Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 4

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 4

வேலை முடித்து வீட்டிற்குள் நுழைந்த சிவாவிடம் " சாப்புடரிய சாமி " என்ற அன்னையை பார்த்தவன் " எடுத்து வைங்க மா குளிச்சிட்டு வாரேன் " என்றபடி தான் அறைக்குள் நுழைத்தான்.

அவன் மேலே சென்றதும் அன்னையை பார்த்த ருத்ரன் " இந்த தடவையாச்சும் அண்னே ஊருக்கு வருவாங்களா மா?" என்றவனிடம் "அண்ணனுக்கு வேலை ஜாஸ்தி சாமி அதான் வரல,உனக்கும் பரிட்சை கெடந்துச்சு, இந்த முறைதான் பரிட்சை இல்ல, ஹரி தம்பிட்ட கேட்டேன் வேலைலா இப்ப நல்லா போகுதுன்னு சொல்லுச்சு ,அதான் அண்ணன்ட கேட்டு பார்ப்போம் தம்பி " என்றவர் உணவை எடுத்துவைக்க ஆரம்பித்தார் .

தன் அறையில் இருந்து வந்த சிவா ருத்ரன் சோபாவை படித்து கொண்டிருந்ததை பார்த்து " ருத்ரா சாப்பிட்டியா ?" என்றவனு மறுப்பாய் பதில் வர " சாப்பிட்டு போய் படி " என்ற வார்த்தையில் உணவு மேஜை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ருத்ரன்.

சிவா இன்ஜினியரிங் முடிக்கும் தருவாயில் குடும்பத்தில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளில் தாய் தம்பியுடன் வீட்டை விட்டு வெளியேறியவன் சிவா , சிவரை வெறித்து பார்க்கும் தாயையும், அழுது கொண்டிருக்கும் தம்பியையும் தேற்றியவன் , அன்னையின் சொந்த கிராமத்தில் உள்ள நிலங்களை விற்று , அன்னை மற்றும் தம்பியின் பெயரில் வங்கியில் போட்டு அதில் வரும் வட்டியை
கொண்டு தம்பியின் படிப்பையும் , வீட்டு செலவையும் சமாளித்தவன் , தனது இறுதி செமெஸ்டர் ப்ராஜெக்ட்டை நண்பர்கள் உதவியுடன் முடித்தான்,அன்று சிறுவனாய் இருந்த ருத்ரனுக்கு தந்தைக்கு தந்தையாய் , அண்ணனுக்கு அண்ணனாய் இருந்து வருகிறான் சிவா. அதற்காகவே அண்ணனின் மேல் மிகுந்த பாசமும், மரியாதையும் கொண்டவன் ருத்ரன்.

சாப்பிட அமர்ந்த மகன்களுக்கு பரிமாறிய படி " தம்பி அடுத்த வாரம் நம்ம ஊரு திருவிழா பத்தி கேட்டேனே ?" என்று இழுத்தவரை இடைமறித்தது ஆதியின் குரல் " அம்மா சாப்பாடு காலியா ? என்று பரிதவிப்புடன் உள்ளே வந்தவனை " திங்குறதுக்கு மொத ஆளா வந்திடு " என்றவாரே ஆதியை பின்தொடர்ந்தான் ஹரி.

இரவு உணவை ஒன்றாய் அமர்ந்து அரட்டை அடித்தபடி உண்ணுவது அன்றாடம் நடக்கும் நிகழ்வு , அதுவும் காவேரியின் கிராமத்து சமையல் மீது ஆதிக்கு தனி காதலே உண்டு.

வந்த வேலையை ஆரம்பித்த ஆதி " என்ன மா நாங்க வரும்போது ஊரு, திருவிழான்னு காதுல விழுந்துச்சு?" என்றவனிடம் " ஆமா சாமி நம்ம கிராமத்துல திருவிழா வருது , இங்க வந்த அஞ்சு வருஷமா போக முடியல , அதான் இந்த தடவ தம்பிய போலாமான்னு கேட்டிட்டிருந்தேன். " அம்மா வேலை நிறைய இருக்குமா ,நான் உங்களுக்கும் , ருத்ரனுக்கும் ட்ரெய்ன்ல டிக்கெட் போடறேன் போயிட்டு வாங்க " என்றவனிடம் " நீ வந்தா போலாம் கண்ணு இல்லாட்டி அடுத்த வருஷம் பாத்துக்கலாம் " என்றவரை இடைமறித்த ஹரி " போயிட்டு வாடா, நானும் ஆதியும் ஆஃபிஸ் பார்த்துக்கறோம் " என்றவனை " நான் எப்ப உன்கூட ஆஃபிஸ் வரேன்னு சொன்னேன்?" இடைமறித்தது ஆதியின் குரல்.

" ஆஃபீஸ் வராம என்ன கிழிக்க போற ?" என்ற ஹரியின் கேள்விக்கு " நான் தான் அம்மாகூட கிராமத்துக்கு போரேனே " என்றவனை புரியாமல் பார்த்தான் ஹரி " அம்மா சமையல் இல்லாம எனக்கு இங்க என்னடா வேலை? அதான் நான்,ருத்ரா , அம்மா, அய்யனாரு ஊருக்கு போயிட்டு வரவரைக்கும் ஆஃபீஸ்யை பார்த்துக்கோ " என்றவன் காவேரியிடம் " அம்மா எத்தனை நாள் அங்க இருபோம் , எத்தனை டிரஸ் பேக் பண்ணட்டும்? " என்று பேசியவனை ஹரியால் வெறித்துப்பார்க்க மட்டுமே முடிந்தது.
காவேரியும், ஆதியும் தங்கள் பயண திட்டங்களை தொடர , ஹரியை பார்த்த சிவா " அடுத்த வாரம் தான் பெரிய ப்ராஜெக்ட் ஏதும் இல்லையே மச்சான் ,வினோத்ட மித்த வேலையெல்லாம் பாத்துக்க சொல்லிட்டு, எல்லாரும் போயிட்டு வரலாமா? " என்று தயங்கியவனை பார்த்த ஹரி " சரி மாப்ள யோசிக்கலாம் " என்ற ஹரியை அதிர்ச்சியாக பார்த்தது சிவா என்றால் , பூஜை அறைக்கு ஓடி போய் திருநீறுடன் வந்த ஆதி " யாருடா நீ ? மாப்ள ஹரி கேக்குதடா? கவலைப்படாதடா மச்சான் உன்ன புடிச்சுருக்குற இந்த பேய்ய எப்படியாது ஓட்டி உன்ன காப்பாத்துறேன்." என்று பேசியபடி திருநீறை ஹரியின் தலைமேல் தூவி பூசிவிட்டான் . இதை பார்த்து கொண்டிருந்த சிவாவும், ருத்ரனும் வாய்விட்டு சிரிக்க, காவேரி அவர்களை சிறு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தார்.

துர்வா எல்லாத்தையும் எடுத்து வெச்சுட்டியா, அப்பறம் ஊருக்கு போய் இத காணும் அத காணும்னு சொன்ன கொன்னே போற்றுவேன்" என்ற சாராவை " உனக்கு ஏன் என்ன கொல்றதுல இம்புட்டு ஆர்வம்? எப்ப பாரு கொன்னுருவேன் கொன்னுருவேன்னு " என்று சலித்து கொண்ட துர்வா சாரா கேட்ட கேள்விக்கு பதில்சொல்லமல் வெளி ஏறினாள் .

" நீ கேட்டதுக்கு அவ பதில் சொன்னாளா பாத்தியா?" என்ற சாந்தினியிடம் " அட போ லே என்னைக்கு நாம சொன்னதை கேட்ருக்க இப்ப கேக்குறதுக்கு , அவ பொருள் ஏதாவது கண்ணுல கிடைச்ச எடுத்து பேக்ல போட்டுக்க,அவளுக்கு அட்வைஸ் பண்றத விட இது ஈஸி " என்ற சாராவை 'ஆத்தாடி இந்த புள்ளைக்கு இம்புட்டு அறிவா ' ன்ற மாதிரி பார்த்து வைத்தாள் சாந்தினி.

சரியாக 8 மணிக்கு எழும்பூரை அடைந்த தோழிகள் பொதிகை எக்ஸ்பிரஸ் நடைமேடையை கேட்டு , ட்ரெயினில் தங்கள் இருக்கையில் அமர்ந்தனர், இன்னும் புறப்பட அரை மணிநேரம் இருக்க ," சப்புட ஏதும் வாங்கலாம் லே " என்ற துர்வாவை மேலும் கீழும் பார்த்தனர் மற்ற இருவரும் . " வயிறுனு இருந்த பசிக்க தான் செய்யும் , அதுக்காக இப்படியா பார்ப்பாங்க?" என்றவளிடம் " அது சரிதான் ஆனா நீ வாங்குறதோட சரி ,முழுசா சாப்பிட மாட்டியே " என்ற சாராவிடம் " அதுக்கு தான் சிங்கக்குட்டி இருக்கே " என்று சாந்தினியை கை காட்ட " இந்தா லே நான் உண்ட பேசவே இல்ல , என்ன ஏன் வம்புக்கு இழுக்குற " என்றவளிடம் " உண்மைய சொன்னேன், நீ தான் எனக்கு போதும் போதும்னு எல்லாத்தையும் சாப்ட்ருவேல , அந்த திறமை எனக்கு இல்லப்பா " என்று கிண்டல் அடித்தாள் துர்வா .

சாராவை இருக்கையில் விட்டுவிட்டு சாந்தினியும்,துர்வாவும் கொறிப்பதற்கு வாங்க சென்றனர். துர்வாவை வாங்க சொல்லிவிட்டு சற்று தளி ஒரு தள்ளு வண்டியில் உள்ள புத்தகக்கங்களை நோட்டமிட்ட சாந்தினி, பின்னாடி நகரும் ட்ரைனை கவனிக்காமல் சென்றவளை தடுக்க வந்து, தவறி சட்டென அவளை தன் பக்கம் இழுத்த வலிமையான கைகளுக்கு சொந்தக்காரன் ஆதித்யா .

தன்னை திடீரென யாரோ இழுக்க , அதே வேகத்தில் பட்டென்று எதன்மீதோ மோதி நின்ற சாந்தினிக்கு பயத்திற்கு மேலாக கோவம் அதிகரிக்க, தான் மோதி நின்றவனின் கன்னத்தில் 'பளார் ' என்று வைக்க . ஆதிக்கோ கன்னம் தீயாய் எரிய , கன்னத்தில் கை வைத்தவாறு சாந்தினியை பார்த்தவன் " ஆத்தாடி என்னா அடி " என்று சொன்னவனை கண்ட சாந்தினி இன்னும் சூடாவதை கண்டவன் " சாத்தியமா இனி ட்ரெய்ன்னு யாரையாவது இடிக்க வந்தா வேடிக்கை மட்டும் தாங்க பார்ப்பேன் , காப்பாத்த ட்ரை பணமாட்டேன் தாயே " என்றவன் " சினிமால தான் காப்பாத்துனா காதல் வரும் போல , நிஜத்துல அடி ஒன்னும் இடி மாதிரில விழுது " என்றவன் கூறிய வார்த்தை மனதில் பதிய சாந்தினி மன்னிப்பு கேட்க அவனை நோக்கி கை நீட்ட , அவன் மறுபடி தன்னை அடிக்க போகிறாள்போல என்று ஓட்டம் பிடித்தான்.

'அவசர பட்டேனோ கோவத்தை கொஞ்சம் குறைக்கணும் , அடி பலமா விழுந்த்துருச்சு போல என்று யோசித்து கொன்டே நின்றவளை தேடி வந்த துர்வா " அங்க இருந்து புக்கு கூடயே இங்க வர வந்தியா " என்று கேட்டவள் , சாந்தினியை இழுத்தபடி சாராவிடம் சென்று பயணத்திற்கு தயாராகினர்.

தனது கம்பார்ட்மெண்டை அடைந்த ஆதி வெறும் கையோடு வருவதை பார்த்த ஹரி " நான் சொல்லல அவன் சும்மா சைட் அடிக்கப்போயிருப்பானு, தண்ணி வாங்கிட்டு வர மூஞ்ச பாரு " என்று பொரிந்து தள்ளினான், இதை எதையும் கண்டுக்காத ஆதி " மச்சான் என்ன ஒரு பொண்ணு அடிச்சுட்டாடா " என்றவனை பார்த்த நண்பர்கள் " நீ அந்த பொண்ணுட என்ன வம்பு பண்ண " என்று கேட்க , அவர்களை முறைத்தவன் " ட்ரெயின் இடிக்க வருதுன்னு இந்த பக்கம் இழுத்தேன், இழுத்த வேகத்துல என் மேல மோதிட்டா , சட்டுனு ஒன்னு விட்டா பாரு " என்று சோகமாக சொன்னவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர் நண்பர்கள்.

மதுரையை நோக்கி பயணம் தொடங்க, தங்கள் வாழ்க்கையின் மாறுதல்களை வரவேற்க ஆறுபேரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

தொடரும்....
 
Top