Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 21

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 21

திருமண மண்டபமே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வருபவர்களை உபசரித்து கொண்டிருந்தனர் மணமக்கள் குடும்பத்தினர். மணபெண்களின் அறையில் பெண்களின் கேலியும் கிண்டல்களுக்கு நடுவில் தயாராகி கொண்டிருந்தனர் மணபெண்கள் மூவரும். மாப்பிள்ளை அழைப்பை வேடிக்கை பார்க்க அனைவரும் வெளியேற, சாந்தினி," லே மாப்பிள்ளைங்க வரலன்னு இப்போ தெரிஞ்சுரும்,கல்யாணம் நின்ரும்ல ?".

துர்வா ," நேத்து நாம தான் பாத்தோமே , கண்டிப்பா கல்யாணம் நின்றும் " என்று உறுதியாக கூறினால். சாராவோ இருவருக்கும் பொதுவாக தலை ஆட்டிவைத்தால்.

அவர்கள் எதிர் பார்த்த கூச்சலோ குழப்பமோ , வரவே இல்லை, மாறாக பெண்களை முகூர்த்த புடவை பெற்றுக்கொள்ள அழைத்து சென்றனர்.

அதேபோல் பிறைசூடன், திருமணம் நடக்க போவது இல்லை என்ற எண்ணத்துடன் சுற்றி கொண்டிருந்தார். அவருக்கு வந்த தகவல்படி நேற்று இரவு மணபெண்களை அவரின் ஆட்கள் கடத்தி விட்டதாக வந்தது.ஆனால் முஹுர்த்த புடவை வாங்க வந்த பெண்களை பார்த்ததும் மயக்கம் வராத குறையாக அதிர்ந்து நின்றார்.

குழப்பத்திலும் பதட்டத்திலும் முஹுர்த்தத்திற்கு தயாராகினர் பெண்கள். மணமகன்கள் மேடையில் அமர்ந்ததும் பெண்கள் அழைத்து வரப்பட்டனர்.

அங்கு ஆதி மற்றும் நண்பர்கள் போதை தெளிந்து விழித்து பார்க்க, தங்களை யாரோ கடத்தி இருப்பது தெரிந்து , சுற்றும் முற்றும் தேடி பார்க்க , ஆட்கள் யாரும் இருப்பது போல் தெரியவில்லை.

ஆதி," கண்டிப்பா இதும் அந்த சப்பாத்தி மூஞ்சி வேலையா தான் டா இருக்கும்,நாம அவனை கடத்த ஆள் அனுப்புனா, அவன் நம்மள கடத்த ஆள் அனுப்பிட்டான்".

ஹரி," அது எல்லாம் இருக்கட்டும், இன்னும் அரை மணி நேரத்துல முஹூர்த்தம் , எப்படி போறதா இருக்கீங்க" என்றதும் தான் கவனித்தனர், தங்களை கடத்தியவன் , கட்டிப்போடவும் இல்லை, தங்கள் அலைபேசியை எடுக்கவும் இல்லை என்று.
அந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்தவர்களுகாகவே காரும் நிறுத்தி வைக்க பட்டிருக்க , சந்தேகத்துடன் சுற்றி பார்க்க, இவர்களை நோக்கி ஓடி வந்தான் ஒருவன்.

" அண்ணா மன்னிச்சுருணா , பசங்க ஆள் மாத்தி உன்னைய தூக்கிட்டானுங்க, நயிடே உங்கள, வூட்டாண்ட வுற்றலாம்னு பாத்தேன், காலைல மண்டபத்துக்கு போணும்னா இதான் வசதின்னு, இங்கன தூக்கினு வந்துட்டேன், இந்தாண்ணா நீ குடுத்த துட்டு , இந்த கார் சாவி வெச்சுக்கோ, விரச கிளம்பு " என்றவனை முறைத்த ஆதி ," உன்ன வந்து கவனிச்சுக்கறோம் " என்றதோடு கிளம்பினர்.

ஆதி & கோ உள்ளே நுழையவும் , பெண்கள் மேடையில் மாப்பிள்ளைக்கு அருகில் அமரவும் சரியாக இருந்தது. அதை ஆதி கனலுடன் பார்க்க, சிவா நண்பர்களுடன் மேடை நோக்கி நடந்தான்.

இதற்காகவே காத்திருந்த ரிஷி, மணமேடை விட்டு எழுந்தான், அவனை தொடர்ந்து ராக்கி மற்றும் ராமும் எழுந்தனர்.

" வாங்க பாஸ் , உங்களுக்கு தான் காத்திருந்தேன் " ரிஷி," என்ன விஷ்வா அப்படி பாக்குறீங்க, உங்க ப்ரெண்டு தான், கல்யாணத்த நிறுத்த வந்துருக்காங்க " என்றான்.

அவன் வார்த்தையில் அதிர்ந்த விஷ்வா சிவாவை பார்க்க, சிவாவால் விஷ்வாவை பார்க்க முடியாமல் தலை குனிந்தான்.

" அஹ்ஹ் அவ்வளோ ஷாக் வேணாம் , அவங்க நிறுத்தலைனாலும் இந்த கல்யாணம் நடந்திருக்காது, அப்படித்தானா டாட் " என்ற ரிஷி பிறைசூடனை பார்த்தான்.

பிறைசூடன் தடுமாற்றத்தை பார்த்த ரிஷி, " இன்னைக்குனு பார்த்து எங்க அப்பாக்கு ஒரே வெக்கம்" என்றவன் " அதான் ப்பா எப்பயும் உங்களுக்கு பிடிக்காத ஒன்னு நடந்தா , அவங்க மேல நடத்தை சரி இல்லனு நம்ப வைப்பீங்களே " என்றவனை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

ஹேமாவதி," ரிஷி , துமஹே க்யா ஹுவா ?, க்யூன் ஐஸே கர் ரஹே ஹூ ?" ( உனக்கு என்ன ஆச்சு? , ஏன் இப்படி நடந்துக்கற ?)

ரிஷி ," ஏன் இப்படி நடக்குறேனா?, உங்க பாவ மூட்டையை நான்ல சுமந்துட்டு இருக்கறேன் , அதை கொஞ்சம் கொறைக்குறதுக்கு தான் " என்றவன்.

" என்ன Mr. பிறைசூடன் புரியலையா , உங்கள நம்பி வந்த ஒரு பொண்ண,ஏமாத்தி அவங்க சொத்துக்களை எழுதி வாங்கி, அதை வெச்சு நீங்களும் உங்களோட இரண்டாவது மனைவியும் அனுபவிச்சிட்டு இருக்குற இந்த கபூர் குழுமத்தை நான் அவர்களுக்கே திருப்பி தரப்போறேன் ".
ஹேமாவதி மகன் சொன்ன இரண்டாவது மனைவியில் அதிர்ந்து நிற்க, பிறைசூடன் ரிஷியின் வார்த்தைகளில் கொதித்து கொண்டிருந்தார்.

அனைவரையும் பார்த்த ரிஷி," என்னடா எங்க குடும்ப சண்டையை உங்க முன்னாடி படம் காட்டுறோம்னு நினைக்குறீங்களா ?, எங்க தொலைச்சோமோ அங்க தான தேடனும் " என்றவனை அனைவரும் புரியாமல் பார்க்க, ரிஷி , " இவர் ஒரு பொண்ண ஏமாத்துனதா சொன்னேனே , அது உங்க ஊர் பொண்ணு தான் " என்றவன் ," உங்க ஊர் பெரிய வீட்டு பொண்ணு.. இதோ இந்த காவேரி அம்மாவ தான் " என்று ருத்ரன் அருகில் நின்ற காவேரியை கை காட்டினான்.

அதுவரை பொறுமையை கடை பிடித்த பிறைசூடன், காவேரியை பார்த்ததும்," ஓஹ் எல்லாம் உன் வேலை தானா , என்ன என் பையன் கிட்ட, உத்தமி வேஷம் போட்டு, அவனை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்குரியா?" என்றவரின் கழுத்தை பிடித்திருந்தான் சிவா.

"என்ன ரொம்ப பேசுற, உன் புள்ள பேசுனா, அவனை மட்டும் பேசு, எங்க அம்மாவை பேசுனா, சங்கருத்துருவன் " என்றவன் ரிஷியிடம் " இப்போ எதுக்கு இந்த நல்லவன் வேஷம் போடறன்னு தான் புரியல ".

அதற்குள் ஊர் பெரியவர்கள் விசாரிக்க தொடங்க, அதை காரணமாக வைத்து கொண்டு," பெரியவங்க இருக்காங்க , அவங்க விசாரிக்கட்டும் ... இவளை நான் ஏமாத்துனேன் தான், ஆனா அதுக்கு காரணம் அவ நடத்தை, திடீர்னு ஒரு நாள் அந்தா அவ பக்கத்துல நிக்குறானே, அந்த பயல கூப்டு வந்து, இனி இவன நம்ம பையன வழக்கணும்னு சொல்ற, எவனுக்கோ பொறந்தவனுக்கு நான் அப்பனா இருக்கணுமா" என்றவரின் கன்னம் தீயாய் எரிந்தது.

அதுவரை அமைதியாகவே பார்த்த காவேரி, முதல் முறையாக பத்ரகாளியாய் உருவெடுத்து, பிறைசூடனை அடித்தவர் , " என் பையனுக்கு அப்பான்றதால உன்ன இதோட விடறேன், இனி உன் சாக்கடை புத்திய என்கிட்ட காட்டாத " என்றவாறு கிளம்பியவரை," பதில் சொல்லிட்டு போ, நீ பத்தினின்னுல ஊரை ஏமாத்திட்டு இருக்க " என்ற பிறைசூடனை இடைமறித்த ராக்கேஷ் ," உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன்" என்றவன் ருத்ரன் அருகில் வந்து " பத்மாவதி, கந்தன்புரம் ஞாபகம் இருக்கா Mr.பிறைசூடன் " என்றவன் ," அவங்க மகன் தான் இந்த ருத்ரன், நீ பண்ண பாவத்துக்கு அவங்க பிராயச்சித்தம் பன்றாங்க " என்றவனை குழப்பத்துடன் பார்த்தவரிடம் ," என்ன டா நமக்கு மட்டுமே தெரிஞ்ச பத்மாவதி எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குரிய , அந்த பத்மாவதியோட மூத்த மகன், ரூபன் ஞாபகம் வருதா ?" என்றான் ராகேஷ் @ ரூபன். அவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் பிறைசூடன்.

இதுவரை பொறுமையாக இருந்த துர்வா ,சாரா, சாந்தினியின் பெற்றவர்கள் , " உங்க குடும்ப பிரச்சனைல , எங்க புள்ளைங்க வாழ்கை தான் உங்களுக்கு கிடைச்சதா தம்பி " என்றவர் வேதனையுடன் ," இந்த கல்யாணத்த நடத்த எங்க குடும்பம் எவ்வளோ சிரம பட்டது தெரியுமா ?, உங்க அப்பாவை தண்டிக்க முடிவெடித்த நீங்க நியாயமா நடந்தீங்களானு யோசிங்க " என்றவர் அப்படியா அங்கிருந்த நாற்காலியில் அமர, தலை குனிந்திருந்த ரிஷி," உங்க பொண்ணுங்க வாழ்க்கைய கெடுக்கணும்னு நினைக்கல சார் , ஆனா இவங்க வாழ்க்கைல நுழைஞ்சா தான் சிவா தலையிடுவான்னு இப்படி செஞ்சேன் , எங்களை மன்னிச்சுருங்க " என்று கைகூப்பி நின்றவனை புரியாமல் பார்த்தனர் மணபெண்களின் தந்தை மற்றும் தமையனும்.

அதை கேட்ட சிவா ," மாமா எனக்கு உங்க பொண்ண புடிச்சிருக்கு, அத சொல்லி பெண் கேட்கலாம்னு இருக்கும் போது , உங்க பொண்ணுங்களுக்கு நிச்சயம்னு விஷ்வா வந்து நின்னுட்டான் , அப்போ கேட்க முடியாதத இப்போ கேக்குறோம் மாமா " என்றவன் தன் அன்னை மற்றும் சிவா ஹரியின் பெற்றோரை பார்க்க , அனைவர்க்கும் பொதுவாக ஹரியின் தந்தை," பசங்களுக்கு, உங்க பொண்ணுங்கள புடிச்சிருக்கு, எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல, பசங்கள பத்தி உங்களுக்கே தெரியும், எங்க மூணு பசங்களுக்கும் உங்க பொண்ணுங்கள குடுக்க சம்மதமா ?" என்றவரை வெறுமையாக பார்த்தனர் பெண்களின் பெற்றோர்கள்.

இதை பார்த்த காவேரி," அண்ணே , என் மேல உனக்கு நம்பிக்கை இருந்தா உங்க புள்ளைகள மருமகளா எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்கணே " என்றதும் ," அப்படி இல்ல காவேரி, மணமேடை வந்து, பாரம் தாங்காம எங்க புள்ளைங்கள யாருக்கோ தள்ளி விட்டுட்டேன்னு அதுக நினைச்சுரா கூடாதுல , பிள்ளைகளுக்கு சம்மதம்னா எங்களுக்கும் சம்மதம் " என்றவர் மூவரையும் பார்க்க ,பெற்றோர்கள் மற்றும் தமையனையன் அனைவரின் ஆவல் நிறைந்த முகத்தை பார்த்தவர்கள், இப்பொழுது இந்த திருமணம் நின்றாள் விஷ்வா குற்ற உணர்ச்சியில் திருமணமே செய்துகொள்ள மாட்டான் என்பதை அறிந்து , சம்மதம் தெரிவித்தனர்.

முஹூர்த்தம் முடிய , சில நிமிடங்களே உள்ள நிலையில் , துர்வா ,சாரா மற்றும் சாந்தினியின் கழுத்தில் மங்கள நாணை பூட்டினர் சிவா ,ஹரி மற்றும் ஆதி. மண்டபத்தில் இருந்து வெளியேற போன பிறைசூடனை தடுத்த ரிஷி, "என்ன டாட் உங்க மூத்த மகனோட கல்யாணத்த நல்லபடியா முடித்துவிடீர்கள் , வாழ்த்துக்கள் " என்றவனை முறைத்தவாறு ஹேமாவதியுடன் வெளியேறி இருந்தார் .

தொடரும் ......
 
Nice
 
Top