Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 22

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 22

திருமணம் முடிந்து அனைவரும் மணமகன் இல்லத்துக்கு கிளம்ப, அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ரிஷி மற்றும் ராகேஷை நோக்கி வந்த ருத்ரன்," அம்மா உங்களையும் வீட்டுக்கு வர சொன்னாங்க ", என்றதும் இருவரும் காவேரியை பார்த்துவிட்டு சிவாவை பார்க்க , அவன் தாயின் பார்வைக்கு சம்மதமென்று தலை அசைத்தான்.

மணப்பெண்ணின் பெற்றோர் , உடன் பிறந்தோர் மற்றும் ராகவியின் குடும்பம் மட்டுமே வந்திருந்தனர். மணமக்களை ஆழம் சுற்றி வீட்டிற்குள் அழைத்து சென்றனர். வந்த அனைவரையும் உபசரித்த காவேரி, "எங்களால தான் அண்ணா இந்த பிரச்னை எல்லாம் ... முடிஞ்சா எங்களை மன்னிச்சுருங்க அண்ணா " என்று கூற , தேவேந்திரனோ, " விடு மா , இது தான் நடக்கும்னு இருந்தா மாற்றவா முடியும் ". ஆனால் அனைவரின் மனதில் இருந்தது ஒரே கேள்வி தான், காவேரி மற்றும் பிறைசூடன் வாழ்வில் நடந்தது என்ன என்பதே ஆகும் . அதை காவேரியும் அறிந்தே இருந்தார், ஆனால் தன் வாழ்க்கையை சபையில் அரங்கேற்ற அது கதை அல்லவே.

விஷ்வா தங்கைகளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை தன்னுடைய அவசரத்தினால் நடந்த தவறினை மறக்க முடியாமல் திணறி கொண்டிருந்தான்.அவனது கோபம் முழுவதும் ரிஷி மற்றும் ராகேஷின் மேல் கொந்தளிக்க காத்து கொண்டிருந்தது.

விஷ்வாவிடம் தங்கள் நிலைமையை கூறி மன்னிப்பு கேட்க, ஆதி,ஹரி மற்றும் சிவா காத்து கொண்டிருக்க.,விஷ்வா யாரையும் நிமிர்ந்து பாராமல் அமர்ந்திருந்தான்.

ராகவியின் நிலைமையோ வேறாக இருந்தது. திருமணம் தடை பட்டதும், இனி இவர்களின் நிலை அவ்வளவு தான் என்று நினைத்து மகிழ்ந்தவளின் தலையில் இடியை இறக்கியது அவர்களின் திருமணம் . அதுவும் 'காதலிப்பதாக' கூறி மணந்த ஹரி & கோவை மனதார சபித்து கொண்டிருந்தாள். எப்படியும் துர்வா & கோவை பழி வாங்கியே தீரவேண்டும் என்ற எண்ணம் ரகவியின் மனதில் வளர்ந்துகொண்டே வந்தது.

அனைவரும் பொதுவாக பேசிக்கொண்டிருக்க, ரிஷியும் ராகேஷும் சிவாவிடம் பேச காத்து கொண்டிருந்தனர். அதற்க்கு ஏற்றார் போல் சிவா மற்றும் நண்பர்களுடன் வாயிலுக்கு சென்றவர்களை பின் தொடர்ந்தனர் ரிஷியும் ராக்கியும். காவேரியின் கண்கள் இவர்களை கூர்ந்து கவனித்து கொண்டே இருந்தன.

வெளியே வந்த இருவரும்,சிவாவை பார்த்து," இந்தாங்க , நாங்க தோத்துட்டோம் ... சொன்னபடி உங்க கம்பெனி அக்ரீமெண்டை , உங்கள்டயே குடுத்துறோம் " என்றவர்களை இடைமறித்த ஆதி," நீங்க தான் தோற்க்க போறிங்கனு, உங்களுக்கு ஏற்கணமே தெரியும் இல்லையா?, அப்பறம் யாரை பழிவாங்க இந்த பிளான் " என்றவனை பார்த்த ரிஷி சிவாவை பார்க்க அவன் இவை எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தான்.

ஆதியை பார்த்த ரிஷி ," எப்பாவது அம்மா , அப்பா இருந்து அநாதையா பீல் பன்னிருக்கீங்களா?, கண் முன்னாடி நம்ம பெற்றோர்கள் ஹீரோ இல்ல வில்லன்னு தெரிஞ்சும் அவங்களோட வாழ்ந்துருக்கீங்களா?, நமக்குன்னு யாருமே இல்லனு தோனிருக்க ?, நம்ம வாழ்க்கையே பணம் மட்டும் தான் , பாசம் இல்லன்ற இடத்துலயாது இருந்துருக்கீங்களா? " என்றவன் ஒவ்வொரு கேள்விக்கும் குரலை உயர்த்தி கொண்டே சென்றான்.

" 18 வயசு , வாழ்க்கைய அனுபவிக்க வேண்டிய நேரம், ஆனா நான் எல்லாத்தையும் இழந்தது அப்போ தான். சின்ன வயசுல வேலைகாரவங்க கிட்ட அம்மா விட்டு போகும் போது , அவங்களுக்கு ஏதோ வேலை , முடிஞ்சதும் என்னையும் மித்த குழந்தைகளின் அம்மா போல கொஞ்சுவாங்கனு காத்திருந்த நாட்கள் எனக்கு ரொம்ப நீளம். ஒரு நாள் தெரிஞ்சது அவங்க சொத்துக்காகவும் , ஊருக்காகவும் தேவ பட்டவன் தான் நான் என்பது. அப்பா ஹீரோவா பார்த்த நாட்கள் மாறி அப்பா மனுஷனே இல்லனு தெரிஞ்சுக்கிட்ட நாட்கள் நரகம், இவ்வளவுக்கு நடுவுல வாழ்ந்த நான் எடுத்த ஆயுதம் தான் பழிவாங்குறது, என் நிலைமை தான் ராக்கி பய்யாக்கும் , பெத்தவங்கள இழந்து, தம்பிய பிரிஞ்சு பழிவாங்குறதுக்காக வாழ்ந்தாங்க , எங்க ரெண்டு பேரோட ஒரே குறிக்கோள் பிறைசூடன் " என்றவனை விழிவிரித்து பார்த்தனர் நண்பர்கள் மூவரும்.

சிவாவை பார்த்த ராகேஷ், " நீ ஒரு வகைல குடுத்து வச்சவன் , காவேரி அம்மாக்கு புள்ளையா பிறந்துட்ட , இவன் பிறைசூடனுக்கு மகனா பிறந்து பாவத்தை சுமந்துட்டு இருக்குறான் , அதை இறக்குறதுக்காக தான் இந்த பிளான் எல்லாம், இதுல அந்த பொண்ணுங்க வந்தா தான் நீ தலையிடுவனு , இப்படி பண்ணோம் ... இதை நியாய படுத்த மாட்டோம், தப்புனு தெரிஞ்சு தான் பண்ணோம் " என்றவன் சிவாவின் கையில் கொண்டு வந்த கோப்பை திணித்துவிட்டு ரிஷியுடன் வீட்டினுள் நுழைந்தான்.

இவை அனைத்தயும் கேட்டு கொண்டிருந்த காவேரி, யோசனையுடன் செல்ல, ஆதி , ஹரி மற்றும் சிவா பேச மறந்து நின்றனர். பரந்தாமன்," சரி மா தங்கச்சி, நாங்க புறப்படுறோம்" என்றவரை இடைமறித்த ஆதியின் தந்தை ," என்ன சம்மந்தி , எங்க போறீங்க , நம்ம வீடு இருக்குல்ல " என்றவருக்கு பதிலாய் ," இல்லைங்க சம்மந்தி,அது நல்லா இருக்காது, நாங்க இங்க ரூம் போட்ருக்கோம், அங்க போயிட்டு காலைல வாறோம்" என்றவர் மகள்களிடம் விடைபெற்று கிளம்பினர். ரிஷியும் ராகேஷும் அவர்களுடனே கிளம்ப, காவேரி " நீங்களும் காலைல கண்டிப்பா வரணும் " என்று கூற இருவரும் மறுப்பு தெரிவித்தனர். " எனக்கு உங்ககிட்ட கேட்குறதுக்கு நெறைய இருக்கு, என் வாழ்க்கைய நாலு பேருக்கு முன்னாடி தெரிய படுத்தின உங்களுக்கு, என்கிட்ட அதுக்கான காரணத்தை சொல்ல தோணலையா , இல்ல இது எதுக்குமே சம்மந்தம் இல்லாத அந்த பொண்ணுங்களுக்கு காரணம் சொல்றதுக்கு உங்கள்ட்ட எதுமே இல்லையா?" என்றவரின் கேள்வியில் தலைகுனிந்த இருவரும் , மறுநாள் வருவதாக கூறி சென்றனர்.

சாந்தினி,சாரா மற்றும் துர்வாவிடம் வந்த காவேரி, அவர்களின் மனநிலையை யோசித்து மூவரையும், ஒன்றாக படுக்க அனுமதித்து அனுப்பிவைத்தார். போகும் பெண்களையே ஏக்கத்துடன் பார்த்த நண்பர்கள், பெற்றவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தங்கள் அறைநோக்கி சென்றனர்.
காலையில் இருந்து நடந்த அனைத்தும் அனைவரையும் ஒவ்வொரு வகையில் பாதித்திருந்தது. அனைவரும் தங்கள் யோசனையில் மூழ்கியவாறு நித்திரைக்கு சென்றிருந்தனர் , ஒருவரை தவிர்த்து. காவேரி தன் கருப்பு பக்கங்களை புரட்டி பார்க்க தொடங்கினார்.

அதே போல் , உயர் ரக விடுதியில் தங்கி இருந்த பிறைசூடன், காலையில் நடந்த நிகழ்வினில் தகித்து கொண்டிருந்தார். தன்னுடன் வியாபாரம் செய்யும் அனைவருக்கும் அவரது கடந்த காலம் தெரிந்ததை கூட பெரிதாக என்ன வில்லை, தப்பு செய்யாத பெரிய மனுஷன் எவன் இருக்கான் என்ற எண்ணம் கொண்டவரால் ... தனது மகனே தன்னை அசிங்க படுத்தியதை ஏற்று கொள்ள முடியவில்லை ..... அதை விட காவேரி அனைவர்க்கும் முன் தன்னை அரைந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை அவரால். பிறைசூடன் தனது கடந்த காலத்தை அசைபோட, அவர் மகன்களான ரிஷி மற்றும் சிவாவும் , தங்களின் வாழ்வை திசைமாற்றிய நாட்களை அசைபோட தொடங்கினர்.

தொடரும்......
 
Super

Super sis
 
Top