Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-13

Advertisement

praveenraj

Well-known member
Member
'என்ன நடந்தது? ஏது நடந்தது?' என்று சுதாரிப்பதற்குள் எல்லாமும் நடந்து முடிந்து விட்டது. அப்பப்பா 'வார்த்தைகள்' தான் எத்தனை கூர்மையான கொடிய ஆயுதம்! கண்ணிமைக்கும் நேரத்தில் வார்த்தைகள் அனைத்தும் 'கிளவுட் பர்ஸ்ட்' (cloud burst - மேக வெடிப்பு. அதாவது வழக்கத்தைக் காட்டிலும் மிக அதிக மழை பொழிவதை கிளவுட் பர்ஸ்ட் என்று சொல்வார்கள். 1 மணிநேரத்திற்கு 100 மில்லி மீட்டர் அளவு மழை பெய்து விடும். மிகவும் ஆபத்தானது.) போல விழுந்து விட்டது. இது மலை பிரதேசங்களில் சாதாரணம் தான். வருவதும் தெரியாது விழுவதும் தெரியாது ஆனால் பின் விளைவுகள் ஏராளம்.

செழியனோ சற்று முன் நடந்தவற்றை எல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்தான். நம் எல்லோரையும் போலவே எல்லாம் நடந்து முடிந்தவுடன்,'ஐயோ நாம் சற்று பொறுமையாக இருந்திருக்கலாமோ? அவசர பட்டுவிட்டோமோ?' என்று நினைத்து வருந்தினான். அவனுக்கு ஏற்பட்ட அவமானம் அவப்பெயரைக் காட்டிலும் அவன் குடும்பத்துக்கு ஏற்பட்டதைக் காட்டிலும் ஆதிராவுக்கு நடந்ததெல்லாவற்றையும் நினைக்கையில் அவனுக்கு அதிகம் வலித்தது.
'ஒருவேளை நான் தவறு செய்துவிட்டேனோ? நேற்று அவளைப் பார்த்ததும் நான் உடனே அவளின் தந்தையிடம் எல்லாமும் சொல்லியிருக்க வேண்டுமோ? ஒருவேளை நான் சொல்லியிருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காதோ? பெற்றப் பெண்ணைப் பற்றி ஒருவன் சில போலியான ஆதாரங்களுடனும் சில ஜோடிப்புகளுடனும் அவர்களை கவர்ந்து இழுத்துவிட்டானே? அதை நம்பி என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஜெகநாதனும் பேசிவிட்டாரே?' என்று வருந்தினான்.

அவன் அனிச்சையாக அவளைத் திரும்பிப் பார்க்க அவளோ எவ்வித சலனமுமின்றி கிடந்தாள். என்று ஆதிரா செழியனிடமே வந்து,"செழி எனக்கு இளங்கோவைப் பிடிச்சிருக்கு... நான் அவனை லவ் பன்றேன்னு நினைக்கிறேன்... எனக்கு ஒரு மாதிரி இருக்கு டா... சொல்லமுடியாத ஃபீல்... மனசெல்லாம் பட்டர்ப்ளை பறக்குது. இப்போ நான் என்னடா பண்றது?" என்று அவனின் மனதை அறியாமல் அதில் என்ன இருக்கிறது என்று புரியாமல் அவனிடம் இதைச் சொன்ன அந்த நாளைக் காட்டிலும் இன்று இப்போது அவனுக்கு அதிகம் வலிக்கிறது...
இப்போது இவளை என்ன சொல்லி சமாதானம் செய்வதனென்று புரியாமல் தவிக்கிறான் செழியன். போதாக்குறைக்கு அவள் வாழ்வில் நிகழ்ந்த எல்லாமும் தெரிந்த ஒரே நபர் இப்போதைக்கு இவன் தான். இவள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறாள் என்றும் இப்போது அவளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பது உட்பட எல்லாமும் அவனால் உணர முடிந்தது.

வாழ்க்கை சிலநேரம் இப்படித்தான் நொடியில் தலைகீழாக மாறிவிடும். அன்று அவன் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் இருக்கும் போது அவனுக்கு அவசர அழைப்பு வந்தது. சென்று பார்த்தால் அவன் அப்பாக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்றும் உடனே ஊருக்கு வருமாறும் சொல்லப் பட அவன் மனமெல்லாம் பதைபதைத்தது. 'நேற்று இரவு தானே போனில் அவரிடம் நன்றாகப் பேசினேன்? என்னவாக இருக்கும்?' என்ற குழப்பம் மற்றும் பதற்றத்தில் ஊருக்குச் சென்று பார்த்தால் எல்லாம் முடிந்திருந்தது. வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டு இருக்கும் போதே திடீரென மாரடைப்பு வந்து கீழே விழுந்தவர் தான். எழவேயில்லை...

அவனுக்கு அப்போது 19 வயது. இரண்டு தங்கைகள் வேறு! திரும்பிப் பார்க்கையில் வாழ்க்கை அவனுக்கு பயம் காட்டியது. அதனால் பொறுப்புகள் கூடியது. ஆதிராவை அவனால் மனதால் மட்டுமே நினைக்க முடிந்தது. அவளிடம் பேசக்கூட முடியவில்லை. அப்படியே பேச வாய்ப்பு அமைந்தாலும் என்ன பேசுவது? ஷி வாஸ் இன் எ ரிலேஷன்ஷிப் வித் இளங்கோ அட் தட் டைம். ( அப்போது அவளும் இளங்கோவும் காதலித்துக்கொண்டிருந்தனர்.)

படித்தான். கடவுள் புண்ணியத்தில் கேம்பஸில் செலெக்ட் ஆனான். பெங்களூருவில் ட்ரைனிங். பின்பு மைசூரில் கொஞ்சம் பணி செய்தான். காலம் ஓடியது. திடீரென ஒருநாள் தன் அன்னை,"டேய் ஆதிராவுக்குக் கல்யாணம் டா..." என்று சொல்ல முதலில் இளங்கோவுடன் என்று தான் நினைத்தவனுக்குப் பிறகு தான் எல்லாம் தெரிந்தது. என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியவில்லை. சரி அவள் நன்றாக இருக்கட்டும் என்று மனம் அடிக்கடி அவளுக்காகவே பிரத்தியேகமாகப் பிராத்திக்கும். அதும் அந்த நாள் வரைபி தான். எப்போது அவளை ஏர்போர்ட்டில் தனியாக அதும் எப்போதும் அவள் கண்களில் இருக்கும் அன்ட் உற்சாகமும் சந்தோசமும் இல்லாமல் பார்த்தானோ அப்போதே அந்த நிம்மதியும் பறிபோய்விட்டது.

அவள் நன்றாக இருந்து இருக்கனும். அட்லீஸ்ட் அவள் நன்றாக இல்லை என்பது அவனுக்குத் தெரியாமலாவது இருந்திருக்க வேண்டும். அவள் நன்றாவும் இல்லை அது அவனுக்குத் தெரியாமலும் இல்லை! சனிக்கிழமை இரவு அவளை உள்ளே தூங்கவைத்து விட்டு வெளியே வந்தவனுக்கு மனமெல்லாம் பாரம் குடிகொண்டது. ஏதோ ஒன்று அவனை அதிகம் அழுத்தியது. அவனால் அதை இன்னதென்று சொல்லிவிட முடியவில்லை. அன்றைக்கு மட்டும் இரவில் சுமார் 10 முறைக்கு மேல் அவளின் அறைக்குச் சென்று அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டு,'என்னவாக இருக்கும்? ஏன் ஆதிரா இப்படி இருக்க? உன் முகத்துல இருந்த அந்த உற்சாகம் சந்தோசம் துறுதுறுப்பு எல்லாம் எங்க ஆதி? என்ன ஆச்சு ஆதி உனக்கு?' என்று மனதால் ஆயிரம் முறையாவது கேட்டிருப்பான். பிறகு வந்து படுத்தவன் மணி 3 ஐ கடந்த போது தான் கண்ணயர்ந்தான்.

எல்லாமும் பொறுமையாகக் கேட்டுக்கொள்ளலாம் என்றும் தன்னால் முடிந்தால் இல்லை இல்லை எப்பாடு பட்டாவது அவளின் பிரச்சனைகளை எல்லாம் சரிசெய்து அவள் வாழ்க்கையை அழகாக்க வேண்டும் என்றும் நினைத்தான். அன்று பார்க்கும் போது ஒரு கேள்வி கேட்டாளே? "நீ கூட என் லைப்ல இல்ல செழி? என்ன பண்றதுனே புரியில?' என்ற அந்தக் கேள்வி அவனைக் கூர்மையாகத் தாக்கியது. ஒருவேளை தான் அவளுடன் இருந்திருந்தால் எல்லாம் சரியாகி இருக்குமோ என்று அவனுக்குள் ஒரு நப்பாசை. மேலும் காரில் வரும் போது அவள் சொன்ன எல்லாமும் அவனை இன்னும் பாதித்தது.

சில உறவுகள், சில நபர்கள் நம் வாழ்வில் நமக்கு ரொம்பவும் ஸ்பெஷலாக இருப்பார்களே? அதற்கு காரணம் ஏன்னென்று எல்லாம் தெரியாது. அன்று ஒருநாள் மாலை வேளையில் அவளை அந்த டியூஷனில் பார்த்தது முதல் (அதுதான் இவர்களின் முதல் சந்திப்பு) அன்று அவளை கிண்டல் செய்து அழவைத்தது வரை (ஆக்சுவல்லி அவன் அதற்குக் காரணமில்லை தான். இருந்தும் ஒரு தப்பு நடக்கும் இடத்தில் அதைத் தட்டிக் கேட்காமல் அமைதியாக இருப்பதும் அந்தத் தப்பு செய்ததிற்கு சமம் தானே? மகாபாரதமும் அதை தானே சொல்கிறது? பீஷ்மரும் துரோணரும் செய்த தவறுகளும் அதுதானே?)

"அப்பா இன்னைக்கு எங்க டியூசன்ல ஒரு விஷயம் நடந்தது. எங்க டியூசனுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்தது. அத நம்ம வினோத் இருக்கான் இல்ல பயங்கரமா கிண்டல் பண்ணிட்டான். அந்தப் பொண்ணு அழுதுட்டே போயிடுச்சி பாவம்..." என்று நான்காம் வகுப்பு படிக்கும் செழியன் தன் தந்தையிடம் அன்று டியூஷனில் நடந்ததைச் சொன்னான்.

"இதே மாதிரி தான் போனவாரம் நம்ம காஞ்சனாவை யாரோ ஒரு பையன் செமயா கிண்டல் பண்ணியிருக்கான் போல? அவளும் அழுதுட்டே வந்து என்கிட்டே சொன்னா..." என்றார் அவன் தந்தை.

"அப்பா? என்னப்பா இதை இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க? நீங்க அவனை சும்மாவா விட்டிங்க? யாருப்பா அவன் சொல்லுங்க நான் அவனைப் பார்த்துக்கறேன்..." என்று உணர்ச்சிப் பெருக்கில் பேசினான் செழியன்.

"அப்போ நீங்க இன்னைக்கு பண்ணதை அந்தப் பொண்ணு அவ அண்ணாகிட்டச் சொல்லி அவன் வந்தா நீ என்ன பண்ணுவ செழியா?" என்றவர் எதையும் பேசாமல் செழியனையே கூர்ந்து கவனித்தார்.

"அது வந்து... அப்பா... அது... நான் எதுவும் பண்ணல... வினோத் தான்..."

"அதெப்படி நீ பண்ணா சரி, அதுவே வேற ஒருத்தன் பண்ணா தப்பா.? உன் தங்கைக்கு நடந்தா அது அநியாயம், அதுவே வேற பொண்ணுக்கு நடந்தா உனக்கு ஓகே ரைட்?"

"அப்பா... அது வந்து... சாரிப்பா..."

"அதை நாளைக்கு அந்தப் பொண்ணுகிட்டே போய் கேளு..."

"நிச்சயமாப்பா..." என்றான் செழியன். அப்படித் தொடங்கியது தான் செழியன் ஆதிரா நட்பு.


ஏனோ இதெல்லாம் நினைக்கையில் எல்லாமும் நேற்று நடந்ததைப்போல் அவனுக்குத் தோன்றியது. அவனுக்கு நினைவு தெரிந்து அதன் பின் அவளை அவன் அழவிட்டதே இல்லை. கிட்டத்தட்ட பனிரெண்டாவது வகுப்பு வரை அவர்களின் நட்பு நன்கு வேரூன்றியது.

சின்ன வயசிலிருந்தே கொஞ்சம் சப்பி (chubby) ஆனவள் ஆதிரா. நன்றாக கொழுகொழு என்று முட்டைக் கண்களை உருட்டி உருட்டி பேசும் பிரவுன் ஸ்கின் டோனில் ஒரு தேவதை!!!

அங்கிருந்து நேராக அவனின் வீட்டிற்குச் சென்றனர். ஆதிரா தான் ஏதேதோ எண்ணத்தில் இருந்தாள். அவள் உள்ளே வந்து அமர்ந்ததும் தான் ஒரு மாதிரியே இருப்பதைப் பார்த்து செழியனின் தாய் அவளின் தோளைத் தொட அவர் மீது சாய்ந்து அழுதாள். ஏனோ அவள் அழுததால் செழியனுக்குத் தான் அதிகம் வலித்தது.

"அம்மா, என் அப்பாவே என்னை நம்பல..." என்று வருந்த அவளைக் கொஞ்சம் ஆறுதல் படுத்தினார் அவர். அதற்குள் இனியா அவளுக்கு சாப்பிட உணவை எடுத்துவர முதலில் மறுத்தவள் பின்பு செழியனின் தாய் ஊட்ட ஊட்ட அப்படியே சாப்பிட்டு உறங்கியும் போனாள். அவளை படுக்கவைத்துவிட்டு வந்த செழியன் தன் தாயைப் பார்க்க, அவரும் என்ன தான் செய்வார்? மகன் என்ன தான் எதையும் வாய்திறந்து சொல்லவில்லை என்றாலும் மகனின் எண்ணங்கள் எல்லாம் பெற்றவருக்குத் தான் தெரியாதா என்ன? செழியனுக்கு ஆதிரா என்றால் எவ்வளவு இஷ்டம் என்று அவர் அறிவார். அவளுக்குத் திருமணம் என்று சொன்னதும் கிட்டத்தட்ட இரண்டு மாதம் அவன் ஊர் பக்கமே வரவில்லை. அவருக்கு ஆதிராவையும் நன்கு தெரியுமே!

எவ்வளவு பொறுப்பான கலகலப்பான துறுதுறு பெண் அவள். மேலும் அவள் வாழ்வில் நடந்த அனைத்தும் அவருக்கும் தெரியும் தானே? என்று இளங்கோவைக் காதலிப்பதை தன் வீட்டில் சொன்னாளோ அன்று பிடித்தது அவளுக்குப் பிரச்சனை. அவள் தந்தை மாமா யாருக்கும் இதில் உடன்பாடில்லை. அவளின் மனதை மாற்ற எவ்வளவோ முயற்சித்தனர். ஏன் செழியனின் தாயிடம் கூட அவளிடம் பேசி புரியவைக்கச் சொன்னார்கள். ஆதிரா தான் அடம் பிடிப்பவள் ஆயிற்றே? அவள் தந்தையின் மனதைக் கரைத்தாள். ஆனால் அதற்குள் இளங்கோ ஜெகா வாங்கிவிட்டான். தாய் இறந்தும் விட்டார். சூழ்நிலை அவளுக்கு எதிரானது. திருமணம் அவள் விருப்பமில்லாமலே தந்தையின் ஆசைக்காக நடந்தது. சரி எல்லோருக்கும் ஆசைப்பட்டது எல்லாம் கிடைத்துவிடுவதில்லையே? குறைந்த பட்சம் நமக்குப் பிடித்தவர்களுகவாவது நம் மனதை மாற்றிக்கொள்ள வேண்டுமே என்று நினைத்து மனதை மாற்றிக்கொண்டாள்.

அமெரிக்கா போனாள். இப்படி வருவாள் என்று யாரும் நினைக்கவில்லை. இதில் மீண்டும் செழியன் பார்வையில் படுவாள் என்று செழியனின் தாயே நினைத்ததில்லை. இப்போது என்ன செய்ய வேண்டும்? நிச்சயம் அவருக்கே பதில் தெரியவில்லை. இதில் இனியாவின் திருமணம் வேறு நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் ஆதிரா வேறு இப்படி இருக்கிறாள். இத்தனை ஆண்டுகளாக செழியன் பட்ட, படும் கஷ்டம் எல்லாமும் அவனின் தாய்க்கும் தெரியுமே. சின்ன வயதிலே நிறைய கடமைகளைச் சுமக்க வேண்டியாயிற்றே? எப்படியோ காஞ்சனாவை ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து எல்லாமும் செய்து கரையேற்றி விட்டான். இனியாவின் வாழ்க்கையும் நிறைவு ஆனால் செழியனின் 'எந்த முடிவுக்கும்' அவர் தன் முழு சம்மதத்தையும் சொல்லிவிடுவார்.

செழியன் இப்போது அவரிடம் பேச வந்தான். அவனின் முகபாவத்தை வைத்தே அவன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் என்று அவருக்குப் புரிந்தது. ஆனால் என்ன முடிவு? (தொடரும்...)
 
இப்போ செழி எடுக்கிற முடிவாவது அவளுக்கு ஒரு நல்ல விடியலை தரட்டும் ???
yes, their life will change for sure... thank you??
 
Top