Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-18

Advertisement

praveenraj

Well-known member
Member
அந்த வாரம் வீக் எண்டில் ஆதிராவும் செழியனும் சேர்ந்து அவுட்டிங் சென்று அவளுக்கு வேண்டியதையெல்லாம் வாங்கிக்கொண்டு வந்தனர். இந்த இடைப்பட்ட நாட்களில் அவனின் கொலீக்ஸ் எல்லோருக்கும் இவன் இங்கே ஆதிராவோடு இருப்பது தெரிந்தது. திங்கக்கிழமை காலையில் செழியன் கொஞ்சம் வேலையின் காரணமாய் உறங்கிக் கொண்டிருக்க அவன் எழுவான் என்று அவனுக்காகக் காத்திருந்த ஆதிரா அவளே வந்து கதவைத் திறக்க அதற்குள் ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்தவன் புடவையில் தேர்ந்த மடிப்பில் பெரிய ஒப்பனைகள் இல்லாமல் அவன் முன் நின்றவளை இமைக்க மறந்து பார்த்தான் செழியன்.

அவன் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று வந்தது. சிறுவயதிலிருந்து அவன் பார்த்துப் பழகிய ஆதிரா தான் இவள் ஆனால் இவளை இப்படிப் புடவையில் அவன் பார்த்ததே இல்லை. எப்படி என்பதைக் கேட்க புருவத்தை மட்டும் உயர்த்திவிட்டு அவனைப் பார்க்க அவனோ அந்த அழகில் சொக்கித்தான் போனான். இந்த கணமே அவன் காதலை அவளிடம் சொல்லிவிட்டு உடனே அவளைக் கரம்பிடிக்க அவனுக்கும் ஆசைத்தான். இந்த ஒரு வாரத்தில் அவள் இங்கிருந்தும் அவன் மனம் இவ்வளவு சலனப்பட்டதில்லை. அவன் பார்வையில் இருக்கும் ஒரு கண்ணியம் ஏனோ மிஸ் ஆவது அவனுக்கே புரிய,"நான் வந்துட்டேன் ஆதி... 10 மினிட்ஸ்... நான் ரெடி ஆகி வந்து உன்னை ட்ராப் பண்ணிடுறேன்..." என்று சொல்ல அவளும் தலை ஆட்டினாள்.

'இது தப்பு செழியா... அவ உன்ன இன்னமும் ஒரு ஃப்ரண்டா தான் பார்குறா...' என்று அவன் மனம் சொல்ல இருந்தும் அவள் இப்போது யாருடைய மனைவியும் இல்லை காதலியும் இல்லை என்ற உண்மையை அவன் மூளை ஞாபகப்படுத்த சோ இதில் தவறேதும் இல்லை என்று அவன் மனம் பதில் சொல்ல திடீரென அவளின் நிலை அவன் மனதில் தோன்ற, ஏனோ திடீரென அவன் முகம் கடுமையானது. 'எந்தக் காரணத்தாலும் என்னால திரும்ப அவ பேரு கெட்டுடக் கூடாது...' என்று நினைத்து ரெடி ஆகினான்.

இருவரும் ஜோடியாக கீழே இறங்கிவர அதும் அவள் புடவையில் வர ஏற்கனவே அரசல் புரசலாக இருக்கும் இவர்களைப் பற்றிய பேச்சு இப்போது இன்னும் தீவிரமானது. அவளை கோவிலுக்கு அழைத்துச் சென்றவன் சாமி கும்பிட்டு விட்டு அவளை அவள் அலுவலகத்தில் ட்ராப் செய்தான்.

அவனின் மனதில் சின்ன நிம்மதி பரவியது. ஆதிராவிடம் இப்போது இந்த ஒரு வார காலத்தில் அதும் அவளுக்கு

வேலை கிடைத்தவுடன் அவளின் மனதின் மாறுதல்களை எல்லாம் அவனும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான். அவனுக்குத் தெரிந்து இனி அவளால் அவனுக்கு ஏதேனும் துயரம் ஏற்படுமேயானால் நிச்சயம் அவனை விட்டு அவள் விலகிவிடுவாள். இதனாலே அவனுக்கு எந்தத் துயரமும் நடக்கக்கூடாது என்று சொல்லி வேண்ட அதற்குள் அவனுக்கு அழைப்பு வந்தது. இனியாவின் மாப்பிள்ளையின் தந்தையிடமிருந்து தான் அந்த அழைப்பு வந்தது. அது அடுத்த கட்ட குண்டு என்று தற்போது அவனுக்குத் தெரியாது?!

*******************
வேலையில் சேர்ந்த அதிரா அவளின் தோழி அனன்யாவுடன் சேர்ந்து சில பேசிக் வேலை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு இருந்தாள். அன்றைய பொழுது அவளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் நிம்மதியும் மகிழ்ச்சியும் தர இன்டெர்வல் விட்டதும் அவளோ உடனே செழியனுக்கு அழைத்தாள்.

"ஹ்ம்ம் சொல்லு ஆதிரா... எப்படி இருக்கு வேலை எல்லாம்? ஓகேவா? எல்லாம் பிடிச்சிருக்கா? ஒன்னும் ப்ராப்ளேம் இல்லையே?" என்று கேள்விகளை அடுக்க,

"அதெல்லாம் ஒன்னுமில்ல செழி. சூப்பரா போகுது. எந்தக் கவலையும் இல்ல. ஆமா நீயேன் ஒரு மாதிரி படபடப்பா பேசுற? என்ன ஆச்சு? எதாவது பிரச்சனையா?" என்ற ஆதிக்கு,

"ஹே அதெல்லாம் ஒன்னுமில்ல ஆதி. கொஞ்சம் வேலை அதிகம். அது விஷயமா ஒரு க்ளைண்டை பார்க்கணும். நான் அதுக்குத் தான் போய்ட்டு இருக்கேன். அநேகமா நான் இன்னைக்கு வர ரொம்ப லேட் ஆகலாம். ஏன் வராமலும் கூடப் போகலாம். நீ தனியா இருந்துப்ப தானே? ஒன்னும் பிரச்சனை இல்லையே?"

"செழி என்ன ஆச்சு?" என்று ஆதிரா அதிரவும்,

"பதட்டப் படாத ஆதி... நான் பார்த்துக்கறேன். சில். சாயுங்காலம் நீயே வந்திடு ஆதி. இல்லைனா உன் ஃப்ரண்ட் கிட்டச் சொல்லி வந்திடு... பத்திரம்..."

"நான் பார்த்துகிறேன் செழியா. பை..."

************************
செழியனிடம் பேசிய இனியாவிற்குப் பார்த்த மாப்பிள்ளையின் தந்தையிடம், "சொல்லுங்க மாமா... என்ன விஷயம்? நானே போன் பண்ணனும்னு நெனச்சிட்டு இருந்தேன்... அதுக்குள்ள நீங்களே கூப்பிட்டிங்க..." என்று கேட்க,

"ஆதிரா யாரு? நீங்க தனியா இருக்கீங்களா இல்ல உங்க கூடத்தான் அந்தப் பொண்ணும் இருக்காளா? உங்களுக்கு அவளுக்கும் என்ன சம்மந்தம்?" என்று எல்லாம் கேட்க செழியன் பதில் பேசாமல் இருந்தான்.

"சொல்லுங்க நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பதிலே இல்லையே? இந்த ஊரு மற்றவங்க எல்லோரும் என்னென்னவோ பேசுறாங்க? சொல்லுங்க அந்தப் பொண்ணு உங்க கூடத்தான் இருக்காளா?" என்று போனில் அவர் கேட்க நினைத்ததையெல்லாம் மறைக்காமல் கேட்டுவிட,

"மாமா நான் உங்ககிட்ட நேர்ல பேசணும். நான் வரேன். உடனே வரேன்..." என்று இவன் பதில் சொல்ல,

"அதெல்லாம் வேணாம். நீங்க வரதும் வராம இருக்கறதுக்கு நீங்க நான் கேட்ட கேள்விக்குச் சொல்ற பதிலையே தான் இருக்கு... சொல்லுங்க செழியன்..."

செழியனுக்கு ஒருநிமிடம் அன்று தன் அன்னையிடம் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது. 'என்னாலையோ இல்லை ஆதிராவாலையோ இனியா கல்யாணத்திற்கு எந்தப் பிரச்சனையும் வராது' என்று அவன் சொன்னது நினைவுக்கு வர,"நான் ஈவ்னிங்குள்ள அங்க இருக்கேன் மாமா. நான் எல்லாம் நேரில் வந்து சொல்றேன். ப்ளீஸ் அவசரப்பட்டு எதையும் முடிவெடுக்காதீங்க. நான் வந்து சொல்றேன்..." என்று இவன் குரலை இறக்கி பணிவுடன் சொல்லிவிட்டு இதைப்பத்தி அவன் அன்னையிடம் கூடச் சொல்லாமல் அவசரமாக ஆபிசில் லீவ் சொல்லிட்டு கிளம்பிக்கொண்டு இருந்தான். அப்போது தான் ஆதிரா அவனை அழைத்தாள்.

என்ன தான் தைரியமாக செழியன் பேசிவிட்டுக் கிளம்பினாலும் அவன் மனம் சொல்லமுடியாத பயத்தில் இருந்தது. இனியாவை நினைக்கையிலும் தன் அன்னையை நினைக்கையிலும் எங்கே இதெல்லாம் தெரிந்தால் ஆதிரா சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிடுவாளோ என்றும் அவனுள் பயம் எழுந்தது. அவனுக்கு இருவரும் வேண்டும். இனியாவின் வாழ்க்கை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு ஆதிராவும் முக்கியம். யோசனையிலே அவன் சென்றான்.
***************
செழியனிடம் பேசியதிலிருந்தே ஏதோ சரியில்லை என்று நினைத்தவள் ஒருவேளை அவன் சொன்னது போல் வேலையாகத் தான் இருக்குமோ என்று நினைத்து அவளும் அவளுடைய வேலைகளில் மூழ்கினாள். இன்பேக்ட் அவளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் அனுபவிக்கும் இந்த சந்தோச மனநிலை அவளிடம் வேறெதையும் அவளுக்கு நினைவுபடுத்தவில்லை .

அனன்யாவுடன் பேசிவிட்டு வேலையை முடித்து வந்தாள் ஆதிரா. அவளைப் பத்திரமாக பஸ் ஏற்றி அனுப்ப வந்த அனன்யா தன்னோடு வருமாறு ஆதிராவை அழைத்தாள். இருவரும் கொஞ்சம் பேசிக்கொண்டு வந்தாலும் இந்த ஆதிரா அனன்யாவுக்கு சற்று வித்யாசமாவே தெரிந்தாள். அவளை தன் அபார்ட்மென்டுக்கு அழைத்து வந்தவள் அமரச்செய்து பின்பு மெதுவாக எல்லாமும் கேட்டாள்.

இதுவரை தன் வாழ்வில் நடந்தது இப்போது நடந்து கொண்டிருப்பது என்று எல்லாமும் சொன்னாள் ஆதிரா. ஆதிராவின் பேச்சிலே எதையோ புரிந்துகொண்ட அனன்யா,"அதெப்படி இந்தக் காலத்துல இப்படி ஒரு ஃப்ரண்டா?" என்று ஆச்சரியப்பட,

செழியனுக்கும் தனக்கும் எப்படி நட்பு ஆரமித்தது என்று எல்லாமும் சொல்லிவிட்டு ஆதிரா தங்கள் அபார்ட்மென்டுக்கு வர காத்திருக்க அப்போது அவனைக் கண்டாள். அவள் வாழ்வையே புரட்டிப்போட்ட அவனே தான் அவன். யாரை தன் வாழ்வில் மீண்டும் பார்க்கவே கூடாது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாளோ அவனையே பார்த்துவிட்டாள். அவன் குடும்பத்தோடு ஒன்றாக காரில் ஏறி செல்ல அவனும் இவளைக் கண்டான்.
அவன் இளங்கோ. அவன், தன் மனைவி, அவன் குழந்தை என்று மூவரும் ஒன்றாக ஷாப்பிங் மாலில் இருந்து வெளியே வந்து காரில் ஏற ஆதிராவுக்கும் கோவமும் வந்தது கூடவே அழுகையும் வந்தது. அந்தக் கோவத்தில் அப்படியே அபார்ட்மெண்ட் வந்தாள். கீழே அந்தப் பசங்க எல்லோரும் அவளை மறிக்க,

"என்ன ஓகே கண்மணி... சேரி எல்லாம் கட்டியிருக்கீங்க?"

"ஆண்ட்டி உங்களுக்கு இந்த சேரி சூப்பரா இருக்கு..." என்றாள் அந்தக் குட்டிப் பெண்.

"ஏன் அக்கா ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க?" என்று மற்றொருவன் கேட்க அவளுக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

"எங்கக்கா உங்க ஆளைக் காணோம்?" என்றான் அவன்.

அப்போது தான் அவளுக்கு செழியன் சொன்னதே நினைவுக்கு வந்தது. தனியாகவே தான் இருக்க வேண்டுமா என்று நினைத்தவள் அங்கேயே அமர்ந்து அக்குழந்தைகளுடன் பேசினாள். ஆனால் அவள் எண்ணமெல்லாம் இங்கு இல்லாமல் எங்கெங்கோ சென்று வந்தது. 'அவன் முன்னாடி நான் கெத்தா வாழ்ந்திருக்குணும்னு எவ்வளவு ஆசைப்பட்டேன்? இந்நேரம் அவனுக்கும் எல்லாம் தெரிந்திருக்கும் தானே?' என்று அவள் யோசிக்க, மணி ஏழரையைக் கடக்கவும் அந்தப் பசங்க எல்லோரும் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்த அவளைப் பார்த்த அந்த வைஸ் செக்ரட்டரியின் மனைவி,

"ஏன்மா இப்படியே உட்கார்ந்திருக்க? வீட்டுக்குப் போ..." என்றதும் தான் தான் எங்கு இருக்கிறோம் என்றே உணர்ந்து தங்கள் அபார்ட்மென்டுக்கு சென்றாள்.

அவள் செல்ல அவளுக்கு அனன்யா அழைத்து நாளை என்ன வேலை என்பதைச் சொல்லிவிட்டு வைக்க சாப்பிடக்கூடப் பிடிக்காமல் அப்படியே சோபாவில் படுத்தவள் உறக்கமும் வராமல் எங்கெங்கோ ஏதேதோ நினைவுகளில் சென்று வந்தாள்.
**********************

இரவு வரை அங்கேயே இனியாவின் மாப்பிள்ளை வீட்டில் பேசியவன் ஒருவழியாகப் பேச்சு முடிந்ததும் அங்கிருந்து கிளம்பினான். அவர்கள் இன்னும் முழுமனதாக சமாதானம் ஆகவில்லை தான். இருந்தும் ஓரளவுக்கு அவர்கள் சமாதானம் ஆனார்கள். எல்லாம் ஆதிராவின் மாமாவின் வேலை தான் என்றும் தெரிந்துக்கொண்டான் செழியன். அவரை அன்று போலீசில் மாட்டிவிட்டதால் அவர் தன் பங்கிற்கு இனியாவின் திருமணத்தை நிறுத்த சில பல கோள்மூட்டும் வேலைகளைச் செய்து விட்டிருக்கிறார். இன்னமும் இந்த விஷயம் எதுவும் தன் அன்னைக்கும் தங்கைக்கும் தெரியாது என்று நினைத்தவன் தெரியாமல் இருப்பதே நல்லது என்று வேண்டிவிட்டு அவன் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.

*****************
ஆதிராவுக்கு செழியனின் தாயும் தங்கையும் அழைக்க ஒரு வித உற்சாகமே இல்லாமல் அதை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டுப் பேசினாள். அவர்களும் பேசிவிட்டு செழியனைப் பற்றி அவர்கள் கேட்க அப்போது தான் அவன் வெளியே சென்றிருப்பதே அவர்களுக்குத் தெரியவர அவளைப் பத்திரமாக இருக்குமாறு சொல்லிவிட்டு வைக்க ஆதிராவும் சாப்பிடாமலே சென்று உறங்கினாள்.

இரவு 11 மணிக்கு மேல் வந்தான் செழியன். அவனும் எதையும் சாப்பிடவில்லை. வீட்டிலும் எதுவும் இல்லாததால் அவனுக்கு சந்தேகம் வர அவளை எழுப்ப போக அங்கே அவளோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாது இவனும் பால் மட்டும் குடித்துவிட்டு இன்று நடந்ததையெல்லாம் நினைத்தபடியே இருந்தான். (தொடரும்...)
 
எல்லா பிரச்சனையும் தீர்ந்து இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்றதுக்குள்ள யப்பா நமக்கு மூச்சு முட்டிடும் போல ???
 
எல்லா பிரச்சனையும் தீர்ந்து இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்றதுக்குள்ள யப்பா நமக்கு மூச்சு முட்டிடும் போல ???
ha ha ... kandipa seruvanga ??
 
Top