Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 6

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 6

பூச்சோலையில் நடக்கும் மாரியம்மன் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறும் . செவ்வாய் கிழமை தொடங்கி புதன் இரவு அம்மனை ஆற்றில் கரைப்பது வரை திருவிழா நடைபெறும். இதற்கிடையில் ஆடலும் பாடலும், முளைப்பாரி , பெண்கள் வைப்பது என்று ஊரே கோலாகலமாக இருக்கும்.

அன்று இரவு உணவு முடித்து கோவிலுக்கு போக தயாராகி கொண்டிருந்தாள் சாரா. அவள் அறைக்குள் வந்த தங்கையிடம் " என்ன டி இங்க நின்னுடிருக்க, நீ கோவிலுக்கு கிளம்பலையா?" என்றவளிடம் " அக்கா ப்ரெண்ட்ஸ் எல்லாம் கைல மருட்கனி அச்சு வைக்க போறாங்களாம், நானும்
வெச்சுக்கப்போறேன், காசு கொடு " என்ற தங்கையிடம் பணத்தை நீட்டியபடி " அது ஒரே நாள் தான் டி இருக்கும் , நாம அம்மாகிட்ட சொல்லி மருதாணி அரைச்சு வெச்சுக்கலாம் " என்றவளிடம் " அது போர் , இது தான் பூ பூவா வரும் " என்று கத்திக்கொண்டே ஓடிவந்தவளை, தடுத்த துர்வா "எங்க இந்த ஓட்டம் ஓடுற ?" என்றவளிடம் " மருதாணி அச்சு வைக்க ப்ரெண்ட்ஸோட போறேன் " என்று சிட்டாக பறந்தவளை பார்த்த துர்வா " சாண்டி நாமளும் மருதாணி அச்சு வைபோமா " கேட்டவளை ஏற இறங்க பார்த்த சாந்தினி " எரும வயசாகுது இன்னும் மருதாணி அச்சு வைக்கபோறாளாம் , ஒழுங்கா வராதா இருந்தா வா இல்லாட்டி இங்கயே இரு " என்று மீரா சாந்தினியை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றாள் துர்வா .

தோழியர் மூவரும் அன்று அழகிய பட்டு புடவையில் ஜொலித்தனர் . மந்தையில் கடை பரப்பியுள்ள அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டே வந்தவர்கள் கையில் பஞ்சுமிட்டாய் மற்றும் விசில் ஊதிக்கொண்ட சிரித்தபடி உலா வந்தனர்.

ராட்டினத்தை பார்த்தவுடன் பின் தங்கிவிட்ட துர்வாவை இழுத்துவர சாந்தினியும் பின் தங்கினாள் . இதை கவனிக்காத சாரா தெரிந்தவருடன் பேசிகொண்டே முன்னாள் சென்றால்.

கூட்டம் அதிகரித்து கொண்டே வர , காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாமல் , ஊர் இளைஞர்களும் உதவிக்கு வர, இவர்களுடன் விஷ்வா,சிவா,ஹரி மற்றும் ஆதியும் இருந்தனர். ஆளுக்கு ஒருபுறமாக பிரிந்து சென்று உதவ, ஹரி தன் முன் நின்ற பேருந்தை மக்கள் கூட்டம் மரிக்காமல் வழிவிட சொல்லி திணறி கொண்டிருந்தவனின் காதில் " என்ன சாரா இன்னும் விசில் வெச்சு விளையாடிட்டு இருக்குற" என்ற பெரியவரின் குரலுக்கு " இல்ல பெரியம்மா சும்மா... " என்று இழுத்தவளை பார்த்து சிரித்து விட்டு அவர் செல்ல, அவளின் கையை பிடித்திருந்தான் ஹரி, பிடித்த பிஸ் இருந்த விசிலை பறித்து, அதன் உதவியால் கூட்டத்தை விளக்க தொடங்கினான்.

அந்த பெரியவரிடம் பேசிவிட்டு திரும்பிய சாராவின் கையை இழுத்து விசிலை பறித்த புதியவனை அதிர்ச்சியாய் பார்த்தவள் , பயத்தில் ஒரே ஓட்டமாக ஓடி கூட்டத்தில் மறைந்தாள் .

தன் வேலையை முடித்து திரும்பிய ஹரி அந்த பெண்ணை காணாமல் தன் தோள்களை குலுக்கிக்கொண்டு நண்பர்களை தேடி சென்றான்.

அதே நேரம் தன் பேச்சை கேட்காமல் ராட்டினத்தில் ( giant wheel) ஏறி அமர்ந்த துர்வாவை முறைத்த சாந்தினி, ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டு , சாராவை கூட்டத்தில் தேடி கொண்டிருந்தாள்.

கூட்டத்தை சரி செய்து சற்று ஓரமாக நின்ற ஆதியின் கண்முன் ஒரு பெண் அங்கு இங்கும் பாத்து கொண்டே கால்களை மாற்றி மாற்றி ஒன்றி கொண்டிருந்தாள். அதை பார்த்த ஆதி " பாரா ஆடலும் பாடலும் இங்கயும் நடக்குது போல, ஆனா நிக்குற இடத்துலயே ஆடுற இது என்ன டான்ஸா இருக்கும்?" என்றவனின் கேலியில் கோவமாய் திரும்பியவளை பார்த்ததும் " ஆத்தா பர தேவதை , நீயின்னு தெரியாம பேசிட்டேன், இனி நீ இருக்குற பக்கம் கூட வரமாட்டேன் " என்றவனை பார்த்த சாந்தினி அவனிடம் அவனிட " சாரி அன்னைக்கு அவசரத்துல உங்கள அடிச்சுட்டேன் " என்றவளை பீதியுடன் பார்த்த ஆதி " அதுக்கு !! இப்போ நீ நின்னு நிதானமா வேற அடிக்கப்போரியா , அவசரத்துல அடிச்சதுக்கே கன்னம்லா தீயா எரிஞ்சது " என்றவனை ஏற இறங்க பார்த்த சாந்தினி " அன்னைக்கு நீங்க என்ன காப்பாத்துனது கபத்துநாடு அடிச்சுட்டேன்னு சொல்லவந்தேன் " என்றவளிடம் " ஓஹோ அப்படி சொல்லவந்தியா " என்ற வார்த்தையில் சாந்தினியின் கேங்க் " சொல்லவந்த்திங்களா " என்று முடித்தான் .

அவர்களை பார்த்தவாரு வந்த துர்வா " ஹலோ Mr. இளிச்ச வாய் , இங்கே என்ன பண்றீங்க " என்று கேட்டவளிடம் " யாரை இளிச்சவாய்னு கூப்புடுற " கடுப்போட கேட்டான் ஆதி.
" வேற யாரை உங்களதான் " துர்வா .
" ஒய் குள்ளகத்திரிகாய் என கொழுப்பா?" என்ற ஆதியிடம்,
" அட இப்போ எதுக்கு கோவப்படறீங்க , நீங்க தான் எப்போ பாரு ஈஈ னு பல்லக்காட்டிடே இருந்திங்க அதான் " என்றவள் சாந்தினியிடம் " சாண்டி உனக்கு சார் தெரியுமா ?" என்றவளிடம் சாந்தினி மறுப்பாக தலை அசைக்க அவளை வினோதமாக பார்த்தான் ஆதி.

துர்வாவோ அதை எதையும் கவனிக்காமல் " ஆமா உங்க ப்ரண்ட்ஸ் எங்க காணும்? என்றவளிடம் ,
" அவனுங்க இங்க தான் எங்கயாது இருப்பானுங்க " என்றவனும் கூட்டத்தில் தேடி கொண்டேகூற , தூரத்தில் வந்த சிவாவை பார்த்து கை அசைத்தான் . அவனை கவனிக்காத சிவாவை பார்த்த துர்வா " ஒய் கருவாயா " கத்தியதில் சர்வமும் ஒரு நிமிடம் நின்று பின் அசைந்தது.
அதை கேட்ட சிவா " என்ன டி கொழுப்பா ,இனிமே கருவாயானு கூப்பிடு அப்பறம் தெரியும் சேதி " என்றவனின் கோவம் என்னை ஒன்றும் செய்யாது என்றவாறு நின்ற துர்வா " அட உனக்கு இவளோ பேச தெரியுமா " என்றவளை அதிர்ச்சியாக சாந்தினியும் , அதிசயமாய் ஆதியும், எரிச்சலாய் சிவாவும் பார்த்தனர்.

அதை பயன்படுத்தி சாந்தினி துர்வாவுடன் கூட்டத்தில் மறைந்தாள் . அதை பார்த்த ஆதி " உங்க ஊர்ல நார்மலான பொண்ணுங்களே கிடையாதா டா " என்றவனை முறைத்தான் சிவா. இவர்களின் நிலைமை தெரியாமல் விசிலை ஊதியபடி வந்த ஹரி " இங்க என்னடா பண்றீங்க?"கேட்க , அவனையும் அவன் கையில் இருக்கும் விசிலையும் ஒரு மார்க்கமாக பார்த்த ஆதி " என்னடா விசில் ஊதி விளையாடிட இருக்க " னு கேட்க " என்னோடது இல்ல டா ஒரு பெண்ணோடது " என்றவனை அதிர்ச்சியாய் பார்த்தனர் நண்பர்கள்.

அதே சமயம் சாந்தினியையும் ,துர்வாவையும் விட்ட இடத்தில் காணாமல் தேடி கொண்டிருந்த சாராவை நோக்கி வந்து கொண்டிருந்தனர் இருவரும். " எங்க லே போனீங்க?" கேட்க " இந்த எரும ராட்டினம் சுத்த போய்ட்டா " என்றவர்கள் பேசிக்கொண்டே நகர " நீ எங்க போன ?" என்றவர்களுக்கு நடந்ததை கூரினாள் சாரா.

" எதும் லூசா இருக்கும் , விடு " என்ற சாந்தினியிடம், " டீசெண்டா ட்ரெஸ் பண்ணிருந்தான் லே " என்ற சாராவிற்க்கு பதிலாய் " இப்போலாம் லூசுங்க தான் டீசெண்டா ட்ரெஸ் பண்ராங்க " என்றாள் துர்வா .

இதையே நண்பர்களிடம் விவரித்தான் ஹரி " அந்த பொண்ணு என்ன நினைச்சதோ தெரியல " என்றவனிடம் " வேற என்ன நினைச்சுருக்க போகுது , லூசுன்னு தான் " என்ற ஆதியை முறைத்த ஹரி " நீ ஏன்டா மாப்ள கோவமா இருக்க? " என்று சிவாவிடம் கேட்க, நடந்ததை கூறிய ஆதியுடன் இணைந்து சிரித்தான் ஹரி.

நேரம் நள்ளிரவை தான்ட கிரகம் அமைக்கும் இடத்திற்க்கு சென்று, அம்மனை சேவித்தவர்கள் வீடு திரும்பினர்.

தொடரும்.....
 
Top