Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்து பையன்‌ முஸ்லிம் பொண்ணு

Advertisement

Vetrivel

New member
Member
ஓர் அழகான பச்சை பசும் வயல் நிறைந்த கிராமம் .எங்கு பார்த்தாலும் பசுமையே காணப்பட்டது .அந்த கிராமத்தில் இரண்டு மதத்தினர் வாழ்ந்து வந்தனர்.ஒன்று இந்து மற்றொன்று முஸ்லீம்.என்னதான் வெவ்வேறு மதத்தினராக இருந்தாலும் இரண்டு மதத்தினரும் ஒன்னுமண்ணாக சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.இந்து வீட்டு விஷேசத்தில் முஸ்லிமும் முஸ்லிம் வீட்டு விஷேசத்தில் இந்துவும் முன் நின்று விஷேசத்தை சிறப்பாக நடத்துவார்கள்.மற்ற ஊர் மக்கள் இந்த ஊர் மக்களின் ஒற்றுமையை பார்த்து பொறாமை கொள்ளும் அளவிற்கு வாழ்ந்து வந்தார்கள்.அந்த சந்தோசத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக ஒரு இந்து பையனும் முஸ்லிம் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.அந்நிகழ்வு இரு மதத்தினருக்குள்ளும் இருந்த ஒற்றுமை சீர்குலைத்தது.இந்து மதத்தினர் முஸ்லிம் மதத்தினரை வெட்டிகொண்னார்கள்.முஸ்லிம் மதத்தினர் இந்து மதத்தினரை வெட்டி கொண்ணார்கள்.இப்படியே இரண்டு மதத்தினருக்கும் இடையே பெரும் மதக்கலவரம் ஏற்பட்டது.இதை தடுக்க போலிஸ் படை வந்து இரண்டு மதத்தினரும் வெவ்வேறு தெருக்களில் வசிக்க ஏற்பாடு செய்து அதே போல் இந்து மதத்தினர் ஒரு தெருவிலும் முஸ்லிம் மதத்தினர் ஒரு தெருவிலும் வசித்து வந்தனர்.இவர்களை போலவே இன்னொரு இந்து மத பையனுக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் காதல் வருகிறது.இவர்கள் காதலை இந்த இரு மதத்தினரும் ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்று பொருத்திருந்து பார்ப்போம்....
இந்து பையன்
💖
முஸ்லிம் பெண்
அந்த கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண் அவள் பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் சேர்வதற்கு சென்னை வரவேண்டி இருந்தது.சென்னை வந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள்.அன்று அவளின் முதல் நாள் கல்லூரி என்பதால் கல்லூரி சீனியர் மாணவர்கள் புதிய மாணவ மாணவிகளை ராகிங் செய்து கொண்டிருந்தார்கள்.அந்த நேரத்தில் இவள் அவர்களின் கண்களில் பட அவர்கள் இவளை அழைத்து உன் பெயர் என்ன என்று கேட்டனர் அதற்கு அவள் என் பெயர் Fathima என்று அவளை அறிமுகம் செய்து கொண்டிருந்தாள்.அதன்பின் அந்த மாணவர்கள் உனக்கு எதாவது கஷ்டமான செயல் செய்ய வைக்கவேண்டும் என்று யோசித்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு பையன் கடந்து போனான்.அவனையும் அந்த மாணவர்கள் அழைத்து அவன் பெயர் கேட்டார்கள் அவன் கதிர்வேல் என்று கூறினான்.உடனே அந்த சீனியர் மாணவர்கள் பாத்திமா வை கதிர்வேலனுக்கு காதலிப்பாதாக சொல்ல சொன்னார்கள்.அவளும் வேறு வழியில்லாமல் propose செய்ய முன் வந்த போது கதிர்வேல் அதை தடுத்து அந்த சீனியர் மாணவர்களை அடித்து ஓட விட்டான்.அதன் பிறகு பாத்திமா கேட்டாள்.நான் உங்களிடம் காதலிப்பதாக கூறி இருந்தால் விட்டுருப்பார்களே ஏன் அவர்களை அடித்தாய் என பாத்திமா கேட்டாள்.அதற்கு கதிர் காதல் என்பது புனிதமானது .அது இது போல சில்லறை தனமான விஷயத்தால் அந்த புனித தன்மையை இழக்க கூடாது.அதனால் தான் அடித்தேன்.அதுமட்டும் இல்லை உண்மையாக காதலிப்பதாக இருந்தால் தான் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ அவரவர் காதலை வெளிபடுத்த வேண்டும் .அவன் சொல்றான் இவன் சொல்றான் லா காதலை சொல்ல கூடாது என்று அவன் சொன்னவுடன் அவளுக்கு இவன் மேல் ஓர் ஈர்ப்பு வந்துவிட்டது...அதன்பின் இல்லாதவர்களுக்கு முன் வந்து உதவுவான்.அதை பார்த்த பாத்திமாவிற்கு இவன் மேல் மரியாதை வந்துவிட்டது.
இருவரும் நண்பர்களாக ஆனார்கள்.அதன் பின் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் இன்னும் அதிகமாக மாறி காதலிக்க ஆரமித்தார்கள்.இருவருக்கும் இடையேயான புரிதல் மிகச்சிறப்பாக இருந்தது.இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இனைந்து ஒன்றாக சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.பழகிய கொஞ்ச காலத்தில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. காதல் என்றால் சொல்லவா வேண்டும் பூங்கா சினிமா என்று சுத்தி திரிந்து கொண்டிருந்தார்கள்.இடை இடையே கொஞ்சம் கொஞ்சலும் கொஞ்சம் கெஞ்சலும் என்று சந்தோசமாக தான் சென்று கொண்டிருந்தது.அவர்களுக்கு பரீட்சை முடிந்து விடுமுறைக்கு அவரவர் வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இருவரும் பிரிய மனமில்லாமல் பிரிந்து அவரவர் வீட்டுக்கு சென்றனர்.
இந்து பையன் கதிர் அவன் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்களுக்கு மேல் அவனால் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை அவன் நண்பர்களின் மூலம் அவள் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அவள் ஊருக்கு சென்றான். அவள் ஊர் நாகப்பட்டினம்.இவன் சொந்த ஊர் சென்னை.ஒருவழியாக நாகபட்டினம் சென்று அவள் வீட்டை தேடி கண்டுபிடித்தான்.ஆனால் அவனால் அந்த வீட்டுக்குள் போக முடியாது.ஏனென்றால் அந்த ஊரில் இந்து முஸ்லிம் இடையே சண்டை நிலுவையில் உள்ளது.அதனால் இந்து மதத்தினர் முஸ்லிம் இருக்கும் இடத்திலும் முஸ்லிம் மதத்தினர் இந்து குடியிருக்கும் தெரு பக்கமும் செல்ல முடியாது.அதையும் மீறி சென்றால் வெட்டுக்குத்து தான் நடக்கும்.இதை எதுவும் தெரியாத கதிர் அவள் வீட்டிற்குள் சென்றான்.
அங்கு அவள் வீட்டு கதவை தட்டினான்.கதவை திறந்தது பாத்திமாவின் தங்கை ஐசா.கதிரிடம் ஐசா நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள்.அதற்கு கதிர் அவன் பெயரை சொல்லி நான் பாத்திமா வை பார்க்க வந்தேன் என்று கூறினான்.உடனே ஐசா கதிரிடம் நீங்கள் இந்து மதத்தினை சார்ந்தவரா என்று கேட்டாள்.அதற்கு கதிர் ஆமாம் என்று கூறினான்.அதை கேட்ட ஐசா நீங்கள் இங்கே இருக்காதீர்கள் உடனே கிளம்புங்கள்.என் அப்பா வந்து விட்டால் உங்களை கொலை செய்ய கூட தயங்கமாட்டார்.தயவு செய்து கிளம்புங்க.என்ளு என்று கூறினாள்.அதற்கு கதிர் ஏன் என்ன ஆச்சு என்று கேட்டதற்கு ஐசா அதெல்லாம் கேட்காதிர்கள் தயவு செய்து கிளம்புங்க உங்க நன்மைக்கு தான் சொல்கிறேன் என்று கதவை மூடும் தருணத்தில் ஐசாவின் அப்பா வந்து யார் இவர் என்று கேட்டார்.அதற்கு ஐசா இவர் பெயர் சலீம் இந்த இர்ஃபான் வீட்டை தேடி வந்தார் முகவரி சொன்னேன் என்று பொய் சொல்லி கதிரை காப்பாற்றி கண்ஜாடை செய்து அனுப்பி வைத்தாள்.கதிருக்கு ஒன்றும் புரியவில்லை.ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று புரியாமல் குழப்பத்துடன் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கோவிலுக்கு சென்று அமர்ந்தான்.அப்போது அங்கு அவன் கல்லூரியின் சீனியர் மாணவன் கதிரை சந்தித்தான்.அவன் பெயர் மகேஷ் .மகேஷ் கதிருடன் அதிகம் பழகிவில்லை என்றாலும் அந்த ராகிங் பிரச்சினை மூலம் அந்த கல்லூரி முழுவதும் இல்லை என்றாலும் ஒரு சில பாடப்பிரிவு மாணவர்களுக்கு தெரியும் அவர்களுக்கு கதிர் மேல் ஒரு மரியாதை.அதனால் மகேஷ் கதிர்க்கு உதவுவான்.மகேஷ் கதிரிடம் நீ இங்கு என்ன செய்கிறாய் எனீறு என்று கேட்டான் அதற்கு கதிர் ஆரம்பத்தில் காதலித்தது முதல் இன்று அவள் வீட்டிற்கு சென்று வந்தது வரை சொன்னான்.அதை கேட்ட மகேஷ்க்கு தூக்கிவாரிப்போட்டது ஏனென்றால் இந்த ஊரில் உள்ள முஸ்லிம் மதத்தினருக்கும் சரி இந்து மதத்தினருக்கும் சரி பெரும் போரே நடந்து கொண்டுள்ளது.இந்த சமயத்தில் நீ யார் என்று தெரிந்திருந்தால் வெட்டி போட்டுருப்பாங்க ஒழுங்க ஊருக்கே திரும்பி சென்றுவிடு எனீளு என்று மகேஷ் சொல்ல .கதிர் மகேஷ் உதவுவான் என்ற நம்பிக்கை போய்விட்டது.சரி வா என் வீட்டில் சாப்பிட்டு விட்டு அதன்பின் ஊருக்கு போ என்று கூறினான்.கதிர் உடனே அவனுடன் அவன் வீட்டிற்கு சென்று மகேஷ் அப்பா அம்மாவுடன் சந்தோசமாக சிரித்து பேசி சாப்பிட்டுவிட்டு புறப்பட தயாரானான்‌.அப்போது மகேஷ் அம்மாவும் அப்பாவும் உங்கள் கல்லூரி விடுமுறை தானே ஒரு 2,3 நாட்கள் கழித்து போ அதுவரை இங்கே இரு என்று சொன்னதும் கதிர் உடனே ஒப்புகொண்டான்.மகேஷிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.வேறுவழி இல்லாமல் அவனும் சரி என்று சொல்லிவிட்டான்.அதன் பின் மகேஷ் பெற்றோர் கதிருக்கு விருந்து ஏற்பாடு செய்ய ஆயத்தமானார்கள்.மகேஷ் தனியாக கதிரை சந்தித்து நீ எவ்வளவு நாள் வேணாலும் இங்கு இரு.ஆனால் அந்த முஸ்லிம் மதத்தினர் இருக்கும் தெரு பக்கம் மட்டும் செல்லாதே என்று கூறினான்.கதிர் சரி என்று கூறிவிட்டு அவன் ஓய்வு எடுக்க ரூமுக்குள் சென்று விட்டத்தை பார்த்து படுத்தபடி எப்படி பாத்திமா வை சந்திக்கலாம் என்று யோசித்துகொண்டிருந்தான்.
அச்சமயத்தில் சாப்பாடு தயாரகிவிட்டது மகேஷ் அம்மா சாப்பிட அழைத்தார்கள்.இவனும் யோசனை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றான்.மகேஷ் அம்மா என்ன நோக்கத்திற்காக இந்த ஊர் வந்தாய் என்று கேட்டார்கள் அதற்கு கதிர் என்ன சொல்வதென்று தெரியாமல் இருந்தான்.அச்சமயம் மகேஷ் கோவிலுக்கு வந்தான் என்று கூறினான்.கதிரும் சிரித்துகொண்டே ஆமாம் கோவிலுக்கு தான் வந்தேன் என்று இரண்டு மூன்று தடவை கூறினான்.உடனே மகேஷ் அப்பா அவனை சாப்பிட விடு என்று சத்தம் போட்டார்.அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு உறங்க சென்றனர்.கதிரும் வந்த கலைப்பில் உடனே உறங்கி விட்டான்...
மறுநாள் காலை விடிந்ததும் கதிருக்கு அவளை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று துடித்தான்.என்ன செய்யலாம் என்று காலையிலிருந்து யோசித்து சாப்பிட மணி 11 ஆகிவிட்டது.அதன் பின் அவன் இங்கு வந்துள்ள விசயத்தை அவளிடம் எப்படி தெரியபடுத்துவது என்று சிந்தித்தான்.ரொம்ப நேரம் யோசித்தும் எந்த யோசனையும் தோன்றவில்லை.சரி வெளியில் செல்லலாம் என்று மகேஷை கூப்பிட்டான் மகேஷ் வரவில்லை.சரி நான் தனியாகவே போய்ட்டு வரேன் என்று கிளம்பினான்.நகர்புறத்தை சுற்றி பார்க்க கதிர் கிளம்ப அந்த இடத்தில் எதிர்பாராத விதமாக பாத்திமா வை பார்க்கிறான்.கதிருக்கு இனம் புரியாத மகிழ்ச்சி.அதேபோல் பாத்திமாவும் கதிரை பார்க்கிறாள்.ஆனால் அவளுக்கோ மகிழ்ச்சி இருந்தாலும் உள்ளுக்குள் ஓர் அச்சம்.எங்கு யாராவது பார்த்து கதிருக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் அங்கே தடுமாறி நிற்கிறாள்.அதன்பின் ஒருவழியாக யாரும் இல்லாத இடத்தில் சந்தித்து அவர்கள் இருவரும் கொஞ்சிகிறார்கள்.அதன்பின் பாத்திமா கண்ணிருடன் நீ என்னை மறந்துவிடு என்று கூறுகிறாள்.அதற்கு கதிர் நீ இறந்துவிடு என்று சொல் நான் செய்கிறேன் ஆனால் மறந்து விடு என்று மட்டும் சொல்லாதே என்னால் முடியாது என்று கூறி என்ன பிரச்சினை வந்தாலும் நான் உனக்குத்தான் நீ எனக்கு தான் என்று கூறி அவள் கண்ணீரை துடைத்து விட்டு இந்த பிரச்சனையை சரி செய்ய என்ன பண்ணலாம் என்று யோசிக்கலாம் என்று கூறி அவளை அனுப்பி வைத்தான்...
அவனும் மகேஷ் வீட்டிற்கு சென்று அடுத்து என்ன செய்வது என்று யோசனையில் மூழ்கி கிடந்தான்.அதன்பின் இந்து மதத்தினர் சிலரிடம் சென்று இந்த ஊரில் இந்து முஸ்லிம் இடையே எப்படி சண்டை வந்தது என்று கேட்டு தெரிந்துகொள்ள முடவு எடுத்தான்.அந்த ஊரில் உள்ள பெரியவர் சிலபேரிடம் கேட்டான்.அவரவர் அவர்களுக்கு தெரிந்த விஷயம் சொன்னார்கள்.அனைவரும் கூறியது வைத்து பார்க்கும் போது ஒரு காதல் ஜோடியால் பிரிந்த ஊர் இன்னொரு காதல் ஜோடியால் சேரபோகிறது என்று மனதிற்குள்ளே சொல்லிக்கொண்டான் ....
அதன்பின் இந்து மக்கள் சில பேரிடம் முஸ்லிம் மதத்தினர் கூட மீண்டும் நட்புறவு வைத்துக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டான்.அதில் பாதி பேர் நேர்மறையாகவும் மீதி பேர் எதிர்மறையாகவும் சம்மதம் தெரிவித்தார்கள்.அதிக மக்கள் முஸ்லிம் மதத்தினர் கூட மீண்டும் நட்புறவு ஏற்படுத்திக்கொள்ள தயாராக உள்ளார்கள் என தெரிந்துக்கொண்டான்.இந்த நிகழ்வையெல்லாம் அந்த ஊரில் சில பேர் கவனித்தார்கள்.அதன்பின் அவன் மேல் சிறிது சந்தேகம் ஏற்பட்டது அவர்களுக்கு.ஆனால் கதிர் இதை ஏதும் கவனிக்காமல் இதே போல் முஸ்லிம் மதத்தினரிடமும் எத்தனைபேர் இந்து மதத்தினர் கூட மீண்டும் இணைய தயாராக உள்ளார்கள் என தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.அது அவனால் கேட்க முடியாது ஏனெனில் அவன் ஒரு இந்து.அந்த தெரு உள்ளே செல்ல நினைத்தால் சரமாரியாக வெட்டுவார்கள் என்று அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.அதன் பின் அவனுக்கு ஒரு யோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக அந்த தெருக்குள்ளே நுழைந்தான்.அந்த மதத்தினரும் அரசாங்க ஊழியர் என்பதால் சந்தேகம் படவில்லை.அவன் இந்த தருணத்தில் அந்த முஸ்லிம் மதத்தினர் அனைவரின் வீடுகளிலும் கேட்டு தெரிந்துகொண்டான்.அவனுக்கு தேவையான அனைத்தும் தெரிந்துகொண்டு மீண்டும் மகேஷ் வீட்டிற்கு திரும்பினான்.இவன் செய்த அனைத்தும் கவனித்த சிலர் இவனை இங்கிருந்து அனுப்பி வைக்க சொல்லி மகேஷ் வீட்டின் முன் சத்தம் போட்டு கொண்டிருந்தார்கள்.கதிர் சொல்ல வருவதை கேட்காமல் அவரவர் விருப்பத்திற்கு பேசிகொண்டிருந்தார்கள்.அதன்பின் மகேஷ் அப்பா அம்மா அவனை கிளம்ப சொல்லிவிட்டாங்க அதன் பின் அவன் வேறுவழியில்லாமல் அங்கிருந்து புறப்பட்டான்.அச்சமயம் கதிர் அப்பா அவனுக்கு போன் செய்து எங்கிருக்கிறாய் என கேட்டார்.அதற்கு நடந்த எல்லாவற்றையும் கூறினான்.அங்கிருந்து கிளம்புவதாகவும் கூறினான்.அதற்கு கதிர் அப்பா நீ அங்கே இரு நம்ம வீடு அங்குள்ளது.அங்கு சென்று தங்கு நாங்களும் கிளம்பிவருகிறோம் என்று கூறினார்.கதிருக்கு சந்தேகம் இந்த ஊரில் நமக்கு எப்படி வீடு என்று கேட்டான்.அங்கு நடக்கும் பிரச்சனைகளுக்கு நானும் உன் அம்மாவும் தான் காரணம் என்று கூறியதும் அதைக்கேட்டு கதிர் அதிர்ச்சிடைந்தான்.என்னால் பிரிந்த ஊர் மக்களை நீ சேர்த்து வைத்து பாத்திமாவை திருமணம் செய்து கூட்டிக்கொண்டு வரலாம் என்று கதிர் அப்பா அம்மா தைரியம் கொடுத்தவுடன் தன்னம்பிக்கையுடன் அந்த வீட்டிற்கு சென்று தங்க ஏற்பாடு செய்தான்.ரொம்ப நாள் பயன்பாட்டில் இல்லாததால் குப்பை அதிகம் உள்ளது.தனி ஒரு மனிதனாக அனைத்தும் சுத்தம் செய்து அங்கு தங்கினான்.இரண்டு நாட்களில் அவன் அப்பா அம்மா வந்துவிட்டார்கள்.ஊர்மக்கள் அனைவரும் வீட்டின் முன் சூழ்ந்து கொண்டார்கள்....
அனைவரும் கதிர் அப்பாவை வெளியில் வரசொல்லி கத்தினார்கள்.சிலர் வீட்டினுள் கற்களை எரிந்தார்கள்.இன்னொரு பக்கம் முஸ்லிம் மதத்தினர் கத்தி கம்பு என்று ஆயுதத்துடன் கதிர் வீட்டை முற்றுகையிட்டனர்.கதிருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு கதிர் வெளியில் வந்து அனைவரையும் அமைதியாக இருக்க சொன்னான்.ஆனால் அந்த ஊர் மக்கள் யாரும் அவன் சொல்வதை கேட்கவில்லை ஒரு கட்டத்தில் கோபமடைந்து கத்தினான்.நீங்கள் அனைவரும் கோபப்படும் அளவிற்கு என் அப்பா என்ன தப்பு செய்தார் என கேட்டான்.இரு தரப்பில் இருந்தும் வேற்று மத திருமணம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறினார்கள்.அதற்கு கதிர் திருமணம் செய்த அவர்களே சந்தோசமாக தான் வாழ்கிறார்கள் இந்நாள் வரை .உங்களுக்கு என்ன வந்தது என்று கேட்டவுடன் பாதி பேரின் தலை தரையை பார்த்தது‌.முஸ்லிம் மதத்தினரை பார்த்து உங்கள் வீட்டு பெண் நல்லா இருக்க வேண்டும் என்று தான் நினைப்பிங்க.நீங்கள் நினைத்ததற்கு மேல் ராணி இல்ல மஹாராணி போல் வைத்துள்ளார் என் அப்பா என்று கூறியதை கேட்டு அனைவரின் ஆயுதமும் தரையில் போட்டனர்.இதற்கு மேலாவது சாதி மதம் இனம் என்று பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறினான்.கதிர் சொல்வதை கேட்டு இந்து முஸ்லிம் அனைவரும் கைகொடுத்து கட்டித்தழுவி அன்பை வெளிபடுத்தினார்கள்.இந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் மத பெண் என் மகளை என் அண்ணி மகனுக்கு திருமணம் செய்ய போவதாக ஊர் மக்கள் முன்னிலையில் தெரிவித்தாள்.அதை கேட்டு அனைவரும் சந்தோசபட்டார்கள்.கதிர் முகம் வாடியது.அதன் பின் அந்த முஸ்லிம் பெண் மகளை கூட்டி வந்தாள் அது வேறு யாரும் இல்லை பாத்திமா என்று தெரிந்தவுடன் வானுக்கும் மண்ணுக்கும் துள்ளி குதித்தான்.கடைசியில்அப்பாவும் மகனும் ஒரே குடும்பத்தில் பெண் எடுத்துள்ளார் என ஊர் மக்கள் கூறி சிரித்தனர்....
இவர்களின் காதல் மட்டும் இல்லாமல் இவர்களின் மகன் காதலையும் இந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.....
இந்து முஸ்லிம் கிருத்துவர் என்று மதத்தால் வேறுபட்டிருந்தாலும் இந்தியன் என்ற நாட்டால் ஒற்றுமையாக இருப்போம்
உதவும் நண்பன் கிருத்துவர்
 
Top