Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-04

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-04

பைக் மெட்ரோ ப்ளாடுக்குள் நுழைய, வண்டியை பார்க் செய்து, “அசோக் டைம் என்னாச்சு..”, “எட்டு மணி மாப்பிள்ள, இந்த வாட்ச்மேன் எங்கடா கானோம்..”

“ம்ம்... காலையில சாப்பிட போயிருப்பான்..” மாடி படியில் ஏறிக்கொண்டே

“இனியா நீ எத்தனை மணிக்கு கிளாஸ் கிளம்புவ”,

“நான் 7.00 மணிக்கு கிளம்பிடுவேன்டா, அதுக்கப்பறம் தான் யாரோ வராங்க...”, அசோக் காலிங்பெல் அடிக்க கையை ஒங்க..அவனை தடுத்த இனியன் “என்கிட்ட சாவியிருக்குடா...”

மெதுவாக, சாவியை போட்டு திறந்தான், உள்ளே டி.வி ஓடும் சத்தம் கேட்டது... “மாப்பிள்ள அந்த மாப்பு ஸ்டிக் கையில எடுத்துக்கோ”, பதுங்கி பதுங்கி உள்ளே சென்றனர்...

கிச்சனிலிருந்து டான்ஸ் ஆடியபடி கையில் ஹாட்பாக்ஸ் எடுத்து வந்தாள் தேனு... இருவரும் கதவுக்கு பின்னாடி ஒளிந்துக் கொண்டனர்... தேனுவின் மொபைல் ஒலிக்க... அதற்கு உயிர் கொடுத்தாள்...

“ஹலோ சமீரா சொல்லுடி...நானா மாமா வீட்டுல இருக்கேன்..”

அந்தப்பக்கம் சமீரா, “ஏன்டி அண்ணாவால கண்டுபிடிக்க முடியல, நீ சமைக்கிறது..”

“அந்த அளவுக்கு மாமா புத்திசாலி இல்லடி... பிரிட்ஜ்ஜில் காய் மட்டும் வாங்கி வச்சிருக்கு... தினமும் மீன் இல்ல கோழி செய்யறேன் அதுவே கண்டுபிடிக்க தெரியில... இதுல வீட்டுக்கு முன்னாடி என்னை இறக்கி விட்டு அவர் வீடு மடிப்பாக்கத்தில இருக்காம், கூட அசோக் அண்ணா வேற உளறி கொட்டுச்சி... சரி எதுக்கு போன் செஞ்சே..”

“அதுவா ரெக்கார்ட் எடுத்துட்டு வா.. இன்னிக்கு சைன் வாங்கணும்..சரி வைக்கவா...”

போனை வைத்து விட்டு டிவியின் சத்தத்தை அதிகமாகினால்

“கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா”

டான்ஸ் ஆடியபடியே திரும்ப இருவரும் அய்யனார் போல முறைத்து நிற்க...அய்யோ மாட்டினோம் கதவை நோக்கி ஓடினாள்...

“மச்சான் அவளை பிடிடா, சீக்கீரம் கதவை பூட்டு”...அசோக் தேனுவை வழி மறைத்து நின்றான்..

“ஏய் என்னய்ய பார்த்த கேனை பையன் எழுதி வச்சிருக்கா... என் முகத்தில முழிக்காதே சொல்லிருக்கேன்... எனக்கே சாப்பாடு செஞ்சி வச்சிருக்க.. ஏன் உன் அப்பாகிட்ட பணமில்லையா ,என் வீட்டுக்கு வேலை செய்ய அனுப்பிருக்காரு.. நீயும் பொண்டாட்டிப்போல என் துணியை துவைச்சி போடுற... உன் சித்தப்பா,அத்தை, பாட்டி இதெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்களா..”

மாமா...தப்பு தான்.

“முட்டாப்பையன் நினைச்சியாடி என்னை, ப்ளாருன்னு ஒரு அரைவிட்டான்...”

“டேய், இனியா வாயால பேசு, ஏன்டா கையை நீட்டுற”. அவனை அடக்கினான் அசோக்.

“இவளை வெளியே போ சொல்லு அசோக்”...என்று கத்தினான்... தேனு வெளியே செல்ல காலை எடுத்து வைக்க...

“ஏய் இரு..என் சட்டையை கழிற்றி கொடுடி.. தேனு ஷர்டை கழிற்றிக் கொடுக்க, அதை வாங்கி இனிமே வேஸ்டுதான் இந்த ஷர்ட், கூடையில் எரிந்தான்... தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து அவள் கையில் வைத்தான்.. நீ வேலை செஞ்சதுக்கு, இந்த வேலையோடு சேர்த்து நைட்டு என்னை சந்தோஷ படுத்திருந்தா நிறைய பணம் தந்திருப்பேன்...”

இந்த வார்த்தை இனியன் சொல்லவும், பூமியே காலைவிட்டு நழுவியது போல இருந்தது. கண்களில் கண்ணீர் நிற்காம வந்துக்கொண்டிருக்க, அதை துடைக்கனும் என்று கூட சிந்தனையில்லாமல் நடந்துச் சென்றாள்..

“மச்சான், தேனுவை பார்த்து ஏன்டா இப்படி பேசுன... தப்புடா”.

“அப்பதான் எங்கிட்ட வரமாட்டா அசோக்... சரி வா காலேஜ் போகனும்..” ஒருபொழுதும் காலேஜ் கட் அடிக்க மாட்டான்.. யூ.ஜியில் கோல்ட் மெடல் எடுத்தவன் இனியன்.... அன்று தேனு காலேஜிக்கு வரவில்லை... அவள் பாட்டி கேட்டதுக்கு தலைவலி என்று படுத்துக் கொண்டாள்...

இனியா தேனு இன்னிக்கு காலேஜிக்கு வரலடா...

தெரியும்டா அசோக் விடு...

வடபழனி அருகே சூப்பர் மார்கெட் பக்கத்து சந்தில் ஒரு பையனை அடித்துக் கொண்டிருந்தான் இனியன்.. ”இன்னொரு முறை அந்த ஸ்கூல் பொண்ணுகிட்ட வாலாட்டின புறப்பொக்கு.. உடம்புல இருக்கிறத வெட்டிவிட்டிருவேன்..” மூஞ்சிலே ஒரு குத்து விட்டான்.. அந்த பக்கம் மார்கெட்டுக்கு வந்த தேனு இனியனை பார்க்க..

மச்சான் தேனு உன்னை பார்க்குதுடா, விடு அவன் செத்துட போறான்... “அண்ணா இனிமே அந்த பொண்ணை தொந்தரவு செய்ய மாட்டேன் விட்ருங்க... காலை பிடித்து கெஞ்ச”

“பொழைச்சி போ... வண்டியை எடுடா டைமாயிடுச்சு அசோக்...”

அசோக் பைக்கை ஸ்டார்ட் செய்ய அதில் எறி அமர்ந்தான்... தேனுவை பார்த்தபடியே வண்டியில் போனான்...

........

அன்று இரவு 11.00 மணிக்கு, காலையில் தேனு செய்த உணவை சூடு செய்து சாப்பிட உட்கார்ந்தான்... வீட்டின் காலிங் பெல் அடிக்க.. இந்த நேரத்தில யார் .. என்ற கேள்வியோட எழுந்து கதவை திறந்தான்..

தேனு தன் தம்பி சிவாவுடன் வந்திருந்தாள்... என்ன இந்த நேரத்தில..வாசலிலே வைத்து பேசினான்...

ம்ம் உங்ககிட்ட பேசனும் சிவா ஆரம்பிக்க..

என்னடி மீசை மொளைக்காத பையனை பஞ்சாய்த்துக்கு கூட்டிட்டு வந்திருக்க லூஸூ... மணி எண்ணாகுது... இந்த நேரத்தில பொம்பளை பொண்ணு வரலாமா...

இவர்தான் ரௌடி மாமாவா ... எனக்கு ஒண்ணும் பயமில்லை உங்ககிட்ட பேசறது... உள்ள போலாம் அவனை தள்ளிய படி உள்ளே சென்றான் சிவா...

போய் சோபாவில் உட்கார்ந்தான் சிவா, இங்க பாருங்க அக்கா புலம்பல் தாங்கமுடியில.. என்ன பிரச்சனை உங்களுக்குள் இவ அழுதுட்டே இருக்கா நாளை எனக்கு எக்ஸாம் நான் எப்படி படிக்கிறது.

பேசனும் சொன்னா, நான் உங்க ரூமில படிக்கிறேன்... பேசி முடிச்சிட்டு கூப்பிடுக்கா... கையில் புக்கோடு எழுந்து சென்றான்...

என்னடா இது சின்ன பையன் எப்படி பேசிட்டு போது... என்னத்த வளர்த்தான் நம்ம பிரகாஷ்ராஜ் (தன் மாமனுக்கு வைத்த செல்ல பெயர்... )

பசி வேற வயிற்றை கிள்ளியது இனியனும்... கீழே உட்கார்ந்தான்...சப்பாத்தியை பிய்த்து மட்டன் கிரேவியில் தொட்டு சாப்பிட்டான்... நீ சாப்பிட்டியா தேனு...

இல்ல என்று தலையை ஆட்டினாள்.. ஒரு தட்டில் சப்பாத்தியை வைத்தான்...

வேணாம் மாமா... நான் பாலை குடிச்சிக்கிறேன்... அவனிடம் இருந்ததே இரண்டு சாப்பாத்தி தான். சரி பாலை காய்ச்சிருக்கேன் மூனு பேருக்கும் எடுத்துட்டு வா என்றான்...

அதற்குள் சாப்பிட்டு முடிக்க... பாலை குடி.. ஒரு கிளாஸ் பாலை எடுத்துபோய் சிவாவிடம் கொடுத்தான்... டேய் பாலை குடிச்சிட்டு படி என்றான்..

தேனு இங்கே வா... இனியன் பக்கத்தில் அமர்ந்தாள்... இங்க பாரு நீ சின்ன வயசில பார்த்த மாமா இல்ல நான், இப்போ ரௌடியா இருக்கேன்.. நான் யார்கிட்ட வேலை செய்றேன் தெரியுமா... கட்டபஞ்சாய்த்து பண்ணுறவர் கிட்ட...குரு நானா தான் எனக்கு படிக்க உதவி செய்தவர்..

அப்பறம் உன்வீட்டில் நடந்த விஷியம் என் மனசில நெருஞ்சி முள்ளா குத்திட்டு இருக்கு... உன்னை என்னால ஏற்றுக்க முடியாது.

மாமா என் தப்பு எதுவுமில்லை சொல்ல ஆரம்பிக்க... அவளை பேச விடாமா. இன்னிக்கு உன்னை அடிச்சேன் இல்ல, அவள் கண்ணத்தை தடவி, வலிக்குதாடா...

அவன் கண்களையே பார்த்தாள்,” இல்ல மாமா...”

“அதுமட்டுமில்லை நான் தண்ணீ அடிப்பேன்.. இப்போ கூட பீர் அடிச்சிருக்கேன் தேனு.. அதான் வீட்டுக்குள் சேர்க்க இஷ்டமில்ல... சீக்ரெட் கூட பிடிப்பேன்.. இந்த மாதிரி பொறுக்கி உனக்கு தேவையா சொல்லு..” ரூமுக்குள் எட்டி பார்த்தான், சிவா படித்துக் கொண்டிருந்தான். அவள் காதின் அருகில் சென்று , “பொண்ணுங்க சகவாசமும் உண்டு, மது ப்ளஸ் மாது இரண்டும் உண்டு”..தேனு கண்ணை விரித்து அதிர்ச்சியாக பார்க்க... “பார்த்தியா உனக்கே என்னை பிடிக்கலைதானே... இன்னொரு விஷியம் சொல்லுறேன் சென்ஸாரான மேட்டர்தான்... ஒரு நைட்டல இரண்டு பொண்ணோட இருந்திருக்கேன்...”

எச்சிலை கூட்டி முழுங்கினாள்... மாமா..

என்ன தேனு ,நான் கெட்டவன் புரியுதா...

இல்ல, ஒரு டவுட் மாமா, என்ன என்று புருவத்தை உயர்த்தி கேட்டான், அந்த ஒரு செய்கையிலே மயங்கினாள்..

என்ன டவுட்...

“எப்படி ஒரே டைம்மில இரண்டு பொண்ணுங்க...”

“அவளை முறைத்து பார்த்து இந்த ஆராய்ச்சி இப்போ தேவையா... கிளம்புடி நேரமாகுது, இங்கே டேரா போட்டலாம் நீயும் உன் தம்பியும் ப்ளான் போடுறீங்களா...”

சிவா வாடா போலாம்... “எப்படி இரண்டு பேரும் போவீங்க மிட்நைட் ஆயிடுச்சு.. இரு நான் பைக் எடுத்துட்டு வரேன்...”

“எதுக்கு மாமா பைக்கு ,பின்னாடி தானே வீடு நான் பால்கனி தாண்டி வந்துருவேன். அக்கா பயப்படுவா.. அதான் மாடிபக்கமா கூட்டிட்டு வந்தேன்”- சிவா.

“எங்கடா உங்க வீடு.. இதோ பின்னாடி ப்ளாட், உங்க ரூம் பால்கனி நேரா எங்க அக்கா ரூம் மாமா.”

அடப்பாவிங்களா ப்ளான் போட்டுதான் இந்த சென்னைக்கே வந்திருக்கா இனியா உஷார்.

  • சிக்க வைக்கிறாள்
 
Nirmala vandhachu ???
Haha Haha ???
Back la irrukka veetukku bike drop
Theenu ippadi oru doubt kettu mama va tension pannitta
 
Last edited:
நல்லா இருக்கு பதிவு
இந்த புள்ள படு விவரம்
திட்டம் போட்டு இங்க வந்து
இருக்கா
 
எப்படி பால் போட்டாலும் சலிக்காமல் அடிக்கிறாளே.
 
Top