Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-08

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-08

மணி 5.30 க்கு காலிங் பெல் அடிக்க, கதவை திறந்தான் இனியன்...

டேய் இனியா என்று ரேனு அவன் கையை பிடிக்க.. வா அத்தை வாங்க

உட்காருங்க...

இருங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன் கிச்சனுக்குள் செல்ல.

அட பெரிய மனுஷா உட்காரு நாங்க குடிச்சிட்டு தான் வந்தோம்...இனியா இவங்க சின்ன அத்தை ரவி ஒய்ப் சங்கரி உனக்குதான் தெரியுமே, இவங்க பிரபா தம்பி ஒய்ப் உமா ...உன்னை பார்க்கனும் சொன்னாங்க . அதான் கூட்டிட்டு வந்தேன்.

அக்கா உன் மருமகன் அழகாக இருக்கான்... இனியா, தேனு உன்னை பத்தியே பேசும். எங்க தேனுக்கு ஏத்த மாப்பிள்ளை..

இனியனுக்கு வெட்கம் வந்துவிட்டது...

யாருக்கும் தெரியாத கோவிலுக்கு போறோம், சொல்லிட்டு கிளம்பினோம்..தன் கையிலிருந்த தூக்கை எடுத்து இனியனிடம் கொடுத்தாள், ரேணு.

என்ன அத்தை இது, உனக்கு பிடிச்ச தேன்குழல், அதிரசம், லட்டு இருக்கு..

எனக்கு வேணா அத்தை நீ வந்து பார்த்ததே போது..

இனியா தம்பி.. நைட்டெல்லாம் ரேனுக்கா கஷ்டப்பட்டு செஞ்சது..

இனியா கண்கள் கலங்க.. தேங்க்ஸ் அத்தை..போடா போக்கிரி தேங்க்ஸாம், தேங்க்ஸ் நான் எல்லோருக்கு காபி போடுறேன்...

அம்மா குரல் கொடுத்து மோகன் உள்ளே வர... அவனை விழி அகலாத பார்த்தான் இனியன்.. அத்தை மோகனா இவன்...

ம்ம்..

ஹாய் இனி மாமா...என்று கட்டிக்கொண்டான் ஐந்தாவது படிக்கும் மோகன்..அவன் கண்ணத்தில் முத்தமிட்டு மூனு வயசில பார்த்தது. உனக்கு என்னை ஞாபகமிருக்கா மோகன்..

இருக்கு மாம்ஸ், அக்கா தான் உங்கள போட்டோவுல காட்டுவாங்க... உங்கள பார்க்கதான் அம்மாகிட்ட அடம்பிடிச்சி சென்னைக்கு வந்தேன்...

அத்தை இவன் சிவா மாதிரியே இருக்கான்... எல்லோருக்கும் காபி கொடுத்தாள் ரேனு, பொதுவாக பேசிவிட்டு கிளம்பினார்கள்...

இரவு வந்தது... மூன்று கார் ப்ளாட்டில் நின்றது.. தேனுவின் குடும்பமே ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

ப்ளாட்டிலிருந்து தேனு வெளியே வர, கடைசி படிக்கட்டை விட்டு இறங்கும்போது கையை பிடித்து இழுத்தான் இனியன்.. ஆ..என்று கத்தும் முன்..கத்தாதடி நான்தான்.. அவளை வீட்டின் பின்னாடி கூட்டிச் சென்றான்..

சுவற்றில் சாய்த்து தன் இரு கைகளை சுவற்றில் ஊன்றினான். நடுவில் நின்றால் தேனு.. அவளை மேலு கீழும் பார்த்து.. என்னடி டிரஸ் இது முட்டிக் வரைதான் இருக்கும்... கை வேறயில்ல.. அப்படியே மாமாவ டெம்ட் ஏத்தற...தன் இரு விரலால் தேனுவின் உதட்டை பிடித்தான் இனியன் ,கை பட்டவுடன் கண்களை மூடினாள் தேனு... அவள் மயங்குவதை பார்த்து உதட்டை இழுத்துவிட்டான்....

அந்த மாதிரி சீனே இல்ல, கண்னை திறடி.. நான் இன்னும் லவ்வே செய்யல.. அதுக்குள் கிஸ்ஸூக்கு போயிட்டா...

அப்ப எதுக்கு என்னை தனியா தள்ளிட்டு வந்த..

அவள் பக்கத்தில் நின்று, பாவம் சின்னபொண்ணு பத்துவாட்டி நம்ம ரூமையே பார்த்துட்டு போச்சே.. அதனால, ஊருக்கு வழி அனுப்பலாம் வந்தேன்.

யாராவது பார்க்க போறாங்க மாமா டைமாயிடுச்சு...

யாரும் கீழே இறங்கல தேனு, நான் மோகன்கிட்ட சொல்லிட்டு வந்தேன், யாரையும் இந்த பக்கம் அனுப்பாதேன்னு...

அவனையும் கவுத்திட்டியா மாமா...

போடி நானே ஃபீலிங்கா இருக்கேன், எங்க அத்தை ரொம்ப நாள் கழிச்சி திரும்பவும் பையனே பெத்துடுச்சி, அவனை மட்டும் பொண்ணா பெத்திருந்தா... நான் ஐந்து வருஷம் கழிச்சி அவனையே கட்டியிருப்பேன்..

க்கும் கிழிப்பே..

என்னை பார்த்தவுடனே மாமா சொல்லி இறுக்க கட்டிக்கிட்டான். அப்பறம் முத்தம் வேற கொடுத்தான்... நீயும்தான் இருக்கிறீயே... சரி போன் நம்பரை கொடு ரெக்கார்டு எழுதும்போது டவுட் வந்தா போன் போடுறேன்.. அப்பறம் எனக்கு போன் செஞ்சி மாமா மாமான்னு டிஸ்டர்ப் செய்யாதே ஐயாவுக்கு ரொம்ப வேலையிருக்கு, நான் ரொம்ப பிஸி.... முக்கியமான விஷியம் அந்த வெள்ளை பண்ணிக்கிட்ட இருந்து தள்ளியே இரு... அவள் தோளை சுரண்டி இந்த மாதிரி டிரஸ் போடாதடி.. லோ நெக்கா இருக்கு..

தேனு இனியனை முறைக்க..

ஓய்.. என்ன முறைப்பு , என் கண்ணு அங்கே போகுது நான் என்ன செய்யறது... நீ நடக்க நடக்க நான் எப்படி ஷேக்காயிரேன் தெரியும்மா... ரொம்ப குளிரும் ஒவர்கோட் போட்டுக்கோ..

வீசில் சத்தம் கேட்டது... மோகன் வீசில் அடிச்சிட்டான்.. எல்லோரும் வந்துட்டாங்க நீ கிளம்பு..

அவனுக்கு வீசில் அடிக்கவே தெரியாது மாமா..

ஈவினிங் வீட்டுக்கு வந்தான் நான்தான் சொல்லிக்கொடுத்தேன். ஏதோ என்னால முடிஞ்ச சோசியல் சர்வீஸ்... நைட் நமக்கும் தேவைபடுமில்ல...

புத்திசாலிதான்.. நான் போன் நம்பரை மேசேஜ் அனுப்புறேன்.. அவள் திரும்பி நடக்க.. அவள் கையை பிடித்தான். பெரிய டைரிமில்க் சாக்லெட் ஐந்து கொடுத்தான்.. மோகனுக்கும் அப்பறம் உங்க சித்தி பசங்களுக்கு கொடு...

சரி மாமா...

பிரியும் நேரம் வர இனியனின் முகம் வாடியது... சீக்கீரம் வந்துடு மயிலு..

ம்ம்.. சிறிது தூரம் சென்று பிறகு, திரும்பி வந்தாள்.. அப்படியே சுவற்றில் கண்ணை மூடி சாய்ந்து நின்றிருந்தான் இனியன். அந்த நிலா வெளிச்சத்தில் அவன் முகம் பிரகாசமாக தெரிய, படர்ந்த நெற்றியில் தன் இதழை ஒற்றி தென்றலாக சென்றாள்.. கண்னை திறந்து புன்சிரிப்போடு அவள் போவதை ரசித்துப் பார்த்திருத்தான்... தேன்மொழியோட இனியன் தேனியன்...

காரில் அனைவரும் ஏறினர்.. பிறகு அந்த ப்ளாடே அமைதியானது... அடுத்த பத்தாவது நிமிடம் தேனுவிடமிருந்து மெசேஜ் இனியன் செல்லிற்கு...அந்த நம்பரை டாலி என்று சேவ் செய்தான்...

அவளுடைய ரூமையே பார்த்துக் கொண்டிருந்தான்... பிறகு தேனு முத்தமிட்ட கண்ணத்தை தொட்டு பார்த்தான்... நான் நானாகவேயில்லை அவ என்னை மாற்றிவிட்டாள்... தேனு நினைப்பாகவே இருந்தான்... தனியாக யாரும் உறவுகள் இல்லாமல் இருந்த இனியனுக்கு, தனக்கென்று புது உறவு தேன்மொழியாள். அவள்மேல் சிறுவயதிலே அன்புமும், பாசமும் இருந்தது. இன்று அதையும் தாண்டி ஒரு நேசம், காதல் கொஞ்சம், மோகம் கொஞ்சம் இது வேற வகையான சுகம்... ஆம் அவன் மனம் ஒத்துக் கொண்டது..இது காதல் என்று... தூக்கமில்லை, பசியுமில்லை, மூச்சிவிட மறந்து உரைந்து நிற்கிறேன் அவள் காதலில்... இதுவும் சுகமான வேதனை... புரண்டி புரண்டி பெட்டில் படுத்தான்...

அதிகாலை நான்கு மணிக்கு போன் அடிக்க, ஒரே ரிங்கில் போனை எடுத்தான்... ஹலோ மாமா,

போய் சேர்ந்திட்டியா..

இப்பதான் ரூமுக்கு வந்தேன். தூங்கலையா மாமா..

இல்ல, தூக்கம் வரல... உன் ஞாபகமாவே இருந்தது. அந்த பக்கம் மௌனம்..

ஹலோ..ஹலோ என்னடி பதிலே காணோம்...

இருக்கேன் மாமா.. குரல் தழுதழுக்க பேசினாள்..

எழுந்து உட்கார்ந்தான்.. ஏய் தேனு என்னாச்சு.. ஏன் அழற..யாருன்னா எதாவது சொல்லிட்டாங்களா...

இல்ல, என்னை ரொம்ப மிஸ் பண்ணுறீயா மாமா... யாருமில்ல ஃபீல் செய்யறீயா மாமா..

இந்த பக்கம் மௌனம்... ஹலோ..ஹலோ லைன்ல இருக்கீயா மாமா..

ம்ம்...

தூங்கு மாமா... முத்தமிட்டு போனை வைத்தாள்...

ச்சே இவ கண்டுபிடிக்கிற அளவுக்கு நாம்ம இருக்கிறோம்... மானமே போச்சி... பெட்சீட்டை தலைவரை இழுத்து போர்த்தி தூங்கினான் இனியன்...

காலை எட்டு மணிக்கு, டேய் இனியா எழுந்திருடா, மச்சான் அரைமணி நேரமா உட்கார்ந்திருக்கேன்.. இதோட நூறாவது போன்டா தேனுகிட்டயிருந்து..

தேனுன்னு பெயர் கேட்டவுடனே கண்னை திறந்தான்.. இரு கையால் சோம்பலை முறித்து

டேய் அசோக்கு என்ன காலையிலே வந்திருக்க,

டேய் உங்க போதைக்கு நான் ஊறுகாயா..

ஹா..ஹா.. இனியன் சிரிக்க,

சிரிச்சே மயக்கு மவுனே, ராசா, ஊரிலிருந்து உன் ராணி 8.30 மணிக்கு சாப்பாடு கொடுக்க சொல்லிருக்கா. பல்லை விளக்கிட்டு வாடா..

கேரியரில் டிபன் எடுத்துக் கொண்டுவந்தான் அசோக்...

பாத்ரூமில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, டெபிளில் வந்து உட்கார்ந்தான். என்னடா காலையிலே தொந்தரவு செஞ்சிட்டாளா...

தட்டில் தான் எடுத்து வந்த டிபனை வைத்து ,சரி பேசுதை நிறுத்திட்டு சாப்பிடு இனியா... நேற்றே சாப்பிடலன்னு தேனு சொன்னா. அசோக்கும் தட்டில் வைத்து சாப்பிட..

என்னடா நீயும் சாப்பிடலையா,

வாயில் இட்லியை வைத்து எங்க சாப்பிட விட்டது என் தங்கச்சி... என் மாமா சாப்பிடல, தனியா இருக்காரு போங்க அண்ணான்னு ஐந்து நிமிஷத்துக்கு ஒரு போன்.. குளிக்க கூட இல்லடா சனிக்கிழமை லீவ் விட்டேன்..

எனக்காக கஷ்டப்படுற..

என் மச்சானை பார்த்துக்க எனக்கென்ன கஷ்டம், சாப்பிட்டு நான் தூங்குறேன் தொந்தரவு செய்யாதே...

சரிடா, பாத்திரத்தை கழுவி ஒதுக்கி வைத்தான் இனியன்... பின் சோபாவில் படுத்தபடி தேனுக்கு போன் செய்தான்...

அங்கே போனை ஆன் செய்து தோட்டத்து வந்தாள்...ஹலோ மாமா...

ம்ம் என்னடி செய்யற..

இப்பதான் உன் அத்தைங்க என்னை ஒட்டியேடுத்தாங்க, எல்லா லேடிஸூம் உன் புராணம்தான் மாமா... அங்கே விளையாடிய குழந்தையிங்க வீசில் அடிக்க..

என்னடி வீசில் சவுன்ட்..

இந்த மோகன், பசங்களுக்கு வீசில் அடிக்க கத்து கொடுக்கிறான்... எனக்குதான் நீங்க கத்துக் கொடுக்கலை போங்க மாமா...

அய்யோ தேனுக்குட்டி, இந்த ஆஃபர்சுனிட்டிக்காக மாமா வையிடிங், நான் கேட்கற பீஸ் கொடுக்கனும்டி..

மாமா அப்பா வராரு , போனை வைக்கிறேன்..

இரவு தேனை போனில் அழைத்தான் அசோக்.. அண்ணா சொல்லுங்க..

தேனு நீ சீக்கிரம் ஊருக்கு கிளம்பி வா.. இங்க நிலைமை மோசமாயிருக்கு.. இந்த இனியன் லூஸூ மாதிரி முடிவெடுத்திருக்கான்... குரு தன் பொண்னை இனியனுக்கு நிச்சியம் செய்ய போறாரு, இன்னும் மூனு நாள்ல...

----சிக்க வைக்கிறான்.
 
Nirmala vandhachu ???
 
Top