Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிக்கார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 6

Advertisement

ilakkikarththi

Well-known member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 6

”ஆத்தா அங்களாஈஸ்வரி, பொங்கலு நல்லபடியா பொங்கி வரனும் என் தாயே... உன்னை நம்பி வந்த என் குடும்பத்துக்கு இனி நீ தான் நல்லபடியா வழி நடத்தனும். என் பேரன், பேத்திகளுக்கு நல்லபடியா மாலை எடுத்துகொடுக்கனும் சாமி.” மேகலை கைகூப்பி வேண்ட.



”மேகலையின் வேண்டுதலுக்கு இணங்க, பொங்கல் பானையின் உலை நீர் மேற்க்கு நோக்கில் வடிந்தது. ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு சம்பிரதாயம் இருக்கும். மேற்க்கு நோக்கி நீர் வடிந்தால் குடும்பத்திற்க்கு நல்லது நடக்கும். கிழக்கு நோக்கி வடிந்தால் அந்த வீட்டில் நல்ல விஷேஷம் நடக்கும். வடக்கு நோக்கி வடிந்தால், குளம், கிணறு வற்றாது என்றும். தெற்க்கு நோக்கி வடிந்தால் நோய், பிணி எதுவும் அண்டாது எனவும் குறிப்பிடுவார்கள்”.




“பார்வதி, அந்த உலை அரிசிய எடுத்து, நீயும், லதாவும் சாமிய வேண்டி போடுங்க”.



“சரிங்க அத்தை”



”ஏங்க, பொங்கல் பொங்கிருச்சு, இனி கெடாவுக்கு மஞ்சள் தண்ணீர் ஊத்தி குறி சொன்னதும் வெட்டுங்க.”



“சரி மேகலை”



“லெக்‌ஷ்மி, ராதா போய் அந்த தோப்புல தண்ணீர் எடுத்துட்டு வாங்க. சமையலுக்கு நேரம் ஆகுது இப்போ தொடங்குனா தான் பனிரண்டு மணிக்கு முடிக்க முடியும்.”





“சரி ம்மா... இதோ போறோம்.” என ஆளுக்கு ஒவ்வொரு வேலையும் கொடுத்துக்கொண்டிருந்தார் மேகலை.




“ஏய் பாண்டி, நம்ம கோவிலுல கெடவெட்டி, பொங்கல் வைக்குறோம், மறக்காமா, அங்குட்டு நடவு வேலை, களை பறிக்குறவங்க, இருந்தா மதிய சாப்பாட்டுக்கு கூப்பிட்டு வந்திருய்யா” என தோட்டத்து வேலைக்கு சென்றுகொண்டிருந்தவரிடம் கூறினார்.


” சரிங்க ஆத்தா... நான் கூப்பிட்டு வந்திறேன்.”



“நீயும் உன் பொஞ்சாதி, புள்ளைகள கூப்பிட்டு வாய்யா.”




“ஆத்தா, நீங்க சொல்லைலனாலும், நான் கூப்பிட்டு வந்துருவேன் ஆத்தா.” அந்த மனிதர் சொல்லிவிட்டு சென்றார்.



“செல்வராஜூ, எங்க என் பேரன், பேத்திகள. இன்னுமா கோவிலுக்கு வர மனசு இல்ல அவங்களுக்கு.”




“அம்மா, அவங்க எல்லாரும் வந்திட்டு இருக்காங்கா. சிவா தான் கூப்பிட்டு வரேனு சொன்னா” என்றார் செல்வராஜ்.




“அப்படியா, சரிய்யா...”



”காரில் முன் சீட்டில் சிவாவும், கௌதமும் அமர்ந்திருக்க. நடுவில் ப்ரவீனும், கவியும் இருக்க, கடைசி இருக்கையில் லாவன்யா, அகல்யா, வருண் அமர்ந்திருந்தனர்.”



“ப்ரவீன் மாமா, என் ட்ரெஸ் எப்படி இருக்கு?” வேடிக்கை பார்த்துகொண்டிருந்தவனிடம் கேட்க.



” திரும்பி அவளை பார்த்து, ம்ம் நல்லா இருக்கு. ஆனா சேலை கட்டுனா உனக்கு இன்னும் சூப்பரா இருக்கும்.”




“ஏன், சுடிதார் பிடிக்கலையா” என அவள் அணிந்திருந்த மதுபால சுடிதாரை பார்த்து அவள் கேட்க.




“பிடிச்சிருக்கு கவி. ஆனா உன்னை சேலையில பார்த்ததே இல்லை அதான் சொன்னேன்.”



”இனி சேலை கட்டுறேன் மாமா. கோவிலுக்கு போனா எப்படி சேலைய மெயிண்டேன் பண்ணுறதுனு தெரியலை அதான் சுடிதார் போட்டேன்.”




“உனக்கு எது சவுகரியமா இருக்கோ அதுவே ஒகே கவி” என இருவரும் விட்டுக்கொடுத்து பேசுவதை காதில் கேட்டுக்கொண்டே வந்தான் சிவா.




“அவன் மனதிலும், அவளின் காதலி அவனுக்குகாக விட்டுகொடுத்து தான் பேசுவாள். ஆனால் அவன் எப்பொழுதும் விட்டுக்கொடுக்கமாட்டான். எதுவாக இருந்தாலும் அவள் தான் இறங்கி வருவாள்.”



“லாவன்யாவும், அகல்யாவும் சேலை கட்டிருக்க. ஆண்கள் அனைவரும் பட்டு வேட்டி, சட்டையில் இருந்தனர். வருண், லாவனையாவை எட்டி எட்டி பார்க்க. அவளோ, காலையில் இவள்,கவி, அகல்யா, மூவரும் எடுத்துகொண்ட செல்பியை ஸ்டேட்ஸில் வைத்துகொண்டிருந்தாள்.”



“அகல்யா, நான் லாவன்யா பக்கத்துல உக்காரனும், நீ இந்த பக்கம் வா அகல்யா.”



“அப்போ, அமேசான்ல ஆஃபர் போட்டு இருக்காங்க எனக்கு ரெண்டு குர்தி வாங்கி தருவியா”? அவனிடம் பேரம் பேசினால்.



”கண்டிப்பா, இதோ இந்த என் போன்” என அவளிடம் போனை நீட்டினான். அவளோ, உடனே மாற்றி அமர்ந்துவிட்டாள்.



“லாவன்யாவின் அருகில் அமர்ந்ததும். அவள் தலையில் வைத்திருந்த மல்லிகையின் மனம் அவனுக்கு, அவளின் மீது உள்ள காதலை வெளிகாட்ட வைத்தது”.




“ஓய்... என்னை கவனிக்காம போன்ல என்ன பண்ணுற” அவளின் காதுக்கு அருகில் பேசினான்.



“வருணின் குரல் அருகில் கேட்டதும், வேகமாக அவனது பக்கம் திரும்பினாள். ‘மாமா... நீங்க எப்படி இங்க... லாவன்யா...’ என அவள் திக்கி திணறி பேச.




“ஏன், உன் பக்கத்துல நான் உக்காரக்கூடதா?”



“இல்லை மாமா... கொஞ்சம் பயந்துட்டேன்.”




” சேலையில சூப்பரா இருக்க லாவன்யா” அவளிடம், அவன் மனதை மறையாமல் கூறினான்.



“அவளோ, கொஞ்சம் வெக்கத்துடன் காரின் ஜன்னலின் பக்கம் திரும்பிக்கொண்டால்.




”அவளது கையில், அவன் கை வைக்க போகா. கோவிலும் வந்துவிட்டது. கார் நின்றதை அறிந்து அவன் அவளிடம் பார்வையாலே விடை பெற்றான்.”



“சிவாவும்,கௌதமும் இறங்கி முன்னே செல்ல. ப்ரவீனும், கவியும், சேர்ந்தார் போல் சென்றுகொண்டிருந்தனர். அடுத்தாக லாவன்யாவும், அகல்யாவும் ஏதோ பேசிகொண்டே கோவிலுக்குள் சென்றனர். வருண் காரை மர நிழலில் நிறுத்திவிட்டு வர சென்றிருந்தான்.”




“பிரபாகரன், கௌதமை அழைக்க, சிவா மட்டும் தனியாக சென்றுகொண்டிருந்தான். அப்பொழுது தான் வருணை எதிர்ப்பார்த்து, அகல்யாவை முன்னே செல்லுமாறு லாவன்யா கூறினாள். அகல்யாவும், முன்னே சென்றுகொண்டிருந்த சிவாவை பார்த்ததும் அவனுடன் சேர்ந்து செல்லலாம் என அவனிடம் வேகமாக நடந்து சென்றாள்.”




“ஏதோ யோசனையில் சென்றவனின் அருகில் யாரோ வருவது போல உணர்வு அவனுக்கு தோறியதும், திரும்பி பார்க்க அகல்யா இருந்தாள்.”




“வாங்க மாமா சேர்ந்து போகலாம். என அவனின் கையை பிடித்துகொண்டு இருவரும் சேர்ந்து அவர்களின் குடும்பம் இருக்கும் சாமியின் சன்னதிக்கு சென்றனர்.” என அவள் சாதாரணமாக தான் சொன்னாள்.




“சிவாவையும், அகல்யாவையும் ஒரு சேர பார்த்த அவர்களின் மொத்த குடும்பம், மற்றும் அங்கிருந்த மக்களும் அவர்களின் ஜோடி பொருத்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.”




“மேகலையும், நாதனும், உள்ளூர மகிழ்ந்துகொண்டாலும். அவர்களை பெற்றவர்கள் என்ன நினைத்துகொண்டு இருக்கிறார்கள் என அவர்களுக்கு தெரியவில்லை.”




”பாட்டி, என் சேலை எப்படி இருக்கு...”




”உனகென்ன கண்ணு, அம்சமா இருக்க.” என அவளது கன்னத்தை வழித்து திரிஷ்டி எடுத்தார்.




“அனைவரும் வந்த பின் சாமி கும்பிட சென்றனர். பூசாரி பொங்கலை வாழையிலையில் மூன்று தழுகையாக போட்டு வைத்தார், அசைவம் தவிர்த்து. அம்மனுக்கு வேண்டிய பூ, பழம், தேங்காய், வளையல். என அவள் முன் படைத்து அனைவரும் நலமாக இருக்க வேண்டியும், ஊரும் வயலும் நல்ல செழிப்பாக இருக்கவும் வேண்டிக்கொண்டனர்.”





“இறுதியில், மேகலை பூசாரியிடம் பூப் போட்டு பார்க்க சொன்னார். முதல் பூவை, அங்கிருந்த சித்ராவின் இரண்டு வயது மகளை எடுக்க வைத்தனர். அதில் வெள்ளை பூ வந்தது. இரண்டாம் முறை பூப் போட்டதில் வெள்ளை பூ வந்தது.”





“அம்மா, நீங்க என்ன நினைச்சீங்களோ, அது கண்டிப்பா நல்லபடியா நடக்கும், அதுக்கான உத்தரவு ஆத்தா அங்காளாஈஸ்வரி கொடுத்துட்டா, இனி நீங்க நல்ல நாள் பார்த்து உங்க பேரன்களுக்கு கல்யாண வேலைய பார்க்க ஆரம்பிங்க. எடுத்த காரியத்திலும், அதை முடிக்கும் வரைக்கும் ஆத்தா உங்க துணைக்கு இருப்பா”. என அந்த பூசாரி அவர்கள் மனதுக்கு திருப்தியாகும் படி கூறினார்.




“ரொம்ப சந்தோஷம் பூசாரி... என் மூத்த பேரன்கள் ரெண்டு பேருக்கும் இந்த வருஷத்துல கல்யாணத்தை முடிக்கலாமானு தான் ஆத்தாக்கிட்ட உத்ரவு கேட்டேன். அவளும், நல்லபடியா கொடுத்திட்டா.”




“எல்லாருக்கும் இப்போ சந்தோஷம் தானே.” என மேகலை கேட்க.




“ ரொம்ப சந்தோஷம்.” அனைவரும் ஒரு சேர கூறினர்.


தொடரும்……………
 
Top