Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகர்த்தி ‘ இளந்தென்றலோடு ஒரு கவிதை 11

Advertisement

ilakkikarththi

Well-known member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 11

ஒரு மாதம் கழித்து***


“ கம்பெனி கேண்டினில் அமர்ந்திருந்த தனுஷ் அருகில் வந்து அமர்ந்தான் சுந்தர். சுந்தர் வந்ததை கூட அறியாமல் வாங்கி வைத்திருந்த காஃபியை பார்த்துகொண்டே இருந்தான்.”



“என்ன இவன் காஃபியை குடிக்காம அதையே உத்து பார்த்திட்டு இருக்கான் என்னாச்சு இவனுக்கு.” சுந்தர் மனதில் நினைத்துகொண்டு தனுஷின் தோளில் தட்டினான்.


“என்னாச்சு டா... ஏன் காஃபிய குடிக்காம அப்படியே வைச்சுருக்க...”



“ஒன்னுமில்லை சுந்தர்...”



“இல்லையே நீ இந்த ஒரு வாரம் சரியாவே இல்லை. நேத்து பாதி வேலையில எங்கயோ கிளம்பிட்ட. அதுக்கு முன்னாடி உன்னை பார்க்க நான் வீட்டுக்கு வந்தா, வீட்டுலயும் நீ இல்லை.”



“என்னாச்சு டா...என்ன நடந்ததுனு சொல்லு...”



”தென்றல் பற்றி தான் நினைச்சுட்டு இருந்தேன். அவளை ஹாஸ்பிட்டல பார்த்தது தான், அதுகடுத்து போன வாரம் அவளை கோவில்ல பார்த்தேன்.”



”ம்ம்... சொல்லு. பார்த்து பேசுனியா?”



”இல்லை சுந்தர்... அவ கூட அவங்க அம்மா, அப்பா இருந்தாங்க. அதுவுமில்லாம அவளை நான் தூரத்துல தான் பார்த்தேன்.”



“உனக்கு அந்த பொண்ணு நினைப்பு வந்ததுனா, அப்போ நீ அந்த பொண்ண விரும்ப ஆரம்பிச்சுட்டயா தனுஷ்?”



“என்னது காதலா?... நானா?... சுந்தர், நான் தென்றல பார்த்தேன் தான், ஹாஸ்பிட்டல இருந்து நாம போனதுக்கு அப்புறம் அவ எப்படி இருக்காளோனு பீல் பண்ணேன் தான். ஆனா இதெல்லாம் காதல்னு நினைச்சுக்காத.”



“நீ அந்த பொண்ண காதலிக்க ஆரம்பிச்சுட்ட... ஆனா நீ அதை உணரல.”



”இல்லைவே இல்லை... நான் அவளை விரும்பலை.”



”என்ன இவன் இப்படி சொல்லுறான்... மனசுல காதல் இருக்கு ஆனா அதை இவன் வெளிகாட்டிக்க மாட்றான்.”



“எனக்கு வேலை இருக்கு சுந்தர் நான் என் சீட்க்கு போறேன், காஃபி குடிச்சிட்டு நீ வா.” அவனிடம் சொல்லிவிட்டு சென்றான்.



அதே ஒரு மாதம் கழித்து*****


“கையில் புத்தகம் இருந்தாலும் சிந்தனை முழுவதும், அவனை பற்றியே இருந்தது. அன்று ஹோட்டலில் அவன் கையில் அவள் இருந்ததை அவள் உணர்ந்தால் தான் ஆனால் அவளால் கண்களை திறந்து பார்க்க முடியவில்லை.”



”ஐந்து நாட்களுக்கு முன்னால் கூட அவனை பார்த்தால் தூரத்தில் இருந்து. துணிக்கடையில், அவன் அருகில் இருந்த பெண்ணிடம், கையில் இருந்த சேலையை வைத்து சண்டை போட்டுகொண்டிருந்தான். பதிலுக்கு அந்த பெண்ணும், அவனிடம் தலையை மறுப்பாக அசைத்து வேறு சேலையை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.”



“அன்று பார்த்தது தான் அவனை... அதற்கடுத்த நாட்களில் அவனை சந்திக்க முடியாமல் போனது. ஒவ்வொரு பள்ளி வாகனம் பார்த்தாலும், அதில் குழந்தைகளை பார்த்தாலும் அவனது நியாபகம் தான்.”



“புத்தகத்தில் தலை குனிந்திருந்தவளை அழைத்தாள் சங்கவி.”



”என்னாச்சு தென்றல்... உன் கவனம் புத்தகத்துல இல்லையே.”



“அவங்களை பற்றி தான் நினைச்சுட்டு இருக்கேன் சங்கவி. அவங்களை பார்த்து ஒரு மாசம் ஆச்சு... [இடையில் அவனை பார்த்ததை அவளிடம் சொல்லாமல் தவிர்த்தாள்.] இன்னைக்கும் அவங்களை அதே இடத்துல தேடினேன் ஆனா அவங்க இல்லை.”



“இன்னைக்கு மட்டும் தான் அவன தேடினியா...” அவளை கேள்வியாக கேட்க.




“தென்றலோ, தலையை குனிந்துகொண்டு ‘இல்லை, தினமும் தேடுவேன்.’ மெதுவான குரலில் சொன்னாள்.



”சரி இப்போ என்ன பண்ணலாம்.”




”தூரத்துல இருந்தாவது அவங்களை பார்க்கனும் சங்கவி.” குரல் இறங்கி அவள் கூற.



“சரி வா... கிளம்பு...” என அவளது கை பிடித்து எழுப்பினாள்.



“எங்கடி... போக.”



“அவளோ, தென்றலை அழைத்துகொண்டு அவனது கம்பெனியின் அருகில் இருந்த காஃபி ஷாப்பில் அமர்ந்தாள்.”



”தென்றல், சங்கவியை கேள்வியை பார்க்க. அவளோ, ‘இங்க இருந்து பார்த்தா, உன் ஆள் ஆப்பீஸ்ல இருந்து கிளம்புறது நல்லா தெரியும்.’



“தென்றலோ, இன்னும் புரியாமல் பார்க்க. ‘நீ தான சொன்ன, தூரத்துல இருந்தாவது அவங்களை பார்க்கனும்னு’ என சங்கவி சொல்ல. தென்றலோ, ’இங்க இருந்து பார்த்த அவங்க எனக்கு தெரிவாங்களா சங்கவி’.



“ ம்ம்... நல்லா தெரியும்...”



”அவங்க, நம்மளை பார்த்திட மாட்டாங்களா...”



“அதெல்லாம் நம்ம இங்க இருக்குறது அவன் கண்ணுக்கு தெரியாது தென்றல்.” என சங்கவி சொல்ல.




“ஆமா தெரியாது தான்... ஆனா பக்கத்துல இருந்து பார்த்தா நல்லா தெரியும்.” அவர்களுக்கு பின்னால் நின்றுகொண்டு பதில் கூறினான் தனுஷ்.



“அவனது குரல் தென்றல் அறிந்ததால் சட்டென்று அவனை திரும்பி பார்க்க. சங்கவியோ, யாருடா அவன் என திரும்பி பார்த்தாள்.”




“அவனை பார்த்தால் மட்டும் போதும் என நினைத்து வந்தவள் கண்ணில் இப்படி எதிரில் வந்து நிற்பான் என அவள் அறியவில்லை.”




“சங்கவியை கண்டுகொள்ளாமல், தென்றலை பார்த்து அவனது அழகான ஒற்றை புருவத்தை தூக்கி ‘என்ன’ என்பது போல் கேட்க.”




”அவள், அவனின் ஒற்றை புருவத்தின் அசைவில் மெய்மறந்து நின்றாள்.”



”சங்கவியோ, அந்த இடத்தைவிட்டு நகர்ந்து வெளியே சென்றாள். தனுஷ் மீது கோவம் இன்னும் அவளுக்கு போகவில்லை.”




“என்ன இந்த பக்கம் வந்திருக்க... உன் காலேஜ் இங்க இல்லையே...” என அவன் கேட்க.




“உங்களை பார்க்க தான் வந்தேன்.”



”என்ன ஏன் நீ பார்க்கனும்... நான் யாரு உனக்கு... நீ யாரு எனக்கு”



“அவளோ, மௌனமாக நின்றாள் அவனிடம் இன்னொரு முறையும் காதல் சொல்லி அவள் தோற்க விரும்பவில்லை.”




“ஏன் அமைதியா இருக்க... பதில் சொல்லு...”




“நான் கிளம்புறேன்...” அவனிடம் சொல்லிவிட்டு திரும்பி நடக்க, அவளை நிறுத்தினான்.



“நீ என்ன காதலிக்குறியா?” அவனோ கைகளை கட்டிகொண்டு அவளை குறுகுறுவென பார்த்து கேட்க.



“அவனின் கேள்வியில் அவனை திரும்பி பார்த்தாள். ‘என்ன பார்க்குற... ஆமாவ... இல்லையா...’



“ஆமா... நான் உங்களை காதலிக்குறேன்...”




”ஆனா, நான் உன்னை காதலிக்கலை... எனக்கு உன்மேல காதல் வரலை... அப்புறம் எப்படி நான் உன்னை காதலிக்க முடியும்.”



“அவளோ, அவன் சொல்வதை கேட்டுவிட்டு மீண்டும் கிளம்ப எத்தனிக்கையில் ‘ இரு ஏன் போற... நான் இன்னும் பேசி முடிக்கலை’



“அவளோ பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவனும் அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்துகொண்டு பேசினான்.”


“உன் போன் நம்பர் என்ன.”


”********** அவள் சொல்லி முடிக்க.”



“இப்படி தான் எல்லாரும் கேட்டா உன் போன் நம்பர் கொடுப்பியா.”


“எல்லாரும் கேட்டா எப்படி கொடுப்பேன். உங்களுக்கும், என் ப்ரண்ட் சங்கவிக்கு மட்டும் தான் என் நம்பர் கொடுத்திருக்கேன்.” அவள் சொல்ல.



“எனக்கு காதலிக்க எல்லாம் தெரியாது தென்றல். ஆனா நீ என்னை காதலிக்குறேனு சொல்லுற. சரி நீ என்னை காதலிக்கலாம், ஆனா நானும் உன்னை காதலிக்கனும்னு எதிர் பார்க்கதா.” அவன் சொல்ல




‘அவளோ மனதில் ‘ நீங்க பெர்மிஷன் கொடுத்து தான் நான் உன்னை காதலிக்கனும் அவசியம் இல்லை. எப்போ உன்னை பார்த்தேனோ, அப்போவே முடிவு பண்ணிட்டேன் நீங்க தான் என் வாழ்க்கைனு.’ அவள் நினைத்து முடித்த பின் அவன் பேச்சில் கவனம் ஆனாள்.



“தினமும் என்கிட்ட பேசனும் தோணுச்சுனா பேசு இது தான் என் நம்பர்...” என அவன் போன் நம்பர் கொடுத்தான். ‘ஆனா, நான் உனக்கு போன் பண்ணமாட்டேன். நீ தான் எனக்கு போன் பண்ணனும்.’



“மெசேஜ் பண்ணனும்னா பண்ணு, ஆனா நான் திரும்பி மெசேஜ் பண்ணும்னு எதிர் பார்க்காத.”




”ஒவ்வொரு விசயமும் நீ தான் செய்யனும், நான் செய்யனும் எதிர்ப்பார்க்காத.”



”அவன் சொல்லிய அனைத்திற்க்கும் அவள் சரி, சரி என தலை ஆட்டினாளே தவிர அவனிடம் எதுவும் பேசவில்லை.”



“அவள் தலையாட்டிதை பார்த்து அவனுக்கு ’ உண்மையில என்னை காதலிக்குறாளோ, இல்லை இதெல்லாம் சும்மா நடிப்புக்காக செய்ய போறாளோ. அதையும் பார்க்கலாம் இவளின் காதல் இன்னும் எத்தனை நாட்கள் என்று.”



**********


ஏதோ ஒரு டென்ஷனில் அவளை திட்டிவிட்டான். அதன் பின் தான் அவளிடம் அப்படி கோவமாக பேசிருக்க கூடாது நினைத்து வருத்தப்பட்டான்.



‘ரொம்ப திட்டி்ட்டேன் அவளை... பாவம் என்ன செய்யுறாளோ. இப்போ மறுபடியும் போன் பண்ணா என்கிட்ட நல்லா தான் பேசுவா. ஆனா அதுல கொஞ்சம் வருத்தம் இருக்கும் அவளுக்கும்.’



முதல் முறையாக அவனே அவளுக்கு போன் செய்தான். இந்த முறை அவள் முதல் ரிங்கிலே போன் எடுத்துவிட்டு அமைதியாக இருந்தாள்.


’ஏதோ வேலை டென்ஷன்ல உன்கிட்ட கோவமா பேசிட்டேன் சாரி தென்றல்...’ அவன் குரலில் இருந்தது வெளிப்பட்டது உண்மையான மன்னிப்பு.



‘ இதுகெல்லாம் நான் எதுக்குங்க கோவம் படனும். உங்க டென்ஷன் தெரியாம நான் தான், பேசிட்டேன். உங்க டென்ஷன், கோவம், சந்தோஷம் இதெல்லாம் நீங்க என்கிட்ட தான காட்டமுடியும். நான் தான உங்க வருங்கால மனைவி, அதனால நீங்க வருத்தப்படாதீங்க தனுஷ்.’ அவளின் காதலை நொடிக்கு ஒவ்வொரு முறையும் அவள் நிருபித்துகொண்டிருந்தாள்.




’சரி... மறைக்காம ஒரு விஷயம் சொல்லு... நீ வருத்தப்படாலயா நான் கோவமா பேசுனதுக்கு’ அவன் கேட்க.



‘அவளோ, ரொம்ப வருத்தப்பட்டேன்... நீங்க பல சமயம் நேருல தான் என்கிட கோவப்பட்டுருக்கீங்க. அந்த கோவத்துலயும் நீங்க என் கண்ணை பார்த்து கோவம் படமாட்டீங்க. ஆனா இப்போ தூரத்துல இருந்து கோவப்படுறீங்க அது தான் ரொம்ப வருத்தமா இருக்கு.’



’அடிப்பாவி ஒவ்வொரு பொண்ணும் ஏன் டா என்மேல அடிக்கடி கோவம் படுறேனு பையன் சட்டையை பிடிச்சு சண்டை போடுவாங்க, ஆனா நீ தூரத்துல இருந்து கோவம் படுறீங்கனு வருத்தமா சொல்லுற.’ டென்ஷன் குறைந்து அன்று தான் அவளிடம் மனம் விட்டு இலகுவாக பேசினான்.




’உண்மை தான் ஒவ்வொரு பொண்ணும் சண்டை போடுவாதான் ஆனா உங்ககிட்ட அப்படி சண்டை போடுற எண்ணம் கூட எனக்கு இல்லை. நீங்க என்கிட்ட சண்டை போட்டாலும் நான் சண்டை போடும்னு எதிர்பார்க்காதீங்க’. முதல் முறையாக அவனிடம் ‘என்னிடம் சண்டையை எதிர் பார்க்காதே’ அவள் சொல்லியதும் அவனுக்கு பிடித்திருந்தது.




அவனுக்கு ஏன் தான் அவளைவிட்டு இப்படி தூரமாக இருக்கிறோம் என்று முதல் முறையாக வருத்தப்பட்டான்.



’இப்போ உங்க டென்ஷன் போயிருச்சாங்க.’



அப்பொழுது தான் உணர்ந்தான் அவன் மனம் கொஞ்சம் லேசாக இருந்ததை. ‘ ம்ம் ... போயிருச்சு.’




‘சரி நான் சாப்பிட்டு போன் பண்ணவா...’


‘சரி... மெசேஜ் பண்ணு, நான் கால் பண்ணுறேன்.’



‘ம்ம் சரிங்க..’



இருவருமே ஏதோ வானில் பறப்பது போன்ற உணர்வுகளில் இருந்தனர்.


தொடரும்……………..
 
Top