அவ அழகுல மயங்கி விழுந்துட்டேன்..

ஐலா... என்று சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அசோக் சொல்ல..

ஐலாவோ, ஐயிர மீனோ எனக்கு தேவையில்லடா... சும்மா அவ பின்னாடி சுற்றது போர் அடிக்குதுடா.. ஒவரா பிகு செய்யுறா..

இனியா... அசோக்,தன் கண்ணை பின்னாடி காட்ட..

என்னடா.. திரும்பி பார்த்தான் இனியன்.. அங்கே இதையெல்லாம் கேட்டு முறைத்துக்கொண்டிருந்தாள் ஐலா...

என்னா என்றான்..

பப்புவ கூட்டிட்டு போகலாம் வந்தேன்.. இன்னைக்கு லீவ்தானே அதான்... அவள் தயங்கியபடியே நிற்க... நம்ம அசோக் தான் உட்காரும்மா... சாப்பிட்டியா என்று கேட்டான்.

ம்ம்..அண்ணா,

எதுக்கு அவன் அப்பனை பிடிக்காதாம், அவன் பிள்ளையை மட்டும் வேணுமா.. கூட அவங்க அப்பனும் வருவான்... ஓகேன்னா கூட்டிட்டு போ..இல்லனா போடீ...

அவள் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டாள்.. வெளியே பால்கனியில் நின்றிருந்த பப்பு சைகையில் என்னாச்சு ஐலாவிடம் கேட்டான்..

தன் தலையை ஆட்டி அனுப்ப மாட்டாங்களாம் என்றாள்..

முகத்தை தூக்கி வைத்துக்கொண்டது வாண்டு... காலையிலே ப்ரஷ்ஷா குளிச்சி சிகப்பு டீ ஷர்ட் கீழே சந்தனம் கலரில் முக்கா பேன்ட் போட்டு காத்துக்கொண்டிருந்தான்... நேற்றே பேசி வைத்திருந்தான்.. அப்பாகிட்ட பர்மிஷன் வாங்கி என்னை கூட்டிட்டு போ என்று..

அடுத்த பத்தாவது நிமிடம்... ரகுநாத ரெட்டி ,இனியன் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார் கூடவே ஐலாவும் வந்திருந்தாள்..

யாரு என்று பார்க்க அசோக் கதவருகே வந்தான்.. மச்சான் அவங்க அப்பாவ கூட்டிட்டு வந்திருக்கா..

கதவை திறந்து வாங்க ஸார்.. என்று அவரை உள்ளே வரவேற்றான் அசோக்.. கூடவே சோபாவில் உட்கார்ந்திருந்து பேப்பரை படித்திருந்த இனியனும் வாங்க என்க..
சோபாவில் அமர்ந்தார்.. ஐலா அவர் பக்கத்திலிருந்து இனியனை முறைத்துக்கொண்டிருந்தாள்...

எப்படி பேச ஆரம்பிப்பது என்று தயக்கம் அவர் வாயை திறக்கும் முன்னே, இனியன் பப்பு இங்க வா என்று கத்தி அழைத்தான்... அவன் குரலை கேட்டு பதறி ஒடிவந்தான் பப்பு...

தாத்தாவீட்டுக்கு போயிட்டு வாங்க, சேட்டை பண்ண கூடாது என்றான் இனியன்..
ரொம்ப சந்தோஷம் பப்புவுக்கு, தேங்கஸ் டாடி, அவனை கட்டியனைத்து ஐலாவிடம் ஏறினான்.. இருவரும் அங்கிருந்து கிளம்பினர்...

ரெட்டி தான், பேச ஆரம்பித்தார்...

நான் சொல்ல வரதுக்கு முன்னாடியே நீங்க புரிஞ்சிட்டிங்க... எப்படி கேட்கிறது என்ற தயக்கம் இருந்தது தம்பி...

இதில் என்ன இருக்கு உங்களுக்கு மாப்பிள்ளையா வர போறேன் இனியன் சொல்ல..
ரெட்டிக்கு ரொம்ப சந்தோஷம் கலெக்டரே தனக்கு மாப்பிள்ளை ஆகபோறது..

தம்பி உங்ககிட்ட ஒரு விஷியம் சொல்லனும்... உங்க பிள்ளையை பார்த்த பிறகுதான் ஐலா கொஞ்சம் தெளிவாயிருக்கா... எங்க வீட்டு தேவதை தம்பி ஐலா...இவ என் பொண்ணு கிடையாது..

என்னங்க சொல்லுறீங்க அசோக் அதிர்ச்சியா கேட்டான்..

ஆமாங்க.. எங்க தாத்தா தமிழன் இங்க பொழைக்க வந்துட்டார்... நாங்க தமிழ்நாடுதான்... என் முதல் தம்பி டீச்சரை லவ் மேரேஜ் பண்ணிட்டு ஊரே விட்டு போயிட்டான்... அவன் தமிழ்நாட்டில் மதுரையில செட்டில் ஆயிட்டான்.. குரலை தழைத்து, அப்போ ஐலா ஏழு வயசு குழந்தை.. அம்மனை சேவிச்சிட்டு வீட்டுவரசொல்ல 2004 சுனாமி அலையில மாட்டி இறந்துட்டாங்க தம்பி...

அப்படியா ஸார், வீடு எங்கேயிருக்கு..

கோயிலுக்கு நாலுதெரு தள்ளிதான் தம்பி...அப்பறம் அன்னியிலிருந்து ஐலாவிற்கு
நான்தான் அப்பா...என் பொண்டாட்டி துளசிதான் அம்மான்னு சிவிகாரம் எடுத்துட்டேன்.. நீங்க கட்டிக்க போறவ என் இரண்டாவது தம்பி பொண்ணு... ஐலாகிட்ட எதுவும் கேட்காதீங்க தம்பி பாவம் ஏங்கிபோயிடுவா, குழந்தை மனசு அவளுக்கு...

ம்ம்...அவளா ராட்ஷசி ஸ்ட்ரா இல்லாம என் ரத்ததை உறிவா மனதில் சொல்லிக்கொண்டான்..

வரேன்பா... சாய்ந்திரம் ஆறு மணிக்கு வந்திடுங்க..

சரிங்க என்று தலையை ஆட்டிவிட்டு அவரை வழியனுப்ப எழுந்தான்...

அசோக் முகத்தை சோகமாக வைத்து, பார்த்தியா மச்சான் ஐலா தேனுயில்லடா... சின்ன வயசிலே அம்மா, அப்பாவை இழுந்து பாவம்டா...

அசோக்கை ஏளனமா பார்த்தான் இனியன்.. ஏன்டா புத்தியை யூஸ் பண்ணவே மாட்டியா.. தன் தலையில் அடித்துக்கொண்டான்...

நான் ஒரு கலெக்டருன்னு மறந்து நடிச்சிட்டு போறாரு ரெட்டி...

போடா மனுஷன் எவ்வளவு ஃபீல் செய்யுறாரு..

மக்கு.. மதுரையில்ல எங்கடா சுனாமி வந்தது... அங்க பீச்சே இல்லடா... அதுவும் கோயில் பக்கத்து தெருவாம்.. தன் இருகையை தூக்கி சோம்பல் முறித்தான் இனியன்.

ஆமாம்டா, காதுல பூ சுத்துட்டு போகுது பெரிசு... இதுக்கு எவ்வளவு பெரிய மீசை நம்ம நாட்டாமை போல..

சரிடா வறீயா ஹேர் ஸ்டைல் மாத்தனும், பேஷியல் செய்யனும் ஸ்பாக்கு போக போறேன்..
இப்ப எதுக்குடா பொண்ணைதானே பார்க்க போற.. புதுசா கல்யாணம் செய்ய போறமாதிரி...

டேய்.. என் தேனு எப்படி வருவா தெரியுமா... ஏன்ஜல் மாதிரியிருப்பா.. நான் அவளுக்கு ஈடு கொடுக்க வேண்டாமா.. அவ அக்காவ சைட் வேற அடிக்கனும், கிளம்புடுடா...
.....
இங்கே ரகுநாத ரெட்டி வீட்டின் ஹாலில் அனைத்து பெண்கள் சூழ்ந்திருக்க, துளசி மடியில் உட்கார்ந்து பப்பு, தனக்கு பிடித்த பீஸ்ட் படத்தின் பாட்டை பாடிக்கொண்டிருந்தான்..

அவ்வீட்டு பெண்கள் சுற்றி உட்கார்ந்து அவனின் மழலை பேச்சை கேட்டுக்கொண்டிருந்தனர்...

ஐலா அவனுக்கு காலை உணவை ஊட்டினாள்... மதியம் போல் ரகுநாத ரெட்டியின் உறவினர்கள் வர தொடங்கினர்... மாலை பெண் பார்க்கும் படலம் நடக்க இருப்பதற்காக..
மாலை ஆறுமணிக்கு இனியன், அசோக் மற்றும் இனியனின் பி.ஏ மூவரும் வந்தனர்... கிராமம் என்பதால் வீடு முழுக்க கூட்டமாக இருந்தது..

அதில் ஒரு வயதான பெண்மணி வந்து கூடத்தில் உட்கார்ந்திருந்த இனியனை பார்த்து நீங்கதான் கலெக்டர் தம்பி... ரொம்ப அழகாயிருக்கீங்க தம்பி என்று நெட்டி முறித்து சென்றார்..

ஒரே பரபரப்பு அந்த வீட்டில்... வயதுபெண்கள் ரூமிலிருந்து எட்டி எட்டி பார்த்தனர்...
அக்காவ் மாமா சூப்பரா இருக்காரு... உங்களுக்கு ஏத்த ஜோடிதான் கேலி செய்ய கதவின் வழியாக பார்த்தாள் நந்தினி இளச்சிவப்பு நிற பட்டுபுடவையில் கழுத்தில் நகைகள் அணிந்து தலை நிறைய மல்லிப்பூ சூடியிருந்தாள்..

அங்கியிருந்த ரெட்டியின் உறவினர்கள் இனியனை பார்த்து கேள்விகள் கேட்க... அவன் கண்களோ தன் தேவதையின் தரிசனத்தை எதிர்பார்த்து பூத்துபோனது...

டாடி என்று குரல் கேட்டு இனியன் திரும்ப ரோஸ் நிறத்தில் லேஹாங் அணிந்து கையில் பப்புவை பிடித்துக்கொண்டு படியிலிருந்து இறங்கி வந்தாள்...

அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் இனியன்... அப்படியே இருக்கடி முதல்நாள் உன்னைப்பார்த்த மாதிரியே...

இதுதான் என் தம்பி சீனுவாசன்ரெட்டி... அவர் பொண்ணுதான் நந்தினி... இது அவர் மனைவி ரம்யா என்று அறிமுகபடுத்தினார் ரெட்டி..

வணக்கம் என்று இருவரும் கையை கூப்பினர்... பொண்ணை அழைச்சிட்டு வாங்க ஒருவர் சொல்ல...

மூவருக்கும் சாப்பிட எல்லா பண்டங்களும் வைக்கப்பட்டது... நந்தினி கையில் காபி ட்ரேவுடன் நிமிர்ந்து இனியனை பார்த்தாள்...

இனியன் அவளை பார்த்து லைட்டாக புன்னகைத்தான், எல்லோருக்கும் வணக்கத்தை சொல்லிவிட்டு அமர்ந்தாள்... அவன் மடியில் வந்து அமர்ந்துக்கொண்டான் பப்பு..
ஸார் உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசனும்... எனக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தையிருக்கு... நான் தெளிவா அவங்க கிட்ட பேசனும் என்றான்..

தாராளாம தம்பி... அம்மா ஐலா அக்காவ கூட்டிட்டு போடா.. இனியன் அந்த வீட்டின் கடைசி ரூமில் இருந்தான்...

உள்ளே ஐலா வர... அவளை பிடித்து ஒரு சுற்று சுற்றி அவள் இதழில் இதழ் வைத்து ஆழ்ந்த முத்தமிட்டான்... இரண்டு வருஷ தாகம் தனிந்து கொண்டான் அவள் உமிழ்நீரில்...

முதலில் திகைத்த ஐலா.. அவனை தள்ளிவிட போராட... முடியாமல் அவன் முத்தத்தில் மயங்கி நின்றாள்... அவள் கண்களிலிருந்து கண்ணீர் வெளியே வர... அவன் கீழ் உதட்டை கடித்தாள்... அம்மா என்று அலறி அவளை விடுவித்தான்...

நீயெல்லாம் ஒரு கலெக்டரா அக்காவுக்கு எனக்கும் வித்தியாசம் தெரியல..

அலட்சியமாக சொன்னான்... தெரிஞ்சது... பாதியிலே எப்படி விட்டுபோறது அதான் முடிச்சிட்டு ஸாரி கேட்கலாம் நினைச்சேன்..

உன்ன.. இருடா எங்கப்பாகிட்ட சொல்லுறேன்.. நீ பெரிய நல்லவன் நினைச்சு.. ஊரே உன்னை புகழ்ந்து பேசுது... இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லுறேன்..
என்னன்னு சொல்லுவ... மாமா என்னை கிஸ் அடிச்சிட்டாருன்னா... போய் சொல்லு, நீதான் என்னை இறுக்கி கட்டி பிடிச்சு முத்தம்கொடுத்தேன்னு எல்லார் முன்னாடியும் சொல்லுவேன்... பாரு நீ கடிச்ச இடத்தில ரத்தம் வருது.. இந்த எவிடன்ஸ் போதும்... கடிச்சா வைக்கிற.. உனக்கு முன்னாடி நான் போய் சொல்லுறேன்டி.. இந்த ஊரே இங்கதான கூடியிருக்கு... அவங்க கிட்ட நியாயம் கேட்கிறேன்... அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளை மேல, என்ன சொல்லுவாங்க... ஹாங் காமம், ஆசை மோகம் வந்து இப்படி முரட்டு தனமா கிஸ் பண்ணிட்டேன்னு..

தன் வாயில் கையை வைத்துக்கொண்டாள்... அடப்பாவி என்று..

உங்க அக்காவ வரச்சொன்னா நீயேன்டி வந்த..

ம்ம்.. அவளுக்கு கூச்சமா இருக்காம் உங்க கிட்ட பேசறது... அதான் அவ வரலைன்னு சொல்ல வந்ததேன்.. இனியனை முறைத்துக்கொண்டே தன் உதட்டை கையால் அழுத்த துடைத்தபடி சொன்னாள்...
.....உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
எதுக்கு இப்படி நாடகம்
நடக்குது
ரெட்டி பச்சை பொய் தயங்காம
சொல்றாறு
 
Top