Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-06

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-06

அன்றைக்கு மட்டும் வாயை திறந்து தேனு சொல்லியிருந்தா நான் அசிங்கப்பட்டிருக்க மாட்டேன்டா... அதான் அவமேல ரொம்ப வெறுப்பு... சரி அடுத்த நாளாவது வந்து பேசிருக்கலாம் தானே. என்னைப் பார்க்க வரவுமில்லை.

அப்பறம் தான் தெரிஞ்சிதுடா இவங்ககெல்லாம் பணக்காரங்க, தேனுவை நிர்மலா பையனுக்கே கொடுப்பாங்கடா, ஏன்னா சொத்து வெளியே போக கூடாது நினைப்பாங்க , அதான் என்னை கண்டா பிடிக்கல... நான் என்ன அவ்வளவு மோசமாவா அசோக் இருக்கேன்..

டேய் மச்சான் , உன்னை நீ தாழ்த்திக்காதடா... எனக்கு ஒரு தங்கச்சியிருந்தா, வெள்ளந்தியான என் நன்பன் உனக்குதான்டா கல்யாணம் செய்து வைப்பேன்...

சிரித்துக் கொண்டே இனியன், “ உனக்குதான் தங்கச்சியில்லையே... “

“தேனும் என் தங்கச்சிதான்டா, அவளை உனக்குதான் கட்டிக்கொடுப்பேன்.. “

“டேய் மச்சான் நீ நினைச்சாலும் முடியாது.. அவங்க யானை கூட்டம்டா.. போட்டு மிதிச்சிடுவாங்க... அவ அந்த வீட்டு மகாராணி மச்சான்... சித்தப்பா,சித்தி, பாட்டியெல்லாம் பாசமோ, பாசம்... விஷியம் தெரிஞ்சா கொண்ணுடுவாங்க... “

“உனக்கு தெரியுமா அசோக் , அவ தங்கியிருக்கிற ப்ளாட் அவங்க சொந்த வீடுடா... பொண்ணும்,பையனும் தங்கிறத்துக்காக சொந்தமா ப்ளாட் வாங்கி தந்திருக்கான் என் மாமன்... அதுக்குதான் முதல்லே சொன்னேன் செட்டாக மாட்டா... “

“சரிவா ,குரு வீட்டுக்கு போனோம்.. வர ஞாயிறு எனக்கு பிரிலிமிணரி எக்ஸாம் இருக்குடா அவர் வேலையை முடிச்சிட்டு வரனும்.. இரண்டுநாள் நான் பிரிப்பேர் செய்யனும்... மச்சான் ஐ.ஏ.எஸ் கோச்சிங் போறீயே பாஸாயிடுவீயா. “..

“எனக்கு விரும்பமில்லடா இந்த பாய்தான் கோச்சிங் சேர்த்துவிட்டார், காலையில 7.00 மணிக்கு போறதா இருக்குடா... இந்த வாரத்தோட முடியுது.. இனிமே கொஞ்சம் லேட்டா எழுந்திருக்கலாம்... “

பைக்கில் போய்க்கொண்டிருக்க, “இனியா அங்கபாரேன் தீபக்“, எங்கடா அந்த காபிஷாப்பிலிருந்து வரான்.. வண்டியை நிறுத்தினர்.. அங்கே தீபக் ஒரு பெண்ணோட வெளியே வந்தான்.

“என்னடா இப்படி பண்ணுறான் குரு நானாக்கு தெரியும்மா.. “.

“தெரியலடா மச்சான், சின்னதிரை நடிகை கனிகா, ஏதோ டிரைக்டர் தகராறுன்னு பஞ்சாய்த்து போனான், கடைசிலே பொண்ணுகிட்ட மயங்கிட்டான்... அங்கங்க சுற்றுதுங்க... நம்ம குருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்... “

“நமக்கு எதுக்குடா பெரிய வீட்டு பிரச்சனை, அந்த வீட்டிலே அபர்னா நல்லா பொண்ணு மச்சான்..ஒழுக்கமான பொண்ணும் கூட.. “-இனியன்.

......

அந்த வாரம் முடிவில்,

அசோக் பைக்கை ப்ளாட் முன்னாடி ஸ்டான்ட் போட. “ஹாய் அண்ணா“ தேனு கூப்பிட்டாள்..

“ஏய் தேனு, என்ன மார்னிங் வாக்கிங்கா... “

“ஆமாம் அண்ணா, எங்க மாமாவ பார்க்க வந்திங்களா... “

“ம்ம்.. இன்று அவங்க அம்மா இறந்த நாள் தேனு, ரொம்ப ஃபீல் பண்ணுவான், சாப்பிடவே மாட்டான்... யாருமே தனக்கு இல்லை நினைப்பான்.. அதான் இன்னிக்கு முழுக்க அவன்வீட்டில இருப்பேன்... “

“தேனு கண்கள் கலங்க, அண்ணா எனக்கு தெரியாது, இருங்க நானும் வரேன்... “இனியன் வீட்டு காலிங் பெல் அடித்தான் அசோக்...

கதவை திறந்தான் இனியன்.. வாடா சொல்லி திரும்ப, தேனு மெதுவாக எட்டிப் பார்த்தாள், ரோஸ் நிற பேண்டும், ஒயிட் ஷர்ட்டும் போட்டிருந்தாள்...

“இவளை ஏன்டா கூட்டிட்டு வந்த“, சொல்லிக் கொண்டே சோபாவில் உட்கார்ந்தான்.. “இங்க பாரு தேனு இப்போ நான் மூட் அவுட்டு நீ எதுவும் சீண்டாத. “.

“தெரியும் மாமா.. இப்படியே உட்கார்ந்தா எப்படி.. அம்மாவுக்கு படைக்கலாம் மாமா, அவங்களுக்கு பிடிச்ச சாப்பாட்டை செஞ்சி நீங்க படைங்க... இப்படியா வீட்டை சுத்தம் பண்ணாத வச்சீருக்கீங்க.. முதல்ல வீட்டை துடைக்கனும்.. நீங்க தலை குளிச்சிட்டு வாங்க, உங்க அம்மாக்கு விரதம் இருக்கனும்... “

இனியன் அவள் பேசுவதை பார்த்துக் கொண்டேயிருந்தான்.. பிறகு இதுவரைக்கும் நாம்ம படையல் போட்டதில்ல... சரி நான் குளிச்சிட்டு வரேன்..

மச்சான் நான் வீட்டை துடைக்கிறேன்டா... அசோக் அண்ணா பால்கனி பக்கமா போய் சிவாவை கூப்பிடுங்க..

சிறிது நேரத்தில், சிவா பால்கனி பக்கம் வர...

“என்ன அக்கா.. “

“சாரி வைச்சிருக்கேன் எடுத்துட்டு வாடா.. நான் இங்கே குளிச்சிக்கிறேன்.. பாட்டிக்கிட்ட சொல்லாதே, பிரண்ட் வீட்டுக்கு போயிருக்கா சொல்லு.. “

சரிக்கா.. ப்ளு சாரி ஓகேவா...

ம்ம்..

இனியன் குளிச்சுட்டு வெளியே வர... அவனை பார்த்து மாமா ஹீட்டரை போடுங்க நான் இங்கே குளிச்சிக்கிறேன்... அவளையே பார்த்தபடி நின்றான்...

அவன் முறைப்பதை பார்த்த தேனு, “இல்ல மாமா அங்க போய் குளிச்சிட்டு வர லேட்டாகும். அதான் சிவாவை டிரஸ் எடுத்துட்டு வர சொல்லிருக்கேன்... “

குளித்து முடித்து சேலையை கட்டிக் கொண்டு வந்தாள்... மாமா அண்ணாகிட்ட பணம் கொடுங்க, அவங்க காய்கறி, இலை, மளிகை சாமான் வாங்கி வருவாங்க.. இந்தாங்க லிஸ்ட்..

அதை வாங்கி பார்த்தான் இனியன்... இந்த மாசம் தேவையானது சேர்த்து எழுதி கொடுத்தான்...

அரை மணி நேரத்தில் எல்லாம் வந்து இறங்கியது.. சாப்பாடு செய்ய ஆரம்பித்தாள் தேனு..

அப்போ சிவா கிச்சனுக்கு வந்தான்.. மாமா எனக்கு கோச்சிங் கிளாஸ் இருக்கு நான் மதியமா வரேன்...

சரிடா , நான் டிராப் பண்ணவா, இல்ல மாமா என் பிரண்ட் வருவான் , நாங்க போயிடுவோம்... நீங்க அக்காவுக்கு ஹெல்ப் செய்யுங்க என்றான்..

அசோக் ஆச்சரியமாக சிவாவை பார்த்தான், தம்பிக்கும் இனியாவை ரொம்ப பிடிச்சிருக்கு... எப்படியாவது தேனுவை இனியனுக்கு கட்டி வச்சிடுனும் நினைத்தான்..

கிச்சனில் தேனு பாயாசம் செய்துக் கொண்டிருக்க, பக்கத்தில் இனியனும், அசோக்கும் வெண்டைக்காயும், வடைக்கு வெங்காயமும் நறுக்கிக் கொண்டிருந்தார்கள்...

கண்களில் கண்ணீரோடு அசோக், “ஏன்டா எத்தனை நாள் ஆசை, என்னை அழ வைத்து பார்க்க.. “

அங்கே தேனு வியர்வை சொட்ட சமைத்துக் கொண்டிருந்தாள், அவளை பார்த்து அப்படியே துனுக்குற்றான் இனியன், ஏசியிலே வளர்ந்த பொண்ணு இன்னிக்கு நம்ம வீட்டுல இப்படி வேலை செய்யுது... நமக்கு தேனு வேணா, தினமும் இப்படிதான் கஷ்டப்படுவா.. அவன் நினைக்க, ஆசைக் கொண்ட மனம் வேறுமாதிரி சிந்தித்தது...

ப்ளு நிற சாரியில் , பெரிய பெண்போல் இருந்தாள், தலை உச்சியில் சின்ன கிளிப் போட்டிருந்தாள்.. நெற்றியில் குட்டி பொட்டு, வேற எந்த மேக் கப் இல்லை, இனியனின் சோப் வாசனை மயக்க , கொஞ்சம் கீழே இறங்கி பார்த்தான்.. புடவையை தூக்கி சொறுக்கி இருந்தாள்..

அய்யோ இவ்வளவு வெள்ளையா இருக்கா, லைட்டான இடுப்பு மடிப்பு, இதுலே சொக்கி விழுந்துடுவேன் போல... காதிலிருக்கும் ஜிமிக்கி, அவள் திரும்ப திரும்ப ஆயிரம் நடனங்கள் ஆடியது... கழுத்தின் கீழே கண்கள் போக... அய்யோ என்று வாயை பிளக்க, டேய் இனியா தப்பு என அவன் மனசாட்சி தலையில் அடித்தது.

திரும்பி வெண்டைக்காயை நறுக்க, மச்சான் அசோக்கு மெதுவாக கூப்பிட்டான்...

என்னடா...

என்னை தள்ளிவிடு, எனக்கு தேனுவை கிஸ் அடிக்கனும் போல இருக்கு...-இனியன்.

வெங்காயம் நறுக்குவதை நிறுத்திவிட்டு...நம்ம காதில தப்பா விழுந்துச்சா என்று அசோக், இனியாவை பார்க்க..

தள்ளிவிடுடா... எருமை..

ம்ம் நான் மாட்டேன்..அசோக் தலையை ஆட்டி மறுக்க..

தள்ளிவிடுடா இனியன் கெஞ்ச, அவன் தோள்மேல விழ...பக்கத்தில் இருக்கு தேனின் மேல் விழுந்தான் இனியன். அந்த நிமிடத்தில் தேனுவின் காதோரம் முத்தமிட்டு நகர்ந்தான்...

தேனு இருவரையும் முறைக்க..மாமா என்று கத்தினால்...

அய்யோ இதுக்கும் எனக்கும் சம்மதமில்ல என்று இருவரும் ரூமுக்கு ஒடிவிட்டனர்...

மூச்சு வாங்க பெட்டில் உட்கார்ந்தனர்... அசோக் நெஞ்சில் கையை வைத்து

டேய் இனியா உன்னை பச்சபுள்ள நினைச்சேன்டா, ஆனா நீ பச்சை பச்சையான பிள்ளை... அண்ணா முன்னாடி இப்படி பண்ணுவியாடா.. அவனை போட்டு அடிக்க, பெட்டில் இருவரும் புரண்டி சண்டை போட்டுக் கொண்டார்கள்...

இனியன் மேல் அசோக் படுத்திருக்க, போச்சு தேனு வேற கத்துனா..

அசோக் அது ஏன் தெரியுமா, தேனுக்கு கண்ணத்தில முத்தமிட்டா பிடிக்காதுடா..

பின்ன..

டேய் நீ என்னடா பிளாஷ்பேக்க கேட்ட.. என் ஜில்லுக்கு ,உதட்டை குவித்து, லிப்ஸ்ல குடுத்தா தான் பிடிக்கும்...

அடப்பாவி, நீ உண்மையாவே கெட்ட பையன்டா, உன்னைபோய் நம்புது இந்த உலகம்... அப்பறம் எப்படிடா நல்லவன் மாதிரி மூஞ்ச வைச்சிக்கற...

ஹா..ஹா.. இனியன் சிரிக்க ஒரு பக்கம் கண்ணத்தில் அழகாக குழி விழுந்தது..

டேய் இனியா நீ வாய்விட்டு சிரிச்சா ஒரு பக்கம் குழிவிழுதுடா...

அதற்குள் தேனு ரூமிற்குள் வந்தாள், மாமா எல்லாம் ரெடியாச்சி, வாங்க படைக்கலாம் என்றாள்..இனியன் அம்மா போட்டோக்கு மாலையிட்டு, படைத்தார்கள்... நான் காக்காக்கு சோறு வச்சிட்டு வரேன் தேனு.

அசோக்கும், இனியனும் சாப்பிட்ட அமர்ந்தார்கள், தேனு வடை, பருப்பு பாயாசம் சூப்பர்...

“நிஜமா அண்ணா, மாமாக்கு பருப்பு பாயாசம் பிடிக்கும் அதான் செஞ்சேன்“

“ஆமாம், நீ பணக்கார வீட்டு பொண்ணு எப்படி சமையல் கத்துக்கன.. “

“நான் ஏழாவது படிக்கும்போதே இனியா மாமாக்கு என் பிடிக்கும் அம்மாகிட்ட கேட்டு கத்துக்கிட்டேன் அண்ணா.. “

சாப்பிடறதை நிறுத்திவிட்டு தேனுவையே பார்த்தான் இனியன்... “சாப்பிடுங்க மாமா, அப்பறம் லீவ்ல குக்கரி கிளாஸ் போனேன். “

“என்னை கட்டிக்கனா வேலைக்காரி மாதிரி தான் இருக்கனும் முன்னாடியே சமையல் கத்துகிட்ட தானே தேனு.. “

முகம் செத்துவிட்டது தேனுக்கு, “அப்படியில்ல மாமா என் கையால உனக்கு சமைச்சு போடனும் ஆசை அவ்வளவுதான்.. “

“ஏன்டா இப்படி தேள் கொட்டற மாதிரி பேசற... தேனு நீ ஃபீல் பண்ணாதடா... இந்த அண்ணா உனக்கு இருக்கேன்ம்மா... இந்த வடைமேல சத்தியம்“

சாப்பிட்டு முடிந்தவுடன், நான் கிளம்பறேன்டா, வரேன்மா என்று பை சொல்லி சென்றான் அசோக்...

இருவரும் டிவி பார்த்திருந்தனர்.. “ இனியன் தான் ஆரம்பித்தான், தேனு ரொம்ப தேங்க்ஸ், அம்மா என்னைவிட்டு போய் மூன்று வருஷமாகுது... நான் இந்த மாதிரி செஞ்சதில்ல... தனியாதான் உட்கார்ந்திருப்பேன், அம்மா ஏன் தனியா விட்டுபோனாங்க, சொல்லும்போதே குரல் உள்ளே சென்றது... என்னை ஒத்தையில்ல விட்டுட்டாங்க தேனு, ஒரு தங்கச்சியோ, தம்பியோ என் கூட பிறந்திருந்தா இன்னைக்கு அநாதையா நிற்கமாட்டேன் தானே.. “

“மாமா என்ன இப்படி பேசிறீங்க, நான் இருக்கும்போது நீங்க அநாதையில்ல.. இனியன் கண்கள் கலங்க, மாமா இப்படி பேசாதீங்க, தூக்கம் வருது சொன்னீங்கதானே அம்மாவ நினைச்சு என் மடியில் படுத்துக்குங்க“, என்று இனியனை மடியில் தாங்கினாள்...

அவள் தலையை கோத ,கண் மூடி தூக்கினான், சிறிது நேரத்தில் சிவா வீட்டுக்கு வந்தான். “சிவா மாமா இப்போதான் தூங்கினாரு நீயே போட்டு சாப்பிடுடா“ என்றாள்..

சிவா சாப்பிட்டு, தேனுவிடம் வந்தான், “அக்கா மணி 3.00 ஆகுது.. உனக்கு பசிக்கலையா போய் சாப்பிடு. “

சரிடா நான் பில்லோ எடுத்துட்டு வரேன், நன்றாக தூங்கியிருந்த இனியனின் தலையை மெதுவாக சோபாவில் வைத்து எழுந்தாள், ரூமில் சென்று பில்லோ எடுத்து வந்து பார்த்தால் சிவா தன் மடியில் மாமனை தாங்கினான்.

சிவா என்று தேனு பெருமையாக தம்பியை பார்க்க, “உனக்கு மட்டும் மாமா இல்ல.. இந்த ரௌடி எனக்கும் மாமா.. போய் சாப்பிடு ... பாட்டி வேற தேட ஆரம்பிச்சிடும். “

தேனு எழுந்தவுடனே தூக்கம் தெளிந்த இனியன், கண்கலங்கினான், இவங்க அண்புக்கு என்ன செய்ய போறேன் கடவுளே... சின்ன பையன் மடியில படுத்திருக்கேன்... நேரா படுத்த இனியன் கண்ணை திறந்து சிவாவை பார்த்தான்.

அவன் காதை பிடித்து திருக்கி, நான் உனக்கு ரௌடியாடா..

ஆ..ஆ விடு மாமா...

எழுந்து உட்கார்ந்தான் இனியன் , சாப்பிட்டியா சிவா..

ம்ம் ஆச்சு.. எக்ஸாம் எப்படி எழுதியிருக்க மாமா...

பரவாயில்ல...

------ சிக்க வைக்கிறான்
 
Nirmala vandhachu ???
 
நல்லா இருக்கு பதிவு
இவங்க பாசம் ஜெயிக்குமா
 
Top