Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-2

Advertisement

praveenraj

Well-known member
Member
இருபதுகளின் தொடக்கத்திலிருந்த இளங்கண்ணியாகப் பார்த்த அவளை இருபதுகளின் மத்தியில் சற்று முதிர்ந்த தோற்றத்தில் அவளைப் பார்த்தவனுக்கு அவளின் பிம்பம் வியப்பை அளித்தாலும் இதில் ஏனோ தவறு இருக்கிறது எனவும் எச்சரித்தது அவன் மனம். மேலும் அவள் கையிலிருந்த பிலைட் டிக்கெட்டை வாங்கிப் பார்த்தவுடன் சற்று அதிர்ந்தான் செழியன். அந்த விமானம் சென்னை வந்தடைந்து சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாகியிருந்தது. ஏதும் பேசாது அவளின் ட்ரொல்லியை தன் பக்கம் இழுத்து,"வா போலாம்..." என்றான்.

எவ்வித சலனமுமின்றி அவள் எழுந்தது அவனுக்கு ஏனோ வெந்தப்புண்ணில் டெட்டோல் ஊற்றியதைப் போல் இருந்தது (வேல் பாய்ச்சுவதெல்லாம் இப்போ இல்லைங்க... அதுதான் காலத்துக்கேற்றப்படி மாற்றி விட்டேன்). அவள் நிச்சயம் எதையும் சாப்பிட்டு இருக்கமாட்டாள் என்பதை ஊர்ஜிதப்படுத்தி நேராக அங்கிருந்த உணவகத்திற்குள் சென்றமர்ந்தான். அவளும் அவன் எதிரில் அமர்ந்து ஏதோ யோசனைக்குச் செல்ல இவனே ஒரு சோளாப் பூரி ஆர்டர் செய்தான். (அது அவளின் ஃபேவோரைட் உணவு). கூடவே ஒரு காஃபீயும் கேட்டு எடுத்து வரச்சொன்னான்.

"எந்த ஒரு கோபத்தையும் ஆற்றாமையையும் சாப்பாட்டின் மீது காட்டக்கூடாதுனு என் தோழி ஒருத்தி அடிக்கடி சொல்லுவாள்..." என்றதும் அவள் உதட்டோரம் ஒரு சிறு புன்னகை தவழ்ந்தது. அவள் பிளேட்டை பார்த்ததுமே அவள் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது. அவன் என்ன ஆர்டர் செய்தான் என்பதை அவள் கவனிக்கவேயில்லை. இப்போது அதைப் பார்த்ததுமே அவளையும் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டாள் ஆதிரா.

"எனக்கு என்ன பிடிக்கும்னு கூட அவனுக்குத் தெரியாது..." என்று உணர்ச்சியற்ற குரலில் அவள் தெரிவித்தாலும் அதில் ஒலித்த இயலாமையை செழியனால் உணர முடிந்தது.

"எவன்?"- இது அவன் கேட்டது.

"என் ஹஸ்பண்ட், சாரி எக்ஸ் ஹஸ்பண்ட்..."

செழியன் எவ்வாறு ரியாக்ட் செய்வதென்று புரியாமல் விழித்தான்.

"அவன் யாரு என்னை அவன் வாழ்க்கையில இருந்து தூக்கிப் போடுறது? நான் தூக்கிப் போடுறேன் அந்த @#$அ..." என்றதும் செழியன் அவளை மிரட்சியுடன் விழித்தான்.

சிறிது மௌனங்களுக்குப் பிறகு செழி,"என்னாச்சி?" என்றதுமே,'உன்னோடு நானும்... போகின்ற பாதை... இது நீ... ளா... தோ... தொடு வானம் போலவே...' என்று தேக்கி வைத்த காதல் முழுவதையுமே இளையராஜா தன் கிறக்கமாக குரலில் பாடியவாறு செழியனின் அலைப்பேசி சிணுங்கியது.

ஜான் தான் அழைத்திருந்தான்.

"என்னடா ரூம் போயிட்டியா? ஆச்சு போர்டு பண்ணலாம்னு பார்த்த பிலைட் டிலேயாம்... இன்னும் 2 மணிநேரம் ஆகும் போல... ஜென்னி அவங்க அப்பா போன் பண்ணாருன்னு அவசரமா போயிட்டா..." என்றான். அப்போது தான் செழியன் தன் கைகடிகாரத்தைப் பார்த்தான். நேரம் 10ஐ நெருங்கிக்கொண்டிருந்தது.

"டேய் நான் கொஞ்சம் பிசியா இருக்கேன். ஐ வில் கால் யூ..." என்று சொல்லி அவன் அவனின் பதிலைக்கூட எதிர்பாராது கட் செய்தான் செழியன்.

அவள் சிறுபிள்ளையென அந்த பூரியை நடுவில் துளையிட்டு ஆவிபறக்க பிய்த்து உண்டுகொண்டிருந்தாள். அவள் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தவன் ஏதோ தோன்றியவனாய் அவசரமாக அவளிடம்,'ஆதி நீ சாப்பிடு நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்திடுறேன்..." என்றவன் அந்த பூரி தீரும் தருவாயில் இருப்பதைக் கண்டு,"ஹே இரு இன்னொன்னு ஆர்டர் செய்யுறேன்..." என்று கூற அவளும் ஆமோதிக்க காத்திராமல் அவனின் வேலட்டை அவளிடம் வைத்துவிட்டு,"நான் வந்திடுறேன் ஆதி. இன்கேஸ் லேட் ஆகிடுச்சின்னா நீ பே பண்ணிட்டு இங்கேயே வெய்ட் பண்ணு ஆதி. எங்கேயும் போயிடாத..." என்று பயம் கலந்த கலக்கத்துடனே அவன் கூற, அவளோ ரொம்ப கூலாக,"எங்க போக சொல்ற செழி? நீ இப்போ எனக்குக் கிடைத்த ஒரே ஆப்ஷன்... உன்ன விட்டா செத்துத்தான் போயிருப்பேன்..." என்ற அவளின் பேச்சு ஏனோ அவனின் மனதை குருதிவடிய அறுக்க, அதை அவனின் கண்களிலே உணர்ந்தவளாய், "பயப்படாத 4 மணியில இருந்து இங்கேயே தான் உட்கார்ந்து இருந்தேன்... இங்க கொஞ்ச நேரம் உட்கார மாட்டேனா என்ன? என்ன நீயாவது சொன்ன சொல்லைக் காப்பாத்துவனு ஒரு நம்பிக்கை..." என்றவள் ஒரு வெற்றுப் புன்னகை சிந்தி மீண்டும் உண்ணத்தொடங்கினாள். வேகவேகமாய் உள்ளே விரைந்தவன் ஜானைப் பார்க்க அவனோ குழம்பிய முக பாவனையைச் சிந்தவும், ஓடிச் சென்று அவனைக் கட்டிப்பிடித்து அழுதான் செழியன்.

'என்னாச்சு இவனுக்கு? இவன் எப்படி இன்னும் இங்கயே இருக்கான்?' என்று யோசித்தவன்,"ஏன்டா அழற?" என்றதும் கட்டிப்பிடித்தவாறே காதோரமாய்,"அவளைப் பார்த்தேண்டா..." என்றவன் இடைவெளி விட்டு,"இங்க... இப்போ... வெறும் கூடு மட்டும் தான்டா இருக்கு. உயிரே இல்லை..." என்று தேம்பினான்.

"யாரு...? ஆதிராவா...?" என்று ஐயமாய் ஜான் வினவ,

"ம்ம்ம்... ஏதோ பிரச்சனைனு நினைக்கிறேன். அவளை அந்தக் கோலத்துல பார்க்கவே எனக்கு திராணி இல்லை ஜான். எப்படி இருந்தவ தெரியுமா? எவ்வளவு தைரியமா செழிப்பா வாழ்தவ டா அவ..." என்று அவன் கேவினான்.

சுற்றி எல்லோரும் தங்களையே ஒரு மார்கமாய்ப் பார்ப்பதை உணர்ந்தவன்,"டேய் அழாத... இப்போ எங்க இருக்கா?"

"ஹோட்டல்ல சாப்பிடுறா..."

"சரி, வா போலாம்..." என்று அவர்கள் செல்ல அங்கே ஹோட்டலில் காஃபீ உறிஞ்சிக்கொண்டிருந்தவள் ஜானைப் பார்த்தவுடன்,"நீங்க ஜான் தானே? எப்படி இருக்கீங்க?... என்ன பார்க்கறீங்க? ஹோ இவளுக்கு எப்படித் தெரியும்னா? அதான் நம்ம வாழ்க்கையில நடப்பதெல்லாம் ஊருக்கே காட்டக்கூடிய fb இருக்கே? அவன் fb போஸ்ட்ல எப்பயுமே நீங்க தானே இருப்பீங்க? என்ன ஐந்து வருஷத்துக்கு முன்னாடி வரை நான் இருந்த அந்த இடத்துல இப்போ நீங்க இருக்கீங்க... ஹே நீ அப்படியே இருக்காடா மாறவேயில்லை... அதே போட்டோ பைத்தியம்..." என்று இறுதியாக செழியனை வார ஜானுடன் சேர்ந்து செழியனும் சிரித்தான்.

"அப்பா சிரிச்ச மூஞ்சா உன்னைப் பார்த்து எவ்வளவு வருஷம் ஆகுது செழி? ஆமா ஜான் நீங்க இங்க எப்படி?"

"என்னைய பிலைட் ஏற்றிவிட தான்மா இவன் வந்தான்..." என்றதும் ஜானை ஒரு கணம் கூர்ந்து நோக்கியவள்,

"என்னண்ணா வந்து கட்டிப்பிடித்து அழுதானா?" என்றவுடன் ஜான் செழியைப் பார்த்தான். செழியோ சங்கூஜப்பட,"பிலைட் மிஸ் பண்ணிடப் போறீங்க அண்ணா..." என்று அவளாகவே பேச்சை மாற்றினாள்.

"இல்லம்மா பிலைட் 12 மணிக்குத் தான். ஒருமணிநேரம் டிலே. சோ நோ ப்ரோப்லேம்..."

"அப்போ வாங்க எதாவது சாப்பிடலாம்..."

"இல்லம்மா பரவாயில்லை..." என்று ஜான் மறுக்க,

"சரி நீங்க பேசிட்டு இருங்க, நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்..." என்று அவள் நகர்ந்ததும்,

"என்னடா இவ்வளவு கேசுவலா பேசுறா?" என்ற ஜானுக்கு,

"நடிக்கிறா டா..." என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான் செழியன்.

ஜான் புரியாமல் பார்க்க,

"எஸ், நான் அழுதேனு அவளுக்குத் தெரிஞ்சிடுச்சி. அது தான் இப்படி கேசுவலா இருக்க மாதிரி நடிக்கிறா..."

"சரி இப்போ என்ன பிளான்?"

"இந்நேரத்துக்கு அவள் வீட்டுக்கு இன்போர்ம் பண்ண முடியாது. மேலும் அவ வீட்டுக்குத் தான் போகணும்னா அவளே இந்நேரம் வீட்டுல இருந்திருக்கலாம். நான் நம்ம பிளாட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்..."

"சரிடா மணி 10 .30 ஆகிடுச்சு. நான் கிளம்புறேன். பார்த்து பத்திரம்... எதுனாலும் நல்லா யோசித்துச் செய். அவ்வளவு தான்... எனக்கும் என்னமோ ஒரு டவுட் இருக்கு. இல்லைனா இந்நேரம் இப்படித் தனியா வந்திருக்க மாட்டா..." என்று தன் அனுமானத்தை முன்வைத்தான் ஜான்.

"ஆமா மச்சான். அவளுக்கும் அவ ஹஸ்பண்டுக்கும் என்னவோ ப்ரோப்லேம்னு நெனக்கிறேன். இல்லைனா இப்படித் தனியா வந்திருக்க மாட்டாங்க. அவ வீட்டுல அவளை இப்படித் தனியா வரச் சொல்லியிருக்க மாட்டாங்க. அதும் இந்நேரத்துல..." என்று சொல்ல அதற்குள் முகம் கழுவி சற்றே பிரெஷ் ஆகி தெளிந்த முகத்துடன் வந்தவளைக் கண்டு தெம்பு வந்தவனாய் இளா சிரிக்க அவளும் சற்று புன் முறுவலுடன் வந்தாள். அவளைப் பார்த்து சொல்லிவிட்டு ஜான் தனியே செழியனை அழைத்து,"மச்சி எனக்கென்னமோ தப்பா படுது... மனசே சரியில்ல... எதுனாலும் சீக்கிரம் ஒரு முடிவெடு..." என்று கூறிவிட்டு விடைபெற்றான்.

அவனை சென்ட் ஆப் செய்துவிட்டு அவளின் உடமைகளை எடுத்துக்கொண்டு செழியன் முன்னே சென்றான். அவனைப் பின்தொடர்ந்தாள் ஆதிரா.

காரில் ஏறியதும் செழியன் வண்டியை ஆன் செய்ய,'ஜே ஜே உனக்கு ஜே ஜே... உன்னைநான் உன்னைநான் உன்னைநான்... கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்...' என்று எப்.எம் பாட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தனர்.

"என்னடா இது வம்பாப் போச்சு? சும்மா ஒரு கார்டெசிக்கு கூப்பிட்டா உடனே வந்து தொத்திக்கிட்டாளேன்னு ஃபீல் பண்றியா? இல்லை வசமா மாட்டிகிட்டேனேனு யோசிக்கறியா செழி?" என்றாள் ஆதிரா.

"ஹே லூசு... அப்படியெல்லாம் இல்லடி... நீ எனக்கு சுமையா? ரொம்ப கஷ்டமா இருக்கு ஆதி. நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்ம லைஃப்ல இல்லைனாலும் கூடப் பரவாயில்ல அட்லீஸ்ட் அவங்க நல்லா இருக்காங்க என்ற நம்பிக்கை சேடிஸ்பிகேஷன் அது போதும்... நாம நம்ம வாழ்க்கையைக் கடத்திடலாம். ஆனா ஆல் ஆப் சடேன் அவங்க நம்ம முன்னாடி திடீர்னு வந்து நான் நல்லாவேயில்லைனு சொல்லும் போது... வார்த்தையிலே கடத்தக்கூடிய ஃபீல் இல்லடி அது. அதுவும் நீ எனக்கு எப்பவும் ரொம்ப ஸ்பெஷல் டி..." என்றான் செழியன்.

(தொடரும்...)
 
ஆதி தைரியமா காண்பித்துக்கொள்கிறாள்...
மணவாழ்க்கை தோல்வினு புரியுது..
வெயிட் பண்ணலாம்....அடுத்த எபிக்கு
 
ஆதி தைரியமா காண்பித்துக்கொள்கிறாள்...
மணவாழ்க்கை தோல்வினு புரியுது..
வெயிட் பண்ணலாம்....அடுத்த எபிக்கு
என்னைப் பொறுத்தவரை நம் பலவீனத்தை அடுத்தவரிடம் காட்டிக்கொள்ளாததே தைரியம்... அந்த வகையில் ஆதிரா தைரியசாலி... கண்டிப்பா தோல்வி என்பதைக் காட்டிலும் ஏமாற்றம் எனலாம்... சொல்றேன்?? நன்றி
 
எபி நல்லா இருக்கு... ஆனா ரொம்ப குட்டியா இருக்கே ???
இந்தக் கதையே ரொம்ப சின்னது. புலராதக் காதலுக்குப் பிறகு நான் எழுதிய சின்ன கதை இது தான். மொத்தமே மூணு மணிநேர ரீடிங் டைம் தான்... மொத்தம் 30 எபிஸ் தான் வரும் இதே சைசில்... நன்றி?
 
Top