Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-12

Advertisement

praveenraj

Well-known member
Member
"மாமா கொஞ்சம் வாயை மூடுங்க..." என்று கத்தினாள் ஆதிரா.

"நீங்கலாம் ஒரு பெரிய மனுஷனா? போயும் போயும் பெண்கள் கிட்ட அது ஆம்பளைங்க இல்லாத அப்போ உங்க வீரத்தைக் காட்டி இருக்கீங்க?" என்றவள்,

"அப்பா எங்க கூப்பிடுங்க... அவரை நான் பார்க்கணும்..." என்று சொன்னதும் ஒரு உருமலுடன் வெளியே வந்தார் ஜெகநாதன்.

"அப்பா என்னப்பா இது? இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்து தான் நடந்ததா? அவன் என்னப்பா பண்ணான்? சொல்லப்போனா எனக்கு ஹெல்ப் தானே பண்ணான்? அவனைப் போய்..." என்றதும்,
"சீ வாயை மூடு. நடுராத்திரி ஒரு நாள் நைட் முழுக்க அவன்கூட தங்கிட்டு வந்து பேச்சைப் பாத்தியா கழுதைக்கு..." என்றதும் ஆடித்தான் போனாள் ஆதிரா. ஏனென்னில் சின்ன வயது முதல் தன் பெயரைக்கூட முழுதாய் உச்சரிக்காத தன் தந்தையா இது அதும் இப்படிப் பேசியதை அவளால் நம்ப முடியவில்லை. 'வழிப்போக்கர்கள் நண்பர்கள் ஆவார்கள் பின் அவர்களே தான் மீண்டும் வழிப்போக்கர்கள் ஆவார்கள்' என்பதைப்போல தன் தந்தையே தன்னை நம்பாமல் எப்பேர்ப்பட்ட அவதூறை சுமத்திவிட்டார்? அவளால் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அப்படியே சிலையென உறைந்து நின்றாள்.
அவளுக்குத் தாரைதாரையாக கண்ணீர் வெளியேறியது.

"இப்படி ஊருமேய தான் கல்யாணம் வேணாம்னு சொன்னீயா?" என்று அவர் வார்த்தையை விட,

"அங்கிள்... வேணாம் வார்த்தை வேற மாதிரி போகுது..." என்று செழியன் சொன்னதும்,

"இல்ல நீ சும்மா இரு செழியா... அவர் பேசட்டும். அவர் மனசுல இருக்குற எல்லாமும் வெளியே வரட்டும்... சொல்லுங்கப்பா அப்றோம்?" என்றவளைப் பார்த்து,"அந்த போட்டோஸ் எல்லாம் எடுத்துக் காட்டு..." என்று சொல்ல அமெரிக்காவில் தன் கொலீக்குடன் இருந்த புகைப்படம் முதற்கொண்டு நேற்று செழியனுடன் இருந்த புகைப்படம் வரை அனைத்தையும் பார்த்தவள் எவ்வித அதிர்ச்சியையும் காட்டவில்லை. பின்னே இவையாவும் அவளுக்குத் தான் தெரியுமே... எல்லாமும் செழியன் சொல்லிவிட்டானே? மேலும் அவள் இதையெல்லாம் எதிர்பார்த்து தானே வந்தாள்?

"இதெல்லாம் மாப்பிள்ளை எனக்கு அனுப்பின போட்டோஸ். இப்போ சொல்லுங்க மாமா நான் என்ன பண்ணட்டும்னு கேட்டதும் எனக்குத் தூக்குல தொங்கலாம்னு இருந்தது..." என்று கத்தினார் அவர்.

"இவ்வளவு நேரம் வாய்கிழிய பேசுனியே இப்போ சொல்லு இப்போ பேசு? என்ன இந்த போட்டோஸ்ல இருக்கறது நானில்லைனு சொல்லப்போறேயா?"

"ஆமா... இந்த போட்டோஸ்ல இருக்கறது நான் தான். நான் தான் நேற்று ஆதிராவை ஏர்போர்ட்ல பார்த்து சரி நைட் ஆகிடுச்சினு தங்க வெக்க என் கூடக் கூட்டிட்டுப் போனேன்..." என்று செழியன் நிலைமையின் வீரியம் அறிந்து கத்தாமல் பொறுமையாகவே நடந்ததையெல்லாம் புரியவெக்க முயற்சித்தான்.

"ஷட் அப் செழியா... இவங்களை மாதிரி கீழ்த்தனமான ஆட்களுக்கெல்லாம் நாம தன்னிலை விளக்கம் கொடுக்கணும்னு ஒன்னும் அவசியமில்லை. ஆமா நான் இப்படித்தான். இப்போ என்ன?" என்று கோவத்தில் தன் மீது விழுந்த இந்த அவப்பெயரை நினைத்து அதிர்ந்தவள் பேச அதற்குள் சுதாரித்த காந்திமதி (செழியனின் தாய்),"ஐயா இங்க பாருங்க, நம்ம ஆதிரா அப்படிப்பட்ட பொண்ணு எல்லாம் இல்ல... இதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு அவசியமில்லை..." என்றவர்,

"மேலும் என் பையனை நான் அப்படி வளர்க்களவில்லை. அவன் என்னைக்கும் தப்பு செய்ய மாட்டான். நான் என் பையனை நம்புறேன். ஆதிராவையும் நம்புறேன்..." என்று சொன்னவர்,"அவனுக்கு ரெண்டு தங்கைங்க இருக்காங்க. ஆதிராவும் என் பொண்ணு மாதிரிதான்..." என்று சொல்லவும் ஏனோ அதுவரை இருந்த கோவம் எல்லாம் கண்ணீராய் மாறி அவரைக் கட்டிக்கொண்டாள் ஆதிரா.

"நீங்க ஆத்திரத்துலையும் கோவத்துலையும் இருக்கீங்க... என்ன நடந்ததுன்னு நம்ம யாருக்குமே எதுவும் தெரியாது. பொறுமையா விசாரித்தா தான் என்னனு தெரியும்..."

"ஓ அப்போ இதெல்லாம் சொன்ன என் மாப்பிள்ளை என்ன முட்டாளா? அதான் போட்டோ ஆதாரத்துடன் எல்லாமும் சொல்லிட்டாரே?" என்ற ஜெகநாதனுக்கு,

"யாரோ சொல்றதை நம்புறீங்க... உங்க பொண்ணுக்கிட்ட என்ன நடந்ததுன்னு நீங்க கேட்க மாட்டிங்க இல்ல?'
அடக்கப்பட்ட கோபத்துடன் நிமிர்ந்தவர் இருந்தும் ஏதோ ஒரு மூலையில் அவருக்கும் நம்பிக்கை வர,"சரி நான் கேட்கறதுக்கெல்லாம் பதில் சொல்லச் சொல்லுங்க. ஆமா நீ அங்க மாப்பிள்ளை கூடவே தங்க மாட்டேன்னு சொல்லி தனியா தான் தங்குனியாமே அப்படியா?" என்றதும் நடந்ததை எவ்வாறெல்லாம் அவன் மாற்றி கூறியுள்ளான் என்று எண்ணிய ஆதி,

"அப்பா... அது வந்து..." என்று தடுமாற,

"ஆமாவா இல்லயா... ஒரே வார்த்தைல பதில் வேணும்...'

"ஆமா..." என்றதும் அவருக்கு இருந்த நம்பிக்கை கொஞ்சம் குறைய,"அப்போ என்கிட்டே நான் சந்தோசமா இருக்கேன்னு சொன்னதெல்லாம் பொய்... அப்படித்தானே?"

ஆதிராவுக்கு இப்போது தான் தன் மீதிருந்த தவறு எல்லாமும் புரிந்தது. அவன் சாதரணமாக எதையும் செய்யவில்லை என்றும் எல்லாமும் பிளான் செய்து செய்துள்ளான் என்றும் புரிய இப்போது அவளுக்கு நடந்த அனைத்தையும் புரியவைக்க உண்மையில் தெம்பில்லை. பின்னே எப்படிச் சொல்லுவாள்? அங்கு சென்றதும் அவள் பட்ட துன்பம், அதிர்ச்சி, அவமானம், தன் தந்தையின் உடல்நிலைக்காகச் சொன்ன பொய் வரை எல்லாமும் அவளுக்கு எதிராக நின்றது.

இதற்கிடையில் அவரே,"ஆமா நீ டிவோர்ஸ் வேணும்னு..." என்றதும் செழியனுக்கும் எல்லாம் புரிந்தது. அவன் பயந்தது எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. ஆதிராவின் தவறுகள் எல்லாமும் அந்த அரவிந்திற்கே சாதகமாகச் சென்றுவிட்டது. அவனோ இப்போது ஆதிராவின் நிலையை நினைத்து மிகவும் வருந்தினான். இருந்தும் கடைசி வாய்ப்பாக,"சார் நான் உங்களுக்கு எல்லாமும் சொல்றேன். தெளிவா சொல்றேன். கொஞ்சம் பொறுமையா..." என்பதற்குள் அவளின் மாமா அவனை அடிக்க ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று திரள,

"அங்கிள் யாரோ ஒரு மூணாவது மனுஷன் சொல்றதை நம்புற நீங்க உங்க பொண்ணை நம்பல தானே? சரி அவன் சொன்னது எல்லாமே சரின்னே இருந்தாலும் வாதம் பிரதிவாதம் ரெண்டும் கேட்டு ரெண்டு தரப்பு நியாயத்தையும் விசாரித்து தானே முடிவு எடுக்கணும்?"

"ஆமா அந்த அசிங்கத்தை வேற நியாயப்படுத்துறதை காது கொடுத்து கேட்கணுமா? உன்னால எங்க மானம் மரியாதை எல்லாம் போச்சு..." - ஆதிராவின் மாமா.

"வாயை மூடு... நீயாரு என் விஷயத்துல தலையிட? நான் என் அப்பா கிட்டப் பேசிக்கிறேன்..." என்று கோவத்தில் ஆதிரா சொல்ல,

"ஏய் யாருக்கு யார் அப்பா? நீயாரு என் மச்சானை கேள்விகேட்கக் கூடாதுனு சொல்லுறது?" என்று அவளுக்கு எதிராகவே திரும்பினார் ஜெகநாதன்.

எப்போது தன் தாய் இறந்து விட்டாரோ அப்போதே எப்படியாவது தன் தந்தையின் அரசியல் செல்வாக்கு அவருடைய பணபலம் எல்லாமும் கொண்டு தான் முன்னேறிவிட வேண்டும் என்று நினைத்த தன் தாய்மாமன் அப்போது இருந்து தன் தந்தையை வசியப்படுத்தி விட்டார். தன் தந்தைக்கும் தன் மச்சான் சொல்வதே வேத வாக்காக மாறியிருந்தது. அவர் சொல்லித்தான் இந்தக் கல்யாணமும் நடந்தது. இளங்கோ பிரச்சனை, தன் தாய் இறந்தது, தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போக எல்லாமும் அவனுக்குச் சாதகமாகப் போக இன்று தன் தந்தையே தன்னை நம்பாமல் தன் மாமா சொல்வதை மட்டும் நம்பும் நிலைக்கு வந்து விட்டது.

"இங்க பாருங்க யாரையும் நான் அப்பானு கூப்பிட எனக்கு அவசியமில்லை. என் அம்மா தான் இவரை அப்பான்னு..." என்று அதே வீம்பு மற்றும் கோவத்தில் ஆதிரா சொல்லி முடிக்கும் முன்னே அவளை அறைந்திருந்தான் அவள் மாமன். அவளின் கழுத்தைப் பிடித்து நெருக்க, செழியன் முன்னே செல்ல கைகலப்பு ஆகும் முன் சரியாக பாலாஜி போலீசுடன் வந்தான்.

அங்கே வந்த இன்ஸ்பெக்டர்,"சார் கையை எடுங்க. அவங்க உயிருக்கு ஆபத்துனு சொன்னதும் ஏதோ விளையாடுறாங்கனு நெனச்சேன். ஆனா விட்டா கொன்னுடுவீங்க போல?" என்று வந்தவர் இருவரையும் விலக்க ஆதிராவுக்கு தொண்டை அடைத்தது.
நீண்டு மூச்சை இழுத்து விட்டாள் ஆதிரா. உடனே காரிலிருந்து தண்ணீர் தந்தான் செழியன்.

"பாருங்க சார் நாங்க சொன்ன கம்பிளைன்ட் மேல ஆக்சன் எடுங்க..."

"ஏம்மா இதெல்லாம் என்ன? உங்க அப்பா மேலையும் மாமா மேலையும் கேஸ் தரீங்களா?" என்றார் அவர்.

அவளோ,"ஆமா சார் இந்த ஆளு மேல (மாமா) மட்டும் தரேன். ஏனோ அவர் மேல (ஜெகநாதன்) மேல கேஸ் கொடுக்க மனசு வரல. அதும் சம்மந்தமே இல்லாம இவங்க வீட்டுக்குப் (செழியன்) போய் தொந்தரவு செய்து இருக்காங்க..." என்று சொன்னவள்,"வா செழியா போலாம்... இனிமேல் இங்க இருக்கவே கூடாது..." என்றவளை செழியனும் காந்திமதியும் புரியாமல் பார்த்தனர்.

"ஒரு நிமிஷம்..." என்றவள் தன் கழுத்திலிருந்த செயின் தாலி எல்லாமும் கழட்டி வீசிவிட்டு அவர்களோடு வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
இங்கே ஜெகநாதனும் நடந்ததை எல்லாம் நினைத்துக்கொண்டிருந்தார். நேற்றே அவள் சென்னை வந்தது தெரிந்து செழியனுடன் சென்றதும் அறிந்துகொண்டு அவரை அழைத்த அரவிந்த் தன் இஷ்டத்திற்கு நடந்ததையெல்லாம் திரித்து அவன் மீது எந்த தவறும் இல்லாத மாதிரி சொல்லிவிட்டு,"இதெல்லாம் நான் ஏற்கனவே சொல்லியிருப்பேன் அங்கிள். உங்க உடல் நிலையின் காரணமா தான் தவிர்த்து விட்டேன். மேலும் நான் ஆதிராவை எவ்வளவோ சமாதானப் படுத்த முயற்சித்தேன் என்னால் முடியவில்லை..." என்று அவன் சொல்லிவிட,
முதலில் நம்ப தயங்கியவர் பிறகு அவன் போட்டோஸ் எல்லாம் அனுப்ப ஏனோ தன் பெண் தான் தவறிழைத்து விட்டாள் என்று நினைத்தவர் செழியனுடைய வீட்டிற்குச் சென்று மிரட்டி அவர்களை இங்கே வரவழைத்து விட்டு இப்படி நடந்தேறிவிட்டது.

ஆதிரா நடந்ததையெல்லாம் யாரிடமாவது சொல்லியிருந்தால் ஒருவேளை அவளுக்கு ஏதேனும் சாதகம் ஆகியிருக்கலாம். இப்போது என்ன செய்ய? ஆதிரா முந்துவதற்குள் அரவிந்த் முந்திக்கொண்டான். போதாக்குறைக்கு இவள் தனியாகத் தங்கியது, டிவோர்ஸ் கொடுத்தது என்று எல்லாமும் அவளுக்கு எதிராக அமைந்துவிட்டது.

ஆதிராவின் கோவம், இயலாமை, தன்னை தன் தந்தையே நம்பவில்லையே என்று நினைத்து அழ கூடவே இப்படி செழியனையும் அவன் குடும்பத்தையும் வேறு அவமானப் படுத்திவிட்டதாக நினைத்து வருந்தினாள். அழுதழுது தலைவலியே வந்துவிட்டது அவளுக்கு. ஏனோ இளங்கோவின் நினைவு வர அவளுக்குச் சொல்லமுடியாத ஒரு கோவம் வந்தது. வாழ்க்கையில் தவறான ஒரு சுயநலவாதியைக் காதலித்ததால் இன்று தன் வாழ்க்கை இப்படி திசை மாறிவிட்டதே என்று எண்ணி கண்ணீர் வடித்தாள் ஆதிரா.

சில நேரங்களில் நாம் எடுக்கும் ஒரு சின்ன தவறான முடிவு நம் வாழ்க்கையையே மொத்தமாய்ப் புரட்டிப் போட்டுவிடும் அல்லவா? அப்படிதான் ஆனது ஆதிராவின் வாழ்க்கை! (தொடரும்...)
 
ஒரு சுயநலவாதியை காதலித்தாள்..
ஒரு சுயநலவாதி கணவனான்...
ஆமாம், அவன் தான் வேற லைஃப் வாழறானே..
அப்படி என்ன அவனுக்கு மான,அவமானம் ?
அதுவும் அவன் வரவே போகாத ஊரில்...?
சரியான சைக்கோ...
 
என்ன திட்டம் போட்டு
அவள தப்பா காட்டிட்டான்
 
என்ன தப்பு எங்க நடந்தாலும் அதில் பாதிக்கப்படுறது என்னமோ பெண்கள் மட்டும் தான் :( :( :(
 
Top