Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-7

Advertisement

praveenraj

Well-known member
Member
அவன் ரெடி ஆக சென்றுவிட சட்டென்று திரும்பி,"ஹே ஆதி எதுக்கும் நீ அந்த லேப் எடுத்து fb ஓபன் பண்ணு. என் ப்ரண்ட்ஸ் லிஸ்ட்ல ரேணுகா... ரேணுகா லவ்லினு இருக்கும் பாரு. அதுக்கு ஒரு மெஸேஜ் இந்தமாதிரி கிளம்பிட்டோம் போன் தண்ணில விழுந்துடுச்சு வந்துடுறோம்னு சொல்லி ஒரு மெஸேஜ் போடு..." என்று கூற அவளோ ஆன் செய்ததும் க்ரோமுக்கு சென்றவள்,"செழியா பாஸ்வர்ட் சொல்லு?" என்றவள் "இப்போ கண்டுபிடிக்குறேன் பாரு உன் கிரெஸ்ஸ... கமான் கமான்..." என்று அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் அவள் இருக்க ஆனால் ஒருகணம் செழியன் மனதில் ஒரு உணர்வு வந்துசென்றது மட்டும் நிச்சயம். அது சந்தோசமா இல்லை வருத்தமா என்று புரியவில்லை. ஆதிரா என்றதுடன் அவளின் பிறந்ததேதி- இதுதான் அவனின் எல்லாவிதமான அக்கௌன்டின் பாஸ்வேர்ட். அதற்குள் அவள் fb போக (வீட்டில் ப்ராட் பேண்ட் இருக்கு. இப்போ எதுக்கு இதுனா எப்படி fb ஆன் பண்ணுனானு நீங்க நெனைக்க கூடாதில்ல...) அது நேராகவே அவனின் அக்கௌண்டுக்குள் செல்ல,"ச்சே... மிஸ் ஆகிடுச்சே?" என்று உச்கொட்ட அவனுக்கோ அப்பாடா என்றிருந்தது.
"என்ன ஆதி உச் எல்லாம் பலமா இருக்கு?"
"போடா பிராடு..."
"நான் தான் லாக்அவுட் பண்ணி இருக்கவே மாட்டேனே?" என்று கூறி அவன் குளிக்கச் செல்ல,"செழியா ஜான் அண்ணா நைட் மெஸேஜ் பண்ணியிருக்காங்க. துபாய்ல இருந்து ஏறிட்டாங்களாம்..." என்றாள்.
"தெரியும் ஆதி. நான் போன்லே பார்த்துட்டேன்..."
அப்போது அவனுக்கு இன்னொரு இன்பாக்ஸ் வந்திருப்பதைக் காட்ட யாராக இருக்கும் என்று பார்க்கத் துடித்தது அவள் மனம். மெல்ல கர்சரை கொண்டுபோக நிவேதிதா சந்திரமௌலி என்றிருக்கவும் திரும்பி அவன் வருகிறானா என்று எட்டிப் பார்த்தவள் அதைத் தெரிந்துக்கொள்ளும் ஆவலில் க்ளிக் செய்ய அது முழுக்க லவ் ப்ரொபசல்ஸ், கெஞ்சல் கொஞ்சல் மொழிகளாகவே இருந்தது.
'இளா, ஜஸ்ட் கிவ் மீ ஒன் சான்ஸ். ஐ'ல் ப்ரூவ் மை லவ் டு யூ...' என்று இப்படி நிறைய நிறைய இருந்தது. ஆனால் அவையாவும் இதுவரை ஓபன் கூடச் செய்யப்படவில்லை. 'யாரவள்? எப்படி இருப்பாள்?' என்று ஆதிராவுக்குத் தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருந்தது. அவனின் ப்ரொபைலிலே அவளைத் தேட அவளைப் பார்த்தமாத்திரத்தில் ஏனோ ஆதிராவுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவள் பார்க்க லட்சணமாகவே இன்பேக்ட் செழியனுக்கு மிகப் பொருத்தமாகவும் கூட இருந்தாள் தான். ஆனால் ஏனோ அவளை அவனோடு பார்க்க அவளுக்குள் கசந்தது. அது ஏனென்று தான் புரியவில்லை!
அப்போது தான் சரியாகக் குளித்துமுடித்து வெளியே வந்தவன் தலை துவட்டிக் கொண்டிருக்க உடனே அவனை ஒருகணம் நிமிர்ந்துப் பார்த்தாள். அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன்,'என்ன?' என்பது போல தலை ஆட்டி வினவ 'ஒன்னுமில்லை' என்பது போல இவள் உதட்டைச் சுளித்தாள். ஏதோ ஞாபகத்தில் ரெப்பிரேஷ் கொடுக்க நியூஸ்பீட்ஸ்ல் முதல் செய்தியாய் 'இளங்கோ ஸ்ரீனிவாசன்' என்று காட்ட அதில் 'லஞ்ச் வித் மை லவ், மை லைஃப்...' என்று ஸ்டேட்டஸுடன் அவனருகில் ஒரு பெண் நிற்பதைக் கண்டு ஒரு கோபம், எரிச்சல், வெறுப்பு, அழுகை எல்லாமும் அவளுக்கு ஒருசேர வர அந்தக் கடுப்பில் லேப்பை க்ளோஸ் செய்ய அப்போது சரியாக செழியன் வெளியே வந்து,"ரிப்ளை பண்ணாளா?" என்றான்.
ஆதிராவுக்கு தான் என்னவோ போலிருக்க அவள் தலை மட்டும் மறுப்பாக அசைத்தாள்.
"அப்றோம் ஏன் ஆப் பண்ற? பாரு" என்று சொல்ல மீண்டும் அதற்கு உயிர்கொடுக்க இப்போதும் அதே ஸ்டேட்டஸ் காட்ட, இப்போது அந்தப் புகைப்படத்தில் அருகிலிருக்கும் அப்பெண்ணை நன்கு அளவெடுத்தாள். ஆனால் இப்போது அவளுக்கு எவ்வித பொசெசிவும் இல்லை. சொல்லப்போனால் நிவேதிதாவைப் பார்த்தபோது கூட அவளுக்குள் எழுந்த ஒரு உணர்வு இப்போது ஏனோ வரவில்லை.
"என்ன ஆதி ஒரு மாதிரி இருக்க? நோட் பண்ணிடையா?"
"ஹ்ம்ம்" என்று மட்டும் வந்தது பதில்.
ப்ளூ ஜீனில் மஞ்சள் டீ -ஷர்ட் அணிந்து இருந்தவனைப் பார்த்த ஆதிரா,"எப்போ இருந்து மஞ்ச கலரு சிங்குச்சான்னு போட ஆரமித்த செழி? உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே உன் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் தானே செழியா?"
"ஏன் ஆதி நல்லா இல்லையா?" என்றவன் தன்னையே மேலும் கீழுமாக ஒருமுறை அளவெடுத்தான்.
"அப்படியெல்லாம் இல்ல... நல்லா ட்ரெண்டியா தான் இருக்கு. நேற்று நீயொரு டீ ஷர்ட் போட்டிருந்த தானே? காலேஜ் லைஃ செக்லிஸ்ட் பீர், ப்ரோக்ஷி, காபியிங் இப்படினு அது எதுவுமே உனக்கு செட் ஆகாதே? எப்பல இருந்து இப்படி மாற ஆரமித்த செழி?"
"ஹே அது ஜான் வாங்கிக் கொடுத்தது. என் பர்த்டேக்கு..."
"அதானே பார்த்தேன்? நீயாவது மாறுறதாவது?" என்று கிண்டலாய்ப் பார்த்துச் சிரிக்க,
"பட் நீ ரொம்ப மாறிட்ட ஆதி. உன் இஷ்டத்துக்கு எல்லோரையும் கலாச்சிட்டு, கலகலவென சிரிச்சிட்டு, ரொம்ப பிரீயா, ஜாலியா... மை ஆதிரா வாஸ் எ சேட்டர் பாக்ஸ் (chatter box), ஃபன் லவ்விங் (fun loving) ஜோவியல் கேர்ள். ஆனா இப்போ?"
அவன் இப்படிப் பேசியது ஏனோ ஆதிராவுக்கு ரொம்ப இதமாக இருந்தது. நம்மை இந்தளவுக்கு இவன் நோட் பண்ணியிருக்கானா என்று ஆவல் எழ அதேநேரம் அவன் கேட்டது என்னவோ செய்ய, பேச்சை மாற்ற எண்ணி,"செழி டைம் ஆகுது. வா வீட்டைப் பூட்டு..." என்று பேச்சை மாற்ற புரிந்தவன் கீழே பார்க்கிங் லாட் வந்தனர்.
காரில் ஏற அது பெட்ரோல் கம்மியாக இருப்பதாய்க் காட்டவும் அவன் வண்டியைக் கிளப்பினான். அவளோ ஒரு குர்தா டாப் அணிந்திருந்தாள். அவளின் நிறத்தை நன்றாகவே தூக்கிக்காட்டுமாறு அடர் நீலத்தில் இருக்க ஒப்பனைகள் எதுவுமே இல்லாமலே ரம்மியமாய் இருந்தாள் ஆதிரா. அவளுக்கு எப்போதும் மேக்அப் போடுவது சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அவளுக்கு ஒப்பனைகள் என்பதே தேவையில்லை என்பது வேறு கதை!
'ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாலே...' என்ற பாடலில் வரும் வரிகள் அவளுக்கு கனகச்சிதமாய்ப் பொருந்தும். அதிலும் குறிப்பாக, அவள் கடந்திடும் போது நிச்சயமாய்... தலை அனிச்சையாய் திரும்பும் அவள் புறமாய்... என்ன சொல்ல?என்ன சொல்ல? இன்னும் சொல்ல மொழியினிலே வழியில்லையே?...' என்ற வரிகளுடன் இருக்கும் அவனின் மோஸ்ட் பேவோரைட் சாங் இது. அவளால் இப்பாடல் பிடிக்குமா? இல்லை இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவளின் நினைவு வருவதாலோ என்னவோ என்றும் அவன் அறியான். 'இன்னைக்கு என்ன ஆனாலும் அவகிட்டப் பேசிடனும். அவள் வாழ்க்கையைச் சரிசெய்யனும்...' என்று நினைத்துக்கொண்டவன் எதுவும் பேசாமல் யோசனையில் இருந்தான்.
"ஹே நேத்தே கேட்கணும்னு நெனச்சேன், காரெல்லாம் வெச்சியிருக்க? புது வீடு புது காரு கலக்குறே செழி பிரமாதம்..." என்று சொல்ல 'கலக்குறே சந்துரு' விளம்பரம் ஏனோ இருவருக்கும் நினைவுக்கு வந்தது. இருவரும் அர்த்தமாய்ச் சிரிக்க,
"கொஞ்சம் கண்ணாடியைப் பாரு ஆதி..." என்று சொல்ல அதில் eve mariye என்றிருக்கவும்,"வண்டி ஜானோடது. நானாவது கார் வாங்குறதாவது? என்னைப் பத்தி தெரிஞ்சும் என்ன கலாய்க்கற? நானே எங்கப்பா பென்ஷன் என் சேலரி வெச்சி குடும்பம் நடத்த திண்டாருறேன். நீ வேற? நான் ஒன்னும் ஆதிரா இல்ல. எங்கப்பா ஒன்னும் ஜெகநாதன் இல்ல பட்டு ஆலை வெச்சி நடத்த..." என்று சொன்னவன் ஏதோ தவறாய்ச் சொன்னதாய் நினைத்துத் திரும்ப, அவளோ எதுவும் பேசாது ஜன்னலை வெறித்துப் பார்த்தாள்.
"ஹே உன்கிட்ட ஒன்னு கேட்கணும்... நீ இந்தியா வந்தது உன் வீட்டுக்கு..." என்று இழுக்க, அவளோ இவன் புறம் திரும்பி,"இல்லை" என்று சொல்ல சட்டென பிரேக்கை அழுத்தினான்.
"என்னாச்சு செழி?"
"உண்மையிலே சொல்லலையா?"
"இல்ல..."
"அப்போ வீட்டுக்குக் கூடச் சொல்லாம என்ன நெனப்புல தைரியத்துல வந்த ஆதிரா? அப்படி என்னடி ஆச்சு யூஎஸ்ல? இப்போ அங்கிள் உன்னை எப்படி கான்ட்டேக்ட் பண்ணுவாரு?" என்று அடுக்கடுக்காய்க் கேள்விகளை அடுக்க அவளோ கூலாக,"வா சாயுங்காலம் தான் வீட்டுக்கு போன் பண்ணனும். என்ன சொல்லறதுனே தெரியில. சொன்னா எப்படி எடுத்துபங்கனே தெரியாது..." என்று சொன்னவளை ஏதும் புரியாது விழித்தான் செழியன்.
"நீ ஒன்னும் பயப்படாத செழியா. எல்லாம் சாயுங்காலம் சொல்றேன். தயவு செய்து என் மூடை ஸ்பாயில் பண்ணிடாத... ரொம்ப நாள் கழித்து கொஞ்சம் நிம்மதியா எக்ஸைட்டா இருக்கேன். ஐ வானா என்ஜோய் இட் கம்ப்ளீட்லி (நான் இதை முழுவதும் அனுபவிக்கனும்) போலாம் ரைட்..." என்று சொல்லி விசில் அடிக்க அவளின் இந்தப் பதிலில் நிறைய குழம்பினாலும் 'நேற்று வந்ததிலிருந்து மந்திரித்து விட்ட கோழி மாதிரி இருந்தா? இப்போதான் கொஞ்சம் தெளிவா இருக்கா. எதுனாலும் சாயங்காலம் பார்த்தலாம்...' என்று நினைத்து வண்டியைச் செலுத்தினான். ஈசியார் வழியில் இருந்த அந்த ரெஸ்டாரண்டின் நுழைவாயிலை தாண்டி வண்டியை நிறுத்தினான் செழியன்.
இதுவும் அடுத்தும் கொஞ்சம் ஸ்லோவாக தான் போகும். 9 த் ல இருந்து 11 வரை நிறைய சம்பவங்கள் இருக்கு. வெய்ட். இந்த நாள் அவர்கள் வாழ்வில் மிக நீண்ட நாள். அதுக்கு தான் ஸ்லோவா போறேன். நான் முன்னே சொன்னது மாதிரி இது நான்கைந்து வருடத்திற்கு முன்னால் எழுதியது. அப்படியே தருகிறேன் எதையும் மாற்றாமல் .. இப்போது கூட நான் மாற்றலாம் .. ஆனால் வேண்டாம் . அப்படியே இருக்கட்டும் .

மக்களே எல்லோரும் மன்னிச்சிடுங்க. வாழ்க்கை என்பது முரண்கள் நிறைந்த ஒன்று என்பதை மீண்டும் சொல்லிவிட்டது. முதலில் நெட் ப்ரப்ளேம். பிறகு அண்ணனுக்கு பெண் பிறந்து அதைப் பார்க்கச் சென்றேன். நேற்று நான் பெரிதும் எதிர்பார்த்த sbi po final result வந்தது. cutoff 45.09 நான் எடுத்தது 44.94. வெறும் 0.15 யில் அந்த வேலையை இழந்துவிட்டேன். அதை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. திரும்ப எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரமிக்கணும்னு நினைக்கும் போதே சொல்லமுடியாத ஒரு நிலை...
 
வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் ,அதை விட பெரிதாக நமக்கு கிடைக்கும்... ???
தொடந்து முயற்சி செய்யுங்கள் ? ? ?

So don't worry brother......??



My hubby , 10 th mark க்கு ITI யில் seat கிடைக்காமல் 11 th commerce எடுத்து வெறியா படித்து CA pass பண்ணவர்....

" காத்து இருப்பவர்கள் எத்தனைபேரோ உன்னிடம் தோற்பதற்கு....."
தொய்வின்றி உங்க முயற்சி யை தொடருங்கள்.....

????????
 
don’t worry.....
விடா முயற்சித்தான் வெற்றித் தரும்..
அல்ரெடி ஹார்ட் வொர்க் பண்ணியிருக்கீங்க..
அடுத்த முறை வெற்றி கிடைக்கும்...உங்களை நம்புங்க..பிரவீன்
(y):)
 
வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் ,அதை விட பெரிதாக நமக்கு கிடைக்கும்... ???
தொடந்து முயற்சி செய்யுங்கள் ? ? ?

So don't worry brother......??



My hubby , 10 th mark க்கு ITI யில் seat கிடைக்காமல் 11 th commerce எடுத்து வெறியா படித்து CA pass பண்ணவர்....

" காத்து இருப்பவர்கள் எத்தனைபேரோ உன்னிடம் தோற்பதற்கு....."
தொய்வின்றி உங்க முயற்சி யை தொடருங்கள்.....

????????
hope? thank you so much for your kind words...
 
Top