Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 18. 1

Advertisement

இளந்தென்றலோடு ஒரு கவிதை 18

“ஊர் திருவிழா களைக்கட்டியது... கிராமத்து மக்களின் சொந்தங்களுடன், சிறியவர் முதல் பெரியவர் வரை கோவில் திருவிழாவில் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். ஆற்றில் இருந்து சாமி செய்து, மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையும் நடக்க, மயிலாட்டாம், கரகாட்டத்துடன் சாமியை அலங்காரம் செய்து கோவிலுக்கு கொண்டுவந்தனர்.”



‘சாமியை கொண்டுவந்தவுடன், மாவிளக்கு முதல் முளைப்பாரி, பொங்கல், பூச்சட்டி, பூக்குழி, பால் குடம், கரும்பு தொட்டில், வேடவன் வேஷம், சேத்தாண்டி வேஷம் வரை மக்களின் குறை, நிறைகளை தீர்த்து வைத்த அந்த முத்தாலம்மனுக்கு நேர்த்திகடனை முடித்து வைத்தனர்.’



“மாலையில் நாதன் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். அவரின் வருகையை உணர்ந்த ஊரின் தலைவர்களும், கோவில் சங்க உறுப்பினர்களும் அவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக பரிவட்டம் கட்ட பூஜைகள் ஏற்பாடு செய்தனர்.”



‘பட்டு வேஷ்டி சட்டையில் அழகாக தெரிந்தான் சிவா (தனுஷ்). அவன் முகத்தில் எப்பொழுது குடியிருக்கும் ட்ரிம் செய்த தாடி கூட இப்பொழுது இல்லை. மீசை அளவாக ட்ரிம் செய்தும், முடியை ஒரளவு அழகாக வெட்டியிருந்தான். வேண்டாம்... வேண்டாம்... என மறுக்க அவன் கழுத்தில் ஐந்து பவுன் செயினும், கையில் யாணை கல் மோதிரமும் போட்டுவிட்டார் பார்வதி. அவனுக்கு தெரியாது, இம்முறை பரிவட்டம் அவனுக்கு கட்டுவது.’



”கோவிலுக்கு கிளம்பும் முன் தன்னை கண்ணாடியில் பார்வதவன் கொஞ்சம் ஆர்ச்சயப்பட்டுவிட்டான். ’நானா இது... ரொம்ப மாறிட்டேன்... இது மட்டும் என் அக்கா பார்த்தா, கலாய்ப்பாளே... ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு.’ மனதுக்குள்ளே பேசி, சிரித்துகொண்டு கீழே வந்தான்.




‘கோவிலில், அவர்களுக்கு முன் தென்றலின் குடும்பத்தார்கள் இருந்தார்கள். நாதனின் குடும்பம், தென்றலின் குடும்பத்தை பார்த்து, வரவேற்க. அவர்களும், நாதனின் குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து கோவிலுக்குள் சென்றனர்.’



“தனுஷோ, தென்றலின் குடும்பத்தை பார்த்து சின்ன புன்னகையுடன்
தலையசைத்து வரவேற்றான் தென்றலை தவிர்த்து.”




‘என்ன டி... உன் ஹீரோ, உன்னை தவிர எல்லார்கிட்டயும் சிரிச்சுட்டு பேசிட்டு போறான். இன்னும் அவன் கோவம் போகலையா, இல்ல உன்னை அங்க சுத்தவிடுற மாதிரி இங்கயும் சுத்த விடுறானா.’ என சங்கவி, தென்றலின் காதில் ரகசியம் பேச.





“கோவம் இருந்தா என்னை பார்க்க கூட மாட்டாங்க. பெரியவங்க இருக்குறதுனால அவங்க என்கிட்ட பேசாம இருக்கலாம். இப்போவும் அவங்க பின்னாடி நான் தான சுத்திட்டு இருக்கேன் காதலோட.” சங்கவியிடம் சொல்ல




‘எப்படி டி... உன்னால இவ்வளவு சப்போர்ட பண்ண முடியுது. அவங்க விஷயம் தெரிஞ்சா என்ன பண்ணறதுனு உனக்கு பயம் கூட இல்லையா?’




“பயம் இருக்கு, ஆனா அவங்களுக்கு பயத்தைவிட, அந்த தைரியம் அதிகமாக இருக்கு.”
‘இப்போவே உன் மாமாவுக்கு வக்காலத்து வாங்குற.’





“ம்ம்ம்...” அவளுடன் சிரித்துகொண்டே சாமியின் சன்னதிக்கு வந்தனர்.



தேங்காய், வாழைபழம், பூ, பட்டு துணி, துள்ளு மாவு என அனைத்தும் சாமியின் முன் படைக்கப்பட்டு. தீபாராதனை காட்டிவிட்டு, இரு குடும்பத்திற்க்கு பிரசாதம் வழங்கிய பின், பரிவட்டம் துணியை எடுத்து வந்தார் பூசாரி.





“இந்த வருஷம் மட்டுமில்லாம இனி வர்ர ஒவ்வொரு திருவிழாலையும் என் பேரனுக்கு தான் பரிவட்டம் கட்டனும். சாமிய கும்பிட்டு என் பேரனுக்கு இந்த பரிவட்டத்தை கட்டுங்க பூசாரி.” என மேகலை சொல்லியதும் அவனுக்கு பரிவட்டத்தை கட்டிவிட்டு, மாலை அணிவித்தனர்.






‘எல்லாம் முடிந்து கோவிலைவிட்டு இரு குடும்பமும் வந்தனர். அப்பொழுது மேகலை ‘கௌசி, இந்த பூவ உங்க வருங்கால அண்ணிக்கு வச்சுவிடு’ என கௌசியிடம் மல்லிகை பூவை கொடுக்க. அவள், தென்றலின் அருகில் சென்று அவள் தலையில் வைத்துவிட்டு சின்ன புன்னகையுடன் அவளை பார்த்தாள் தென்றல், கௌசியும் புன்னகையுடன் அவள் அருகில் நின்றுகொண்டாள்.




‘நல்லா நாள் பார்த்து உங்க வீட்டுக்கு நாங்க நிச்சயம் பண்ண வர்ரோம். அப்போ நாங்க வரோங்க... வரேன்ம்மா...’ என அனைவரிடமும் விடைபெற்று சென்றனர்.



*************


”தாத்தாவிடமும், செல்வராஜிடமும் தென்றலை பற்றியும், அவள் இங்கு பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவிற்க்கு குடும்பத்துடன் வந்திருப்பதாகவும் கூறினான். தாத்தா அவன் சொன்ன மறுநொடியே தென்றலின் குடும்பத்தை விசாரித்துவிட்டு, மேகலையிடமும், தென்றலின் குடும்பத்தை பற்றி சொல்லி பெண் பார்க்கும் படலமாக மாற்றிவிட்டார்.”




‘தென்றலோ, அவன் மட்டும் வருவதாக சொல்லிருக்க. அவன் மொத்த குடும்பத்தையும் அழைத்து வந்திருப்பது அவளுக்கு திகைப்பாக இருந்தது. தென்றலின் வீட்டில், நாதன் குடும்பத்துடன் வந்திருப்பதை அறிந்த இரு பாட்டிகளும், ஆனந்தன், தினகரன் அதிர்ச்சியாக இருந்தது. தாய், தந்தை இல்லை, ஒரே அக்கா என விசாரித்தவையில் தெரிய. இப்படி குடும்பத்துடன் வந்திருப்பது அவர்களுக்கு குழப்பமாக இருந்தது.’




“அனைவரையும் வரவேற்று, உபசரித்தார்கள். தென்றலின் கையில் காஃபி ட்ரேயை கொடுத்துவிட. அவளோ, தயக்கத்துடன் அனைவருக்கும் கொடுத்துவிட்டு இறுதியாக தனுஷூக்கு கொடுக்கும் போது அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்கள் கோவத்தை மட்டும் காட்டியது, ஆனால் இவளோ, வெக்கத்துடன் அவனை பார்த்து சிரித்து வைத்தாள்.”




’எங்க குடும்பத்தை பத்தி உங்களுக்கு தெரியாதது இல்லை. ரொம்ப பாரம்பரியமான குடும்பம், என் பேரனுக்கு உங்க பேத்திய பொண்ணு கேட்டு வந்திருக்கோம். உங்க பக்கம் சம்மதம்னா நாம இன்னைக்கு கோவில்ல நிச்சயத்தை பத்தி பேசலாம்.’ என நாதன் பேசி முடிக்க.





‘அவனும், அவளை முழுதாக பார்த்தான்... என்றும் பல வகை சுடிதாரில் பார்த்தவன் கண்களுக்கு இன்று பட்டு தாவணியிலும், கண்ணை பரிக்காத குறைந்த நகைகளுடன், தலை முழுவதும் மல்லிகையில் நிறைந்திருக்க. கிராமத்து அழகில் அவள் மிளிர கொஞ்சம் தடுமாறி தான் போனான்.’





“தென்றல், பாட்டி, தாத்தா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க்கிக்கோம்மா.’’ என கற்பகம் சொல்ல, அதை மீறாமல் செய்தாள். அவர்கள் பக்கம் சம்மத்தை, மணமகன் வீட்டாரின் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் செய்ச்சொல்லுவார்கள்.




‘நீ, என் பேரனும் ரொம்ப நாள் நல்லா இருக்கனும். என் பேரனுக்கு என்னைக்கு நீ தான் துணை இருக்கனும் தாயி.’ திருநீரு போட்டு ஆசீர்வாதம் செய்தார்கள் நாதனும், மேகலையும்.’




”பார்வதி, உன் மருமகளுக்கு நீ தான் பூ வச்சுவிட்டு, அவளை உன் மருமகளா இல்லாம உன் இன்னொரு மகளா வரவேற்க்கனும்.” என மேகலை சொல்லி, பார்வதியின் கையில் பூவை கொடுத்தார்.





‘தென்றலின் தலையில் பூ வைத்து, அவளை அவர்கள் வீட்டுக்கு மருமகளாக ஏற்றுகொண்டனர். பார்வதியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிகொண்டாள்.’



“நல்லா இரும்மா...” அவளின் கன்னத்தை வழித்து திர்ஷ்டி கழித்தார்.
மேகலையும், பார்வதியையும், தென்றலிடம் பேச சொல்லிவிட்டு, கற்பகம், சுசீலா, ஆனந்தன், தினகரன் நிர்மலா இவர்களிடம் தனியாக பேச சென்றனர் நாதனும், செல்வராஜ், தனுஷ்.





‘உங்க மனசுல என்ன கேள்வி இருக்கும்னு எங்களுக்கு தெரியும், குழப்பமா வேற இருப்பீங்க. என நாதன் ஆரம்பித்து, தனுஷூக்கு தங்களுக்கு எந்தமாதிரியான சூழ்நிலை அமைந்தது, முதல் சிவாவின் காதல், தரணிதா சிவா பற்றியும், இறுதியில் என்ன நடந்தது என்றும் நாதன் விளக்கமாக சொல்லிமுடித்தார்.’




“இந்த பையனும் எங்களுக்கு பேரன் மாதிரி தான். உங்க பொண்ண எங்களை நம்பி கொடுங்க நாங்க நல்லா பார்த்துபோம்.” என நாதன் கையெடுத்து கும்பிட
‘என்ன, சம்மந்தி... கையெடுத்து கும்பிட்டுகிட்டு. எங்களுக்கு பரிபூரண சம்மதம் ஆனா, பின்னாடி நம்ம வீட்டு பசங்களுக்கு தெரிஞ்சா அவங்க எப்படி எடுத்துப்பாங்க.’ கற்பகமும், சுசீலாவும் வினாவ.



”அப்படி எதுவும் ஆகாது... அதுக்கு நான் பொறுப்பு.” என நாதன் உறுதியளித்தார்.
தனிமையில் தென்றலும், தனுஷூ பார்த்துகொண்ட பொழுது. ‘என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கலாமே.’





“சொன்னா, சும்மா இருப்பிய நொடிக்கொரு முறை மெசேஜ் பண்ணுவ. அப்புறம் கால் பண்ணுவ... இது இரண்டுக்கும், நான் ஆன்சர் பண்ணலனா உடனே நீ கிளம்பி வந்துருவ. அதான் உன்கிட்ட மட்டுமில்லை என் அக்கா, சுந்தர்கிட்ட கூட இதை பத்தி பேசிக்கலை.”




‘நீங்க எப்படி அந்த கேள்வி கேட்கலாம்.’



‘எந்த கேள்வி’


“சந்தேகப்படுறியானு.”



‘பின்ன வேற எப்படி கேட்க சொல்லுற. எடுத்த உடனே நல்லா இருக்கீங்களானு கேட்ப்ப. அதைவிட்டுட்டு என்கிட்ட மறைக்குறீங்களானு கேட்டா என்ன சொல்ல சொல்லுற.’



‘உங்களை ஒரு நிமிஷம் கூட என்னால சந்தேகப்பட முடியாது. ஏன்னா உங்களை, நான் காதலிக்குறேனு சொன்னதுக்கு அவ்வளவு கோவப்பட்டு போனீங்க. இதுல உங்களை அடுத்த பொண்ணு என்ன, உங்க அத்தை பொண்ணோட கூட சேர்த்து வச்சு பார்த்தாலும் நான் சந்தேகப்படமாட்டேன்.’ அவள் தெளிவாக சொல்லவும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.




“பரவாயில்லை இப்போவே என்னை நல்லா புரிஞ்சுகிட்டயே.”



“ அண்ணிக்கு நீங்க இன்னும் சொல்லாம இருக்கீங்க. அவங்களுக்கு நீங்க எப்படி புரிய வைக்க போறீங்க.” அவனின் அக்காவன தேவதர்ஷினியை இவள் நினைவுபடுத்திவிட.



‘நேரம் பார்த்து தான் அக்காகிட்ட சொல்லனும். அக்கா என் நிலமையை புரிஞ்சுப்பா, அவகிட்ட மறைக்குறது கொஞ்சம் கஷ்ட்டமா தான் இருக்கு.’




“நேரம் பார்த்து அக்காகிட்ட சொல்லுங்க, அவங்க உங்களை நினைச்சுட்டு இருப்பாங்க.” அவள் சொல்ல



‘சரி நான் பேசுறேன்.’



‘சரி கிளம்புறேன்...’ அவள் கிளம்ப எத்தனிக்க, அவனுக்கோ, இன்னும் கொஞ்ச நேரமாவது அவளுடன் இருந்தாள் நன்றாக இருக்கும் என தோன்றியது.




“ஹே பாம்பு... பார்த்து போ” என அவன் அவளை அலறவிட.




‘என்ன பாம்பா... இரண்டடி எடுத்து வைத்தவள், அப்படியே அவன் பக்கம் ஓடி வந்து, அவனது மார்பில் கண்களை மூடி, பயந்து ஒட்டிக்கொண்டாள்.



“அவனோ, தன் பின் ஒளிவாள் என எதிர்பார்க்க, இப்படி தன் நெஞ்சில் ஒட்டிகொள்வாள் என சிறிது எதிர்ப்பார்கவில்லை. முதல் முதலில் மனைவியாக போகிறவளின் ஸ்பரிசத்தை இப்படி உணரவேண்டி வரும் என அவன் நினைக்கவில்லை.”





’அவள் அணிந்திருந்த தாவணி உடை அவள் இடையைவிட்டு லேசாக விலகியிருந்தது. தலையில் மல்லிகையின் வாசனை குடியேறிருந்தது. இதெல்லாவிட அவள் தேகம் முழுவதும் அவன் மீது மட்டுமே இருந்தது. பெண்ணவளின் வாசனையை அனுபவிக்கும் போது.’




“தென்றல் எங்க இருக்க... உன் உயிர் தோழி சங்கவி வந்துட்டேன். ‘மாமா நீங்க எங்க இருக்கீங்க’ என்ற பாணியில் சங்கவியின் அழைப்பு இருந்தது.



‘வேகமாக அவனைவிட்டு விலகியவள்... ‘சாரிங்க... பாம்புனு சொன்ன உடனே பயத்துல தான் உங்க நெஞ்சுல சாஞ்சுக்கிட்டேன் சாரிங்க. கோவம் எல்லாம் படாதீங்க, இனிமே எந்த பூச்சியா இருந்தாலும் பயந்து போன உங்ககிட்ட இப்படி நடந்துக்க மாட்டேன்.’ அவன் உண்மையில் அவள் மீது கோவம் தான் படுவான் என நினைத்து அப்படி கூறினால்.




”ம்க்கும் இதுகெல்லாம் கோவம் பட்டா நான் எங்க உன்கூட குடும்பம் நடத்த முடியும். நல்ல நேரத்துல அந்த கரடி வந்துட்டா இல்லைனா நானே என் எல்லையை மீறிருப்பேன். இருந்தாலும் அவ கரடி மாதிரி வந்துருக்க கூடாது.” அவன் மனதில் இருப்பக்கமும் பேசிக்கொள்ள




‘நான் கிளம்புறேன்...’




“ பார்த்து போ... நைட் மெசேஜ் பண்ணு.”




‘ம்ம்... சரிங்க’ என அவனிடம் சொல்லிகொண்டு அவள் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தவளை வழியிலேயே பார்த்து சங்கவி கட்டிகொண்டு அவளிடம் பேசிகொண்டே சென்றாள்.




“இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன் ஆனா, இப்படி என்னை மொத்த நேரமும் நினைக்க வச்சுட்டாளே. உனக்கு தேவை தான், போறவளை வம்பிழுத்துவிட்டு இப்படி புலம்புற.” என அவன் வெளியில் பேசிகொண்டு அவன் வீடு நோக்கி சென்றுவிட்டான்.
 
Top