Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 30.1 இறுதி பகுதி

இளந்தென்றலோடு ஒரு கவிதை 30லலிதா , ராகவன் முன்னிலையில் தங்கம், வைரம், என நகைகள் பரப்பிருந்தனர். வீட்டில் நடக்கும் பங்க்‌ஷனுக்கு சிம்பிளாக அணிய பிளாட்டினம் மூன்று செட்கள் இருந்தது. அவர்கள் முன் இதையெல்லம் அவர்கள் பெருமையை காட்ட வாங்கி வரவில்லை. தங்கள் வீட்டின் மருமகளுக்கு வாங்க வேண்டுமென்று விசலாட்சி தான் இதை எல்லாம் வாங்கி வந்தது.


“இதையெல்லாம் என் வீட்டு மருமகளுக்கு வாங்கனும் ரொம்ப ஆசை. இப்போ தான் அது நடந்திருக்கு, நீங்க உங்க பொண்ணுக்கு எப்படி நகை போட்டாலும் நாங்க ஏத்துகிறோம். ஆனா, உங்க நகையோட இந்த கொஞ்சம் நகையை சேர்த்து போட்டு தான் நாங்க அழைச்சிட்டு போவோம்.” விசலாட்சி சொல்ல


“அதே மாதிரி சீர்வரிசை உங்களால் முடிஞ்ச அளவு செய்ங்க. வேற எதையும் நாங்க எதிர்ப்பார்க்கலை.. உங்க பொண்ணை மட்டும் அனுப்பி வையுங்க. வர்ர வெள்ளிகிழமை நல்ல நாள் அன்னைக்கே நாங்க பொண்ணை முறையா என் பையனோடு சேர்த்து அழைச்சிட்டு போறோம். உங்க முடிவு என்னனு சொல்லுங்க ராகவன்.” என விஸ்வநாதன் கேட்க


“எங்க பொண்ணுக்குனு நாங்க நகை செய்து வச்சுருக்கோம் அதை போட்டே என் பொண்ணை உங்க வீட்டு அனுப்பி வைக்கிறோம். உங்க வீட்டுக்கு வந்த பின்னாடி வேனா இந்த நகையெல்லாம் உங்க வீட்டு மருமகளுக்கு போட்டுவிடுங்க. அதே மாதிரி எல்லாம் சீரோடையும் தான் என் பொண்ணை அனுப்பி வைக்கிறேன். மாப்பிள்ளைக்கு போடுற நகை கூட நாங்க செய்துட்டேன். இனி எல்லா முறையோட என் பொண்ண், உங்க வீட்டு பையனோடு அனுப்பி வைக்கிறது தான் எங்க வேளை.”


“அப்படியே செய்யட்டும் விசலாட்சி...” மனைவியிடன் சொல்ல“ இப்போதைக்கு இந்த ரெண்டு செட் நகை மட்டும் என் மருமகளுக்கு போட்டுவிடுங்க. இது என் மாமியார் நான் மருமகளா வந்த போது போட்டுவிட்டது. அதே மாதிரி வித்யாவும் என் வீட்டு மருமகளா வந்துட்டா இதை மட்டுமாவது போட்டுவிடுங்க அண்ணி.” லலிதாவின் கையில் கொடுக்க“சரிங்க அண்ணி... கொடுங்க.” என வாங்கிகொண்டார்


”எங்க என் வீட்டு மருமகளை... வந்ததில்ல இருந்து காணோம்.” என விசலாட்சி கேட்க“அவ அண்ணன் சபரிகூட வெளியே போயிருக்கா.. இப்போ வந்திருவா..” என லலிதா சொல்லிகொண்டிருக்க, வித்யா உள்ளே நுழைந்தாள்.”இதோ வந்துட்டாளே... வித்யா.. வித்யா இங்க பாரு உன் அத்தை, மாமா வந்திருக்காங்க.” என உள்ளே நுழைந்தவளிடம் விதுரனின் அம்மா, அப்பா வந்திருப்பதாக லலிதா சொல்ல.“வாங்க அத்.. தை.. வாங்க மா..மா..” அவள் தயங்கி அழைக்க“ஏன் மா இன்னும் பழசைவிட்டு வெளியே வரமுடியலையா உன்னாலா.” விசலாட்சி கேட்க“அப்படியெல்லாம் இல்ல த்தை..”“சரி, எப்படி இருக்க.. வர்ர வெள்ளிகிழமை உன்னை என் மகனோட சேர்த்து முறையா அழைச்சிட்டு போறோம்.”“ம்ம்.. சரிங்க அத்தை..”“விசலாட்சி உன் மருமகளுக்கு எடுத்திருக்க நகையை போட்டு விடு. அதுக்கு தான பார்த்து பார்த்து நகையெல்லாம் எடுத்த.” விஸ்வநாதன் சொல்ல“ஆமா, வித்யா உனக்கினு நாங்க எடுத்த நகை இதெல்லாம் பிடிச்சிருக்கானு சொல்லு, பிடிக்கலைனா நாம மாத்திகலாம் உங்க மாமாவோட ஃப்ரண்டோட கடையில தான் நாங்க எடுத்தோம். அப்படியே காஞ்சிபுரம் பட்டு எடுத்திருக்கோம், இதை தான் நீ எங்க கூட வரும் போது கட்டிட்டு வரனும்.” என அதையும் அவர் எடுத்துக்காட்ட அவளோ, நீங்க இப்படி நினைக்குறீங்க, ஆனா உங்க மகன் என்னைவிட்டு பிரிய தயரா இருக்காரு அவள் மனதில் நினைக்க.“என்ன வித்யா பிடிக்கலையா.” அவள் எதுவும் சொல்லாமல் இருப்பதை பார்த்து கேட்க.


“பிடி..ச்..சிருக்கு அத்தை.” அவள் சின்ன புன்னகையுடன் சொல்ல.


“சரிம்மா..”


“சரிங்க சம்மந்தி நாங்க கிளம்புறோம்..”“இருங்க சாப்பிட்டு போகலாம்.. வந்த உடனே கிளம்புறீங்க.”“பொண்ணை அழைச்சிட்டு போகும் போது நிதானமா பேசி, சாப்பிட்டு போறோம் அண்ணி.. அங்க என் மகன் காலையில தான் சாப்பிட்டு இருப்பான்.. இன்னேரம் என்னை தேடிட்டு இருப்பான்.”“அப்படியா அண்ணி, சரிங்க அண்ணி போயிட்டு வாங்க.”“போய்யிட்டு வரோம், ராகவன்.. வரோம் வித்யா.” என் விஸ்வநாதன் விடைபெற்றனர்.“லூசா டா நீ... வந்த் பொண்ணுக்கிட்ட இப்படியா பேசி அனுப்புவ.” என பவானி விதுரனிடம் சண்டை போட“சும்ம பேசலை பவானி, உண்மைய தான் சொன்னேன். அவளைவிட்டு நான் விலகுனா தான் அவள் நல்லா இருப்பா.”


“ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டளைனா சரி, கட்டி அவளோட ஒரு வாரம் குடும்பம் நடத்திட்டு இப்படி சொன்ன எந்த பொண்ணுடா உன்னைவிட்டு பிரிஞ்சு போவா.”


“என்கூட தான் இருந்தா, குடும்பமெல்லாம் ஒன்னு நாங்க நடத்தலை.”


“இதை மட்டும் பேசு, ஆனா அவ மனசை புரிஞ்சுக்காத. போட நீயெல்லா என் ஃப்ரண்ட்.. நான் கிளம்புறேன் உன்கூட பேசி என்னால டைம் வேஸ்ட் பண்ண முடியாது.” பவானி கோவத்துடன் கிளம்பிவிட்டாள்சண்டை போட்டு செல்லும் தோழியை சமாதானம் செய்ய வழி இல்லாது அவன் அமர்ந்திருக்க, மீண்டும் அவளது நியாபகம் அவனை வதைத்தது..”இடியட்.. என்ன சொல்லுறான், அந்த பொண்ணை பிரிஞ்சுவானா.. இதுக்கா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான்.. இதுக்கெதுக்கு லவ் பண்ணனும்.. கல்யாணம் பண்ணனும். பாவம் அந்த பொண்ணு இதை நினைச்சு பீல் பண்ணிட்டு இருப்பா. இந்த விதுரன் பண்ணறது கொஞ்சம் கூட சரி இல்லை.” பவானி தன் போக்கில் பேசிக்கொண்டே கார் ஓட்டிகொண்டு சென்றாள்.“என்னங்க இன்னொரு நல்ல நாள்ல ரிஷப்ஸன் வச்சிரலாம். இப்போ வீட்டளவு நம்ம சொந்தங்களை அழைச்சி நம்ம மருமகளை அறிமுகப்படுத்தலாம்.”“சரி விசலாட்சி.. அப்படியே செய்யலாம்.”“அப்புறம் நம்ம சொந்தங்களுக்கு நாளைக்கே சொல்லிடலாம். கேள்வி கேட்ப்பாங்க நாம சிம்பிள்ளா முடிச்சுட்டோம் சொல்லிடலாம். அதை மீறி யாரும் கேட்க மாட்டாங்க, கேட்டா பார்த்துக்கலாம்.”“ம்ம்.. சரிம்மா..”“வீட்டை கொஞ்சம் டெக்ரேட் பண்ண சொல்லனும். பொண்ணு வீட்டுல இருந்து சொந்தம் வந்தா அவங்களை தனியா கவனிக்க சுதாவையும், கனியையும் வரவேற்க சொல்லனும்.”“ம்ம்.. சரிம்மா..”“கண்ணனோட ரூம்ல பெரிய கட்டில் போட சொல்லனும். வார்டேப், ட்ரெஸிங் டேபில், பால்கனில ரோஜா செடி வைக்க சொல்லனும். வித்யாவுக்கு செடினா ரொம்ப பிடிக்குமா. அவன் இஷ்டத்துக்கு தான் அவன் ரூம் செட் பண்ணி வச்சிருப்பான். அந்த பொண்ணுக்கு பிடிக்கனுமே, அதான் கொஞ்சம் மாத்த சொல்லனும்.”“அதை மட்டும் அவன்கிட்ட கேட்டுக்கோ விசலாட்சி. அவனை கேட்காம நாம எதையாவது செய் போக அவனுக்கு கோவம் வந்திர போகுது.” என விஸ்வநாதன் சொல்ல“அவன்கிட்ட நான் பேசுரேங்க.. நீங்க நான் சொன்னதை சீக்கிரம் முடிங்க. நான் என் மகன்கிட்ட பேசிட்டு வரேன்.”வெளியில் எங்கும் செல்லாமல் விட்டினுள் அடைந்து கிடந்த மகனின் அறைக்கு வந்தார் விசலாட்சி..“என்ன கண்ணா, ஆபீஸ் போகலையா...” டிவியில் கேம் விளையாடிகொண்டிருந்தவனின் அருகில் வந்து கேட்டார்“இல்லைமா.. ஒரு வாரம் லீவ் போட்டு இருக்கேன் ம்மா.. நீங்க போன வேலை முடிஞ்சதா..”“ம்ம்.. முடிஞ்சது.. என் வீட்டு மருமகளுக்கு எல்லாமே வாங்கியாச்சு, இந்த வெள்ளிகிழமை வித்யாவை முறையா அழைச்சிட்டு வரனும்.”“ம்ம்.. சரிங்க ம்மா..”“அப்படியே உன் அறையை கொஞ்சம் மாத்தனும் கண்ணா. அந்த பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி சில சேஞ் பண்ணால்மானு அம்மா நினைக்குறேன்.”“சரிங்க ம்மா... கட்டில் கொஞ்சம் பெரிசா வாங்குங்க. அப்படிய ட்ரெஸிங் டேபிலையும் மாத்துங்க.. வார்டேப் இன்னொரு செட் சொல்லிருங்க.” விசலாட்சி விஸ்வநாதனிடம் சொன்னதையே, மகன் தன்னிடம் சொல்கிறான் என்பதை வியந்து பார்த்தார்.“எப்படி கண்ணா, அம்மா மனசுல நினைச்சதை நீ சொல்லிட்ட.”“நீங்க என்ன நினைப்பேங்கனு எனக்கு தெரியாத... ம்மா, சொல்ல மறந்துட்டேன் ரோகினி கர்ப்பமா இருக்காளாம் இன்னைக்கு காலையில தான் ராம் சொன்னான். உங்ககிட்ட சொல்ல சொன்னான் ம்மா.”“அப்படியா கண்ணா, ரொம்ப சந்தோஷம் நான் ரோகினி அப்புறம் போன் பண்ணி பேசுறேன்.”“ம்ம் சரி ம்மா.. பவானி வேற என்கிட்ட சண்டை போட்டு போனா.. அவளை சமாதானம் செய்யனும்..”“ஏன் கண்ணா, அவகிட்ட சண்டை போட்ட, சரி போன் போடு அப்படியே பவானி அம்மாகிட்ட நான் பேசனும்.” மகனிடம் போன் செய்ய சொல்லி பேசினார்.”எப்படி இருக்க கோதை...”“நல்லா இருக்கேன் விசலாட்சி.. நீ எப்படி இருக்க, அண்ணா எப்படி இருக்காங்க.. விது கண்ணா என்ன பண்ணுறான்.”“எல்லாரும் நல்லா இருக்காங்க, விது என் பக்கத்துல தான் இருக்கான் கோதை. வர்ர வெள்ளிகிழமை பொண்ணை முறையா அழைக்க போகனும் நீ வீட்டு வந்தா உன்னையும் நாங்க அழைச்சிட்டு போவோம் வாயேன் கோதை.”“என்ன விசலாட்சி பேசுற.. முதல் முதலா பொண்ணை அழைக்க போற நான் எதுக்கு, ராம் அம்மாவையும், அப்பாவையும் அழைச்சிட்டு, அப்படியே உங்க சொந்தங்களை ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போ. நான் பொண்ணு வந்த பின்னாடி ஈவ்வினிங் வரேன்.”“இப்படியெல்லாம் பேசாத கோதை.. உன்னை எப்படி கூப்பிட்டாலும் நீ வரமாட்ட. சரி உன் இஷ்டம் ஈவ்வினிங் டைம்ல கொஞ்சம் சீக்கிரம் வா. ஆனா, பவானியை காலையில அனுப்பிரு.”“சரி விசலாட்சி.. அவளை அனுப்பி வைக்குறேன்.” இருவர் பேசி முடித்ததும். விதுரனிடம் கோதை சொன்னதை அப்படியே சொல்ல,“ஆண்டி, சகுணம் பார்ப்பாங்க ம்மா.. அதான் சங்கடப்படுறாங்க.. சரி விடுங்க அவங்க இஷ்ட்டப்படி வரட்டும். அவளை காலையில வரசொல்லிட்டீங்களா.”“சொல்லிட்டேன் கண்ணா.”அதே போல், ராமின் தாய், தந்தைக்கும் அழைப்பு வைத்தனர். அவர்களும் தாங்கள் வருவதாய் சொல்ல, ரோகினி மட்டும் வரமுடியாது என சூழ்நிலையை கூறினர். விசலாட்சியும், ரோகினியிடம் விசாரித்துவிட்டு வைத்தார்.வித்யாவை அழைத்து வரும் நாளும் வந்தது.“எல்லாம் ரெடியா.. பவானி இந்த தட்டை மட்டும் கார்ல வைச்சுட்டு வாம்மா.”“அண்ணி, எல்லாம் ரெடி பொண்ணை அழைக்க போக மாப்பிள்ளை ரெடியா” என சுதா கேட்க“கண்ணா, கிளம்பிட்டயா”“இதோ ம்மா..” மாப்பிள்ளையின் தோரணையாக ஃபார்மல் சார்ட், பேண்டுடன் கீழே வந்தான்.“டேய் இன்னைக்காச்சும் ஒழுங்க ட்ரெஸ் போட மாட்டியா.. ஆபீஸ் கிளம்பி போறது போல வர்ர..” என பவானி சொல்ல“இதுவே அதிகம் பவானி.. இதுக்கு மேல எல்லாம் என்னால ரெடியாக முடியாது.”“என்னமோ பண்ணு... வா”
“ராம் எங்க பவானி.. ஆளை காணோம்..”“ரோகினிக்கு துணைக்கு இருக்கான் விது.. ஈவ்வினிங் வரேன்னு சொல்லிருக்கான்.”“விசலாட்சி நேரம் போயிட்டு இருக்கும் வா ம்மா...” மனைவியை அழைத்தார் விஸ்வநாதன்அனைவரும் கிளம்பி வித்யாவின் வீட்டிற்க்கு சென்றனர். கிட்டதட்ட மூன்று பெரிய கார்களும், இரண்டு பெரிய வென்களும், விதுரன் பவானி மட்டும் சிறிய காரில் பயணித்தனர்.விதுரன் வீட்டில் எடுத்துகொடுத்த காஞ்சிபுரம் பட்டில், நகைகளை போட்டு அலங்காரம் செய்து முடித்து அமர்ந்திருந்தாள் வித்யா. முகத்தில் சோகம் அப்பி இருந்தது, தாய், தந்தையைவிட்டு பிரிவதிலா, இல்லை, அவன் தன்னை விட்டு நீங்கிவிடுவானோ என்ற பயத்தினாலா என்று தான் அவளுக்கு புரியவில்லை.வீட்டில் நெருங்கிய சொந்தம் மட்டும் அழைத்தனர் அம்மா, அப்பா. மற்ற வேளைகளை சபரி பார்த்துகொண்டிருந்தான். அனைத்து தயராக இருந்தது, தன் உடையில் இருந்து படித்த புத்தகம் வரை அனைத்தும் இடமாற போகிறதால் எடுத்து வைத்துவிட்டனர் மூன்று பெட்டிகளில்.இனி அவர்கள் சடங்கு, சம்பிரதாயம் செய்து முறையாக அவன் கையை பிடித்து அழைத்து செல்வது தான் பாக்கி. அதுவும் சிறிது நேரத்தில் நடக்க இருக்கிறது. என்று அவள் யோசிக்க வீட்டின் வாசலில் கார், வேன்கள் வந்து நின்றது.அனைவரையும் வரவேற்று அமர வைத்தார் ராகவன். அனவருக்கும் குடிக்க காஃபி, டீயை கொடுத்தார் லலிதா.“சடங்கு ஆரம்பிக்கலாமா.. ராகவன்.” விஸ்வநாதன் கேட்க“ம்ம்.. ஆராம்பிக்கலாம் சம்மந்தி.”விதுரன் வீட்டின் சார்ப்பில் கொண்டு வந்திருந்த நகைகளை எடுத்து
பரப்பினர். பெண்ணுக்கு தாலியை செயினில் மாற்ற தாலிகொடியை எடுத்து வந்திருந்தனர்.“பொண்ணை அழைச்சிட்டு வாங்க அண்ணி, தாலிகொடியை போட்டுவிட.” என விசலாட்சி சொல்ல.”இதோ அண்ணி,””விதுரா இப்படி வந்து நில்லு, வித்யா நீ அவன் பக்கத்துல நில்லும்மா.. அண்ணா, மாப்பிள்ளைக்கு மாலை போட பொண்ணோட அண்ணான வரச்சொல்லுங்க.” என விசலாட்சி சொல்ல சபரி முன் வந்தான்.விதுரனுக்கு மாலை அணிவித்து, அவர்கள் சார்பில் மோதிரமும்,கழுத்துக்கு செயினும், போட்டுவிட்டனர்.“பொண்ணுக்கு மாலை போட மாப்பிள்ளையோட தங்கையை வரசொல்லுங்க” என லலிதா சொல்ல“பவானி போய் உன் அண்ணிக்கு விதுரனோட தங்கையா இந்த மாலையை போட்டுவிடு.” என விசலாட்சி சொல்லவித்யாவுக்கு, மாலை அணிவித்து, அவளின் கழுத்தில் ஆரமும் போட்டுவிட்டாள்.அனைவரின் ஆசீர்வாதத்துடன் தாலிக்கொடியை விதுரனிடம் கொடுத்து வித்யாவின் கழுத்தில் போட சொல்ல, அவனோ கையில் வாங்கிய தாலிக்கொடியை பார்த்துவிட்டு அவளின் கழுத்திற்க்கு கொண்டு சென்று மெதுவாக போட்டுவிட்டான். அனைவரும் மலர்தூவி மணமக்களை ஆசீர்வதித்தனர்.சடங்கு சம்பிரதாயம் அனைத்தும் முடிந்து, பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினர் இருவரும். நல்ல நேரத்தில் வித்யாவை அழைத்துகொண்டு புகுந்த வீட்டுக்கு செல்ல ஆயுத்தமாகினர்.“போயிட்டு வரேன் ம்மா.. வரேன் ப்பா..” தந்தையை கட்டியணைத்து அழுது தீர்த்தாள்.“அங்க போய் சமத்தா நடந்துக்கோ, அத்தை எது சொன்னாலும் உன் நல்லதுக்கு தான். தம்பிய நல்ல கவனிச்சுக்கோ, அவர் எது சொன்னாலும் பொருத்து போ. வாழ்க்கை அதன் போக்கில வாழ பழகிக்கனும் வித்யா.” என தாயின் அறிவுரையில் அவள் நெகிழ“பார்த்து போயிட்டு வாம்ம்.. அப்பா, அடிக்கடி உன்னை பார்க்க வரேன்.” ராகவன் கண்ணீரை துடைத்துகொள்ளஅவர்களின் பாசத்தை பார்த்த விதுரன், “வித்யாவை நல்லா பார்த்துப்பேன் மாமா... நீங்க கவலைப்படாதீங்க அத்தை..”“அவள் சின்ன பொண்ணு தம்பி பார்த்துக்கோங்க, தப்பு செஞ்சா அவளுக்கு புரியிற மாதிரி சொல்லுங்க அவ கேட்டுப்பா.”“சரிங்க மாமா..” என அவன் சொல்லிகொண்டே வித்யாவின் கரத்தை பிடித்துகொண்டான்.
அவன் தன் கையை பிடித்திருப்பதை பார்த்து, அவள் அவனை பார்க்க, அவனோ அழதே என்பது போல் தலையசைத்தான்.“அப்போ நாங்க வரோம் சம்மந்தி... உங்க வீட்டு பொண்ணு இனி என் வீட்டு பொண்ணு கவலையை விடுங்க.” என விஸ்வநாதன் சொல்ல.“பார்த்து போயிட்டு வா வித்யா... அண்ணா இருக்கேன்.” சபரி பாசத்தில் தங்கயை விட்டு பிரிய மனமில்லாமல் இருந்தான்.முதலில் மூன்று கார்கள் கிளம்ப, அடுத்து இரு வேன்களும் கிளம்ப, இறுதியில் வித்யா அழுதுகொண்டே காரில் ஏறி அமர, பவானி முன் சீட்டில் உள்ள ட்ரைவர் சீட்டில் அமர்ந்தாள். பின்னே வித்யாவும், விதுரனும் அமர்ந்தனர்.கார் கிளம்ப வித்யாவுக்கு அழுகை இன்னும் அதிகமானது. காரின் ஜன்னலில் வழியே கையசைத்து கொண்டே விடைபெற்றாள். அவளின் அழுகை பொருக்க முடியாமல் விதுரன் அவள் கையை ஆறுதலாக பிடித்துகொண்டான். பின் தான் அவள் சமநிலைக்கு வந்தாள் வித்யா.மௌனம் மட்டுமே இருந்தது அந்த காரில்.. பவானி மௌனத்தை கலைக்க பாட்டு போட்டுவிட்டாள்..

“கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..”


அந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவன், அவளுக்காவே பாடியது போல் இருந்தது.விதுரனின் வீடு வந்ததும் இருவரும் இறங்கி வாசலில் நின்றனர். கையில் ஆரத்தியுடன் வந்த விசலாட்சி,


“பவானி, நீயும் சுதாவும் சேர்ந்து ஆராத்தி எடுங்க..” என கூறஇருவரும் ஆராத்தி எடுத்து, அவர்களை உள்ளே அனுப்பினர்.”விசலாட்சி வசதி குறைவான இடத்துல சம்மந்தம் பண்ணிருந்தாலும், பொண்ணு லட்சணமா இருக்கு.. பையனுக்கு ஏத்த பொண்ணாவும் இருக்கு.. தங்க நகை மின்னுறது போல பொண்ணு முகம் அவ்வளவு அழகா ஜொலிக்குது.. விசலாட்சி நல்ல நேரம் முடியுறதுகுள்ள பொண்ண விளக்கேத்த சொல்லு.” என அவர்கள் வீட்டின் பெரிய ஆள் சொல்ல”சரிங்க பெரியம்மா..”ஜோடியாக இருவரும் சாமியறையில் வித்யா விளக்கேற்ற.. அதை முடித்துகொண்டு, பெரியவர்களின் முன்னிலையில் வித்யா அமர வைக்கப்பட்டாள். வந்திருந்த அனைவரும் வித்யாவை ஆசீர்வாதம் செய்துவிட்டு பரிசு பொருளை கொடுத்தனர்.இறுதியாக பவானியின் தாய் வர “ இவங்க என் பவானியோட அம்மா, எனக்கு அத்தை முறை.. ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்.” என விதுரன் சொல்ல இருவரும் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.“நல்லா இருக்கனும், சீக்கிரம் விதுரன் மாதிரி பையன பெத்து கொடு.” என கோதை சொல்லி அவர்கள் கையில் பரிசு பொருளை கொடுத்தார்.


“ம்ம்..” அவள் சின்ன புன்னகையில் அவள் தலையசைத்தாள்


அனைவரின் வரவும் முடிய இரவு வேளைக்கான சம்பிரதாயம் தொடங்கியது.சுதா, “குளிச்சிட்டு இந்த பட்டு சேலையை உடுத்திக்கோம்ம வித்யா. நீ குளிச்சி முடிச்சதும் சொல்லு நான் வரேன் அலங்காரம் செய்யனும் சரியா.”“ம்ம்.. சரிங்க ம்மா”உடுத்திருந்த பட்டு சேலையை அவிழ்த்துவிட்டு, அழுப்பு தீர குளித்தாள். குளித்து முடித்ததும், அவர் கொடுத்த பட்டு சேலையை உடுத்திகொண்டு கண்ணாடியின் முன் அமர்ந்தாள் சரியாக சுதாவும் வந்தார். அவர் அவளு விதமாக தலையலங்காரம் செய்டுவிட்டு மல்லி பூவை ஒரு கூடை அளவுக்கு அவள் தலையில் சூட்டிவிட்டார். அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது இந்த அலங்காரம் எதற்க்கு என்று புரிந்தது.அலங்காரம் முடிந்து விசலாட்சி கையில் வெள்ளி சொம்பில் பால் கொண்டு வந்து வித்யாவின் கையில் கொடுத்து,


“பழசை மறக்க முயற்சி செய்ம்மா... இப்போ இருந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கனும். சீக்கிரம் இந்த வீட்டுல குட்டி கண்ணனோ, குட்டி லட்சுமியோ பிறக்கனும்.” விசலாட்சி சொல்லி அவள் கையில் கொடுக்க.


“ம்ம்.. சரிங்க அத்தை..” என அவள் சொல்லி அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிகொண்டு விதுரனின் அறைக்கு வந்தாள்.
சூரியனின் ஒளி அவர்கள் அறையில் மெதுவாக படர. அந்த வெளிச்சத்தில் கண் விழித்தவள், தன் அருகில் படுத்திருந்த விதுரனை பார்த்தாள் அவன் நன்றாக உறங்கி கொண்டிருந்தான். அவனை விலகி எழுந்து குளியல் அறைக்கு சென்று சுத்தம் செய்துகொண்டு வந்தாள்.
 
Advertisement

Advertisement

Top