Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி ‘ இளந்தென்றலோடு ஒரு கவிதை 13

Advertisement

ilakkikarththi

Well-known member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 13

’இன்னும் எத்தனை நாளுக்கு சார் உங்க நாடகத்துல நான் நடிக்கனும். இந்த குடும்பத்துல ஒவ்வொருத்தரும் என்மேல காட்டுறம் பாசம் எனக்கானது இல்லை. வீட்டுல ஒவ்வொருத்தரும் என்னை பெயர் சொல்லி அழைக்கிறப்போ ஒரு நிமிஷம் எனக்கு பயமா தான் இருக்கு.’



உங்க பையனுக்கு கொடுக்கவேண்டிய பாசம், அன்பு, இதெல்லாம் எனக்கு கிடைக்குறப்போ வேதனையா இருக்கு சார். நானும் மனுஷன் தான் உங்க பையன் இடத்துல இப்படி நான் நடிக்குறது நாளைக்கே எல்லாருக்கும் தெரிஞ்சா என்ன ஆகுறது சார்.




பாட்டி, இப்படி என் கல்யாணம் விஷயம் வரை வந்திட்டது எனக்கே அதிர்ச்சியா இருக்கு சார். எனக்காக ஒருத்தி ஊருல குடும்பத்தோடு எங்க கல்யாணத்துக்காக காத்திட்டு இருக்கா சார். ஆனா இங்க அகல்யாவோட கல்யாணம் பேசுனாங்கனு அவளுக்கு தெரிஞ்சா, என்மேல கோவம் பட மாட்டா ஆனா அவளை ஏமாத்த எனக்கு தைரியம் இல்லை.




ப்ளீஸ் சார் என்னால இதுக்கு மேல நடிக்க முடியாது. அதுவும் உங்க மனைவியோட பாசத்துக்கு முன்னாடி என் நடிப்பு செல்லா காசு தான். அவங்க ஒவ்வொரு முறையும் என்கிட்ட என்ன வேணும், வேணாம்னு எனக்கு பார்த்து செய்யுறது இதெல்லாம் பார்க்குறப்போ நான் இழந்த என் அம்மாவோட பாசம் தான் என் கண்ணு முன்னாடி நிக்குது.’ பார்வதியினை பற்றி பேசிய போது தான் இவ்வளவு நேரம் தான் அமைதியாக நிற்க்கிறோம் என புரிந்துகொண்டார்.





தனுஷ் ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நாள், எங்க குடும்பத்துக்காக. சிவா இல்லைனு எல்லாருக்கும், முக்கியமா பார்வதி அத்தைக்கு தெரிஞ்சா அவங்களுக்கு என்ன ஆகும்னு சொல்ல முடியாது. உங்க நிலை எங்களுக்கு புரியுது அதான் அகல்யா உங்களை கல்யாணம் செய்ய விருப்பம் இல்லைனு சொல்லிட்டாளே அப்புறம் என்ன, எங்களுக்காக தனுஷ். என கௌதம் அவனை சமாதானம் செய்ய.




அதான் கௌதம் இன்னும் எத்தனை நாளைக்கு என் நடிப்ப வச்சு அவங்களை ஏமாத்த முடியும். இந்த நிமிஷம் என்மேல கண்டிப்பா ஒருத்தருக்கு சந்தேகம் வந்திருக்கும். அவங்க நான் சிவா இடத்துல நடிக்க வந்திருக்கேனு தெரிஞ்சா எல்லாருக்கிட்டயும் சொல்லிட மாட்டாங்களா? என தனுஷ் கேட்க.





இங்க பாருங்க எத்தனை போன்கால் என் அக்காகிட்ட இருந்து. என்னை கல்யாண பண்ணிக்க போறவகிட்ட இருந்து எத்தனை மெசேஜ், போன் கால் பாருங்க. இங்க இருக்குற, நடிக்குற ஒவ்வொரு நிமிஷம் டென்ஷனை அவகிட்ட கட்டிட்டு இருகேன். என் அக்காவோட போன் மெசேஜ்க்கு பதில் கூட சொல்லமுடியாத நிலை தான் எனக்கு. அப்படியே நான் பதில் சொன்னாலும் என் வார்த்தையில இருக்குற வித்யாசத்தை உடனே கண்டுபிடிச்சுடுவா’. தனுஷ் தலையை கோதிகொண்டு அவர்களுக்கு மறுபக்க திரும்பி நிற்க.





அவன் முன் வந்தார் செல்வராஜ், ‘என் குடும்பத்துக்கும், என் மனைவிக்கும் என் மகன் திரும்ப வரமாட்டானு தெரிஞ்சா அவங்களை எப்படி சமாதானம் படுத்தனும் கூட எனக்கு தெரியாது தம்பி. அதைவிட என் மனைவி ரொம்ப முக்கியம், அவ உடைஞ்சு போயிட்ட அவளை மீட்க்குறது ரொம்ப கஷ்டம். உன் காலுல வேணா நான் விழுகுறேன் தம்பி, என அவன் காலில் விழ போக, அய்யோ சார்... மாமா... செல்வராஜ்... மூவரும், நான்காம் நபரை அதிர்ச்சியாக பார்க்க அங்கே வந்தார் நாதன்.







செல்வராஜின் அருகே வந்தவர் அவரை பார்த்து கன்னத்தில் அறைந்தார். ’யாராவது சொந்த மகன் கால்லயே விழுவாங்களா. அப்படி என்ன அவன் கால்ல விழுகுற அளவுக்கு என்ன நடந்தது’. அவர் கேட்க அமைதியாக நின்றிருந்தார் செல்வராஜ்.
’சொந்த தகப்பனை இப்படி கால்ல விழ வைக்குற பிள்ளையை இப்போ தான் பார்க்குறேன். உன் கால்ல விழுகுற அளவுக்கு உன் அப்பா அப்படி என்ன தப்பு பண்ணாரு சொல்லுப்பா பேராண்டி’. தனுஷிடம் திரும்பி கேட்க.






தனுஷோ, யாரையும் பார்க்காமல், தாத்தாவின் காலில் சாஸ்ட்ராங்காமாய் விழுந்து, ‘என்னை மன்னிச்சுருங்க தாத்தா... எந்த பிள்ளையும் தன்னை பெற்றவனை கால்லுல விழ வைக்கமாட்டான் அதே மாதிரி எந்த பெரிய மனிதரை நான் விழ வைக்கலை. நானும் அப்படி தான் ஆனா உங்க பேரன் நான் இல்லை, உங்க பையனோட பிள்ளையும் நான் இல்லை. அப்படி இருந்து அவர என் கால்லுல விழ வைக்குற அளவுக்கு நான் கல்நெஞ்ச காரனும் இல்லை.’ அவன் சொல்ல.





தனுஷ் காலில் விழுந்தது அதிர்ச்சி என்றல், அதற்கடுத்து அவன் சொல்லிவை மிக பெரிய அதிர்ச்சி தான் தாத்தாவிற்க்கு . முதல்ல எழுந்திரிப்பா... என்ன நடந்தது சொன்னா தானே தெரியும்.’ அவர் சொல்ல மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க. யார் சொல்லுவது, எனத்தெரியாமல் காற்று வீசும் ஒலி மட்டும் அனைவரும் காதில் விழுந்துகொண்டிருந்தது.




**********


என்ன திடீர்னு கால் பண்ணி இங்க வரசொல்லிருந்த என்ன விஷயம். தனுஷ் கேட்க, தென்றலோ அவன் முகத்தையே பார்த்துகொண்டிருந்தாள்.
என் முகத்துல என்ன இருக்குனு என் முகத்தையே பார்த்திட்டு இருக்க. விஷயம் என்ன சொல்லு. அவளை கேட்க.





உங்களுக்கு என்மேல காதல் வருமா? வராதா?. அவள் கேட்க.




‘ஆரம்பிச்சுட்டா... இன்னைக்கு யாரு இவளை குழப்பிவிட்டதுனு தெரியலையே.’ அவன் மனதில் நினைக்க.



சொல்லுங்க... வருமா? வராதா?. அவள் பிடியில் நிற்க.




அவன் மனதில் அவள் மீது துளியும் காதல் இல்லை. ஆனால் அவளை சந்திக்கும் போதெல்லாம் அவன் மனதில் மிகவும் நெருக்கமானவள் எனதேன்றியது உண்மை. அதை அவன் மறைக்கவில்லை, ஆனால் இவள் ஒவ்வொரு நொடியும் அவன் மீது காதல் செலுத்திகொண்டிருந்தாள். நேற்றுகூட அவனது அக்கா அவனிடம் கல்யாணம் பேச்சை எடுத்தப்பொழுது அவனுக்கு நினைவில் வந்தது தென்றல் தான் ஆனால் அதில் காதல் இல்லை. ஒரு நிமிடம் தன் மனைவியாக மட்டுமே அவளை நினைத்த போது தான், அவன் முடிவு செய்துவிட்டான் மனைவியாக வந்தாள் அவள் மட்டுமே என்று. மனதில் நினைத்தை அவளிடம் சொல்லிவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என அவனுக்கு நன்றாக தெரியும் ஆனால் அதை சொல்லாமல் அவளுக்கு சர்ப்ரைசாக சொல்லலாம் என அவன் நினைத்திருந்தான். ஆனால் இன்று அவள் இப்படி தன்னிடம் காதல் வருமா? வராதா என கேட்டால் அவன் என்ன சொல்லுவான்.





அவளது முகத்தை பார்க்க அதில் அவனது பதில் அவளுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என தவிப்பு இருந்தது. அவனுக்கு, அவளை தவிப்புடன் பார்ப்பது அவனுக்கே பிடிக்கவில்லை.




அவளின் தவிப்பை போக்க அவளின் கையை தன் கையுடன் இணைத்துகொண்டு பேச ஆரம்பித்தான். ‘தென்றல் உன்மேல காதல் வந்தா கண்டிப்பா நான் சொல்லுறேன். ஏன் உன் மனசை இப்படி குழப்பிக்கிற, யாராவது என்னை பார்க்க வர்ரதுக்கு எதாவது சொன்னாங்களா.’ அவன் கேட்க





அவன் கை முதல் முறையாக அவள் கையுடன் பட்டவுடன் அவளுக்குள் சிலிர்ப்பாக இருந்தது. ‘யாரும் எதுவும் சொல்லலை, ஆனா நீங்க என்னைவிட்டு தூரமா போய்டுவீங்களோனு ஒரு பயம். இதுவே என்மேல காதலா இருந்தா போகமாட்டீங்களே அதான் கேட்டேன்.’ அவள் பதில் சொல்லியபின் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.





”உன்னைவிட்டு என் வீட்டுக்கு போக கூட பிடிக்கலை டி. அப்படி இருக்கும் போது உன்னைவிட்டு நான் தூரமா போகுறதா? அப்படி நான் தூரமா போனாலும் உன்னையும் சேர்த்தே கூட்டிட்டு போவேன்.” அவள் கேட்ட கேள்விக்கு அவன் மனதிலே பதில் சொல்லிகொண்டான்.





நீயே என்னை தூரம போக சொன்னாலும் நான் போகமாட்டேன் போதுமா. இப்போ உன் பயம் போயிருச்சா.




’இல்லையே இன்னும் அப்படியே தான் இருக்கு. நீங்க இன்னும் என்கிட காதல் சொல்லலையே.’





வந்தா சொல்லுறேன், ம்ம்... சரி... எங்க உன் பிரண்ட் அஹ் காணோம். நீ தனியாவ வந்த இங்க. பேச்சை மாற்ற அவளிடம் சங்கவியை பற்றி கேட்க.




‘என்னை இங்க இறக்கிவிட்டுட்டு அவ ஷாப்பிங்க் போயிருக்கா. கிளம்பும் போது போன் பண்ண சொல்லிருக்க.’




அதனே நீயாவது என்னை பார்க்க தனியா வருவதாவது. ஒரு நிமிஷம் நீ தைரியசாலியா மாறிட்டோயோனு பயந்துட்டேன். அவளின் பயத்தை கேலி செய்ய.



‘கேலி பண்ணாதீங்க, உங்களை நினைச்சாலே எனக்கு தைரியம் தானா வரும். ஆனா இந்த ஏரியால கொஞ்சம் பொறுக்கிங்க அதிகம் அதான் பயந்து வந்தோம் நானும், சங்கவியும்.’




அவள் சொல்லியதும் அவனுக்கு அப்பொழுது தான் நியாபகம் வந்தது. ‘சரி இனிமே, நீ என்னை பார்க்கனும்னா சொல்லு, நானே நீ இருக்குற இடத்துக்கு வரேன். இப்போ கிளம்பலாம், சங்கவிக்கு போன் பண்ணு.’ அவன் சொல்லியதும், அவளுக்கு போன் செய்ய சரியாக அவள் வந்தாள்.





’நீங்க போங்க நான் உங்க பின்னாடியே வரேன். பயப்படாம போ சரியா.’ தென்றலை பார்த்து பேசிவிட்டு, சங்கவியிடம், ‘ரொம்ப ஸ்பீடா போகதா... மெதுவா போ’
‘அதெல்லாம் எனக்கு தெரியும்... உங்க காதலிய பத்திரமா அவ வீட்டுல இறக்கிவிடுறது என் பொறுப்பு.’ அவனின் முகத்தை முறைத்துகொண்டே பதில் சொன்னாள்.



நீ கீழ விழுந்தாலும், தென்றல் விழக்கூடாது சரியா. உனக்கு அடிப்பட்டாலும், அவளுக்கு படக்கூடாது புரியுதா. அவனும், அவளுக்கு மேல முறைத்துகொண்டே சொல்ல. இடையில் பார்த்துகொண்டிருந்த தென்றல் தான் யாரை சமாதானம் படுத்துவது எனத்தெரியாமல் தவித்தாள்.




‘என்னங்க அவ நல்லா ஸ்கூட்டி ஓட்டுவா. நீங்க பயப்படாதீங்க, நான் வீட்டுக்கு போன பின்னாடி உங்களுக்கு மெசேஜ் பண்ணுறேன்.’ அவர்களின் சண்டை நிறுத்த முயற்சிக்க.




’சங்கவி, ப்ளீஸ் டி எனக்காக அமைதியா இரு.’ தோழியின் காதில் சொல்லி அவளை அமைதிபடுத்தினால்.




என்ன தான் தென்றலும், சங்கவியும் பயமில்லாம ரோட்டில் பயணம் செய்தாலும் அவனுள் சிறு பயம் இருந்தது. அதனால் அவர்களை இடைவெளி விட்டு அவனும் தொடர்ந்து பாதுகாப்பாக வந்துகொண்டிருந்தான்.



அவனின் செயல் சங்கவிக்கு தெரிய, அதை அப்படியே தென்றலிடம் கூறினால். அவளும் அவனை திரும்பி பார்க்க, அவன் மீது காதல் செய்யும் ஆர்வம் அவளுக்கு இன்னும் அதிகமானது.



*************




’சிவா... சிவா... நான் சொல்லுறதை கொஞ்சம் கேட்டுட்டு போ... ப்ளீஸ் சிவா... ஒரு நிமிஷம் நான் சொல்லுறதை கேளு டா.’ அவன் பின்னயே சுற்றிகொண்டிருந்தாள் தரணிதா.





போதும் தரணிதா... நீ சொன்னது, நான் கேட்டது எல்லாம். தயவு செஞ்சு என்னை கெஞ்சாத. நான் தான் ஆல்ரெடி சொன்னேன்ல தனியா எங்கயும் போகாத, போனா மாட்டிப்பேனு. இப்போ பார்த்தியா உனக்கு அடிவிழ வேண்டியது, தேவனுக்கு அடிவிழுந்துருக்கு. அவனுக்கு அடுத்த வாரம் கல்யாணம், இப்போ அவனால எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை. அவங்க அம்மா, அப்பா என்ன பற்றி என்ன நினைப்பாங்க.




‘நான் அவங்க அப்பா, அம்மாகிட்ட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டேன். கல்யாணம் செய்ய போற பொண்ணுகிட்ட கூட நான் மன்னிப்பு கேட்டுட்டேன் சிவா.’




அதை மட்டும் தான் உன்னால செய்ய முடியும் வேற என்ன செய்யமுடியும். இதுவே எனக்கு அடிப்பட்டுருந்தா என்ன செய்வ நீ. அவன் கேட்க




‘ஒரு நிமிடம் அதிர்ந்தவள், ஆபீஸ் என்றும் பார்க்காமல் அவனை கட்டிகொண்டு விடாமல் அழுதாள்.’ அவர்களை கடந்து சென்றவர்கள் சிரித்துகொண்டும், அவர்களுக்குள்ளே பேசிகொண்டு கடந்து சென்றனர்.




தனு எல்லாரும் நம்மள தான் பார்க்குறாங்க. முதல்ல என்னைவிடு. அவன் சொல்ல




‘உனக்கு எந்த பிரச்சனை வந்தாலும், அடி விழுந்தாலும் அது என்னை தாண்டி தான் வரும். அப்படியே வந்தாலும் உனக்கு முன்னாடி அதை நான் தான் வாங்கிப்பேன் சிவ.’
ஆமா... அது உனக்கு பிடிச்ச ரசகுல்லா பாரு, எனக்கு முன்னாடி நீ வாங்குரதுக்கு. உயிர் பயத்தை ஏற்படுத்துற அளவுக்கு எதிரியோட பலம் இருக்கும். அவளின் காதலில் மெய் மறந்தவன் அவளின் பேச்சில் கூட தன்னைவிட நான் முக்கியம் என நினைப்பவளை என்ன செய்வது.





’சாரி சிவா... இனி உன்கிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டேன்.’



நம்பலாமா?...




‘உன் தரணிதா மேல சத்தியம் சிவா.’ அவள் தலைமேல் கை வைத்து சத்தியம் செய்தவளை பார்த்து சிரித்தான்.



இதோட நீ செய்த ப்ராமிஸ் ஆயிரத்து ஒன்னு. எப்பவும் விளையாட்டவே இருக்காத தனு. இப்படி இருந்தா என் குடும்பத்துக்கிட்ட எப்படி உன்னை அறிமுகம் செய்ய முடியும். நம்ம காதலுக்கு எப்படி சம்மதம் சொல்லுவாங்க.





‘அதுக்கு ஒரு வழி இருக்கு சிவ... நீ மட்டும் ஓகே சொல்லு. அடுத்து நாம பேபி பெத்துக்குறத்துக்கான வேலையில இறங்கலாம். பேபி அஹ் பார்த்த உன் மொத்த குடும்பமும் அப்படியே ஆல் அவுட் ஆகிடுவாங்க. அப்புறம் நம்மளை ஏத்துப்பாங்க.’





இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட பேசாத தனு. எல்லார் சம்மத்தோட நம்ம கல்யாணம் நடக்கனும். அடுத்து தான் நம்ம வாழ்க்கையை தொடங்கனும். என அவன் அவளுக்கு அட்வைஸ் செய்தான்.






அவள் மீது அவன் கோவம் கொண்டதன் காரணம், ‘மிக பெரிய தொழில் அதிபரான முத்துவேலவன், அவர் நடத்து மருத்துவமனையில் சில தவறான விஷயங்கள் நடப்பதை தெரிந்துகொண்ட தரணிதா, அதை கண்டுபிடிக்க தனியாக சென்றாள். இதை பார்த்துவிட்ட சிவாவின் தோழன் தேவன் அவள் பின்னயே போனான். அவளுக்கு அங்கு நடந்த எல்லாவற்றையும் அவளது பென் கேமிராவில் பதிந்துகொண்டு வெளியே வரும் சமயம் மாட்டிகொண்டாள். தேவன் தான் அவளை காப்பாற்றி வேறு வழியில் செல்லுமாறு சொல்லிவிட்டு அவன் மாட்டிகொண்டான். அவனை போட்டு அடித்து, கால் கை எல்லாம் உடைத்துவிட்டனர்.





‘இதை அறிந்த சிவா அவமேல் கோவம் கொண்டு தான் பேசாமல் இருந்தான். அவர்கள் வேலை செய்வது பத்திரிக்கை ஆனாதல் தினமும் மக்களுக்கு தெரிந்து, நாட்டில் மறைமுகமாக நடக்கும் குற்றத்தை வெளியில் கொண்டுவருவதற்கான சில முயற்சிகளும் அவள் எடுத்தாள். ஆனால் விதி அவளை மட்டுமல்லாமல் அவனையும் சேர்த்து பழிவாங்க போகிறது என தெரியாமல் அவள் இருந்தாள்.’





தொடரும்…………




 
Top