Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 10

Advertisement

ilakkikarththi

Well-known member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 10

“என்ன ஆனந்தா... என்னாச்சு அந்த பையன பத்தி விசாரிக்க சொல்லிருந்தேன்ல. விசாரிச்சுட்டயா ஆனந்தா” என கற்பகம் கேட்க.



“விசாரிச்சுட்டேன் சின்ன அம்மா... பையன் ரொம்ப நல்ல பையன், எந்த கெட்ட பழக்கமும் இல்லை, ஒரே ஒரு அக்கா மட்டும் தான். அம்மா, அப்பா இல்லை, ஐ.பி.எம் கம்பெனில ப்ராஜெக்ட் லீடர் அஹ் அந்த பையன் இருக்கான்.”



“அவனை நம்பி நம்ம பொண்ண தாரளாமாக கல்யாணம் செஞ்சுக்கொடுக்கலாம். என ஆனந்தன் முடிக்க.



“நீ என்ன சொல்லுற தினகரா... உன் தொழில் முறையில யார்கிட்டயாவது விசாரிச்சியா.”



“அண்ணா சொன்னது தான் சின்ன அம்மா, நான் விசாரிச்ச பக்கமும் சொன்னாங்க...”


“சரி... அடுத்ததா அந்த பையன் வீட்டுல சொல்லி பேச ஆராம்பிக்கலாம் என்ன சுசீலா.”



“ம்ம்... சரி கற்பகம்..., எங்க தென்றல் அவளை வரச்சொல்லு.”



“தென்றல் கோவிலுக்கு போயிருக்கா அத்தை.” என நிர்மலா சொல்ல.



“ சரி அவ வந்த உடனே அந்த பையனோட அக்காகிட்ட பேசலாம்.” என சுசீலா சொன்னார்.
**************


”கௌசி வந்துட்டாளா பெரியம்மா...” என கேட்ட கவி கேட்க.



“இப்போ தான் ஹாஸ்ட்டல இருந்து கிளம்ப போறாளாம் கவி.” என்றார் பார்வதி.



“இன்னைக்கு என்ன ஸ்பெல் பெரியம்மா... கேசரி எல்லாம் செய்யுறீங்க.”



”நம்ம வீட்டுல இன்னைக்கு முக்கியமான விசேஷம் பத்தி பேசப்போறாங்க அதான் கேசரி செய்யுறேன்.”



“அப்படி என்ன விசேஷம் பெரியம்மா.”



“இன்னை சாயங்காலம் தெரிஞ்சிடும்... அது வரைக்கும் பொறுமையா இரு”.



“என்ன இப்படி சஸ்பென்ஸ் வைச்சுட்டு போறாங்க... சரி இல்லையே...”



“யோசனையில் வந்தவள் அகல்யாவின் மீது மோதிவிட. ‘ என்ன யோசனையில நீ வர பாரு...’



“சாரி அகல்... பெரியம்மா ஒரு விசேஷம்னு சொன்னாங்க அதை பத்தி என்னனு யோசிச்சுட்டு வந்தேன், அப்படியே உன்மேல மோதிட்டேன்.”



“அப்படி என்ன விசேஷம் பாரு”



“அது தான் எனக்கு தெரியலையே.” அவளையும் சேர்த்து யோசிக்கவிட்டு பார்கவி ப்ரவீனை பார்க்க சென்றுவிட்டாள்.

*********

”தென்றல், தனுஷ்க்கு போன் செய்ய... ரிங் போய்கொண்டு இருந்ததே தவிர, எடுக்கவில்லை. முதல் முறை... இரண்டாம் முறை ... ம்ஹூம் அவன் போன் எடுக்கவில்லை.”



“ஏதாவது வேலையில இருப்பாங்க... அவங்களா போன் பண்ணட்டும்...” என அவள் போனை மெத்தையில் வைக்க போகையில் அவன் போன் செய்தான்.



”ம்ம்... சொல்லு என்ன கால் பண்ணிருக்க.”



“நம்ம கல்யாணத்தை பத்தி உங்க வீட்டுல எப்போ பேசலாம்னு எங்க வீட்டுல கேட்டாங்க.” அவளது இரு பாட்டிகளும் காலையில் பேசியதை அவளிடம் சொன்னார்கள்.



“அவனோ அமைதியாக இருந்தான்... அவள் பேசியதற்க்கு பதில் எதுவும் சொல்லாமல்.”



“ஏன் அமைதியா இருக்காங்க...” அவள் யோசிக்க.




“என்னாச்சு... ஏன் அமைதியா இருக்கீங்க...”அவனிடம் கேட்க.



“நான் வீட்டுல பேசிட்டு உன்கிட்ட சொல்லுரேன்...”



“ம்ம்... சரி...”



“வேற எதாவது சொல்லனுமா...” அவன் கேட்க.



“சாப்பிட்டேங்களா தனுஷ்...”



” ம்ம்... இப்போ தான் சாப்பிட்டேன்.”



“எப்போ ஊருல இருந்து வரீங்க.”



“ம்ம்... சீக்கிரம் வர பார்க்குறேன்... சரி நான் அப்புறம் பேசுறேன்.” என அவளது பதிலை எதிர்ப்பார்க்காமல் போனை கட் செய்துவிட்டான்.




”இப்பவும் எல்லாமே நான் தான் கேக்கனுமா... இவங்க என் பத்தி எதுவும் கேக்கமாட்டேங்குறாங்க... என ஒரு மனதும். அவங்களை பத்தி தான் எனக்கே தெரியுமே... எல்லாமே நான் தான் கேக்கனும்... பேசனும்... இதை எல்லாம் தெரிஞ்சு தானா காதலிக்க ஆரம்பிச்சேன்.”



“இதுல நான் பேசாம இருந்த மட்டும் சண்டைக்கு முதல் ஆளா வருவாங்க. ஆனா அந்த சண்டை கூட வர்ரது எனக்கு பிடிச்சிருக்கு.” அவளது போனில் அவனது போட்டோவை பார்த்து பேசி சிரித்துகொண்டிருந்தாள்.



” தோட்டத்தில் அமர்ந்திருந்த நாதன், வயலில் வேலை பார்த்துகொண்டிருந்தவர்களிடம் பேசியபடி இருந்த சிவாவை குழப்பமாக பார்த்துகொண்டிருந்தார்.”




“வேலை செய்பவர்களிடம் கூட, அவர்களுக்கு உதவிய படியும், அடுத்தடுத்து நடவு செய்ய வேண்டிய நாற்றையும் எடுத்துகொடுத்தும். ஒவ்வொருவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.”



“அவரது மனதில் சிவா வயலுக்கு வருவதும், வேலை செய்வது இயல்பு தான். ஆனால் வயலில் வேலை செய்பவர்களுடன் சேர்ந்து எந்த வேலையும் செய்யமாட்டான்.”




”தாத்தா... பாட்டி உங்களை வீட்டுக்கு சாப்பிட வரச்சொன்னாங்க.” என கௌதம், யோசனையில் இருந்த நாதனை கலைத்தான்.



“என்னய்யா... என்ன சொன்ன”



“எந்த யோசனையில இருந்தீங்க தாத்தா... பாட்டி உங்களை கூப்பிட்டு வரச்சொன்னாங்க.”



“நான் முன்னாடி வீட்டுக்கு போறேன்... நீ சிவாவ கூப்பிட்டு வந்திருய்யா.”



“சரிங்க தாத்தா.”



”சிவா... சிவா...” வயலில் இருந்தவனை சத்தம் போட்டு அழைத்துக்கொண்டிருந்தான்.



“அவனுக்கோ வேரு யாரையே கூப்பிடுகிறார்கள் என நினைத்துகொண்டு வாய்கால் வரப்பை வெட்டிகொண்டிருந்தான்.”


“நாதனோ ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு அவர் சென்றுவிட்டார். மனதில் எதையோ நினைத்துகொண்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.”


**********************

”ஏன் அப்படி சொன்னீங்க.”லக்‌ஷ்மி, ராஜேஷிடம் கேட்க.


“என்ன சொன்னேன்...”



“சிவாக்கு, அகல்யாவை கல்யாணம் செய்துகொடுக்க உங்களுக்கு விருப்பம் இல்லையாங்க.”



“என்ன லக்‌ஷ்மி, எனக்கு விருப்பம் தான் ஆனா, கல்யாணம் செய்யப்போறவங்க மனசுல என்ன இருக்கும்னு தெரியாம நாம பேசுறது தப்புனு நினைச்சு தான் சொன்னேன்.”



“இரண்டு பேருக்கும் விருப்பம் இருந்தா?” என லக்‌ஷ்மி கேள்வியாக பார்க்க.



“சந்தோஷம் லக்‌ஷ்மி... விருப்பம் இல்லையினா?” அவர் கேள்வியாக நிறுத்த.



“ம்ம்... புரியுதுங்க...” அவர் புரிந்ததாக சொல்ல.


”நாம பேசுனது எதுவும் நம்ம பசங்களுக்கு தெரியக்கூடாது.” சரிங்க.


**********************

”வீட்டின் முன் க்வாலிசி கார் வந்து நிற்க, அதில் வருணும், கௌசல்யாவும் காரில் இருந்து இறங்கினர்.”



”முதலில் லாவன்யா தான் பார்த்து, ‘ஹே கௌசி... எப்படி இருக்க.” அவளை கட்டிகொண்டு நலம் விசாரித்தாள்.



“நல்லா இருக்கேன் லாவன்யா... நீ எப்படி இருக்க”


“ம்ம்ம்... நல்லா இருக்கேன்.”


“எங்க எல்லாரும்... ஆளவே காணோம்...” சுற்றிலும் தாய், தந்தையை தேடியபடி அவள் கேட்க.



“உள்ள தான் இருக்காங்க வா...” அவளை அழைத்த படியே உள்ளே சென்றாள்.


“அனைவரும், அவளை பார்த்து நலம் விசாரித்தப்படியே இருந்தனர்.”



”அவளது தாத்தா, பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிகொண்டு, அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்தாள்.”



”ஏன் முகம் சோர்வா இருக்கு கௌசி.” பார்வதி கேட்க.



“காலையிலே சீக்கிரம் எழுந்து கிளம்புனதுல சரியான தூக்கம் இல்லமா.”



” சரி போய் முகம் கழுவிட்டு வா... சாப்பாடு எடுத்து வைக்குறேன்.” அவளது பின்னயே லாவன்யா சென்றாள்.



“எங்க சிவா அண்ணாவ காணோம்” லாவன்யாவிடம் கேட்க.



“வயலுக்கு போயிருக்காங்க, இப்போ சாப்பிடுற நேரம் வந்திருவாங்க.”


“ம்ம்... சரி... பாரு, அகல்யா எங்க”


”அதை ஏன் கேக்குற, காலையில இருந்து ரெண்டும் ஏதோ சிந்தனையில இருக்காங்க. என்னனு கேட்டு நானும் அவங்களை மாதிரி இருந்த இப்போ நீ வந்ததை கூட கவனிச்சுருக்கமாட்டேன்.” என லாவன்யா சொல்லியபடி அவளுடன் பேசிகொண்டே சென்றாள்.


***********


”காலையில நீங்க சரியாவே பேசல... ரொம்ப வேலையா கிராமத்துல” போனில் தனுஷிடம் கேட்க.



“ஆமா”


“இப்போ கூட ஒரு வார்த்தையில பதில் சொல்லுறீங்க என்னாச்சு”



“ப்ச்சு... சும்மா சும்மா ஏன் கேள்வியா கேட்க்குற... இதுக்கு தான் எனக்கு போன் பண்ணுனியா? நீ காதல் பண்ணுற நேரமும், நான் உன்னை காதல் பண்ணுற நேரமும், இது இல்லை.” அவன் கோவப்பட்டு பேச.




“ஏன் இப்படி பேசுறீங்க... அதுவுமில்லாம நீங்க காலையில பேசும் போது உங்க குரல் வித்யாசமா இருந்துச்சு அதான் இப்போ கேட்டேன்.” அமைதியாக பேச.




”இங்க பாரு இப்படி எல்லாம் அமைதியா பேசி, என் மனசுல என்ன இருக்கு, எப்படி என் வாயில இருந்து வர வைக்கலாம்னு யோசிக்காத... நீ எப்படி கேட்டாலும் நான் காலையில உன்கிட்ட எப்பவும் போல தான் பேசுனே. ஏன் உனக்கு தெரியாத என் குணம் என்னனு.”



“என் குணம் என்னனு தெரிஞ்சு தான என்னை காதலிச்ச. நான் இப்படி தான்னு உனக்கு தெரியாதா? அப்புறம் என்ன.” என அவனிடத்தில் இருந்தே பேசினான்.



“அவளோ, கொஞ்சம் அவன் கோவப்பட்டதில் சோகமாக இருந்தவள். அடுத்து அவனின் செயல் எப்பவும் போல தான் என புரிந்துகொண்டு அவனின் மெசேஜிற்க்கு காத்திருந்தாள்.



தொடரும்……………….
 
Top