Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 9

Advertisement

ilakkikarththi

Well-known member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 9

“அவனது யோசனை முழுவதும் ‘அவள் சொல்லிய காதல்’ தான். யோசனையிலே இருந்தவன் தன் வீட்டை தாண்டி வேறு ஒரு தெருவிற்க்கு சென்றுவிட்டான்.”


“தன்னுடைய வீடு நினைத்து வேறொரு வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தியதும் தான் தெரிந்தது இது தன்னுடைய வீடு இல்லை என்று.”



“தனுஷ் மாமா, இன்னைக்கு நான் ஸ்கூல் போகலைனு தெரிஞ்சதும் என்னை தேடி வந்துட்டயா.” என அவன் தினமும் ஸ்கூல் பஸ்லில் ஏற்றிவிடும் ஸ்ரீமதி அவனது சட்டை பிடித்துகொண்டு கேட்டாள்.



”ச்சே... இப்படியா யோசனையில இருப்பேன். எல்லாம் அவளால... அவளுக்கு மட்டும் நான் நினைச்சுது தெரிஞ்சா நானும் காதலிக்க ஆரம்பிச்சுட்டேனு நினைச்சுக்குவா.” மனதுக்குள் நினைத்துகொண்டு, ஸ்ரீமதிக்கு ஏற்றவாறு மண்டியிட்டு அவளிடம் பேசின்னான்.


“ஆமா... என் மதிக்கு என்னாச்சு கேக்க வந்திருக்கேன். என்னாச்சு பேபி உன் உடம்புக்கு?”



“மார்னிங் இருந்து ஸ்டொமக் பெயின் மாமா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஹாஸ்ப்பிட்டல் போயிட்டு வந்தோம் நானும், மம்மியும்.”



“அச்சோ, என் பேபிக்கு ஸ்டொமக் பெயினா? அதிகமா சாக்லேட் சாப்பிட கூடாதுடா பேபி... சரியா...”



“ம்ம்... சரி மாமா...”



”என்ன தம்பி, இந்த பக்கம்...” என மதியின் அன்னை அவனை பார்த்து கேட்க.


“இல்லக்கா, ப்ரண்ட அஹ் பார்க்க வந்தேன். அப்படியே மதிய பார்த்து பேசிட்டு இருந்தேன். என்னாச்சு க்கா... குழந்தைக்கு. டாக்டர் என்ன சொன்னாங்கா அக்கா.”



”ரெண்டு நாளா வயித்த வலினு சொல்லிட்டு இருந்தா. இன்னைக்கு ரொம்ப அழுக ஆராம்பிச்சுட்டா அதான் ஹாஸ்ப்பிட்டல் போய் காட்டிட்டு வந்தோம். ஒரு பிராபலமும் இல்லைனு சொல்லிட்டாங்க. சாக்லேட் சாப்பிட கூடாதுனு சொல்லிருக்காங்க தம்பி. ஆனா இவ எங்க கேக்குறா நீ சொன்னா கேட்ப்பா சொல்லு ப்பா கொஞ்சம் அவகிட்ட.”




“பேபி இனி சாக்லேட் சாப்பிட கூடாது. சாப்பிட்ட மாமா உன்னை ஊர் சுத்த கூப்பிட்டு போகமாட்டேன்.”



“இனி சாப்பிட மாட்டேன் மாமா... ப்ராமிஸ்”




“குட்... சரி டா பேபி மாமா போயிட்டு வரேன் பாய், போயிட்டு வரேன் அக்கா.”
சரிப்பா’




“டாட்டா மாமா...” அந்த குழந்தை கையசைக்க இவன் விடை பெற்றான்.
ஒரு வாரம் கழித்து.




”எங்க இருக்க சுந்தர்... எப்போ வருவ?’ பொறுமை இழந்து கேட்டுகொண்டிருந்தான் தனுஷ்.




“டேய் ஒரு பத்து நிமிஷ்ம் வந்திட்டு இருக்கேன்.”



“சரி... வா...”




”நண்பன் வருவதற்க்குள், ஏதாவது ஆர்டர் செய்யலாம் என்று உணவு பட்டியலை பார்த்தான்.”




“அப்பொழுது அவனை தாண்டி மூன்று பெண்கள் சென்றனர். மூவருமே இவன் அமர்ந்திருந்த டேபிளுக்கு ஒரு டேபிள் தள்ளி அமர்ந்திருந்தனர்.”





“சாரி டா தனுஷ்... கொஞ்சம் லேட் ஆகிருச்சு.”




”கொஞ்சம் இல்லை... ரொம்பவே லேட் பண்ணிட்ட. சரி உனக்கு என்ன ஆர்டர் செய்ய.”



“உன் விருப்பம்...” என சொல்லிவிட்டு தனுஷிற்க்கு பின்னால் அமர்ந்திருந்த பெண்ணை பார்த்தவன் அதிர்ந்துவிட்டான்.



“அதுமட்டுமில்லாமல், அந்த பெண்ணுடன் சேர்ந்து இரு பெண்களையும் பார்த்தவன், தனுஷிடம் சொல்ல போகையில் மீண்டும் ஒரு பெண் அவர்களுக்கு கையசைத்துகொண்டே அவர்களுக்கு நோக்கி வந்துகொண்டிருந்தாள்.”




“அந்த பெண்ணை பார்த்தவன் மனதில் ‘அந்த காலேஜ்ல பார்த்த பொண்ணு மாதிரி இருக்கு’ என யோசனை செய்ய.




“உணவுக்கு ஆர்டெர் கொடுத்துவிட்டு நண்பன் பக்கம் திரும்பிய தனுஷ், அவன் யாரையே பார்ப்பது போல தெரிய அவனும் சேர்ந்து அதே திசையை பார்த்தான்.”




“என்ன ஆச்சர்யம்... ஒரு வாரம் கழித்து அவள் என் கண்ணில் பட்டுவிட்டாள்.” என தனுஷ் நினைக்க.




“டேய் தனுஷ்... உன்னை பத்தி விசாரிச்ச பொண்ணு இவ தான், அந்த மெரூன் கலர் சுடி.”



“ஓ...”



“ஆனா, நீ தப்பா ஒரு பொண்ணை திட்டிட்டு வந்தேல அந்த பொண்ணு என்ன அவகூட ப்ரண்ட்சிப் வைச்சுருக்கா.”




“சுந்தர், இன்னைக்கு பாரு இவளை நான் பழி வாங்குறேன்.”




“டேய் வேண்டாம்... நமக்கொன்னுனா யாரும் வரமாட்டாங்க, அதுவே பொண்ணுங்களுக்கு ஒன்னுனா மொத்த உலகமே திரண்டு வந்திரும்.”



“அவங்க யாரும் நம்மளை ஒன்னும் செய்ய முடியாது. வா...” சர்வரிடம் அந்த டேபிளுக்கு தங்களுக்கான உணவை கொண்டுவரசொல்லிவிட்டு. நண்பனை அழைத்துகொண்டு அவர்களின் டேபிளுக்கு சென்றனர்.



“ஹாய்... தென்றல்... எப்படி இருக்க.?” என அழைத்துகொண்டே காலியான இருக்கையில் அமர்ந்தான் தனுஷ்.



“அவனது குரலில் அதிர்ந்து திரும்பி பார்த்தாள். அவனும், அன்று நண்பனுக்காக தன்னிடம் மன்னிப்பு கேட்டவனும்.’



“அவளின் அதிர்ச்சியை பார்த்தவன் ‘என்ன நான் உன்கிட்ட நல்லா இருக்கியானு கேட்ட எந்த பதிலும் சொல்லாம அமைதியா இருக்க.’ தனுஷ் அவளிடம் உரிமை உள்ளவனாக பேச. அதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த அவளது தோழிகள் அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்.”




‘நான்... நல்லா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க.’



‘ம்ம்... சூப்பரா இருக்கேன்... இது என் ப்ரண்ட் சுந்தர்.’ நண்பனை அறிமுகம் செய்து வைத்தான் அவளுக்கு.



“ஹாய் அண்ணா... உக்காருங்க...”



‘ஹாய் சிஸ்டர்…’



‘இவங்க என் ப்ரண்ட்ஸ்... சங்கவி, கல்பனா, ப்ரியா’ அவளது தோழிகளை அவனுக்கு அறிமுகம் செய்ய.



“ஹாய் சிஸ்டர்ஸ்.’ என மொத்தமாக அவன் சொல்ல.




‘ஹாய் ப்ரதர்ஸ்...’ என அவர்களும் பதிலுக்கு கலாய்க்க ஆராம்பித்தனர்.


“ நீ என்ன ஆர்டெர் பண்ணிருக்க...”


‘பன் புரோட்டா, அண்ட் மஸ்ரூம் க்ரேவி...’ அவளது ஆர்டெரை கேட்டவன். அவளை பார்த்து ‘சரி நீ ஆர்டெர் பண்ணதை நான் சாப்பிடுறேன், நான் ஆர்டெர் பண்ணதை நீ சாப்பிடு.’



“அவன் ஆர்டெர் செய்ததோ அசைவம் அது தென்றலுக்கு பிடிக்காது. அது தெரியாமல் அவள் சரி என தலையசைக்க. அவனது உணவுகள் அவள் முன் வைத்த பின் கொஞ்சம் திகைத்துவிட்டாள்.”



“உணவையும், அவனையும் மாறி மாறி தென்றல் பார்க்க. அவனோ அவளை கண்டுகொள்ளாமல் அவளது உணவை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.”



”அவளது தோழிகளோ, அவளையே பார்த்துகொண்டிருந்தனர். தென்றல் எந்த ஹோட்டல் சென்றாளும் சைவம் மட்டுமே சாப்பிடுவாள். ஆனால் இன்று அவளுக்கு சோதனை மிக பெரியதாக இருந்தது.”




“உங்க ப்ரண்ட்கிட்ட சொல்லுங்க சுந்தர், தென்றலுக்கு அசைவம் பிடிக்காது. சாப்பிட்ட அவளுக்கு உடம்பு சரியில்லாம போயிடும்.” சங்கவி, சுந்தரிடம் சொல்ல.



“தென்றலின் முகத்தை பார்த்த சுந்தருக்கோ பாவமாக போய்விட்டது. ‘டேய்... அந்த பொண்ணுக்கு அசைவம் பிடிக்காதான், நீ அந்த பொண்ணுக்கு வேற ஆர்டெர் பண்ணு.” தனுஷிடம் சொல்ல.



“தென்றல்... எனக்காக இன்னைக்கு ஒரு நாள் நான் ஆர்டெர் செஞ்ச சாப்பாடு நீ சாப்பிடனும்... சாப்பிடுவியா...” அவன், எப்படி கூறினால் அவள் அதை ஏற்ப்பாளோ, அப்படி கூறினான் அவளிடம்.’




“அவன் எனக்காக... என்ற வார்த்தைக்கு அடுத்து அவள், அவன் உணவுகளை சாப்பிட ஆரம்பித்தாள். முதல் முறை என்றதால் அவளுக்கு ஒரு கட்டத்தில் முடியவில்லை.”
”இதெல்லாம் பார்த்துகொண்டிருந்த அவளது தோழிகள். ‘உங்களை காதலிக்குறானு, இப்படி எல்லாம் பழிவாங்க தோணுமா.’ என சங்கவி கேட்க.



”இது எனக்கும், அவளுக்குமானது நீ தலையிடாத.” என அவன் முறைத்துகொண்டு சொல்ல.



“சங்கவியோ, தென்றலின் உணவில் தண்ணீரை ஊற்றிவிட்டு, அவளை இழுத்துகொண்டு வெளியே சென்றுவிட்டார்கள் அவளது தோழிகள்.”



“ஏன் டா... பாவம் அந்த பொண்ணு?...”



“கொஞ்சமாச்சும் எனக்கு பிடிக்காது... நான் சாப்பிட மாட்டேனு சொல்லுறாளா பாரேன்.”



” நீ எனக்காகனு சொன்னா எந்த பொண்ணா இருந்தாலும் அவள் காதலுனுக்காக செய்வாட.”



”ம்ம்... அப்படியா...” என தனுஷ் நக்கலாக கேட்க.



“உனக்கெல்லாம் சொன்னா புரியாது... வா கிளம்பலாம்.”




“லூசா டீ நீ... அவன் தான் சொன்னான நீயும் அதை செய்யுற.”




“அவங்களுக்காக தான செஞ்சே சங்கவி...” என சொல்லிகொண்டே மயக்கம் போட்டு விழுந்தாள் தென்றல்.




“ஹே தென்றல் என்னாச்சு... இங்க முழுச்சு பாரு டி...” என சங்கவியின் சத்தமான குரல் வெளிய வந்தவன் காதில் கேட்க. அவளது அருகில் சென்றான்.



“உன்னால தான்.. அவளுக்கு பிடிக்காத சாப்பாட சாப்பிட சொல்லி இப்போ பாரு மயக்கத்துல இருக்கா...” என தனுஷை பார்த்து சண்டை போட.




“சங்கவி, ஆம்புலன்ஸ் வர இன்னும் நேரம் ஆகுமா... இப்போ என்ன பண்ணுறது.” என கல்பனா கேட்க.



“தென்றலை, ஒரு தூக்கில், தென்றலை கையில் ஏந்தி அந்த ஹோட்டலைவிட்டு வெளியே வந்தான். அவன் பின்னாடியே சங்கவியும் கல்பனா, பிரியா வர. சுந்தர் தனுஷின் காரை சரியாக அவர்கள் முன் நிறுத்தினான்.”




“மருத்துவமனையில் நார்மல் வார்டில் தான் சேர்த்தனர். அனைவரும் வெளியில் காத்திருக்க. மருத்துவர் தென்றலை பரிசோதித்துவிட்டு, வெளியே வந்தார்.”



”நத்திங்க் அந்த பொன்ணுக்கு ஒன்னுமில்லை. உடம்புக்கு ஒத்துக்காத புட் அஹ் எடுத்துருக்காங்க. இப்போ பரவாயில்ல. இனி எப்பவும் அவங்களுக்கு உடம்புக்கு சேராத உணவுகளை சேர்த்துக்க வேண்டாம். இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு அவங்களை அழைச்சுட்டு போகலாம்.” மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல,
அனைவருக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.



“சுந்தர், உங்க உதவிக்கு ரொம்ப நன்றி... இப்போ நீங்க கிளம்பலாம்.” என சங்கவி சொல்ல.



“தனுஷூம், சுந்தரும் எதுவும் சொல்லாமல் வெளியேறிவிட்டனர்.”



தொடரும்……………
 

Advertisement

Top