Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி ‘ இளந்தென்றலோடு ஒரு கவிதை 12

Advertisement

ilakkikarththi

Well-known member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 12

“நாதன் – மணிமேகலை நடுமையம் அமர்ந்திருக்க. செல்வராஜ் – பார்வதி வலது பக்கம் அமர்ந்திருக்க. சேது – லதா இடது பக்கம் அமர்ந்திருக்க. பிரபாகரன் – ராதா மற்றும் ராஜேஷ் – லக்‌ஷ்மி அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர்.”



“சிறியவர்கள் அனைவரும் பெரியவர்கள் பக்கத்தில் நின்றிருந்தனர்.”



“மேகலை, ‘கௌதம்க்கும், கௌசல்யாவுக்கும் அடுத்த வாரம் நிச்சயம் பண்ணலாம்னு பெரியவங்க நாங்க முடிவு எடுத்துருக்கோம்... கௌதம் நீ என்ன சொல்லுறய்யா.’ மேகலை கௌதமிடம் கேட்க.




“எனக்கு சம்மதம் பாட்டி.” அவனின் சம்மதத்தை சொல்ல.




‘மேகலையோ, கௌசியிடம் திரும்பி, “நீ என்ன சொல்லுற கௌசி உனக்கு விருப்பமா?”


“எனக்கும் சம்மதம் பாட்டி...” அவளின் சம்மத்தையும் கேட்டப்பின் தான் அங்குள்ள அனைத்து பெரியவர்களுக்கும் மகிழ்ச்சி தான்.



“மேகலை, நாதனை திரும்பி திருப்தியான மகிழ்ச்சியில் பார்க்க. அவரது முகமோ மனைவிக்கு ஏற்றப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.”



“அப்போ இன்னொரு மகிழ்ச்சியா விஷயமும் சேர்த்தே பேசிடலாம். சிவாக்கும், அகல்யாவுக்கும் சேர்த்தே கல்யாணத்தை பேசி முடிச்சிரலாம்.” மிகுந்த மகிழ்ச்சியில் மேகலை சொல்லிவிட.




“சிவாவிற்க்கும், அகல்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றால். செல்வராஜிர்க்கும், கௌதம்க்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.”




“அகல்யா உனக்கும், சிவாவுக்கும் கல்யாணம் பண்ணலாமுனு நினைக்குறோம் நீ என்னம்மா சொல்லுற.” என மேகலை, அகல்யாவிடம் கேட்க.




“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை பாட்டி” என அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்தாள்.



“ஏன்... ஏன்...” என மேகலை, லக்‌ஷ்மி பார்வதி கேட்க.



“எனக்கு சிவா மாமாவ கல்யாணம் செய்ய இஷ்டம் இல்லை பாட்டி.



“அதான் ஏன்னு கேக்குறோம் அகல்யா...” என லக்‌ஷ்மி மகளின் கை பிடித்து கேட்க.



”பிடிக்கலைனா பிடிக்கலைனு தான் சொல்ல முடியும். இது என் வாழ்க்கை, கல்யாணத்துல விருப்பம் இல்லைம்மா.” அவள் கோவமாக சொல்ல.



“ மூவரை தவிர மற்றவர்களுக்கு அகல்யாவின் விருப்பமின்மை அதிர்ச்சியாக இருந்தது.”



“மேகலையோ, அகல்யாவிர்க்கே கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றால், சிவாவிற்க்கு விருப்பம் கண்டிப்பாக இருக்காது. என நினைத்துகொண்டு சிவாவிடம் அவர் கலயாணத்தை பற்றி கேட்கவில்லை.”




“அகல்யாவோ, யாரையும் பார்க்க பிடிக்காமல் அவளது அறைக்கு சென்றுவிட்டாள். அவளது பின்னே, பாரு, லாவன்யா, கௌசி சென்றுவிட்டனர்.”




“மன்னிச்சிருங்க மாப்பிள்ளை...” மேகலை ராஜேஷிடம் மன்னிப்பு கேட்க.



“அய்யோ அத்தை... என்கிட்ட போய் மன்னிப்பு கேட்டுட்டு... நல்லவேளை இவளை நம்பி நிச்சியம் வரை போயிருந்தா நம்ம குடும்பத்துக்கும், சிவாவுக்கு தான் அசிங்கமா போயிருக்கும்.” அவர் சொல்ல.




“அம்மா, சிவாக்கு ஏத்த பொண்ணு எங்க இருக்காளோ அவ தான் நம்ம வீட்டு மருமகள்... நீங்க கவலைப்படாம கௌதம், கௌசி நிச்சயத்தார்த்தை பாருங்க.”என லக்‌ஷ்மி மேகலையை சமாதானம் செய்தார்.



“மேகலை, அப்போ நாமா கௌதம், கௌசல்யா நிச்சய தேதி நாளைக்கு போய் பூசாரிக்கிட்ட குறிச்சுட்டு வரலாம்.” என ஒரு மனதாக முடிவெடுத்தார் மேகலை.



”என்ன தென்றல் அந்த பையன்கிட்ட பேசுனயா... எப்போ இரண்டு குடும்பமும் சந்திக்கலாம் கேட்டயாம்மா தென்றல்... என்ன சொல்லுறான் அந்த பையன்.” என சுசீலா கேட்க்.



“அப்பாயி அவங்க, அவங்க வீட்டுல பேசிட்டு எனக்கு சொல்லுறேனு சொல்லிருக்காங்க... இப்போ அவங்க கிராமத்துல இருக்காங்க.”




“சரிம்மா... ஆனா ரொம்ப தாமதிக்க வேண்டாம்னு சொல்லும்மா... நாம இன்னும் ஒரு வாரம் இங்க இருக்க முடியும் அடுத்து நம்ம ஊருல நடக்குற திருவிழாவுக்கு போகனும் அந்த வேலையில இருந்தா அப்புறம் பேசுறது சிரமாம் ஆகிரும்.” சுசீலா சொல்லிவிட்டு சென்றார்.




“அவளது அறைக்கு சென்று அவனுக்கு போன் செய்ய அவனோ எடுக்கவில்லை... அவனுக்கு மெசேஜ் செய்துவிட்டு அவனது அழைப்புக்காக காத்திருந்தாள். ஆனால் அவன் எந்த பதிலும் அவளுக்கு அனுப்பவில்லை. ‘ரொம்ப வேலையா இருக்காங்களோ’ என நினைத்துகொண்டு, போனில் க்ளாரியில் சென்று அவனுடன் முதன் முதலில் எடுத்துகொண்ட போட்டோவை பார்த்து அன்றைய நினைவில் மூழ்கினாள்.”



“காஃபி ஷாப்பில் பார்த்தது தான் அதற்கடுத்து இரண்டு வாரம் அவனை நேரில், மற்றும் போனில் அவள் தொடர்பு கொள்ளவில்லை. அவனும் அவளுக்கு போன், மெசேஜ் செய்யவில்லை.”



“அந்த இரண்டு வாரமும் அவளுக்கு கல்லூரி தேர்வு இருந்தது. அதனால் செல்போனை அவள் தொடவில்லை. தேர்வு நடக்கிறது என்று அவனிடம் சொல்லவும் இல்லை. அன்று கடைசி தேர்வு எழுதும் போது தான் அவளுக்கு நியாபகம் வந்தது அவனிடம் சொல்லாததை.”




“வீட்டிற்க்கு சென்று அவளது போனை எடுத்து ஆன் செய்தாள். அதில் அவனது எந்த அழைப்பும், மெசேஜூம் இல்லை என்றதும் அவளுக்கு கவலையாக இருந்தது. பின் அவள் அவனுக்கு மெசேஜ் செய்தாள்.”



“இன்று மாலை சாய்பாபா கோவிலில் சந்திக்கலாமா...” என அவனுக்கு மெசேஜ் செய்துவிட்டு அவனது பதிலுக்காக காத்திருந்தாள்.”




“சரி... நேரம் ஐந்து முப்பது.” என அவன் பதில் அனுப்பினான்.



“அவன் பதில் அனுப்பிய மகிழ்ச்சியில் நேரத்தை பார்க்க அது பகல் மூன்று என காட்டியது.”





“இரண்டு மணி நேரத்தை அவள், பெரியம்மாவுடன் பேசியபடியும், அவளது அறையில் சுத்தம் செய்தும், நேரத்தை போக்கினாள்.”




“சரியாக ஐந்து பதினைந்துக்கு சாய்பாபா கோவிலுக்கு அவளது தோழி சங்கவியுடன் வந்து சேர்ந்தாள் தென்றல். ‘உன் ஆளுக்கு மட்டும் நானும் உன்கூட வந்தது தெரிஞ்சா அவன் அப்படியே கோவப்பட்டு போயிடுவான் தென்றல். அதனால நீ பேசிட்டு வா... நான் கிளம்புறேன்.’ என சங்கவி சொல்ல.




“அவங்க அப்படி எல்லாம கோவம் படமாட்டாங்க சங்கவி... அதுவுமில்லாம நீ இல்லாம நான் எங்கயும் போனது இல்லையே.”




“அதுக்கு நான் பலி ஆடா...”




“அப்படி எல்லாம் சொல்லகூடாது...” என விஜய் பாணியில் தென்றல் சொல்ல.




“தூரத்திலே தென்றலை பார்த்துவிட்டான்... ஆனால் அவளுடன் சங்கவி இருந்தது தான் அவனுக்கு பிரச்சனையே... ‘ஆனா ஊனா இவளையும் இழுத்துகிட்டு வந்துருவா...’ அவனுக்குள்ளயே பேசிகொண்டு அவர்களின் அருகில் சென்றான்.




“உன் ஆள் வந்துட்டான்... நான் அந்த பக்கம் பிரகாரத்துல இருக்கேன்... நீ பேசிட்டு எனக்கு போன் பண்ணு.” சங்கவி தனுஷின் வரவை தென்றலிடம் சொல்லிவிட்டு அவனை கண்டுக்காமல் சென்றுவிட்டாள்.




“ஏய்ய்... நில்லு சங்கவி... நில்லு...” தென்றல் அழைக்க அழைக்க அவள் சென்றுவிட்டாள்.




“அவ தான் போயிட்டாள விடு... எதுக்கு கூப்பிடுற...” அவன் அலட்சியமாக சொல்ல.




“அவ என் பிரண்ட்... அவளை உங்ககிட்ட அறிமுகப்படுத்தலாம்னு நினைச்சேன்.”



” அதெல்லாம் தேவை இல்லை...”



“அவனின் குணம் என்னவென்று அவளுக்கு தெரியவில்லை. இப்படி அடுத்தவரை எடுத்தெரிந்து பேசும் அவனின் குணம் அவளுக்கு பிடிக்கவில்லை.”



“மீட் பண்ண கூப்பிட்டுட்டு இப்படி என் முகத்தைவே பார்த்துட்டு இருக்க. அதுவும் இரண்டு வாரம் கழிச்சு தான் உனக்கு என்னை மீட் பண்ணனும் தோணுச்சா.”




“உங்களை பார்த்துட்டு போன பின்னாடி எக்‌ஷாம் இருந்துச்சு. படிக்கனும், ப்ரடிகல் எக்‌ஷாம், அசைமெண்ட்னு ஏகப்பட்ட வேலை... அப்படி இருக்கும் போது உங்களுக்கு போன் பண்ணி பேசுனா, அப்புறம் தினமும் பேச தோனும்... ஏதாவது ஒன்னுல நான் கவனமா இருக்கனும் அதான் போன் அஹ் ஆஃப் பண்ணிட்டு எக்‌ஷாம் எல்லாம் முடிச்சுட்டு பேசலாம்னு நினைச்சேன்.” அவனுக்கு புரியும் படி அவளின் நிலையை கூற.



“அவனோ ‘ சரி நம்புறேன்... நீ சொல்லுறத. சரி எதுக்கு மீட் பண்ணலாமானு மெசேஜ் பண்ணிருந்த.”




“உங்களை பார்த்து ரெண்டு வாரம் ஆச்சு. அதான் பார்த்து பேசி, பழகி...” அவள் சொல்லிகொண்டே போக.



” அவனோ, நீ, என்னை ரொம்ப மிஸ் பண்ணுறேனு நான் நினைக்கனுமா?”



“அவளோ அமைதியாக நிற்க.”



“தென்றல் இப்படி எல்லாம் பேசுனா எனக்கு உன்மேல காதல் வந்திரும்னு நினைக்காத... நான் பார்க்குறது, பழகுறது இதெல்லாம் எதுக்கு தெரியுமா?”




“எதுக்கு” அவள் கேட்க.



“உன்னை அன்னைக்கு ஹாஸ்பிட்டல பார்க்க முடியாம போனதுக்கு தான். எனக்கு உண்மையா அன்னைக்கு உன்மேல ஒரு இரக்கம் வந்திருச்சு. அதுக்கு தான் உன்னை மீட் பண்ணுறேனு சொன்னேன்.”




“அப்புறம் காஃபி ஷாப்ல என்னை தேடி நீ வந்தது. அதுவும் ஒரு மாசம் கழிச்சு நீயா என்னை தேடி வந்தது பிடிச்சிருந்தது உண்மையாவே ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா அப்பவும் உன்மேல எனக்கு காதல் வரலை. யாருமே என்னை தேடி வராத போது நீ வந்ததே எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.”




“இது தாங்க காதல்... என்னை பிடிச்சிருக்குனு சொல்லுறீங்க அது காதல் இல்லாம வேற என்ன?” என அவள் சொல்ல.



“இல்லவே இல்லை இது காதல் இல்லை... சரி விடு உன்னக்கு புரிய வைக்க என்னால முடியலை. சரி மீட் பண்ணியாச்சு... வேற என்ன”.




“இந்தாங்க முதல் முறையா மீட் பண்ணுறோமேனு உங்களுக்குனு நான் சின்னதா கிப்ட் வாங்கிட்டு வந்தேன்.” என அவனிடம் ஒரு கலர் காகிதத்தால் சுற்றப்பட்ட பெட்டியை கொடுக்க.




“சரி... நான் கிளம்புறேன்...”அவள் கொடுத்ததை வாங்கிகொன்ண்டு அவன் செல்ல எத்தனிக்கையில். ‘சாமி கும்பிட்டு போகலாம்’ அவனை நிறுத்த.




“எனக்கு சாமி மேல எல்லாம் அவ்வளவா நம்பிக்கை இல்லை.”




“சரி... போயிட்டு எனக்கு மெசேஜ் பண்ணுங்க.”




“ட்ரை பண்ணுறேன்...” என அவளிடம் இருந்து விடைபெற்று கிளம்பினான்.




“ரொம்ப கஷ்டம் போலவே இவனை நான் காதலிக்குறது. அதைவிட பெரிய கஷ்டம் இவன் என்னை காதலிக்க வைக்குறது. சாய்பாபா நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும் அவங்க மனசுல என்னை தவிர எந்த பொண்ணும் இருக்க கூடாது, வரவும் கூடாது.” சாய்பாபவின் முன் கை எடுத்து கும்பிட்டுகொண்டிருந்தாள்.




தொடரும்……………

 
Top