Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-19

Advertisement

praveenraj

Well-known member
Member
மறுநாள் காலையிலே விழித்தவன் இன்றும் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு அந்த ஊருக்குச் செல்ல இருந்தான். இரவு முழுவதுமே அவனுக்கு தூக்கம் வரவில்லை. இந்த விஷயத்தை மிகவும் கவனமாய்க் கையாள வேண்டும் என்ற அசரீரி மட்டும் அவனுள் ஒலித்துக்கொண்டிருந்தது. அவருக்கு மட்டும் இந்த விஷயங்கள் தெரிந்திருந்தால் அவரும் பெரியதாக ஒன்றும் எடுத்துக்கொண்டு இருக்க மாட்டார் ஆனால் அந்த விஷயம் தெரியவரும் போது அவருடன் இன்னொரு நபரும் இருந்தார். நம் எல்லோருடைய வாழ்விலும் அந்த மாதிரி சிலர் இருப்பார்கள். அவர்களை போ என்று விரட்டிவிட முடியாது அதேநேரம் நமக்கு ஆதரவாகவும் இருக்க மாட்டார்கள். நம்மைப் பற்றி முதலில் வெளியுலகத்திற்கு விஷயத்தைப் பரப்புவது அவராகவே தான் இருக்கும். அப்பேற்பட்டவர் தான் நேற்று இனியாவின் மாமனாரின் அருகில் இருந்தார். ஒருவிதத்தில் அவனுக்கு இதுவும் நல்லது தான். இவராவது பரவாயில்லை இதுவே இந்நேரம் காஞ்சனாவின் மாமனாராக இருந்திருந்தால் இந்நேரம் இந்தக் கல்யாணமே நின்று இருக்கும். அப்படியும் சிலர்!

காஞ்சனா கூடப் பரவாயில்லை சற்று தைரியமானவள். ஏதேனும் பிரச்சனை என்றால் கொஞ்சம் சமாளிப்பாள். இனியா அப்படியில்லை. கடைக்குட்டி என்று அதிக செல்லம் வேறு. அவர்களின் தந்தை இறந்த செய்தியைக் கேட்டு அந்தத் துயரிலிருந்து செழியன் அவன் அன்னை உட்பட எல்லோரும் ஓரளவுக்குத் தெளிந்து வெளியே வந்தும் விட்டார்கள் ஆனால் இனியாவை அந்தத் தாக்கத்திலிருந்து வெளியே கொண்டுவர அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அதிக எமோஷனல் டைப். அதனாலே செழியன் அதிகம் பதற்றப்பட்டான்.

'எனக்கு என்ன நடந்தாலும் நீ இந்தக் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்' என்ற அவன் தந்தையின் வார்த்தை அவன் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. அவன் உறங்காமலே புரண்டு புரண்டு படுத்தவன் விழிக்க விடிந்திருந்தது. எழுந்து குளித்து ரெடி ஆகி ஆபிசில் பர்மிசன் சொல்லிவிட்டு ஆதிராவின் அறையைப் பார்க்க அவளோ இன்னமும் விழிக்கவில்லை. மணி 6 .30 ஆகியும் அவள் எழாததால் இவனே சென்று எழுப்பினான். அவள் தலையணை நனைந்திருந்தது. அவனுக்கு என்னவோ தவறாகப் பட மெதுவாய் ஆதிராவை எழுப்ப எழுந்தவள் எதிரே செழியன் ரெடி ஆகி நிற்பதைக்கண்டு துள்ளி எழவும்,"ஹே ரிலேக்ஸ் ஆதி. மணி 6.30 தான்..." என்று சொன்னதும் அவளோ,"நீ எப்போ வந்த செழி? ஏன் அதுக்குள்ள ரெடி ஆகியிருக்க?" என்று அவன் முகத்தையே குறிப்பாக அவன் கண்களையே பார்த்தாள். வார்த்தைகள் பொய்ச் சொல்லலாம் ஆனால் கண்கள் ஒருபோதும் பொய்ச் சொல்லாதே! அவனும் அவளை அறிவான் தானே?

முயன்ற அளவுக்குச் சமாளித்தவன்,"எனக்கு அர்ஜென்ட்டா வேலையிருக்கு ஆதி. நான் கிளம்பனும். ஆமா நைட் நீ சாப்பிடலையா?" என்று கேட்க அப்போது தான் இரவு இவனுக்கும் எதையும் செய்து வைக்காமல் விட்டதே அவளுக்குப் புரிந்தது.

"ஐயோ சாரி செழி, நீ சாப்பிட்டியா?" என்று கேட்க,

"நான் சாப்பிட்டுத் தான் வந்தேன். நீ ஏன் சாப்பிடல?" என்று அவளுக்காக உண்மையை மறைத்தான்.

காலையிலே இவனைக் கஷ்டப்படுத்த வேண்டாமென்று நினைத்தவள் மேலும் அவனும் நார்மலாய் இல்லை என்பதையும் அறிந்தவள்,"கொஞ்சம் தலைவலியா இருந்தது. அப்படியே வந்து படுத்தேன் பாரு தூங்கிட்டு இருக்கேன். ஞாபகமே இல்லை, ரொம்ப நாள் கழித்து வேலைக்குப் போறேன் பாரு அதுவா இருக்கும்..." என்று சமாளிக்க அவனோ எதையும் பேசாமல்,"சரி நான் கிளம்பறேன் நீ ரெடி ஆகு. ஈவினிங் வந்திடுவேன்..." என்று அவன் செல்ல,

"செழி..."

"என்ன ஆதி?"

"ஏதும் பிரச்சனை இல்லையே?" என்றவளின் கண்கள் அலைபாய,

உடனே உதட்டில் சிரிப்பைக் கொண்டு வந்தவன்,"அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ கண்டதையும் போட்டு இல்லாத மூளையைக் குழப்பாத. அப்றோம் திரும்ப டையார்ட் ஆகிடுவே..." என்று சொல்லிச் சிரிக்க, தன்னை இவன் கிண்டல் செய்வதைப் புரிந்து அவனை இலகுவாக்க,"பார்ரா எனக்கே மூளையில்லைனா அப்போ உனக்கு?" என்று சொல்லி அவளும் சிரிக்க,

"சரி சரி... ரகசியத்தை இப்படி வெளிய சொல்லக் கூடாது. அப்றோம் எனக்கு வேலை போயிடும்... நானே இல்லாத மூளையை இருக்குற மாதிரி டகில் பாஷா வேலையெல்லாம் காட்டிட்டு இருக்கேன்..." என்று சிரித்துவிட்டு அவன் செல்ல நேற்றைய நினைவுகளோடு இன்றைய செழியனின் பதட்டத்தமும் சேர்ந்து அவளை வாட்டியது. ரொம்ப க்ளோசா அப்செர்வ் பண்றவங்களுக்கு தான் செழியனுடைய கோவம், பதட்டம் எல்லாம் உணர முடியும். ஏன்னா அவன் எதையும் அவ்வளவு இலகுவா காட்டிக்க மாட்டான். ஆனால் இது வேறு யாரிடமாவது அவன் செய்திருக்கலாம் ஆனால் அவனோ அவனின் ஒவ்வொரு அங்க அசைவிற்கும் அர்த்தம் அறிந்தவள் முன் இதைக் காட்டியது தவறு. அவளும் எழுந்து ரெடி ஆனவள் ஆபிஸ் கிளம்பினாள்.

***************
காலையில் இவன் மீண்டும் அங்கு செல்ல என்ன பேசுவது என்று புரியாமல் இருவரும் அமைதியாக இருந்தனர்.
செழியனே பேச்சை ஆரமித்தான்.

"மாமா நான் சில கேள்விகளை உங்ககிட்டே கேட்கலாமா?" என்று கேட்க அவரும் சரியென தலை ஆட்டினார்.

"இப்போ நீங்க ரோட்ல போறீங்க, அங்க ஒரு குழி இருக்குனு வெச்சிப்போம் அப்போ அது பக்கத்துல ஒரு சின்ன குழந்தை விளையாடிட்டு இருக்கு. அப்போ நீங்க என்ன பண்ணுவீங்க?"
புரியாமல் அவனைப் பார்த்தவர்," உடனே அந்தக் குழந்தையோட அப்பா அம்மாவைக் கூப்பிட்டு உள்ள கூட்டிட்டுப் போகச் சொல்லுவேன். அந்தக் குழியை மீண்டும் மூட அங்க இருக்கவங்க கிட்ட கூப்பிட்டுச் சொல்லிட்டுப் போவேன்..." என்று அவர் பதிலளித்தார்.

"சரி இப்போ அந்தக் குழந்தையோட அப்பா அம்மா அந்தத் தெருவே இல்லனு வெச்சிப்போம். அப்போ என்ன பண்ணுவீங்க?"

"பக்கத்துல யாரையாவது..."

"அந்தத் தெருல இருக்கவங்க யாருக்கும் அது மேல அக்கறை இல்ல..."

அவர் யோசித்தபடியே பார்க்க,"நான் அந்தக் குழியை மூடப் பார்ப்பேன்..."

"மூட முடியலனு வெச்சிப்போம்... கூடவே அந்தக் குழந்தையோட கண்ணு வேற கட்டப்பட்டிருக்கு..."
யோசித்தவர்,"நான் அந்தக் குழந்தை கட்ட அவிழ்த்து அதுக்குப் புரியவெப்பேன்..."

"குட் இப்போ அந்தக் குழந்தையை அதோட அம்மா அப்பா கிட்ட நாங்க பத்திரமா பார்த்துக்கறோம்னு சொல்லி ஒருத்தன் கூட்டிட்டு வந்து இப்படி ஏமாத்தி நடுரோட்டுல கண்ணைக்கட்டி விட்டுட்டுப் போயிட்டான்னு வெச்சிப்போம். இப்போ என்ன செய்விங்க?"

"அவனை ரெண்டு அடிவிட்டு அந்தக் குழந்தையை அதோட அப்பா அம்மா கிட்ட விடுவேன்..."

"அதுக்குள்ள அவனே அவங்க அப்பா அம்மா கிட்ட போய் நடந்ததை மாத்திச் சொல்லி அவங்களையே அந்தக் குழந்தையை வெறுக்க வெச்சிட்டானு வெச்சிப்போம் அப்போ?" என்றான் செழியன்.

"ச்சீ நீங்கயெல்லாம் மனுஷங்களானு அவங்களைத் திட்டி அந்தக் குழந்தையை எங்கேயாவது பத்திரமா விடுவேன்..."

"இதுவே அந்தக் குழந்தையோட அப்பா உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவங்கனா... அதோட அந்தக் குழந்தைன்னா உங்களுக்கு கொள்ளை இஷ்டம். இப்போ என்ன செய்விங்க?"

யோசித்தவர்,"அப்போ அந்தப் பொண்ணு?" என்று அவர் கேட்க,

"இப்போ நீங்க என்ன பண்ணுவீங்க? அந்தக் குழந்தையை உங்ககூடவே கூட்டிட்டுப் போய் பத்திரமா பார்த்துக்கிட்டு அந்தக் குழந்தை மேல எந்த தப்பும் இல்லைனு புரியவெச்சு அவளை ஏமாத்தினவன் உண்மையான முகமூடியைக் கிழிப்பீங்களா இல்லையா?" என்று நிறுத்திய செழியன் இடைவெளி விட்டுத் தொடர்ந்தான்,

"எனக்கு அவளை 9 வயசுல இருந்து தெரியும் மாமா. அவளைச் சுத்தி நிறைய சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டிருக்கு. அவ அதுல மாட்டிக்கிட்டா. அதை நம்பி அவ வீட்டுலையும் அவளைத் தப்பா நினைக்கிறாங்க. நான் மட்டும் என்கூடக் கூட்டிட்டு வரலைனா இந்நேரம் என்ன ஆகியிருப்பானே தெரியில? நான் அவளை வேற எங்கேயாவது பத்திரமா கொண்டு போய் விடலாம் தான். ஆனா எந்தத் தப்புமே செய்யாத அவளை என்னோடு சேர்த்து என்னோட மட்டுமில்லாம அங்க us ல அவளோட ஒர்க் பண்ணவன் கூடயும் தப்பா பேசி... அன்னைக்கு அவங்க பேசுன பேச்செல்லாம்... முடியில மாமா. கொஞ்சம் கூட பொறுமையா யோசிச்சு பேசமா கண்களால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்னு இதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல மாமா. நான் இதை உங்ககிட்டச் சொல்லியிருக்கனும் தான். நானே சொல்லலாம்னு நெனச்சேன். இருந்தும் எங்க நீங்க தப்பா எடுத்துப்பீங்களோனு ஒரு பயம். அவளுக்கு நேத்து தான் மாமா வேலை கிடைச்சிருக்கு. முதல் நாள் போனா. நானே அவ நார்மல் ஆகணும்னு யோசிச்சு வேண்டிக்கிட்டு இருக்கேன்..."

"இப்போ வேணுனா ஒன்னு சொல்றேன் மாமா. அவ என்கூட இருக்கறது தான் உங்களுக்குப் பிரச்சனைன்னா நான் இன்னைக்கே அவளை ஒரு ஹாஸ்டல்ல சேர்த்துவிடுறேன் மாமா. ஆனா அதுனால் மட்டும் எங்களைப் பத்தி தப்பா பேசுனது சரியாகிடுமா? அண்ட் அவளை என்கூடவே வெச்சியிருந்து அவள் மேல் போட்ட பழியெல்லாம் பொய்யுனு ப்ரூவ் பண்ணிட்டு நானே அவளை வெளிய அனுப்பிடுறேன் மாமா. இல்ல அதெல்லாம் முடியாது நீ, நான் சொல்றதைச் செஞ்சா தான் இந்தக் கல்யாணம் நடக்கும்னு சொன்னீங்கன்னா கூட அதை நான் செய்ய தயார் மாமா. என்னால இனியாவுடைய வாழ்க்கை எந்த விதத்துலையும் பாதிக்கக் கூடாது. நான் என்ன பண்ணனும் நீங்க தான் சொல்லணும்..."

"நீ சொல்றதை நான் வேணுனா நம்பலாம் செழியன். ஆனா என் சொந்தக்காரங்க மத்தியில நாளைக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? இங்க எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. பேரு இருக்கு..."

"சரி, இப்போ நான் என்ன பண்ணனும் நீங்க சொல்லுங்க..."

நீண்ட நேரம் யோசித்தவர்,"ஓகே இந்தக் கல்யாணம் நடக்கட்டும் ஆனா அந்தப் பொண்ணு எந்த இடத்துலயும் இருக்கவே கூடாது. அண்ட் இந்தப் பிரச்னையை சீக்கிரம் நீங்க முடிக்கணும். இதுனால என் பேரும் கெடக்கூடாது..."
செழியனின் பயமெல்லாம் விலகியது. அவனுக்கு இப்போது தான் மூச்சே வந்தது.

"ரொம்ப தேங்க்ஸ் மாமா..." என்றவன் அவரின் கையைப் பிடித்து,"நான் எப்படி நன்றி சொல்வதுனு தெரியில மாமா..."

"செழியா நான் இன்னோரு விஷயம் கேட்பேன் தப்பா எடுத்துக்கக் கூடாது?"

"தாராளமா கேளுங்க மாமா..."

"நீ அந்தப் பொண்ண விரும்பறயா?"

"அது அவ எனக்கு ஒரு நல்ல..."

"நிறுத்து எஸ் ஆர் நோ..."

"நான் மட்டும் விரும்பி எதுவும் ஆகப் போறதில்லை மாமா. அவளும் விரும்பணும். முதல இனியா கல்யாணம். அவளோட பிரச்சனை, அவளுக்கு ஒரு தீர்வு மத்ததையெல்லாம் அப்றோம் பார்க்கலாம்..."

"பரவாயில்ல புகழேந்தி நல்லா தான் வளர்த்திருக்கான் உன்ன..."

"மாமா அது..."

"டேய் உங்க அப்பாவும் நானும் சின்ன வயசு சிநேகிதங்க. அப்றோம் டச் விட்டுடுச்சி. அப்றோம் ஒருநாள் நடுவுல பார்த்தேன். அப்போ என் பையனை நான் நல்ல குடிமகனா, பொறுப்பான பையனா தான் வளர்த்திருக்கேன்னு சொன்னான். ஆனா அப்போ இந்தக் கல்யாணத்தைப் பத்தியெல்லாம் நாங்க யோசிச்சதில்ல. திடீர்னு காஞ்சனா கல்யாணத்துல தான் இனியாவைப் பார்த்தோம். கேட்கலாம்னு தான் கேட்டேன். அண்ட் நீ என்ன பதில் சொல்லுவன்னு எதிர்பார்த்தேன். சரி இப்போ என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியல. அதான் விசாரிக்க நெனச்சேன். ஆனா என் வாயில இருந்தே நீ பதிலை வாங்குன பாரு. உங்க அப்பா சொன்னது சரி தான் போ..."

"ரொம்ப நன்றி மாமா..."

"டேய், இவ்வளவு பேசுறவரு ஏன் அந்தப் பொண்ணை வரவேணாம்னு சொன்னாருன்னு யோசிக்கறியா?"

"இல்ல அது..."

"அவங்க மாமா என்கிட்ட பேசும்போதே விஷயமா சொல்லாம இந்தக் கல்யாணத்தை நிறுத்தணும்னு தோரணையில் தான் பேசினான். நானும் எல்லாம் விசாரித்தேன். அப்றோம் தான் உன்னைக் கூப்பிட்டேன். நேற்றே பதில் சொல்லியிருப்பேன் ஆனா நேத்து தான் என் வீட்டுலையும் எல்லாம் சொன்னேன். அவங்க எல்லோரும் தயங்கினாங்க. அதுக்கு தான் உன்ன மீண்டும் வரவெச்சி கேட்டேன். ஏன்னா நான் மட்டும் முடிவெடுக்க முடியாது. நாளைக்கு இனியா இங்க இருக்க எல்லோரையும் அனுசரிச்சு போகணும். அதுக்குத்தான் வரச்சொன்னேன். போ. போய் கல்யாண வேலையெல்லாம் பாரு..." என்றவர் நேற்று இரவே தன்னுடைய குடும்பத்தை எல்லாம் சமாளித்து விட்டு இன்று செழியனை வரவழைத்திருந்தார்.

"ரொம்ப தேங்க்ஸ் மாமா..." என்ற செழியன் கல்யாண வேலை சம்மந்தமாக சிறிது உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான். (தொடரும்...)

இன்னொரு சோகமான நியூஸ். ibps po வும் கிடைக்கல. வெயிட்டிங் லிஸ்ட்(reserve list) ல இருக்கேன். 0.20ல போயிடுச்சு. அடுத்த மார்ச்சல தான் கிடைக்குமா கிடைக்காதான்னு தெரியவரும். கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கு. இருந்தாலும் அதுக்கு இன்னும் முழுசா ஒரு வருஷம் இருக்கு. எனக்கும் மே வந்தா 28 முடியுது... அதுக்குள்ள வேற சில எக்ஸாம்ஸ் வருது. அதுக்கு முழுமூச்சா ரெடி ஆகணும். கிட்டத்தட்ட செழியனின் நிலை தான் எனக்கும். ஆனா கதையில அவனுக்கு அடுத்த பத்து எபிசோட்ல வாழ்க்கை மாறிடும். ஆனால் நிஜம் அப்படியில்லையே? இது இன்னும் பதினோரு அத்தியாயம் வரும். அநேகமா ஏப்ரல் 14 முடிச்சிடுவேன். இந்தக் கதையோட நான் பெரிய பிரேக் எடுக்கப்போறேன். இப்போதைக்கு எந்தக் கதையும் இங்க (எங்கேயும்) போடப்போறதில்லை. 'மை விடு தூது' ஆரமிக்கலாம்னு இருந்தேன். இனிமேல் கதை எழுவதற்கே சிறு முழுக்கு போடலாம்னு இருக்கேன். ஆனா கண்டிப்பா மை விடு தூது இங்க தான் முதல்ல வரும். எப்போன்னு தான் தெரியாது. அதேநேரம் அந்தக் கதையை இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு எழுதினாலும் outdated எல்லாம் ஆகாது. சோ கவலை இல்லை. அத்துடன் இன்னொரு புதிய கதையையும் எழுதலாம்னு இருந்தேன். அது 'ஆஹா என்ன ருசி' மாதிரி புதிய ஜானர்ல ஒரு மாதிரி பீல் குட் இன்றைய காலகட்டத்திற்கான ஸ்டோரி. முற்றிலும் புதிய ஜானர் கதை. டைட்டில் ரெடி. சொன்னா சுட்டுடுவாங்களோனு பயமா இருக்கு. ரொம்பவும் ரொமான்டிக்கான டைட்டில்... சில நேரங்களில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு முடிவு தான் இப்போ நான் எழுதப்போறதில்லைனு எடுத்திருக்கும் முடிவு. உண்மையிலே நான் 2019 ஏப்ரல்ல இருந்து தான் எழுத ஆரமிச்சேன். ஆனா போன செப்டம்பர் 15ல இருந்து தான் இங்க எழுதறேன். முதல் ஒன்றறை வருடங்களைக் காட்டிலும் கடைசி ஆறுமாதம் தமிழ் நாவல் ரைட்டர்ஸ்ல என்னுடைய இந்தப் பயணம் ரொம்ப நல்லாவே இருந்தது. சோ 'இரவு' கதையை முடித்து எப்படியும் ஒரு நாள் மீண்டும் உங்களைச் சந்திப்பேன்... உங்கள் ஆதரவுக்கு நன்றி???... அட்லாஸ்ட் இன்னைக்கு உண்மையாவே ஏப்ரல் fool ஆகிட்டேன்...??
 
தன்னம்பிக்கை இழக்க வேண்டாம்... முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்...
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ???
So.. Don't Worry and all the best ???

Come soon with good news and good story... ALL THE BEST BRO ???
 
Top