Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியேதொடரட்டுமே!-11

Advertisement

praveenraj

Well-known member
Member
வண்டியை நிறுத்தினான் செழியன். நீண்ட யோசனைக்குப் பிறகு,"இப்போ நாம எதுக்கு ஊருக்குப் போறோம்னு தெரியுமா ஆதிரா?"

"தெரியலையே?" என்று குழந்தைப் போல உதட்டைப் பிதுக்கினாள்.

"ஏதோ பெரிய பிரச்சனைன்னு மட்டும் தெரியுது. ஆனா என்னனு தெரியில... நீதான் அதைச் சொல்லணும். திடீர்னு கிளம்புன்னு சொன்ன நானும் கிளம்பிட்டேன்..." என்றாள் அவள்.

ஏனோ நடந்த விபரீதங்கள் எதையும் அறியாமல் இப்படி அப்பாவியாய் பதில் சொல்லும் அவளைக் காணவே செழியனுக்கு ஒரு மாதிரி இருக்க அவன் எல்லாமும் சொன்னான்...

"நேத்து நான் உன்னை ஏர்போர்ட்ல பார்த்தது முதல் உன்னை என்கூட பிளாட்டுக்கு கூட்டிட்டுப் போனது வரை எல்லாமும் யாரோ போட்டோ எடுத்து உன் வீட்டுக்கு அனுப்பிவெச்சிட்டாங்க..." என்றதும் அதிர்ச்சியில் அவளின் முட்டைக்கண்கள் மேலும் விரிய,

"அதுமட்டுமில்ல, அதெல்லாம் தெரிஞ்சி உன் மாமாவும் அவரு ஆட்களும் என் வீட்டுக்குப் போய் என் அம்மா கிட்டயும் தங்கைகிட்டயும் ஏதோ பிரச்சனை பண்ணியிருக்காங்க..." என்றதும் இதுவரை அடங்கியிருந்த கண்ணீரை சேர்த்து ஒரு கதறலாய் வெளிப்படுத்தினாள் ஆதிரா.

"நீ என்னடா பண்ண? அம்மா என்னடா பண்ணாங்க? இனியா என்னடா பண்ணா? ச்சே என்னைய காப்பாத்தின பாவத்துக்கு இப்போ நீயும் உன் குடும்பமும் ஏன்டா இப்படிக் கஷ்டப்படணும்? ஐயோ என் மாமா வேற சும்மாவே பைத்தியக்காரனாட்டம் திரிவானே? சரியான காட்டுமிராண்டி... சைக்கோ... அப்போ அம்மாவும் தங்கையும்?"

"அது நாம ரெண்டுப் பேரும் இன்னைக்கு நைட்டுக்குள்ள அங்க இருக்கனும். அதுக்குத் தான் இப்போ இவ்வளவு அவசரமா நாம கிளம்பறோம்..." என்றதும் அவள் எதையும் புரியாமல் அதேநேரம் நடந்ததையெல்லாம் கேட்கையில் அவளுக்கு ஒரு மாதிரி இருக்க திரும்பி பாலாஜியைப் பார்த்தாள்.

"ஆமாக்கா... அண்ணன் போன் வேற வேலை செய்யலையா அதுனால தான் எனக்குத் தகவல் சொல்லி சீக்கிரம் உங்களை ஊருக்குப் போகச் சொல்ல தான் நான் வந்தேன்...' என்று அவனும் திக்கித் திணறி எல்லாமும் சொன்னான்.

ஆதிரா தான் ஏதோ பித்துப்பிடித்த நிலையில் இருந்தாள்.

"என் கிட்ட நீ வந்ததுமே சொல்லியிருக்க வேண்டியது தானே? நான் உடனே என் அப்பாக்கு போன் பண்ணிச் சொல்லியிருப்பேனே செழி..."

"என்னனு சொல்லுவ ஆதிரா? நீ தான் நடந்த எதையுமே உன் வீட்டுல சொல்லவேயில்லையே? இன்பேக்ட் அப்படி எல்லாம் நடந்த மாதிரி நீ காட்டிக்கக் கூட இல்லையே? அவங்களைப் பொறுத்த வரை நீ அங்க அமெரிக்காவுல சந்தோசமா இருந்த... இருக்க... அவ்வளவு தான்..."
இதெல்லாம் யாரோட வேலையாக இருக்குமென்றும் ஆதிராவுக்கு எல்லாமும் புரிந்தது.

கடைசியாக அரவிந்துடன் நடந்த உரையாடல்கள் அவளுக்கு ஞாபகம் வந்தது.

"என்னைய ஏமாத்தி கல்யாணம் செஞ்சிக்கிட்ட இல்ல? சத்தியமா இதுவரை உன்மேல எனக்கு எந்த வெறுப்பும் இல்ல அரவிந்த். ஜஸ்ட் கோவம் தான். ஆனா என்னைய இப்படி தப்பா பேசி என் கேரக்டரை இப்படி தப்பா ப்ராஜெக்ட் பண்ணிட்ட தானே? நோட் உன்ன சும்மா விட மாட்டேன். ஐ ஹூமிலேட் யூ... (humilate - அவமானம்) நான் யாருனு காட்டுறேன்..." என்று சபதம் போட்டு வந்தாள். (அவள் உண்மையில் அதை அந்த அர்த்தத்தோடு எல்லாம் சொல்லவில்லை... அந்த நேரத்தில் அவளுக்கு இருந்த கோவம் ஆற்றாமை காரணமாகவே சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.)

"என்னை டேமேஜ் பண்ணனும்னு நெனச்ச உனக்கு இமேஜ்னு ஒன்னு இல்லாமலே பண்ணிடுவேன் பார்த்துக்கோ..." என்று அவனும் சவடால் விட்டுச் சென்றான். அவ்வளவு தான். நோட்டீஸ் பீரியட் முடிவதற்குள் இவள் இந்தியா திரும்ப முடிவெடுத்துவிட அதன் பின் அவள் அவனைப் பார்க்கக்கூடவில்லை.

ஆதிராவுக்கு உடலெல்லாம் வெடவெடத்தது. 'நான் முந்திவிடுவேனோ என்று நினைத்து அவன் முந்திவிட்டான்...' என்று கண்களை மூடி எல்லாமும் யோசிக்கவே அவளுக்கு உவப்பாக இருந்தது. தன்னை வேறு யாருடனாவது தொடர்பு படுத்தியிருந்தால் கூட எதாவது சொல்லலாம் (அதாவது, அவளுடன் வேலை செய்தவன். அவன் பார்வை சரியில்லை. அவனை தன் நண்பன் என்று சொல்லிவிடலாம்) ஆனால் இப்படி செழியனுடன்? அதும் அதற்கேற்றாற் போல் நானும் அவனும் ஒன்றாக தங்கிவேறு விட்டோமே?' ஏனோ இந்த நிலையிலும் தன்னைக் காட்டிலும் செழியன் மீது தான் அவளுக்கு அதிக கவலை வந்தது.

செழியனை இன்று நேற்றா பார்க்கிறாள்? அவனுடன் அவளுக்கு எத்தனை வருடப் பழக்கம்? அவனை எந்த விஷயத்திலும் குறை சொல்ல முடியாதே! அதும் பெண்கள் விஷயத்திலா? இன்று கூட அவனின் கொலீக்ஸ் எல்லோரும் அவனைப் பற்றிச் சொல்லி கிண்டல் செய்தார்களே? அவள் கண்கள் ஏனோ செழியனையே சங்கடத்துடன் பார்க்க, அவளையும் அறியாமல் கண்ணீர்தான் வந்தது.

சாரி சொல்லக் கூட அவளுக்குத் துணிவில்லை. 'எனக்கு உதவி செய்யப் போய் இவ்வளவு பெரிய உபதரத்தில் மாட்டிக்கொண்டானே?' என்று அவனுக்காக அவள் வருந்த,

செழியோ,'பாவம் ஆதிரா! ஏற்கனவே இளங்கோ மூலமாய் அவள் பட்டதெல்லாம் போதாது என்று திருமணத்தில் வேறு சொல்லமுடியாத மனக்காயங்களை வாங்கிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் இப்போது இப்பேர்ப் பட்ட களங்கம் வேறு!' என்று நினைக்கையில் அவனுக்கு உடல் எல்லாம் நடுங்கியது.

ஒருமுறை கண்களை மூடி ஆழ சுவாசித்தவள் எதற்கும் தயார் என்பதைப் போல் மூச்சை இழுத்து விட்டு,"போலாம் செழி..." என்றதும் அவனோ அவளை வினோதமாகப் பார்க்க,

"சீக்கிரம் கிளம்புடா... நமக்கு டைம் இல்ல. சீக்கிரம் உன்னையும் அம்மாவையும் இனியாவையும் நான் இதுல இருந்து காப்பாத்தணும்..." என்று அவள் சொல்ல,

"ஆதி, அப்போ நீ?"

ஒரு வெற்று சிரிப்பை உதிர்த்தவள்,"அது என் தலையெழுத்து, நான் பார்த்துக்கறேன்..."

ஏனோ செழியனுக்கு இப்போது என்ன ஆனாலும் சரி எப்படியாவது ஆதிராவையும் இதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டவன் வண்டியைக் கிளப்பினான்.

காஞ்சிபுரம் 10 கிலோமீட்டர் என்று காட்டிய பதாகையைப் பார்த்து காரில் இருந்த மூவருக்கும் பெரிய திகில் தான் உண்டானது. இருந்தும் எதையும் வெளிக்காட்டாமல் வந்தனர். ஊருக்கு சுமார் 4 கிலோமீட்டர் இருக்கும் போது வண்டியை நிறுத்திய செழி,"டேய் பாலாஜி நீ இறங்கு..."

"அண்ணா, என்ன சொல்றீங்க?"

"இறங்குடா. இதுல வீணா நீ தலையைக் கொடுக்க வேணாம். நாங்க பார்த்துக்கறோம்..." என்று செழியன் சொல்ல,

"நான் பார்த்துக்கறேன்..." என்றாள் ஆதிரா.

"உங்களை எப்படி அண்ணா நான் தனியா விடுறது? அதும் இந்த அக்காவோட மாமாவை நம்பி? ஏற்கனவே அரசியல்ல பெரிய ஆளா வரணும்னு ஊரு வம்பை எல்லாம் எடுத்துக்கிட்டுச் சுத்துறான். இதுல மெல்ல அவல் வேற கிடைச்சிடுச்சி... மாட்டேன். நானும் வரேன் உள்ள நிலவரம் என்னனு தெரியாம உங்களை மட்டும் தனியா அனுப்பமாட்டேன்..." என்று சொன்னான்.

"டேய் ப்ளீஸ் சொன்னா கேளுடா... வேணுனா ஒரு ஹெல்ப் பண்ணு. ஊருக்குள்ள யாருக்காச்சும் போன் பண்ணி நிலைமை என்னனு விசாரி..."
அவன் தன் செல்லில் இருந்து தன் நண்பனுக்கு அழைத்து விசாரித்து,"ஐயோ அண்ணா இப்போ போரது சரியில்ல. அவங்க மாமா ஜாதிகாரங்க எல்லோரும் கூட்டமா வீடு முன்னாடி இருக்காங்களாம்..."

"சரி நீ போய் போலீஸ் ஸ்டேஷன்ல நான் சொல்றதைச் சொல்லி அவங்களைக் கூட்டிட்டு வா. நாங்க எங்க வீட்டுக்குப் போயிட்டு வரோம்..." என்று அவன் சில விஷயங்களைச் சொல்லி அனுப்பினான்.

"அண்ணா, இந்த அக்கா மாமா வேற அவங்க ஜாதிகாரங்க கூட எல்லாம்?"

"டேய் நானும் அதே ஆளு தான். பார்த்துக்கலாம் விடு. எனக்கு போலீஸ் மட்டும் கரெக்டா அங்க வரணும். அவ்வளவு தான்..."

ஆதிரா தான் எதுவும் புரியாமல் அவனையே பார்த்தாள்.

"புரிய வெக்கலாம் ஆதி. பயப்படாத... பேஸ் பண்ணலாம். வா முதல அம்மாவைப் போய்ப் பார்க்கலாம்..."

தன் வீட்டிற்குச் செல்ல அங்கே முதலில் தன் தங்கை தான் ஓடிவந்து செழியைக் கட்டிப்பிடிக்க அவன் அம்மா பின்னால் வந்தார்.

ஆதிராவும் கீழே இறங்கினாள். அவளைப் பார்த்ததும் அவர் சிரிக்க ஏனோ ஆதிராவுக்கு தான் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

"சாரி ஆண்ட்டி... என்னால... என்னால நிறைய நிறைய கஷ்டம் உங்களுக்கு... எவ்வளவு சிரமம்?" என்று சொல்ல,
அதற்குள் விஷயம் தர்மதுரையை (ஆதிராவின் மாமா) சென்றடைய அவனின் ஆட்கள் எல்லோரும் வந்து நின்றனர்.

அவர்களைக் கண்டதும்,"ஆம்பிள இல்லாத வீட்டுல பெண்ணுங்க கிட்ட இப்படித்தான் வந்து மிரட்டிட்டுப் போவீங்களா? என்ன நெனச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்?" என்று வழக்கத்திற்கும் மாறாக இன்னும் சொல்லப்போனால் அவன் சுபாவத்திற்கு துளியும் சம்மந்தம் இல்லாமல் கர்ஜித்தான் செழியன்.

அதற்குள் கூட்டத்தில் ஒருத்தன்,"உங்களை எங்க அண்ணன் வரச் சொன்னாரு..." என்றதும்,

அதற்குள் ஆதிராவே,"உங்களுக்கு நான் தானே வேணும்? நான் வரேன். அவன் வரமாட்டான்..." என்று அவள் செல்ல அவளின் கையைப் பிடித்தான் செழியன்.

"எங்க போற? இப்படிடீ நீ மட்டும் தனியா போகவா உன்னை என்கூடக் கூட்டிட்டு வந்தேன்?"

"வேணாம் செழி. அவங்களுக்குத் தேவை நான் தான். வீணா இதுல இனி நீ தலையிடாதா... இது என் பிரச்சனை நான் பார்த்துக்கறேன். நீ கிளம்பு..."

"நில்லு ஆதி. எப்போ உன்னை ஏர்போர்ட்ல இருந்து நான் கூட்டிட்டுப் போனேன்னா அப்போவே இதுல நானும் சம்மந்தம் பட்டிருக்கேன். அண்ட் உன்னை பத்திரமா காப்பாத்த தான் நான் என்கூடக் கூட்டிட்டே போனேன். இப்படி பாதியில நான் விட மாட்டேன். வா சேர்ந்தே போவோம்..."

"இல்ல இளஞ்செழியன். வேணா போதும்... என்னால நீ பட்டதெல்லாம் போதும். இது என் ப்ரோப்லம். நான் பேஸ் பண்ணிக்குறேன்..."
"போடி லூஸ் மாதிரி பேசாத..." என்றவன் திரும்பி தன் தாயைப் பார்த்தான். அவரும் சம்மதம் சொல்ல, இப்போது நால்வரும் (அவன் தங்கை உட்பட) சென்றனர். வண்டி அவளின் வீட்டு வாசலில் நின்றது.

அப்போது வந்த தர்மதுரை,"பரவாயில்லையே? சரியா சொன்ன டைம்க்குள்ள வந்துட்டான் உன் புள்ள..." என்றதும்,

"மாமா கொஞ்சம் வாயை மூடுங்க..." என்று கத்தினாள் ஆதிரா. (தொடரும்...)

ரொம்பவும் சின்ன எபி தான். இருந்தாலும் கதையை பரபரப்பா கொண்டு போக இது அவசியம். அதான் கட் பண்ணிட்டு தொடரும் போட்டுட்டேன்?? இந்த எபியோட ஒரிஜினல் ரன்னிங் டைமே இதுதான்.
 
பரபரப்பு க்காக சின்ன எபி , ok...
Atleast , அடுத்தடுத்து எபி கொடுக்கலாமே.....
? ? ? ? ? ? ?
 
பரபரப்பு க்காக சின்ன எபி , ok...
Atleast , அடுத்தடுத்து எபி கொடுக்கலாமே.....
? ? ? ? ? ? ?
i'm in little bit disturbed and confused mood... thank you??
 
Top