Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-09

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-09

திரும்ப போன் போட்டு பேசினாள் தேனு, “மாமா அப்பா ஹாலுக்கு போயிட்டாரு..”

“ஏன் உங்கப்பா இருந்தா பேச மாட்டியா, அவ்வளவு பயமா, மாமாகிட்ட பேசினேன் சொல்ல வேண்டியதானே” என்று இனியன் கோபித்துக் கொள்ள...

“இப்போ எதுக்கு டென்சன் ஆகுறீங்க, சரி சாப்பிட்டிங்களா...”

“ம்ம் முடிச்சிட்டு தான் உனக்கு போன் செஞ்சேன்... நீ சாப்பிட்டியா...”

“ஆச்சி மாமா... சித்திங்க ஊட்டிவிட்டாங்க...”

“ஒ.. மகாராணிக்கு சேவகம் நடக்குதோ.. எங்க இருக்க...”

“என் பெட்ரூமில... தான்..”

“தனியாவா இருக்க”..ம்ம்... மெதுவாக மயக்கும் குரலில், டாலிலிலி... சீக்கீரம் ஊருக்குவாடி, பார்க்கனும் போல இருக்கு... ஐ மிஸ் யூடி..

“மாமா...நேத்து நைட் தானே சென்னையிலிருந்து வந்தேன்.. உடனே வர எப்படி முடியும்... ஒரு த்ரி டேஸ் கழிச்சி வரேன் மாமா... அண்ணா கூடயில்லையா..”

ம்ம்.. இருக்கிறான் நீ தூங்கவே விடலையாம். அதான் தூங்கறான்... இனியன் செல்லில் இன்கமிங் கால் வர, தேனு குருநானா போன் செய்யறாரு, நான் அப்பறம் பேசவாடா...அந்தபக்கம் அமைதியாக இருக்க..ஏய் தேனு பேசுடி.. சைலன்டா இருக்க...

“அதுக்குள்ள வைக்கிற”-தேனு

“முக்கியமான விஷியமா இருந்தா கூப்பிடுவாரு தேனும்மா... நான் நைட் கால் செய்யவா, சரி போனை வை...”

“ம்கும், நீ வை முதல்ல..”

“வைடி போனை... சும்மா வெறுபேத்தாதே, உன்னை யாரு ஊருக்கு போக சொன்னது... எனக்கு எக்ஸாம் இருக்கு, ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு சொல்லி நிற்க வேண்டியதுதானே.. சரி சீக்கீரம் வந்து சேரு... இங்கே இனியன் கத்தி பேச. போனை வைத்தாள் தேனு..

சிரித்துக் கொண்டே போனை பார்த்தான்... “கொஞ்சம் செல்லம் கொடுத்தா ஒவரா பண்ணுவா”...”டேய் அசோக்” ,அசோக்கை எழுப்பி விட்டு , “நானா கூப்பிட்டாரு வாடா போலாம்...”

இருவரும் குருநானா வீட்டில் நுழைந்தார்கள்..ஹாலில் குருவோட சொந்தங்கள் நிறையபேர் இருந்தனர்...

டேய் இனியா, ஏதாவது விஷேசமா.. ஒரே கூட்டமா இருக்கு... குருவின் பக்கத்தில் பாய் நிற்க.. சோபாவில் குருவின் சித்தப்பா, மற்றும் பங்காளி, மாமா என்று நான்குபேர் அமர்ந்திருந்தனர்...

இனியா இங்கே வா குரு அழைக்க...

நானா என்று அவர் பக்கத்தில் நின்றான்.. “இவன்தான் நான் சொன்ன பையன் பேரு இனியன்.. காலேஜில தான் படிக்கிறான் கடைசி வருஷம்... நல்ல பையன், என் பொண்ணுக்கு ஏற்றவன்...”

குரு சொல்ல சொல்ல பேய் அறைந்த மாதிரி நின்றான் இனியன், உடனே பக்கத்திலிருக்கும் பாயை பார்க்க, அஜிஸ் பாய் அமைதியாயிரு கண்களால் சைகை செய்தார்..

“எப்படியிருக்கான் என் மாப்பிள்ளை, நடிகர் மாதிரி இருக்கான்தானே மாமா, சித்தப்பா..”

“இனியா உன்னை என் மாப்பிள்ளை ஆக்கனும் ரொம்ப நாளா ஆசைடா... நம்ம அபர்னாவுக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம்...”

அசோக் நானா, என்று தேனுவை பற்றி சொல்ல வர.. கையை பிடித்து அழுத்தினான்..

“இன்னும் மூனு நாள்ல நிச்சியம் வச்சிக்கலாம்.. அடுத்த ஞாயிறு கல்யாணம் ஓகேவா.. சித்தப்பா ஊருக்கு கிளம்பிடுவாரு இனியா.. அவர்தான் எங்கவீட்டிலே பெரியவர்...அதான் சீக்கீரம் கல்யாணம் வைச்சிருக்கேன்...”

இவர்கள் பேசுவதை பிடிக்காமல் குருவின் பையன் தீபக் , இனியனை முறைத்தபடி நின்றான்.. ஏற்கனவே தலையில் தூக்கி வச்சி ஆடுவாரு.. மாப்பிள்ளையாயிட்டா இவன் ஆட்டம் அதிகமாக இருக்கும்...

அபர்னா வெட்கப்பட்டு தலையை குனிந்திருந்தாள்.. அவளுக்கும் இனியனை ரொம்ப பிடிக்கும்.. அவனுடைய திறமை, பேச்சும் திறன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

எல்லாரிடம் விடைபெற்று வெளியே வந்தான். “என் கையை விடுறா.. என்னாடா நினைச்சிருக்க, தேனுவை விரும்புறேன் சொல்ல வேண்டியதானே... ஏன்டா அமைதியா இருந்தே.. ஒரு வார்த்தை கூட உனக்கு இஷ்டமா கேட்கலை என்னதான் உதவி செய்தாலும், வேலையையும் நம்மகிட்ட வாங்கிட்டாருதானே.. ச்சே அதுக்குதான் ரௌடி பசங்கிட்ட சகவாசம் வச்சிக்க கூடாதுன்னு எங்க ஆயா சொல்லு... என்னடா நான் கத்துறேன் நீ அமைதியா இருக்கிற”... அசோக் கேட்க

“என்ன செய்யனும்”, முகத்தை தொங்கப்போட்டபடி இருந்தான் இனியன்...

அவன் முகத்தை நிமிர்த்தி விட்டு, “என் தங்கச்சி தேனுக்கு என்ன பதில் சொல்லுவ.”

“அவளுக்கென்ன, நான் வேனும் அவசியமில்லை, அம்மா,அப்பா,சித்தி, சித்தப்பா, அத்தை, மாமான்னு நிறையபேர் இருக்காங்க, மனசை மாத்திப்பா..”

“டேய் அபர்னாவ கல்யாணம் செய்துக்க முடிவே பண்ணிட்டே.”

“ம்ம்.. எனக்கு டயர்டா இருக்கு தூங்க போறேன் மச்சான், நாளைக்கு பார்க்கலாம்...”, இனியன் தன் பிளாட்டிற்குச் சென்றான்..

......

அடுத்த நாள் காலேஜில்... இரண்டாவது ப்ரியட் கட் அடித்துவிட்டு இனியனை பார்க்க வந்தாள்... இனியன் அவன் கிளாஸில் இருக்க.. வெளியே நின்ற அவ்வகுப்பு பையனிடம் இனியனை கூப்பிட மாறு கேட்டாள்...இனியனும் வெளியே வந்தான்..

“என்ன கிளாஸ் டைம்மில, சாய்ந்திரம் பேசிக்கலாம் போ “,என்று தேனுவை பார்க்க, கண்கள் கலங்கி அவனை பார்த்தப்படி நின்றாள்...

“ஏன்டி அழற, வா கேன்டினுக்கு போலாம்... “

“இல்ல உன்கிட்ட பேசனும் மாமா...”

வண்டி ஸ்டான்ட்ல நில்லு வரேன்.. தனது டூவிலரில் பக்கத்தில் இருக்கும் பார்குக்கு அழைத்து சென்றான்... இருவரும் பேசிக் கொள்ளவில்லை அமைதியாகவே வந்தனர்...

ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தார்கள்..” என்ன அசோக் சொல்லிட்டானா...”

“மாமா, உங்களுக்கு என்மேல லவ் இல்லையா... நீங்க என்னை விரும்பலையா... இந்த இரண்டு நாளா நாம்ம பழகனது உங்களுக்கு புரியலையா...”

“எல்லாம் புரியுது... நான் ஒண்ணும் லவ் பண்ணுறேன் சொன்னதில்லையே, என்ன பழகிட்டேன்.. போன வருஷம் பார்வதி கூட டேட்டிங் வரைக்கும் போனே.. அது மாதிரி வச்சிக்கோ... என்னைவிட அந்த சந்தோஷ் தான் பெஸ்ட் மேட்ச் தேனு, கொஞ்சநாள் கஷ்டமா இருக்கும் அப்பறம் பழகிடும்... உங்க குடும்பத்தில நீ ஒரு பிரின்ஸ், என் சுயநலத்துக்காக உன்னை அவங்க கிட்டயிருந்து பிரிக்க நினைக்கல... என்கிட்ட கஷ்டப்படுறதை விட அங்கே சந்தோஷமா இருப்பே..”

“மாமா... நான் சின்னதா கூட உங்க மனசல இல்லையா, உங்களை நீங்களே ஏமாத்திங்காதீங்க... எனக்கு தெரியும் உங்க கண்ணுல லவ்வ பார்த்தேன்.”

“ஒரு மயிறும் இல்ல... இதான் என் முடிவு, இன்னும் இரண்டு நாள்ல நிச்சியதார்த்தம்.. வேலை நிறைய இருக்கு“...என்று எழுந்துக் கொண்டான் இனியன்

தன் கண்களில் வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டே, “நீங்க போங்க நான் அப்பறம்மா வரேன் மாமா.. “.

“இங்க பாருடி சாகலாம் நினைச்சே, உனக்கு முன்னாடியே நான் பொணமா இருப்பேன்.. நான் சொன்னா செய்வேன்... வா போலாம்.. “

ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான்... “ இங்கே எதுக்கு மாமா, என்னை காலேஜில் விட்டுங்க... “

“எனக்கு தெரியும் மூடிட்டு வா, நான் காலையிலிருந்து சாப்பிடல, அதுக்குதான் ஹோட்டலுக்கு வந்திருக்கோம்.. “

காலை டிபனை ,இருவருக்கும் ஆடர் செய்தான்..

“எனக்கு வேணாம்“, என்று சாப்பிடாமல் இருந்தாள் தேனு...

“எனக்கு பசிக்குது, என்ன செய்ய, இனியன் கேட்க, “

ஆலு பரோட்டாவை பிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்..

“தேனு, மாமா லைப்பில நிறைய பொண்ணுங்க கிராஸ் ஆயிட்டாங்க, நான் இரண்டாவது வருஷம் படிக்கும் போதே சிநேகான்னு ஒரு பொண்ணு செமையா இருப்பா தெரியும்மா, லவ் பண்ணோம்..நல்லா ஊர சுத்தனும்.. அப்பறம் பிரேக் கப்.. இதெல்லாம் ஒரு க்ரஷ் தான்“. பேசிக் கொண்டே உணவை பரிமாறினான்... காலையில் இவள் சாப்பிடவில்லை என்று இவனுக்கு தெரியும்.. சோர்ந்து போயிருந்தாள்..

அவன் பேசுவதை கேட்டு கோவம் வர, “சரிடா” , தீடிரென்று டா போடவும், அதிர்ச்சியா பார்த்தான் இனியன்.. “என்ன இனியா அப்படி பார்க்கிற..”.-தேனு

“என்னடி டா போட்டு கூப்பிடுற, மூளை பேதலிச்சு போச்சா..”

“நீதான் மாமனே இல்ல சொல்லிட்ட அப்பறம் எதுக்கு மரியாதை எங்க சந்தோஷ் மாமாக்கு மரியாதை கொடுத்தா போதாதா.. சரி விஷியத்துக்கு வரேன், டேய் டூபுக்கு உன்னுடைய வாழ்க்கை வரலாறு எனக்கு எதுக்கு... அப்படியே பொண்ணுங்க உன் அழகல மயங்கி டேட்டிங்கா வருதா... சரி வந்தாங்க ஆனா ஏன் பிரேக் கப் ஆனாங்க... ஒரு பொண்ணாவது ஒகே சொல்லுச்சா... இல்லதானே , இந்த ஒவர் சீன் உனக்கெதுக்கு...”

“அடிங்க மரியாதையில்லாம பேசுறே கொழுப்பு அங்கங்க கூடிதான் போச்சு.. “, இனியன் கண்ணு தேனுவின் கழுத்துக்கு கீழே போக... லோ நெக் போடாத சொன்னே..”

. “.க்கும், நாளைக்கு என் கூட டேட்டிங் வர மாமா.. “

“நான் எதுக்கு வரனும், நான் வரல அதுவும் அபர்னாக்கு துரோகம் செய்ய கூடாது..“

“அப்ப இதுமுன்னாடி பொண்ணுகிட்ட டேட்டிங் போனீயே அது..”

“ம்ம்“ யோசிக்க ஆரம்பித்தான்..

“ஏன் மாமா பயப்படுற, உனக்கு இது க்ரஷ் தானே , என் சந்தோஷ் மாமாவ எப்படி சந்தோஷமா வச்சிக்கனும் ப்ராக்டீஸ் எடுத்துக்கிறேன்... “

“அதுக்கு நீ அந்த வெள்ளை பன்னியே டேட்டிங் கூட்டிட்டு போ.. நான் எதுக்கு.. “

“அதெப்படி இனியா, நீ தானே என்னுடைய பர்ஸ்ட் க்ரஷூ, உன்கூட எந்த பொண்ணும் வந்தாலும் பிரேக் கப் தானே ஆவா, நானும் பிரேக் கப் ஆயிடுறேன்.. ஏன் பயமா இருக்கா..”

“ச்சே..ச்சே.. எங்க போலாம்.. “

“உன் வீட்டில.. காலை எட்டு மணியிலிருந்து ஈவினிங் ஆறு மணி வரை.... எனக்கு வர புருஷனுக்கு என்ன செய்யனும் உன்னை வச்சி டெஸ்ட் செய்யறேன்... அப்பறம் உன்கூட பிரேக் கப்...ஓகே வா.. “

“ம்ம்... சரி நாளைக்கு அப்ப காலேஜ் லீவ் போடனும்...”

மதியம் கிளாஸில் சமீரா தேனு பக்கத்தில் உட்கார்ந்து, ஏய் அழாதடி இப்படியே அழுத்துட்டு இருந்தா என்ன அர்த்தம்... நிவி நீ மைக்ரோ பிரஸசர் கிளாஸ் கவனிச்சு நோட்ஸ் எடு.. நாங்க அசோக்கை பார்த்துட்டு வரோம்...

சரிடி..

மரத்துக்கடியில் மூவரும் உட்கார்ந்தனர், சமீரா தான் ஆரம்பித்தாள், ஏன் இந்த இனியா அண்ணா இப்படி பண்ணுறாரு.. நீ சொல்ல மாட்டியா அந்த குருகிட்ட அசோக்..

குரு என் வீட்டில வேலை செய்யற ஆளு, நான் சொன்னா கேட்பான் பாரு... தேனு நீ பயப்படாதம்மா.. எப்படியாவது இந்த நிச்சியத்தை நிறுத்தனும்... அதுக்குதான் ப்ளான் போடுறேன்...

இங்க பாரு தேனு, இவன் நிமிஷத்து நிமிஷம் மாற்றி மாற்றி பேசுவான், பேசி புரிய வைக்கமுடியாது.. நம்மல முட்டாள் ஆக்கிட்டு போயிட்டே இருப்பான். சோ, பொண்ணை கடத்தனாதான் பிரச்சனை, இனியாவை கடத்திட்டா...

அசோக் ப்ளான் சொல்ல, சமிரா ஹா..ஹா.. சிரித்துவிட்டாள். என்னடி சிரிப்பு நானும் ரௌடிதான், எங்க பிரண்ட்ஸ் வச்சி கடத்துறோம்.. தேனு ரெடியா இரு. திருத்தனில கல்யாணத்தை முடிச்சிடுவோம்... கேட்டா உங்க வீட்டுல மாமா கெடுத்துட்டான் சொல்லு, ஏற்கனவே அப்படி நினைச்சவங்க தானே... ஓகேவா தட்டி தூக்குறோம்...

“அப்பறம் கல்யாணம் முடிஞ்சவுடனே தேனு, அவனை வச்சி செய், பொண்டாட்டியோட பவரை காட்டு... நொந்து மேகி நூடூல்ஸா ஆயிடனும்.. அவன் அலும்பல் தாங்க முடியிலம்மா...”

--------
 
Nirmala vandhachu ???
 
Top