Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 9

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 9

ஆதி & கோ திருவிழா முடிந்து, ஊர் திரும்பி ஒரு வாரம் ஓடி இருந்தது. கையும் கண்ணும் வேலை பார்த்தாலும் சிவாவின் மனம் துர்வாவையே சுற்றி வந்தது. ' தன்னிடம் அவள் ஏன் பேசவில்லை, நானே அவளிடம் பேசியிருக்க வேண்டுமோ, திட்டியதால் தான் அவள் தன்னிடம் பேசவில்லையோ 'என்று மனதை குழப்பி கொண்டிருந்தான்.

சிவா சிந்தனையிலே இருக்க, ஆதியோ மந்திரித்து விட்ட கோழிபோல் சுற்றி கொண்டிருந்தான். இவர்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு திணறி போன ஹரி , ஆதி மற்றும் சிவாவிடம் சென்று, " நான் உங்கள்ட பேசணும், இன்னும்10 நிமிடத்தில் வீட்டில இருக்கனும் " என்றவன் அவர்கள் இருவரையும் கூர்மையாக பார்த்துவிட்டு வெளியேறினான்.

நண்பகலில் வீடு திரும்பிய மகன்களை பார்த்த அன்னையர் மூவரிடமும் " இல்ல மா ஒரு பெரிய ப்ராஜெக்ட் வந்துருக்கு அதான் அதை பத்தி பேச வந்ததோம் ".

தனது அறைக்குள் நுழைந்த ஹரி, மற்ற இருவரையும் கூர்மையாக பார்த்தபடி சோபாவில் அமர்ந்தான். " என்ன தான் டா பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும் ?, ஒருத்தன் ஏதோ யோசனையிலே சுத்துறான் , இன்னோருத்தன் என்னடானா பேசுறதையே மறந்துட்டான் , ஊர்ல இருந்து வந்ததுல இருந்து நீங்க சரியே இல்லடா"
என்று இருவரையும் குற்றம் சாற்றினான்.

சிவாவோ " இல்லடா அந்த பொண்ணு..." என்று இழுத்தவன் ஹரியின் சந்தேக பார்வையில் " விஷ்வா தங்கச்சிய அண்ணைக்கு திருவிழால வெச்சு திட்டிட்டேன் மச்சான், அதுல இருந்து அவ எண்ட பேசவே இல்ல , பேசுறது என்ன ஒரு பார்வை கூட இல்ல, கலகலன்னு பேசுறப்புள்ள மனச நோகடிச்சுட்டேனோன்னு தோனுது , அதான்டா வருத்தமா இருக்கு " என்றவனை பல மார்கமாக பார்த்து வைத்தான் ஹரி. கல்லூரியில் தன்னிடம் பேச வரும் பெண்களை பார்வையிலே தடுத்து நிறுத்துபவன் ,ஒரு பெண் தன்னிடம் பேசவில்லை என்று வருத்தம் கொண்டான் என்றால் அவனை பல மார்க்கமாக பார்த்த ஹரியின் மேல் என்ன தவறு இருக்கப்போகிறது.

அவனை விட்டு ஆதியிடம் திரும்பியவன் " உனக்கு என்னடா ஆச்சு ? " என்ற ஹரிக்கு ஆதியின் பதிலில் நெஞ்சம் அதிர , சிவவோ ஆதியை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

சென்னை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் , யோசனையோடு பயணித்து கொண்டிருந்தனர் மூன்று தோழிகளும். விஷ்வாவோ தங்கைகளை வழியனுப்பிவிட்டு திரும்பிவரும் பொழுது அவர்களின் நிபந்தனைகளை யோசித்தபடி வந்தான்

"நாங்க கல்யாணம் பண்ணிக்கறோம் , ஆனா சில கண்டிஷன்ஸ்க்கு நீ ஏத்துக்கணும்" என்ற துர்வாவின் வார்த்தையில் இந்த அளவாவது இறங்கி வந்தார்களே என்று தலையசைதான் விஷ்வா.
துர்வா " நாங்க மூணு பேரும் கல்யாணத்துக்கு பிறகும் ஒண்ணா தான் இருக்கனும் , அப்படினா நீ எங்களுக்கு ஒரே குடும்பத்த சேர்ந்த அண்ணன் தம்பிகளை பார்ப்பையோ இல்ல எங்கள மாதிரி ப்ரெண்ட்ஸா பார்ப்பையோ , அது உன்னிஷ்டம் , ஆனா நாங்க எப்பயும் இப்படி தான் இருக்கனும் " என்றவளின் முதல் நிபந்தனையிலே திணறிப்போனான் விஷ்வா.

"அடுத்தது இன்னைல இருந்து சரியா ஆறு மாசத்துல நாங்க கேக்குற மாப்பிள்ளைய கண்டுபுடிச்சுட்டா கல்யாணம் பண்ணிக்கறோம்" , என்ற துர்வாவை கூர்மையாக பார்த்தான் விஷ்வா." ஒருவேளை இந்த ஆறு மாசத்துல நாங்க கேக்குறமாப்பிளைய கண்டுபுடிக்க முடியலேன்னா , ஆறாவது மாசம் முடிவுல வர முதல் முஹுர்த்தத்துல நீ ராகவியா கல்யாணம் பண்ணிக்கணும் " என்றவளை விழி தெறிக்க பார்த்தான் விஷ்வா.

" அடுத்தது நாங்க கேக்குற மாப்ள கண்டுபுடிக்க முடியாம போயிடுச்சுனா , நாங்க சம்மதிக்கற வரைக்கும் வீட்ல கல்யாண பேச்சை எடுக்கக்கூடாது , அதையும் நீ தான் வீட்ல சொல்லணும் , இதுக்கு நீ சம்மதிச்சா நாங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கறோம் " என்றவளை பற்றி தெரிந்தும் வாக்கு குடுத்த தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்தது தான் மிச்சம் .
" சரி, இன்னைல இருந்து சரியா ஆறு மாசத்துல உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன் " என்ற வாக்குடன் பெற்றோரை தேடி சென்றான் விஷ்வா.

விஷ்வா வெளியேறியதும் தோழிகள் மூவரும் ஏதும் பேசாமல் அமைதி காக்க , அதையும் தகர்த்தவள் துர்வா தான் , " எதாவது சொல்லுங்க லே, ந சொன்னதுல உங்களுக்கு கோவமா, உங்கள்ட கேக்காம சொலிட்டேனு " என்றவளை இடைமறித்த சாரா ,இடைமறித்த சாரா ," ச்ச லூசு, அத இல்ல, என்ன கொஞ்சம் பொறுமையா யோசிச்சு..." என்றவளை இடைமறித்தாள் சாந்தினி ," நீ சொன்னது தான் லே சரி, இன்னும் எத்தனை நாள் நாம இவங்கள சமாளிக்க முடியும், யோசிக்குறதுக்கு ஒன்னும் இல்ல,இது தான் ஒரே வழி " என்றவள் சற்று கண்கள் கலங்க " அண்ணன் பார்க்குற மாப்பிள்ளை யாரா இருந்தாலும் , எனக்கு சம்மதம் " என்று குரல் தழுதழுக்க சொன்னவள் , அறையை விட்டு வேகமாக வெளியேரினாள் .

சாந்தினியின் செய்கையில் திகைத்த துர்வா " தப்பு பண்ணிட்டேனோ ?" . " அதலாம் இல்ல லே, நீ செஞ்சதுதான் சரி,நமக்காக ராகவிய வீட்டுகுடுக்க விஷ்வா அண்ணா தயாராக இருகாங்க , அவங்கள ஒன்னு சேர்க்குறதுக்கு இது ஒன்னுதான் வழி என்ற சாராவின் மனதிலும் சாந்தினியின் செய்கை பயத்தை உண்டாக்கியது .

-----------

"என்னடா சொல்ற " என்று ஒரே நேரத்தில் அதிர்ச்சியாய் வந்தன ஹரி மற்றும் சிவாவின் குரல்.
" எத்தன தடவ கேட்டாலும் ஒன்னு தான், நான் சாந்தினி கிட்ட என் காதலை சொல்லிட்டேன் " என்று வானிலை அறிக்கை போல் சொன்னவனை பார்த்த நண்பர்களிடம் நடந்ததை கூற தொடங்கினான ஆதி .

திருவிழா முடிந்த அடுத்த நாள் , தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள் சாந்தினி. ஏதோ யோசனையில் வந்தவள் தன் முன்னால் வந்தவனை கவணிக்க தவறினாள் . எதிரில் வந்தவனின் மீது மோதி , அவளை விழுகாமல் தாங்கினான் ஆதி. அவனை அங்கு எதிர் பார்க்கத்தவள் , அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ தன் கன்னங்களை கைகளால் மறைத்து கொண்டிருந்தான். அந்த செய்கையில் சிரித்த சாந்தினி " அவளோ பயம் இருந்தா சரி தான் ".
" ச்ச ச்ச பயம்லா இல்லை,அழகான பொண்ணுங்க அடிச்ச கன்னத்தோட சேர்ந்து நெஞ்சமெல்லாம் புண்ணாகிடும்".
சாந்தினி " ஓஹோ நிறைய புண்ணாகிருக்கும் போலயே?.
" ச்ச ச்ச நான் ராமனுக்கு தூரத்து சொந்தக்காரன் , கட்டிக்க போறவள தவிர்த்து யார்டையும் அடி வாங்க மாட்டேன் " என்றவனை குழப்பத்துடன் பார்த்தால் சாந்தினி.

ஆதி அவளின் கை பற்றி,கண்களுக்குள் பார்த்தவாறு " என்னை கல்யாணம் பண்ணிக்கரிய பேபி?" என்றான்.

" நான் உண்மையா கேக்குறேன் பேபி, எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சுருக்கு , உன் பயத்த மறைக்குறதுக்கு உன் கண்ணுல எப்பயும் இருக்குற கோவம், உன் ப்ரெண்ட்ஸ் பார்க்கும் போது உன் கண்ணுல தெரியுற பாசம் , இதுக்கு எல்லாம் மேல நீ எத்தனை தடவ அடிச்சாலும் , முறைசாலும் உண்ட பேச தான் என் மனசு துடிக்குது , பார்த்ததும் வந்த காதலானு தெரியாது , ஆனா உன்ன என் கண்ணுகுள்ள வெச்சு பார்த்துபேன் , எப்பயும் சிரிக்க வைப்பேன் ,என்ன கல்யாணம் பண்ணிக்கோயேன் " என்றவனின் தாக்குதளில் வழுவிழந்து போனாள் சாந்தினி.

அதே நேரம் ' நாம மூனுபேரும் கல்யாணம் பண்ணியும் சேர்ந்து இருக்கனும் " என்று தான் சொன்ன வார்த்தை நியாபகம் வர தன் கைகளை அவனிடம் இருந்து உருவி கொண்டு, அவனை திரும்பியும் பார்க்காமல் போய்விட்டாள் .

" அட பாவி பார்த்து ஒரு வாரம் தான் ஆகுது , அதுக்குள்ள அந்த பொண்ணு கிட்ட ப்ரோபோஸ் பண்ணிருக்க ,எல்லாத்துலையும் அவசரம் தானா டா ?" என்ற சிவாவின் கண்களை பார்த்த ஆதி " எனக்கு தோனுச்சு இப்போ அவள்ட சொல்லாட்டி எப்பயுமே சொல்ல முடியாதுனு , அதும் இல்லாம அவள்ட நான் எல்லாத்தையும் சொல்லி முடிக்கும் போது ' இது நடக்காதேன்ற ' பரிதவிப்ப தான் அவ கண்ணுல பார்த்தேன் , என் மேல வெறுப்போ கோவமோ இல்ல, அப்ப அவளுக்கும் என்ன புடிச்சிருக்கு, ஆனா எதோ ஒன்னு அவளை தடுக்குது" என்று சொன்ன ஆதி நண்பர்களுக்கு புதிதாக தெரிந்தான் .

சாந்தினி ஆதி காதல் கை கூடுமா ? இல்ல விஷ்வாவின் உறுதி கை கூடுமா ?

தொடரும்....
 
Top