Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-4

Advertisement

praveenraj

Well-known member
Member
மீனம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட காரானது பல்லாவரம், குரோம்பேட் கோவிலம்பாக்கம், வழியாக சிறுசேரியை வந்தடைந்தது. அங்கிருக்கும் ஒரு பிரபலமானஅபார்ட்மென்டின் வாசலில் நுழைந்து டவர் 3ஐ நோக்கிச் சென்று அங்கிருந்த அவன் பிளாட்டின் கார் பார்க்கிங் லாட்டில் தன் என்ஜினின் உயிரை மாய்த்துக்கொண்டது. அவளோ வண்டி புறப்பட்ட ஒரு பத்து நிமிடங்களுக்குள் தலையை சீட்டில் சாய்க்க ஆரமித்தவள் நல்லதொரு உறக்கத்தில் வியாபித்திருந்தாள். ஏனோ அவளை எழுப்ப மனமில்லாது கொஞ்ச நேரம் அப்படியே அவளை வெறித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தான். அவளை இத்தனை நெருக்கத்தில் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது? அதே குண்டு கண்கள், சற்று பூசிய உடல் தேகம், பாலின் நிறமும் அல்லாமல் கடுகின் நிறமும் அல்லாமல் கருப்பட்டி நிறமாய் ஜொலித்தவளை ஏனோ அவனுக்கு ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றியது. கடந்த முறை பார்த்ததைக் காட்டிலும் கொஞ்சம் சதை போட்டுவிட்டாள். முகத்தில் கொஞ்சம் முதிர்ச்சி வந்திருந்தது அதாவது அவன் பார்த்த பால்வண்ண பிள்ளை இல்லை அவள். என்ன சொல்ல அவனை விட்டால் இந்த ஜென்மம் முழுவதும் இப்படியே அவளை ரசித்துக் கொண்டிருப்பான். அவன் கண்கள் அவள் முகத்தைத் தாண்டி எங்கேயும் செல்ல வில்லை. என்ன சொல்ல? நம்மால் எவ்வளவு முயன்றாலும் சிலரை அவர்களின் கண்களைத் தாண்டி எங்கேயும் பார்க்கத் தோன்றாது அல்லவா? அப்படித் தான் இவள் இவனுக்கு. வண்டி நின்று இவ்வளவு நேரம் அவளை இவன் ரசிப்பதைக் கூடத் தெரியாமல் உறக்கத்தில் இருப்பவளை நினைத்து அவனுக்கு மனம் கனத்தது. என்னவாக இருக்கும்? என்று மனம் குழம்பியது. ஜெயின்ட் வீலில் உச்சியிலிருந்து கீழே பார்க்கும் போது நம்முள் ஒரு பதைபதைப்பு இருக்குமே? அது தான் கடந்த மூன்று மணிநேரமாக அவனின் நிலை. எதற்கும் அசராமல் தில்லாகவும் கெத்தாகவும் சுற்றித் திரிந்தவள் இன்று இப்படி இருப்பதை நினைக்க அவனுக்கு ரொம்பவும் வலித்தது.
அவளோ உறக்கத்தில் சற்று அசைய சுயம் பெற்றவன்,"ஆதி... ஆதிரா? ஆதிரா..." என்று சொன்னான். அவளைத் தொடச்சென்ற கைகள் கூட ஏனோ நடுங்கியது. என்னதான் இரண்டு தங்கைகளுடன் வாழ்ந்திருந்தாலும், ஆதிராவுடன் பல வருடங்கள் ஒன்றாய் பழகியிருந்தாலும் ஒரு பெண்ணை இவனாகத் தொட்டுக் கூடப் பேசியது இல்லை. சும்மா கூட அவன் நெருங்காததால் இப்போது அவளைத் தொடவே அவனுள் ஒரு தயக்கம் எழுந்து அடங்கியது. (இப்படியும் பசங்க இன்னமும் இருக்காங்க. நம்புங்க!) கைகள் கிட்டப் போக அவளாவே கண்களைக் குறுக்கிப் பார்த்து விழித்தவள்,"வீடு வந்திடுச்சா?" என்று கேட்டு சுற்றிப் பார்த்தவள் இறங்கினாள்.
அவள் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு கையிலிருந்த கார்டை கொண்டு அபார்ட்மெண்ட் வாயிலைத் திறந்து லிப்ட் இருக்கும் வலதுபுறம் நோக்கி விரைந்தான். 'அப்பாடா லிப்ட் கிரௌண்ட் ப்ளுரோர்ல இருக்கு டா சாமி' என்றவன்,"வா" என அழைத்து எட்டாவது எண்ணை அழுத்த,"எயித் ப்லோரா செழி?" என்று வினவியவளுக்கு,
"8d..." என்று சிரித்தவன் லிப்ட் நின்றதும்,"வா..." என சொல்லி இடதுபுறமாக அவளை அழைத்துக்கொண்டு 'லலிதா குமாரசாமி' என்று பொறிக்கப்பட்டிருந்த பிளாட்டிற்குள் சாவியை நுழைத்தான்.
அவள் அந்தப் பெயர் பலகையையே பார்த்துக்கொண்டிருக்க,"என்ன பார்க்கற? வாடகை தான் தாயி. இவ்வளவு பெரிய பிளாட் வாங்கணும்னா நான் இன்னும் 20 வருஷம் உழைக்கணும்..." என்று சொல்லி கண் சிமிட்டி அவளை உள்ளே அழைத்தான் செழியன்.
"ஹே நான் வந்ததுனால உனக்கு ஏதும் ப்ரோப்லேம் வருமா? வரும்னா சொல்லு நான் வேற எங்கேயாவது..." என்று கூறும் முன்னே உரிமையுடன் அவளின் வாயைப் பொத்தியவன்,"வாடகை தான். ஓனர் துபாய்ல இருக்காரு. மோரெவர் மாசம் ஆனா சுளையா 13000 தரேன். சோ டோன்ட் ஒர்ரி. எவனும் கேள்வி கேட்க முடியாது..." என்று என்னதான் அவ்வளவு கெத்தாக கூறினாலும் கதவைத் தாழிடும் வரை அவனுக்குள் இருந்த கிலியை யாரும் உணர்ந்திருக்க முடியாது. பின்னே இந்த அபார்ட்மெண்டில் செழியன் என்றால் எல்லோருக்கும் பரீட்சயம் ஆச்சே? அவனின் சாதுவான குணத்தாலும், ஒழுக்கத்தாலும் கிடைத்தது அப்பெயர். பின்னே மூன்று வருடங்களாக இங்கே இருக்கிறான் அல்லவா?
லைட்டை ஆன் செய்ய மணி 12 .20 என்று காட்டவும் ஏனோ ஞாபகம் வந்தவனாய்,"ஹே ரிமோட் எடு ரிமோட் எடு..." என்று பதறியவன்,"இன்னைக்கு முக்கியமான மேட்ச் இருக்கு. ரியல் மேட்ரிட் (real madrid vs barcelona) பார்சிலோனா ரெண்டு டீமுக்குமான மேட்ச்..." என்றவன் போட்டி ஆரமித்து இருவது நிமிடங்கள் ஆகியும் இன்னும் இரு அணிகளும் கோலேதுமின்றி போராட,"அப்பாடா..." என்று ஏதோ சாதித்தவன் போல் பெரு மூச்சு விட்டவனைப் பார்த்து வியந்தாள் ஆதிரா.
"செழி, தண்ணீர் எங்க இருக்கு?" என்றவுடன் தான் நிகழ் காலத்திற்கு வந்தவன் தலையில் கைவைத்து முகம் சுளித்து கெஞ்சும் தோரணையில்,"ஹே சாரி டா. சாரி பா. டக்குனு இன்னைக்கு மேட்ச் ஞாபகம் வந்துடுச்சி அதான் உன்னை மறந்துட்டேன்..." என கூறி அவசரமாக கிட்சன் புகுந்தவன் தண்ணீர் கேனை பாகுபலி பிரபாஸ் போல தோளில் ஏந்தி வந்து ஜக்கில் நிரப்பி அவளுக்குக் கொடுக்க,'ஹே இட்ஸ் எ கோல்...' என்ற சப்தம் கேட்டு வேகமாய் வெளியே வந்து டிவியை பார்க்க லூக்கா மாட்ரிக் என்றதும் என்னவோ இவனே கோல் அடித்ததைப்போல் ஆரவாரம் செய்தான்.
இப்படி செழியைப் பார்த்ததும் அவளுக்கு சிறுவயது ஞாபகம் வந்தது. பொதுவாகவே அவன் ரொம்ப அமைதியானவன். எதையும் பெருசாக வெளி காட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் விளையாட்டு என்று வந்தால் மட்டும் இதுபோல் 'ஹைப்பர்' ஆகிவிடுவான். அதை நினைத்துக்கொண்டிருக்க அதற்குள் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க அதைப் பார்த்தவன் முகம் சோகமாய் மாறியது/
"ஏன்டா மெஸ்ஸி பிடிக்காதா?" என்றவளை ஆச்சரியமாகப் பார்த்து,"உனக்கு புட்பால் பிடிக்குமா? மெஸ்ஸி பேனா?" என்றதும்
அவளோ,"சே சே... யு.எஸ்ல இருக்கும் போது அன்னைக்கு அவன் இதைத்தான் பார்த்தான். அவன் மெஸ்ஸி பேனாம். அவனைப் பற்றி எனக்குத் தெரிஞ்ச ஒரே விஷயம் இதுதான்..." என்று அவள் சாதரணமாகச் சொல்ல,
இப்போது என்ன பிரச்சனை என்று இவன் கேட்க நினைக்கும் முன்னே,"செழி நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். ஜெட் லேகா இருக்கு..." என்றதும் அவன் புரிந்தவனாய் உடனே ஜானின் அறைக்குச் சென்றவன்,"எருமை, பன்னி... ரூமை பாரு எப்படிப் போட்டுட்டுப் போயிருக்கான்... லூசு..." என்று அவனுக்கு வரம் கொடுக்க,
"நீ மாறவேயில்லை செழியா... அப்படியே இருக்க. அதே பர்ப்பெக்சன். சுத்தம் சம்மந்தப்பட்ட விசயத்துல அதே கோவம்... வீடெல்லாம் சூப்பரா மெயின்டெய்ன் செஞ்சு இருக்க. பேச்சிலர் ரூம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க..." என்று சொல்ல, அவன் சிரித்தபடியே அவளை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றவன்,"இத யூஸ் பண்ணிக்கோ ஆதி..." என்றான்.
அதைப் பார்த்தவள் அது கிளீனாவும் நீட்டாகவும் இருக்க,"உன் ரூமா?" என்று சுற்றிப் பார்த்தவள் சுவற்றில் அவனின் அப்பா புகைப்படத்தைப் பார்த்து அதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டாள். அதையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தாள்.
"இங்க படுத்துக்கோ ஆதி. கதவை வேணுனா லாக் பண்ணிக்கோ... குட் நைட்..."
அவளோ அவனையே பார்த்துக்கொண்டு பெட்டில் சரிந்தாள்.
"ஆதி பால் ஏதாவது குடிப்பியா?" என்றவனுக்கு,
"ஹம்ம்ஹூம்..." என்றவள் போர்வையை இழுத்துப் போர்த்தி படுத்தாள்.
"டோர் லாக் பண்ணலயா ஆதி?"
"உன் மேல நம்பிக்கை இல்லைன்னா நீ கூப்பிட்ட உடனே ஏன் எதுக்குன்னு எதையுமே யோசிக்காம வந்திருக்க மாட்டேன் செழி... என்னதான் எனக்கு இந்நேரத்துல வேற ஆப்சனே இல்லைனாலும்... உன்னைத்தவிர வேற யார் கூப்பிட்டு இருந்தாலும்..." என்று மறுப்பாகவே தலையசைத்து கண்களை மூடி பதிலளித்தவளை ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்து நின்றவனுக்கு,
கண்களைத் திறக்காமலே,"குட் நைட் செழி. லைட் ஆப் பண்ணிட்டுப் போ டா..." என்றவள் பெட்ஷீட்டை எடுத்து தன் உடலுக்குத் திரையிட்டாள்.
கதவைச் சாத்தியவன் அவள் சொன்ன அனைத்தையும் யோசித்துக்கொண்டிருந்தான். இப்போது மீண்டும் மரினோ கோல் போட ஏனோ அதைப் பார்த்தும் ஆரவாரம் ஏதும் செய்யாமால் ஒரு யோசனையில் மூழ்கினான் செழியன். அவனால் இன்னமும் கூட இதை நம்ப முடியவில்லை. ஆதிராவை திரும்ப ஒருமுறையேனும் பார்த்துவிட மாட்டேனா? பேசிவிட மாட்டேனா? என்று இந்த எட்டு மாதங்களாய் அவன் நினைக்காத நாளில்லை. என்ன தான் அவன் அவளைப் பார்த்து ஐந்து வருடங்கள் ஆனபோதும் அடிக்கடி அவளைப்பற்றி தன் அன்னையோ இல்லை காஞ்சனாவோ யாரேனும் சொல்லக்கேட்டு அவளை அடிக்கடி நினைத்துக்கொள்வான் செழியன்.
இப்படி ஒரு நாள் கூட அவன் ஆதிராவைப் பார்க்காமலும் பேசாமலும் இருக்கமுடியுமா? என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இந்த ஐந்து வருடங்களை அவளில்லாமல் அவளைப் பார்க்காமல் பேசாமல் கடத்துவோம் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை. அதேபோல் இப்படி திடீரென அவன் முன் வந்து நிற்பாள் என்பதும் அவன் எதிர்பாராதது. "மச்சி ஏதோ சரியில்ல, கொஞ்சம் பார்த்துக்கோ..." என்று தற்சமயம் அவன் மனதிற்குள் ஏனோ ஜான் சொன்னது தான் ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது. என்னவாக இருக்குமென்று குழம்பியபடியே இருந்தான் செழியன். (தொடரும்...)
 
'96 inspiration a?
ஆனாலும் அநியாயம் இது...
கார்ல இருந்து இறங்கி, தூங்கப் போக ஒரு எபியா...?
பகுதி1, பகுதி 2 னு போட்டீங்கன்னா
கதைக்குள்ள போக வசதிநா இருக்கும்....
 
'96 inspiration a?
ஆனாலும் அநியாயம் இது...
கார்ல இருந்து இறங்கி, தூங்கப் போக ஒரு எபியா...?
பகுதி1, பகுதி 2 னு போட்டீங்கன்னா
கதைக்குள்ள போக வசதிநா இருக்கும்....
i wrote this in 2016. no 96 impact... wait till tmrw. from tmrw i'll give lenghty one... thank you??
 
Top