Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆவாரம்பூவின் மருத்துவ பயன்கள்

Advertisement

ஆவாரம்பூ பயன்கள்

  • பயன்படுகிறது

    Votes: 2 100.0%
  • பயன் இல்லை

    Votes: 0 0.0%

  • Total voters
    2

Poornima Madheswaran

Well-known member
Member
Screenshot_20191127_102225.png

ஆவாரம் பூ என்றால் கடவுளுக்கு பூஜைக்கு படைக்கும் பூவாக தான் நாம் பெரும்பாலும் பார்த்திருப்போம்.

ஆவாரம்பூவை பெண்கள் விரும்பி தலையில் சூடுவதும் இல்லை.ஆனால், இயற்கையாக இதை பூவாக கண்டாலும், இது ஒரு மூலிகை மருத்துவ குணம் கொண்டுள்ள ஓர் அருமருந்து என்று தான் கூற வேண்டும்.

தலை முடி வளருவதில் இருந்தும் நீரழிவு நோய், மாதவிடாய் கோளாறுகள் என பல ஆரோக்கிய நன்மைகள் பெற ஆவாரம்பூ உதவுகிறது.

கூந்தல் நன்கு வளர:

ஆவாரம் பூ பயன்கள் 100கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம்.
ஆவாரம் பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.


முடி உதிர்வு பிரச்சனைக்கு:
ஆவாரம் பூ வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் நம்மை தாக்காது.

கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் இந்த ஆவாரம் பூ. எனவே முடி உதிர்வு பிரச்சனை கூந்தலில் ஆவாரம் பூவை வைத்து கொண்டால் உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனை, உடனே சரியாகும்.

கூந்தல் நன்கு வளர:

ஃப்ரெஷ் ஆவாரம் பூ , செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள்.

உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.

தலை முடி பளபளக்க:

ஆவாரம் பூ பயன்கள் – ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள்.
தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி மினுமினுப்பாகவும், பளபளப்பாகும்.

உஷ்ணத்தினால் ஏற்படும் கண் நோய்களுக்கு:

ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும்.
ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

மூலம் குணமாக:

ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

உடல் வலிமை பெற:

ஆவாரம் பூ பயன்கள், அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.

ஆவாரம்பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்:

ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலிக்கு ஆவாரம் பூ சிறந்த தீர்வினை வழங்குகிறது:


அசோகமட்டை, மருதம்பட்டை, ஆவாரம் பூ , திரிகடுகு பொடி, திரிபலா பொடி அனைத்தையும் சமஅளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து மாதவிடாய் நாட்களில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி உடனே சரியாகிவிடும்.
 
Top