Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உண்மை காதல் மறந்து போகுமா பகுதி 5

Advertisement

kavi nila

Active member
Member
காதல் 5

அனைவரும் அதிர்ந்து உள்ளே காண, பிரகாஷ் பட்டு வேட்டியில் இருக்க சிவா பிரகாஷின் நேற்றைய சட்டையுடன் சோர்வாக இருந்தாள்.

“டேய்.. இங்க என்ன பண்றீங்க இரண்டு பேரும்”, என சரவணன் கேட்க

என்ன சொல்வது என தெரியாமல் இருவரும் முழிக்க, முதலில் சுதாரித்த சிவா

“அம்மா கல்யாணம் ஓவரா” என கேட்க அவளின் அம்மா “என்னடி இது கோலம் என்ன நடந்துச்சு கல்யாணத்துக்கு கூட வராமல் இங்க என்ன பண்ற” தன் ஆதங்கத்தை கொட்ட

“ஆன்ட்டி நான் சொல்றேன்” என அனைவரும் அவனை பார்த்தனர்.

“ஆன்ட்டி நேற்று நான் மேல தூங்க போறேன் சொல்லிட்டு இங்க வரும் போது இவங்க நடக்க முடியாம நடந்து வந்தாங்க எதோ சரியில்லனு நான் அவங்களை பார்த்தால் தடுமாறி கீழே விழுந்துட்டாங்க. பக்கத்தில் இருந்த விளக்கில் தீ பத்திக்கிச்சு. நான் அவங்களை காப்பாற்றி இந்த ரூமில் படுக்க வைக்கும் போது தான் பார்த்தேன் இவங்களுக்கு யாரோ போ..” போதை மருந்தை கொடுத்ததை சொல்ல வேண்டாம் என முடிவு எடுத்தவன்

“யாரோ இவங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து இருந்தாங்க” இதன் பின் சொல்வது அனைத்தும் பிரகாஷின் கற்பனையே “அவங்களை இங்க படுக்க வைச்சிட்டு நான் மாடியில் போய் படுத்துக்கிட்டேன். காலையில் எல்லா இடத்திலும் இங்களை பார்க்காமல் தான் ஒரு வேலை இங்கயே இருப்பாங்களோனு பார்க்க வந்தா இப்ப தான் இவங்க எழுந்தாங்க. ஆனால் சின்ன பசங்க வெளியே தாழ்ப்பாள் போட்டாங்க போல” என அவனே ஒரு கதையை சொல்ல அனைவரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.

சிவா பிரகாஷ்யிடம், “ஹாலோ நேற்று என்ன நடந்துச்சு” என கேள்வியாக அவனை பார்க்க

“அதான் சொன்னனே”, என்ற அவனை நம்பாமல் பார்க்க,

“சரி சொல்றேன்”, என நடந்ததை சிலவற்றை நீக்கிவிட்டு சொன்னான்.

நேராக அவள் சென்ற இடம் மன்டபத்தில் வைத்துள்ள சிசிடிவி ரூமிற்கு தான். அதில் ஒருவர் அவளுக்கு ஜீஸ் கொடுக்கும் போது மண்டபத்திற்கு நான்கு பேர் வருவதும், சிறிது நேரம் தேடி விட்டு கோபமாக வெளியே செல்வது தெரிந்தது.

தனக்கு பின்னால் நடந்த சதியை புரிந்துக் கொண்டாள். யார் என அறிய சில பல ஏற்பாடுகளை செய்து விட்டு, பின் நேரத்தை கருத்தில் கொண்டு தன் குடும்பத்தை காண சென்றாள்.

அனைவரும் சிவாவின் வீட்டுக்கு சென்றனர். பிரகாஷ் சிவாவின் முகத்தை தான் பார்த்தான். அதில் புதிதாக ஒரு பதட்டம் அவனுக்கு தெரிந்தது. ஆனால் அதை அறிய தான் முடியவில்லை. சிவா நேராக தன் அறைக்கு சென்று தயாராகி கையில் ஒரு பையுடன் கீழே வந்தாள்.

நடப்பது புரியாமல் அவளின் அம்மா அவளை பார்க்க,

தன் அம்மாவிடம், “அம்மா நான் கிளம்புறேன். திரும்பி வர ஒரு வாரம் ஆகும். எனக்கு பெங்களுரில் ஒரு மீட்டிங் இருக்கு. அதை முடிச்சிட்டு தான் வருவேன். இப்ப கிளம்பினால் தான் கரெட்டா இருக்கும். மத்த சடங்கு எல்லாம் நீங்க பார்த்துப்பிங்களா இல்லை யாராவது உதவிக்கு அனுப்பவா” என தன் தாயிடம் கேட்க,

முகத்தில் வருத்தம் இருந்தாலும் சொன்னா கேட்கவா போற என்பதால், “சரி மா நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன்” என

தன் தங்கையிடம் திரும்பியவள், “ரித்து.. நீ என்னை விட சின்ன பெண் தான் பட் உனக்கு உன்னோட கடமை தெரியும். என்னை விட பொறுப்பாக இருப்ப அது எனக்கே தெரியும். பார்த்து பத்திரமா இருங்க. தென் இதில் ஹனிமுனுக்கு சுவிஸ்லாந்துக்கு டிக்கெட் இருக்கு” என அவளிடமும் சந்தோஷிடமும் கொடுத்துவிட்டு சந்தோஷிடம் தனியாக பேச அவனை தனியாக அழைத்தாள்.

சந்தோஷ், “என்ன சிவா எதாவது பிரச்சனையா?” என கேள்வியாக அவளை பார்க்க,

“ஆமாம் சந்தோஷ். இப்ப சுற்றி இருக்கிற நிலைமை சரியில்ல. பட் ரித்து ஆசையா கேட்டாள் அதான் என்னால் மறுக்க முடியலை. நீங்க கொஞ்சம் பத்திரமா இருங்க. ஹனிமுனுக்கு தனியா தான் போவாங்க. ஆனா உங்க பாதுகாப்புக்காக உங்களை சுற்றி கொஞ்சம் காட்ஸ் இருப்பாங்க. உங்களை டிஸ்டப் பண்ண மாட்டாங்க. பட் நீங்க எங்க போனாலும் கூட வருவாங்க” என கொஞ்சம் சங்கடமாக கூற

“இட்ஸ் ஓகே சிவா” என அவளின் சங்கடத்தை புரிந்துக் கொண்டு சொன்னான். பின் அனைவரிடமும் சொல்லிவிட்ட வெளியே செல்ல பிரகாஷ் அவளை அழைத்தான்.

அனைவரும் அவனை பார்க்க சிவா என்ன என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கண்ணாலே கேட்டாள். அதை ரசித்துக் கொண்டே ஒன்றும் பேசாமல் அவளின் முகத்தையே பார்க்க,

அதில் கடுப்பாகி சிவா அவனை முறைக்க, சந்தோஷ் அதை கவனித்து பிரகாஷின் தோளில் இடித்தான். அதில் சுயநினைவு பெற்றவன் ஒன்றும் பேசாமல் வெளியே சென்றான்.

சிவா அனைவரிடமும் பார்வையால் கிளம்புவதை உணர்ந்திவிட்டு வெளியே வந்தாள். அவளுக்காக அங்கே பிரகாஷ் நிற்க,

“இப்ப உங்களுக்கு என்ன வேண்டும்?” என கோபமாக சிவா கேட்க

“மேடம் எப்பவும் ஹாட்டா தான் இருப்பீங்களா” என சிரித்துக் கொண்டே கேட்க அவளின் முறைப்பை கண்டு “ஓகே.. என்ன டென்ஷனா இருந்தீங்க. யாரு எதுக்காக நேற்று உங்களுக்கு போதை மருந்து கொடுத்தாங்கனு கண்டுபிடிச்சிட்டிங்களா”

அவனின் கண்களை பார்த்துக் கொண்டே அசால்டாக “என்னை கடத்த தான்” என குண்டை போட

என்ன! என்று அவன் அதிர்ந்து நின்றான். பின் “இப்ப எதுக்கு நீங்க தனியா போக நினைக்கிறீங்க”

“என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். நீங்க தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம். அன்ட் ஒன் மோர் திங் இதை யார் கிட்டவும் சொல்லாதிங்க. தென் நான் வர வரைக்கும் எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோங்க. என்னோட காட்ஸ் கிட்ட சொல்லிட்டேன் அம்மாக்கு மட்டும் இல்ல உங்க ஃபாமலிக்கும் அவங்க பாதுகாப்பா இருப்பாங்க” என அவனின் பதிலை கூட எதிர்ப்பார்க்காமல் காரில் வேகமாக சென்றாள்.

அவள் சென்ற திசையை சிறிது நேரம் பார்த்து இருந்தவன் பின் சிரித்து கொண்டே உள்ளே வர அவனை அனைவரும் வினோதமாக பார்த்தனர். மற்ற சடங்குகள் வேகமாக நடக்க இரவும் வந்தது.

அறையை பிரகாஷ் தனியாளாக அலங்கரித்தான். உதவிக்கு வந்தவர்களையும் வேண்டாம் என சொல்லிவிட்டான். சந்தோஷ் அறையில் காத்திருக்க உள்ளே பதட்டமாக வந்தாள் ரித்விக்கா.

“என்ன ஆச்சுடி. எதுக்கு இவ்வளவு பதட்டம்” என அவளின் கையை பிடித்துக் கேட்டான்.

மெதுவாக அவனை பார்த்து, “ நான் ஒன்று சொன்னா கோபப்படாமல் கேட்பிங்களா?” என

என்ன என்பது போல் பார்த்தான்.

“அது.. நமக்குள் இப்ப இதுயெல்லாம் வேண்டாமே.. அக்கா இருக்க எனக்கு முதலில் கல்யாணம் பண்ணிட்டாங்களேனு கில்டியா இருக்கு. இதை அம்மாகிட்டவோ இல்ல அத்தைகிட்டவோ சொல்ல முடியலை அதான்...” என இழுக்கும் மனைவியை பார்த்து

“இதுக்கு ஏன்டி எவ்வளவு பதட்டம். எனக்கும் நீ சொன்னது ஓகே தான். அதுக்காக என்னால சும்மாயெல்லாம் இருக்க முடியாது” என அவளை அவளை அணைத்துக் கொண்டே படுத்தான். இருவரும் நிம்மதியாக உறங்கினர்.

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் நேற்று நடந்ததையே நினைத்துக் கொண்டு இருந்தான் பிரகாஷ். எப்பொழுது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.

இரண்டு நாள் கடந்த நிலையில் சந்தோஷம் ரித்து சுவிஸ்லாந்து செல்லும் நாளும் வந்தது. அனைவரையும் தான் வரும் வரை சிவா தன் வீட்டிலே இருக்க சொன்னதால் அங்கவே இருந்தனர்.

மாலை தான் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் பொறுமையாக கிளம்பினர். மதியம் உணவை முடித்து சிவாவிடம் சொல்ல அவளின் கைப்பேசிக்கு முயற்சி செய்ய அது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக தகவல் வர,

இரண்டு முறை மீண்டும் முயற்சி செய்த பின் அனைத்து வைக்க பட்டதாக வந்தது. காமாட்சிக்கு பதட்டமாக இருந்தது. அனைவரும் பதட்டாக திரும்பவும் முயற்சி செய்தனர். ஆனால் பலன் தான் இல்லை.

அனைவரும் கவலையாக அடுத்த என்ன செய்ய என்று யோசிக்க, அப்போழுது தான் அங்கு வந்தான் பிரகாஷ்.

“என்ன ப்ரோ.. ஜாலியா இருக்கும் நேரத்தில் உன் முகத்தில் ஏன் இவ்வளவு கவலை... ஐய்யோ அண்ணி நீங்களும்..” என திரும்பும் போது தான் அனைவரிம் முகத்தையும் பார்த்தான்.

“என்ன ஆச்சு.. ஏன் எல்லோரும் இவ்வளவு டென்ஷனா இருக்கிங்க”, என்றான்.

“அது.. நாங்க சிவா கிட்ட பேசலாம் என்று அவளுக்கு கால் பண்ணால் அது சுவிட்ச் ஆப் என வருது, அதான் கொஞ்சம் பயமா இருக்கு”, என சந்தோஷ் சொல்ல,

அவனுக்கும் சிறிது பதட்டம் இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, “ப்ரோ. அவங்க மீட்டிங்கில் கூட இருக்கலாம். அதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்” என

காமாட்சி, “இல்ல தம்பி எனக்கு எதோ தப்பா நடக்கிறா மாதிரியே இருக்கு” என கவலையாக சொல்ல

“சரி இருங்க நானும் அவங்க போனுக்கு ட்ரை பன்றேன்” என கால் பண்ண ரிங் செல்லவே ஸ்பிக்கரில் போட்டான்.

ரிங் போவதை சந்தோசும் ரித்துவும் ஆச்சரியமாக பார்க்க, கால் பண்ண முன்றாவது ரிங்கிலே போன் எடுக்கப்பட்டது.

“ஹாலோ.. என்னடா” என்ற சிவாவின் பேச்சில் அனைவரும் திகைப்பாக பிரகாஷை பார்க்க, அவனோ திரு திருவென முழித்தான்.


தொடரும்
நிலா ❤
 
Top