Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-3

Advertisement

praveenraj

Well-known member
Member
அவனின் அந்த ஆத்மார்த்தமானப் பேச்சில் கொஞ்சம் உள்ளம் சிலிர்த்தாலும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்றும் எதனால் அவள் அவனுக்கு இவ்வளவு ஸ்பெஷல் என்று சொல்லுகிறான் என்பதையெல்லாம் உணரும் நிலையில் அவள் இல்லை. அவன் வண்டியை ஏர்ப்போர்ட்டிலிருந்து வீட்டிற்குக் கிளப்பினான்.

"சரி சரி... அதை விடு, அம்மா தங்கைங்க எல்லாம் எப்படி இருக்காங்க? காஞ்சனாவுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்குனு கேள்விப்பட்டேன்? இனியா எப்படி இருக்கா?"என்றாள் ஆதிரா.

"ஹ்ம்ம் பையன் பேரு அருள்மொழி..." என்றவன் சிரித்து,"ரொம்ப சுட்டி..."

"டேய் இதென்ன போங்கு? உன் குழந்தைக்குத் தானே அருள்மொழினு வெக்கப் போறேன்னு சொன்ன? இப்போ என்னடானா காஞ்சனா பையனுக்கு வெச்சிட்ட?"

"90ஸ் கிட் ஆன எனக்கெல்லாம் கல்யாணம் ஆகுதோ இல்லையோ... அதுதான் மருமகனுக்கே அந்தப் பெயரை வெச்சிட்டேன்..." என்றவன் மீண்டும் சிரித்தான்.

"உனக்கென்னடா செழி குறைச்சல்? நீ வேணுன்னா பாரேன், நான் தான் செழியைக் கட்டிப்பேன்... இல்லை நான் தான்னு உனக்கு பொண்ணுங்க கியூ கட்டி நிற்கப் போறாங்க..." என்று சொன்னவள் அவளையும் அறியாமல் சிரிக்க அதை ரசித்தவன்,

"பாத்தியா? சொல்லும்போதே உனக்குச் சிரிப்பு வருது... ஏம்மா பொய்யானாலும் ஒரு நியாயம் வேணாமா சொல்லு?..."

"நீ வேணுன்னா பாரு இது நடக்கும். நடந்தே தீரும். உன்னையெல்லாம் யாராவது வேண்டாம்னு மிஸ் பண்ணுவாங்களா டா? அளவெடுத்து செஞ்சாலும் இப்படி ஒரு பீஸ் கிடைக்காது..." என்றவள் மீண்டும் சிரிக்க,

'சொல்லிட்டாளே...' என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், அவளை ஏக்கமாய் ஒரு பார்வைப் பார்த்தான். இருந்தும் இப்போது அவள் முகத்தில் இருக்கும் ஒரு தெளிவு உற்சாகம் பொய்யில்லை என்றும் இது இனிமேல் அப்படியே இருக்கவேண்டும் என்றும் மானசீகமாய் வேண்டிக்கொண்டான்.

"ஆமா இனியாவைப் பற்றிக் கேட்க மறந்துட்டேன்?"

"இனியாவுக்குத் தான் பிக்ஸ் ஆகிடுச்சு. ஏக்சுவல்லி இப்போ ஜான் போறானே ஆன்சைட் அது நான் தான் போகவேண்டியது... அவ கல்யாணத்துக்காகத் தான் நான் போகாம எனக்கு பதிலா ஜான் போறான்..."

"ஹே அப்போ உன் ரூட் க்ளியர்னு சொல்லு? அடுத்து உனக்கு தான் டும் டும் டும்..."

அவள் சொன்ன தொனியில் அவனுக்கே வெட்கம் வர நெளிந்தான் செழியன்.

"ஏ ஏ ஏ வெட்கத்தைப் பாரு... வெட்கத்தைப் பாரு..." என்று அவனை கிண்டல் செய்தவளிடம்,

"சும்மா இருடி..." என்று அவள் கையைத் தட்டிவிட்டான்.

"செழி ஒரு உண்மை சொல்லட்டா?"

"என்ன?"

"இந்த உலகத்துலயே அழகு ஆண்கள் வெட்கப்படுவது தான்... அதுலயும் நீ சான்ஸ் லெஸ் போ..."

அவனுக்கு மேலும் கூச்சம் வர, தன் கையால் முகத்தை மூடியவன்,"அமைதியா வாயேண்டி. வண்டியை எங்கேயாவது கொண்டுபோய் விட்டுடப் போறேன்..."

"கல்யாணம் தான் சொர்க்கத்துல நிச்சயிக்கப் படுதாம்... பத்திரிக்கை மட்டும் இங்க அச்சடிக்கப் படுதாம்... சம்மதம் கேட்காமலே இங்க சம்மந்தம் பேசுறாங்க... மனங்களைப் பார்க்காமலே திருமணங்கள் செய்யுறாங்க..." என்ற டி ஆரின் பாடல் ஒலிக்க அவள் முகம் கன்றுவது தெரிந்து அவளை விழித்தான்.

அவளோ சில மௌனங்களுக்குப் பிறகு,"இளங்கோ எப்போ ஜகா வாங்குனானோ அப்ப ஆரமித்த பீடைடா... என் வாழ்க்கையில இன்னமும் தொடருது. நடுவுல அம்மா இழப்பு..." என்றதுமே அவன் திடுக்கிட்டான். ஆம் அதே ஊரில் இருந்தும் அந்த விஷயம் அவன் காதுக்கு அப்போது தெரியவில்லை. இறுதியாக அவரை ஒருமுறைப் பார்த்திருந்தால் அவன் மனம் சற்று அமைதியாகி இருக்குமோ என்னவோ? நல்ல மனிதர் ஆச்சே?

இவன் மும்பைக்குச் சென்றிருந்த போது நிகழ்ந்தது அது. ( அதுதாங்க அவன் மேனஜர் பேண்டுக்குள்ள பட்டா பட்டி போடுற ரகசியத்தைக் கண்டுப்பிடித்தானே அப்போது...)

"இந்தச் சொந்தக் காரனுங்க இருக்கானுங்களே... @#$%^&* தான் டா அவனுங்க..." என்று ஆதிரா சொன்ன வார்த்தையில் அதிர்ந்து அவன் வண்டியை சடன் பிரேக் போட்டான்.

"தான் நல்லா இருக்கோமோ இல்லையோ, அடுத்தவனுங்க நல்லா இருக்கவே கூடாதுனு கங்கணம் கட்டிக்கிட்டுத் திரிவானுங்க போல? எங்கப்பா கூட கடைசி வரைக்கும் உறுதியாகத் தான் இருந்தார். மே பி அப்படியே இருந்திருந்தா கூட நான் இன்னைக்கு உனக்கு இப்படிக் கஷ்டத்தைக் கொடுத்திருக்க மாட்டேனோ என்னவோ?..."

"ஆனாலும் இளங்கோ உன்னமாதிரி இல்லை செழி..." (அவளின் 'செழி' என்ற விளிப்பு அவனுக்கு எப்போதும் அருவியிலும் மழையிலும் நனையும் பொழுது ஏற்படும் ஒரு சிலிர்ப்பைத் தரும். பின்னே 'ழ'கரத்தை ஒழுங்காக உச்சரிக்கும் வெகு சிலரில் அவளும் ஒருவள். அதுவும் இந்த ஜான் பையன் இருக்கானே அவனுக்கு சுட்டுப்போட்டாலும் 'ழ'கரம் வராது. செலி செலி னு சொல்லி அவனைச் சாவடித்து விடுவான்...)

"செழி, ஒரு பிரச்சனைன்னு வரும் போதுதான் மனிதர்களோட உண்மையான கலர் வெளிய வருது. அவன் அதுவரை போட்டிருக்கும் மாஸ்க் கிழிந்து யாரவர்கள்? அவர்களின் உண்மையான முகம் எது? அவர்களின் எண்ணமெது என்பது எல்லாம் தெளிவாப் புரியும். இப்படிப்பட்டவங்க கூடத் தானா இவ்வளவு நாள் நாம உண்மையா ஒன்னுமண்ணா பழகினோம்னு நினைக்கும் போது ஒரு வெறுப்பு வரும் பாரு... திரும்ப நாம யாருகிட்டயாவது பழையபடி உண்மையா அன்போட எதார்த்தமா பழக முடியுமா சொல்லு? அப்படியே பழகினாலும் இவனும் எப்போடா அவன் மாஸ்க்கை கழட்டுவானு ஒரு பயம் நமக்குள்ள இருந்துட்டே இருக்கும். அப்பப்பா..." (பாவம் அவளைச் சுற்றி பின்னப்பட்டு கொண்டிருக்கும் மாய வலையைப் பற்றி தற்போது அவளுக்குத் தெரியாது. அது மிக மிக விரைவில் அதாவது நாளையே வெளிவரும் என்று தெரிந்தால் அவள் நிலை?)

"ஹொவ் செலஃபீஷ் வி பீப்பிள் ஆர்?"(how selfish we people are - நாமெல்லாம் எவ்வளவு சுயநலவாதிங்க இல்ல?) நீ கூட என்கூட இல்லையில்ல?" என்ற வார்த்தையில் அவனை அவள் எவ்வளவு எதிர்பார்த்திருந்தாள் என்பதை செழியனுக்கு நன்கு உணர்த்தியது.

"அது வந்து... ஆதி... என்னான்னா..." என்று செழியன் தடுமாற,

"யா ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் சிட்டுவேஷன்... அங்கிள், அதுதான் உன் அப்பா திடீர்னு தவறிட்டாரு. நீ உன் குடும்பத்தைச் சுமக்குற வேலையில இறங்கிட்ட... உன்கிட்ட ஒரு நியாயம் இருந்தாலும் ஏனோ என் மனசு அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது மட்டும் நிச்சயம் செழியா... அதான் சொன்னேனே ஹொவ் செலஃபீஷ் வீ பீப்பிள் ஆர்னு... நானும் கூட அதுல அடக்கம் தானே? இளங்கோ ஆளே மாறிட்டான்... ஆனா ஒன்னு புரிஞ்சது செழி..."

அவன் திரும்பி அவளைப் பார்த்தான்.

"நீ என்கூட இல்லாத அந்த நாட்கள் தான் என் லைஃப் ட்ராஜிடியின் உச்சத்துக்குப் போயிடுச்சி... ஆனா இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கு செழி..." என்றதும் அவன் மீண்டும் திரும்ப,

"ஆமா இப்போ... இப்போன்னா?" என்றவள் மணியைப் பார்த்தாள். 11 .15 என்றிருக்கவும் "சுமார் 3 மணிநேரமா..." என்றதும் அவன் புரியாமல் பார்க்க,

"எஸ். திரும்ப நீ என் வாழ்க்கைக்குள்ள நுழைந்த உடன் தான் கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்றேன். இந்த ஐந்து வருஷம் என் வாழ்க்கையில இல்லாத ஒன்னை உன்னைப் பார்த்த ஐந்து நிமிஷத்துல நான் திரும்ப உணர்ந்தேன் செழி... ஆனா அது என்னன்னு எனக்குச் சொல்லத் தெரியில. ஒரு யானை பலம்னு சொல்லுவாங்களே அப்படி வேணுனா வெச்சுக்கலாம்...'

வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவன் அதை ஓரம் நிறுத்தி அவன் மெல்ல அவளின் உள்ளங்கையில் ஒரு அழுத்தம் தந்தான். அந்த அழுத்தம் அவளின் மனதில் இவ்வளவு காலம் இருந்த அழுத்தத்திற்கெல்லாம் ஒரு விடை கொடுத்தது.

ச்சே மனித உடல் எவ்வளவு அற்புதமில்ல? சமயங்களில் வார்த்தைகள் தராத ஒரு நிறைவை சேடிஸ்பிகேஷனை ஒரு ஹக்(hug-அணைப்பு), ஒரு ஹோல்டு(hold-பிடித்தல்), ஒரு கிஸ் தந்திடுதில்லை? எஸ்பேஸல்லி அதுவும் நமக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்டயிருந்துனா டோபோமைன் (dopamine) அதிகம் சுரக்கும் போல...

டோபோமைன் - நம் உடலில் அதிகம் ஏற்படும் நரம்பு சம்மந்தமான பிரச்சனைகளுக்கு இந்த டோபோமைன் சுரப்பதில் சிக்கலிருந்தாலோ இல்லை குறைவாக சுரத்தலின் காரணமாகவோ தான் ஏற்படுகிறது. இதற்கு பிளேசர் (pleasure-இன்பம்) ஹார்மோன் என்று ஒரு பெயரும் உண்டு. லோ பிபி, குறைந்த இதய துடிப்பு முதலியவற்றுக்கு இது மருந்தாக உள்ளது. நமக்கு வயதாவதாலும் அதனால் ஏற்படும் பார்க்கின்சன் டிசீஸ், சிஸோபெர்னியா (parkinson's disease, schizophrenia, bipolar disorder- எல்லாம் நரம்பு சம்மந்தமாக நோய்கள்) முதலியவற்றுக்கு இதுதான் காரணமாம். இன்னும் சிம்பிளாக சொன்னால் போதைப்பொருட்களை உபயோகப் படுத்தும் போது நமக்கு இந்த டோபோமைன் அதிகம் சுரப்பதனால் தான் ஒரு பிளேசர் கிடைக்கிறதாம். சும்மா ஒரு பொது அறிவு... கதையை விட்டு நிறைய வெளியே வந்துட்டேன். சாரி.

அவன் கைகளால் கிடைத்த நிம்மதியா? இல்லை அதிகமாக சுரந்த டோபோமைனா இல்லை வண்டியில் ஓடிக்கொண்டிருக்கும் மெலடி பாடல்களா, இல்லை அவள் செழியன் உடன் பாதுகாப்பாக இருப்பதாலா? இல்லை இதுவரை அவள் வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகளா? இல்லை நாளை அவள் சந்திக்கப் போகும் பிரச்சனைகளுக்காகவா? எதுவென்று தெரியவில்லை ஆனால் தற்போது ஒரு நிம்மதியான உறக்கம் அவளைத் தழுவியது மட்டும் நிஜம்.

உறங்கும் அவளை அடிக்கடி பார்த்தபடியே பாடலின் ஒலியைக் குறைத்து வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான் செழியன்! ( தொடரும்...)
 
Nice but update kuttiya irukku :unsure: :unsure: ??
இந்தக்கதையின் முதல் வடிவம் 29 அத்தியாயங்களைக் கொண்டது. அதில் இறுதி 5 அத்தியாயங்கள் மட்டுமே எட்டு நிமிட வாசிப்பு அத்தியாயங்கள். மற்றவையெல்லாம் சராசரியாக 4 5 6 நிமிட வாசிப்பே... கைன்ட்லி அட்ஜஸ்ட்... நன்றி??

அண்ட் முன்பு சொன்னதைப்போல வாழ்க்கையின் பெரிய நிகழ்வுகளை படம்படிப்பது இக்கதையின் நோக்கம் இல்லை. சின்ன சின்ன நிகழ்வுகளே பிரதானமாக இருக்கும் கதை இது...
 
இந்தக்கதையின் முதல் வடிவம் 29 அத்தியாயங்களைக் கொண்டது. அதில் இறுதி 5 அத்தியாயங்கள் மட்டுமே எட்டு நிமிட வாசிப்பு அத்தியாயங்கள். மற்றவையெல்லாம் சராசரியாக 4 5 6 நிமிட வாசிப்பே... கைன்ட்லி அட்ஜஸ்ட்... நன்றி??

அண்ட் முன்பு சொன்னதைப்போல வாழ்க்கையின் பெரிய நிகழ்வுகளை படம்படிப்பது இக்கதையின் நோக்கம் இல்லை. சின்ன சின்ன நிகழ்வுகளே பிரதானமாக இருக்கும் கதை இது...
சின்ன சின்ன நிகழ்வுகள் தான் சுவாரஸ்யம்....

அதனால update குட்டியா தரனுமா...


Part 1 ,2 கொடுக்க முடியுமா.....
 
சின்ன சின்ன நிகழ்வுகள் தான் சுவாரஸ்யம்....

அதனால update குட்டியா தரனுமா...


Part 1 ,2 கொடுக்க முடியுமா.....
i'll try...??
 
இருவருக்குமிடையே இருந்தது/ இருப்பது காதலா..? நட்பா?
இதுவரை இல்லாத நிம்மதி,பலம், செழியனின் அருகில்
உணரும் ஆதி, இனி வரும் பிரச்சனைகளை அவனோடு சேர்ந்து
எதிர்கொள்வாளா..?
 
Top