Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 14

Advertisement

ilakkikarththi

Well-known member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 14



‘அவளது பென் கேமிராவில் இருந்த வீடியோவை தனது சொந்த லேப்டாப்பில் ஏற்றிவிட்டு, பின் தனது மெயிலில் சேமித்து வைத்தாள். இந்த வீடியோ மட்டும் போதாது இதை வைத்து பத்திரிக்கையில் வெளியிட்டால் மக்கள் அவ்வளவாக நம்பம்மாட்டார்கள். வேறு வழியில் அவர்கள் தவறு செய்வதை நான் கண்டுபிடித்தால் மீடீயா முனிலையிலும், மக்கள் முன்னிலையிலும் அதை வெளியிட முடியும்.’ என தனக்குள்ளே பேசிகொண்டு அவளது பென் ட்ரைவை பத்திரப்படுத்தினாள்.



சிவாவும், தரணிதாவும் ஒரே கல்லூரியில் ஜார்னிலிசம் படித்தவர்கள். படிக்கும் பொழுது இருவருமே அவ்வளவாக பேசி பழக்கம் இல்லை. படிப்பு முடிந்தும் வேலையில் சேரும் பொழுது தான் இருவருமே ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்டு காதலிக்க ஆரம்பித்தனர். தரணிதா அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததால், அவள் மீது சிவா காட்டும் அன்பு மிகவும் அவளுக்கு பிடித்திருந்தது. சிவாவும், தன் குடும்பத்திற்க்கு அடுத்து தரணிதாவை நேசிக்க ஆராம்பித்தான்.
வேலையின் விடுப்பு கிடைத்தாலும், ஊருக்கு செல்லாமல் அவளுடனே நேரத்தையும், விடுமுறையும் செலவழிப்பான். அவளும், அவனை பல முறை ஊருக்கு சென்றுவருமாறு டிக்கெட் புக் செய்து கொடுத்தாலும் அவன் அதை கேன்சல் செய்துவிடுவான்.






‘சிவா ஏன் இப்படி பண்ணுற... அம்மா, அப்பா, உன் மொத்த குடும்பமே உனக்காக தான் காத்திருக்கும். ஏன் ஊருக்கு போகலை நீ.’





’நான் ஊருக்கு போயிட்டா நீ தனியா பீல் பண்ணுவ. ஃப்ரன்ட்ஸ் யாருகூடவும் நீ வெளிய போகமாட்ட. இதுவே நான் உன்கூட இருந்த அந்த பீல் இருக்காதுல அதான் ஊருக்கு போகலை. அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா.மாமா அத்தை, சித்தி சித்தப்பா, இவங்களுக்கு எல்லாம் எனக்கு வேலை அதிகமா இருக்கும் அதுனால வரலைனு சொல்லி மனசை தேத்திப்பாங்க. ஆனா நீ, நான் இல்லைனா அன்னைக்கு முழுசும் என்னை பத்தி தான் நினைச்சுட்டு இருப்ப. மெசேஜ் மேல மெசேஜ் அஹ பண்ணுவ. நிமிஷத்துக்கு ஒரு முறை கால் பண்ணுவ. இதை எல்லாம் நான் தூரத்துல இருந்து பீல் பண்ணுறதைவிட பக்கத்துல உன்னை ஹாப்பி அஹ் வச்சுக்கலாம்.’






அவன் சொல்லியது சரிதான், ஒரு முறை அவன் ஊருக்கு சென்ற பொழுது தான். அவனின் பிரிவு அவளுக்கு எந்த மாதிரி சூழ்நிலையை ஏற்படுத்தியது என அவனுக்கும் தெரியும். அன்று முழுது அவனுக்கு மெசேஜ் செய்துகொண்டு, போன் செய்து பேசிகொண்டு இருந்தாள். அடுத்த நாளோ, அவளிடம் இருந்து எந்த மெசேஜூம், போன் காலும் வரவில்லை. அவனோ பயந்துவிட்டான். உடனே ஊரில் இருந்து கிளம்பிவிட்டான். அங்கு சென்று பார்த்தால் அவளுக்கு காய்ச்சல் வந்து மயக்க நிலையில் இருந்தாள். அதன் பின் அவளைவிட்டு எங்கு செல்வது இல்லை.
அந்த பொண்ணு யாருனு விசாரிச்சயா... அவகிட்ட இருக்குற ஆதாரத்தை உடனே அழிக்கனும். அப்படி அழிக்காமவிட்டா அது நமக்கு மட்டும் இல்லை, நம்ம பின்னாடி இருக்குற மொத்த கூட்டத்தை காட்டிகொடுத்துரும். கோவமா பேசிகொண்டிருந்தான் முத்துவேலவன்.







’சார் நீங்க பயப்படாதீங்க... அந்த பொண்ணு பத்திரிக்கைகாரி. உடனே கை வச்சா நமக்கு தான் பாதிப்பு அதிகம். நேரம் பார்த்து அவகிட்ட இருக்குற ஆதாரத்தை அழிச்சுடுவோம். அவனின் அடியாள், முதலாளியை சமாதான செய்தான்’.
நம்மக்கிட்ட இருக்குற டீலர் எல்லாம் அடுத்து எப்போ மீட்டிங்க்னு கேக்குறாங்க சார். என்ன சொல்லட்டும், நாளைக்கே அந்த ஹோட்டல் வரசொல்லிடவா சார். அவனின் பிஏ மூர்த்தி கேட்க.





நாளைக்கு மீட்டிங்க் என் ஹெஸ்ட்ஹவுஸ்ல வைச்சுக்கலாம். நம்ம டீலர் எல்லாரையும் அங்க வரசொல்லிடு. ஆனா இந்த மீட் யாருக்கும் தெரியக்கூடாது.
ஒகே சார்.






அவனின் பிஏ சென்றுவிட, முத்துவேலவன் தான் முகம் தெரியாத அந்த பெண் மீது கோவமாக இருந்தான். அவனின் கோவம் தெரியாமல், அவனின் பிஏ பின்னாயே அவள் ரகசியமாக க்ளு கிடைக்கிறதா என சுற்றிகொண்டிருந்தாள்.
தொடர்ந்து ஒரு மாதமாக அந்த முத்துவேலவனின் பிஏ மூர்த்தியின் பின்னே சென்றவளுக்கு, மறைமுக மீட்டிங்க் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் இன்னும் பல கோடிகள் கை மாறுவதாகவும் அவளுக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலை சிவாவிடம் சொல்லியவள். அந்த இடத்தில் நடக்க போவதை படம் பிடித்து, அடுத்த நிமிடம் போலீஸ்க்கு தகவல் கொடுப்பதும் பற்றியும் அவள் திட்டம் போட்டதை சொல்லிக்கொண்டிருக்கையில் சிவாவோ அவளை கோவமாக பார்த்தான்.
அவள் திட்டத்தை சொல்லிகொண்டுயிருக்கையிலேயே அவன் பாதியில் எழுந்து சென்றுவிட. அவளோ, அவனின் கோவத்தை பார்த்து வேதனை கொண்டாள்.







‘என்ன சிவா... ஏன் பாதியில போற. எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லுறேன் நீ என்னை கோவமா பார்த்துட்டு போற.’





நான் ஏற்கனவே சொல்லிட்டேன் தனு... அந்த வேலவன்கிட்ட நாம மோதுனா விளைவு நமக்கு தான். ஆனா நீ விடாம அவனை பாலோ பண்ணி இவ்வளவு பெரிய விஷயத்தை போலீஸ்கிட்டயும் மக்கள்கிட்டயும் கொண்டுபோகனும் சொல்லுற. என்ன தான நாம பத்திரிக்கை ஆளா இருந்தாலும் அவனுக்கு எல்லாம் நாம தூசு மாதிரி. இப்பவு ஒன்னுமில்லை அவன் என்னமோ பண்ணிட்டு போறான் இதெல்லாம் நமக்கு தேவை இல்லை. அவளிடம் சண்டை போட்டுவிட்டு ஆபீஸை விட்டு வெளியே சென்றுவிட்டான்.






அவளோ, அவன் சொல்லியது உண்மை என்றாலும். இதில் பல உயிர்கள் அவள் கண் முன்னேயே துடித்துடித்து இறந்தது அவளுக்கு தானே தெரியும். பச்சிளம் குழந்தை முதல், வயது பெண்கள் வரை அவர்கள் மருத்துவம் என்ற பெயரில் உடலுறுப்புகளையும், வயது பெண்களை ‘அந்த’ மாதிரி விஷயங்களுக்கு பயன்படுத்துவதும். என அவள் படம் பிடித்தவையில் இவைகள் அடங்கின.
’சாரி சிவா... இனிமேலும் நான் பார்த்த மாதிரி எண்ட உயிரும் போகக்கூடாது. அதுனால எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. அந்த கெஸ்ட் ஹவுஸ்ல என்ன நடக்க போகுதுனு நான் பார்க்க தான் போறேன். அதை எப்படியும் வெளிய கொண்டுதான் வரபோறேன்.’ மனதில் உறுதி எடுத்துகொண்டு அவளும் ஆபீஸ்விட்டு வெளியேறினாள்.






ரூம்க்கு வந்த சிவாவின் முகம் கோவமாகவும், எரிச்சலாகவும் இருந்தது. தரணிதாவை நினைத்து மனதிலும், வெளியவும் திட்டுகொண்டிருந்தான். இதை எல்லாம் பார்த்த சிவாவின் தோழன் தேவன் ‘என்னாச்சு சிவா... ஏன் டென்ஷன் ஆகுற... யாரையோ போட்டு திட்டுற மாதிரி இருக்கு.’





‘எல்லாம் அவ தான் டா... எனக்குனு ஒரு காதலி இருக்காளே... அவ தான். அன்னைக்கு நீ அடி வாங்குனது பத்தலையாம், மறுபடியும் உன்னை அழைச்சுட்டு அந்த வேலவன் மறைமுகமாக நடத்துற மீட்டிங்க்ல இவ அங்க நடக்குற எல்லாத்தையும் வீடியோ எடுத்து, எல்லார்க்கிட்டையும் காட்ட போறாளம். அதை என்கிட்ட சொல்லுறா.’
என்னது மறுபடியும் அடிவாங்கனுமா... அதுவும் அந்த அடியாள்கிட்டயா? டேய் என்னால முடியாது டா. எப்படியாச்சும் உன் ஆளுகிட்ட சொல்லி அடக்கி வையுடா.





’ஆமா, அவளும் என் பேச்சு கேட்டு அமைதியா போயிடுவா பாரு. என்னை இந்த திசையில பார்த்திட்டு இரு, நான் இதோ வந்திருவேனு சொல்லி அந்த பக்கம் போய் நீயுஸ் கலெக்ட் பண்ணிட்டு வந்திருவா.’




இப்போ என்ன செய்ய போற டா... அவளை எப்படி தடுக்கப்போற.



‘தெரியலை டா... ஆனா அவளுக்கு எதாவது ஒன்னுனா என்னால தாங்கிக்க முடியாது.’ அவன் வருத்தமாக சொல்ல.




அதெல்லாம் அவளுக்கு ஒன்னும் ஆகாது டா. அவளை எப்படியாவது அங்க போறதை தடுக்கலாம். நீ வா... காஃபி போட்டு தறேன். சிவாவை சமாதானம் செய்து அழைத்து சென்றான்.





இரண்டு நாள் கழித்து சிவா, தனுவை பார்க்க அவள் தங்கி இருக்கு வீட்டிற்க்கு வந்தான். வீட்டின் முன் நின்று கதவை தட்டிவிட்டு அவளுக்குகாக காத்திருந்தான். தூக்க கலகத்திலேயே வந்து கதவை திறந்தவள், தன் முன் ரோஜா பூங்கொத்தை தாங்கியபடி, சின்ன புன்னகையுடன் நின்றிருந்தான் அவளின் காதலன் சிவா.




‘சிவா... நீயா... என்ன இவ்வளவு காலையில அதுவும் என்னை பார்க்க வந்திருக்க.’ அவள் ஆச்சர்யமாக கேட்க.




உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியலை தனு. அதான் நானே உன்னை தேடி வந்துட்டேன். நீ என்கிட்ட பேசி இரண்டு நாள் ஆச்சு ஒரு போன் இல்லை மெசேஜ் இல்லை.’ அவளிடம் சொல்லிகொண்டே அவளை கட்டியணைத்துகொண்டான்.





‘சாரி சிவா... கொஞ்சம் வேலையா வெளியே அலைஞ்சுட்டு இருந்தேன். அதான் ஆபீஸ் கூட வரமுடியலை சாரி டா... நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்.’ அவளும், அவனை கட்டிகொண்டு பேசினாள்.





இன்னைக்கு முழுசும் நீ என்கூட தான் இருக்கனும். இது நமக்கான நேரம் அதனால நாம எங்காயவது வெளியே போயிட்டு வரலாம்.






‘சரி நான் குளிச்சுட்டு வரேன், நீ, நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு காஃபி போட்டு வை’. அவனிடம் சொல்லிக்கொண்டு அவளது அறைக்கு சென்றாள்.
இருவரும் காஃபி குடித்து முடித்துவிட்டு, அன்றைய நாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட சென்றனர். ஷாப்பிங்கில் அவனுக்கு, ஏற்ற உடையை அவளும், அவளுக்கு ஏற்ற உடையை அவனும் எடுத்தனர். புதிதாக வெளியான படத்திற்க்கு இருவரும் கைகோர்த்து சென்று பார்த்தனர். மாலையில் ஒரு ஹோட்டலில் அவர்களது பகல் உணவை முடித்தனர்.





வீட்டிற்க்கு செல்லும் வழியில் இருவருமே நடந்துகொண்டே ஒருவரின் கையை, ஒருவர் பிடித்தபடி ஒரு மோக நிலையில் நடந்துகொண்டிருந்தனர்.அந்த கை பிணைப்பில் நீ என்னிடம் இருந்து எப்பொழுதும் பிரியகூடது என்ற நிலை இருந்தது. அவளது வீடு வந்ததும், அவனது கை அவளை விட மறுத்தது, ’போகனுமா தனு...’ அவன் கேட்க.






ம்ம்... போயிட்டு நாளைக்கு ஆபீஸ்க்கு வா உனக்கு ஒரு சப்ரைஸ் வச்சுருக்கேன். அவள் சொல்ல



‘அதை இப்போ சொல்லு, நாளைக்கு வரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது.’


நாளைக்கு காலையில உனக்கே தெரியும் அது என்ன மாதிரியான சப்ரைஸ்னு. அவள் பூடமாக சொல்ல.


ஒகே பாய்... பத்திரமா இரு, கதவை பூட்டிக்கோ. என அவளிடம் சொல்லிவிட்டு அவனின் பைக்கில் அவனது ரூம்க்கு சென்றான்.





அடுத்த நாள் காலையில் தினசரி நாளிதழ் முதல் டிவி வரை பரப்பரப்பு செய்தியாக தொழிலதிபர் முத்துவேலவன் பற்றிதான் ஓடிக்கொண்டிருந்தது. இதை அறியாமல் சிவாவோ, நல்ல உறக்கதில் இருந்தவனை எழுப்பியது அவனது தோழன் தேவன்.



‘டேய் சிவா... எழுந்திரு டா... டேய் சிவா.’



என்னாச்சு, தேவா ஏன் இவ்வளவு பதட்டம்.





‘இங்க நீயூஸ் பாரு டா... அப்படியே இந்த பேப்பர் பாரு.’ என அவனிடம் நீயூஸ் பேப்பரை கொடுத்துவிட்டு, டிவியின் முக்கைய நியூஸ் சேனலை போட்டுவிட்டு, சத்ததை அதிகம் வைத்தான்.





“கைது... தொழில்லதிபர் முத்துவேலவன் மருத்துவமனையில் நடந்த சோதனையில், மனிட உடலுறுப்புகளை திருடி, வெளிநாட்டவர்க்கும் விற்றது தெரியவந்துள்ளது. இதில், இன்னும் சில முக்கிய புள்ளிகளின் தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.” என செய்தி வாசிப்பாளர் அழகாக வாசிக்க, மறுப்பக்கம் வேலவன் மருத்துவமனையில் நடந்த உடலுறுப்புகளை சிகிச்சையின் மூலம் வெளியில் எடுத்து அதை ஐஸ் பாக்ஸில் வைக்கும் வீடியோவும், உடலுறுப்புகளை எடுத்த பின் அந்த மனித உடல்களை வேறொரு சிகிச்சையின் மூலம் அவர்கள் இறந்ததாக எழுதி அதில் கையெழுத்து போடும் அந்த மருத்துவமனையில் டீன், மற்றும் பலர் என அந்த வீடியோவில் இருந்தது.





சிட்... இது எல்லாம் அவ வேலை தான். இதை தான் எனக்கு சப்ரைஸ்னு சொன்னாளா. சொல்ல சொல்ல கேக்காம இப்படி அவனையே இப்படி நியூஸ் ஆகிருக்கா. டேய் அவளை பார்த்தா தான் எனக்கு நிம்மதி. நான் கிளம்புறேன், அவ பாதுக்காப்ப இருக்கனும். இல்லைனா அந்த வேலவன் அவளை என்ன பண்ணுவானு தெரியலை.’ என சொல்லிகொண்டு அவன் வேகமாக கிளம்பி தரணிதாவின் வீட்டிற்க்கு சென்றான்.






‘அவள் வீட்டிற்க்கு சென்றான், அவன் வருவதை பார்த்த தனு, ‘ஏன் இவ்வளவு பத்தட்டமா வந்திருக்க சிவா.’ என கேட்டவளின் கன்னத்திலே ஒரு அறை வைத்தான்.



‘என் பேச்சு கேக்க கூடாதுனு முடிவா இருக்கியா தனு. அந்த வேலவன் என்னமோ பண்ணுறான் அது எதுக்கு நமக்கு. இப்போ அவனை கைது பண்ணிட்டாங்க, அவன் சும்மா இருக்கமாட்டான். இந்த வீடியோ வெளியவிட்டதும், அது எல்லாருக்கு தெரிஞ்சும், அவன் சாதாரணமா இருப்பானு நினைக்குறையா. உன்னை தேடி அவன் ஆளுங்க இன்னேரன் வந்திட்டு இருப்பாங்க.’





ரிலாக்ஸ் சிவா... அவன் என்னை தேடி அவன் ஆளுங்களை அனுப்பினாலும் அவனுக்கு சிக்கல் அதிகாம இருக்கும். சிவா அடித்ததை கூட பொருட்படுத்தாமல் அவனை சமாதானம் செய்தாள்.




‘என்ன சொல்லுற...’




உள்ள யாரு இருக்காங்கனு பாரு, டி.எஸ்.பி மோகன் சார். அவர்கிட்ட தான் நான் பேசிட்டு இருந்தேன். அவர்கிட்ட தான் இந்த வீடியோவை கொடுத்தேன். அவரும் அதை நல்லா விசாரிச்சு அவன்மேலையும், அந்த ஹாஸ்பிட்டல் மேலையும் ஆக்‌ஷன் எடுத்துருக்காரு. என அவள் சொல்லிகொண்டு இருக்கையில் அவளது ஆபீஸ் சேர்மேன் அவளுக்கு அழைக்க அவள் அதில் பிசியாகிவிட்டாள்.




அவனோ, அந்த போலீஸ்காரனா மோகனை பார்த்து பேசினான். ‘சார் இதுனால அவளுக்கு எதாவது ப்ரபலம் வருமா? அந்த வேலவன் மேலை கை வச்சவன் எவனும் இப்போ உயிரோட இல்லை. ஆனா இப்படி அவனை கைது பண்ணுற அளவுக்கு அவ கொண்டு போயிருக்க. அது...’ என அவனின் கவலையை புரிந்துகொண்டவர் போல் அவன் தோள் மீது கை வைத்து அவனை சமாதான் செய்தார்.



தொடரும்…………….






 
Top