Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் -2

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் -2

கல்லூரியில் தன் அறையில் அமர்ந்து அடுத்த வகுப்பிற்கான குறிப்புகளை எடுத்து கொண்டிருந்த சாராவின் அலைபேசி சினுங்க ,அதை பார்த்தவள் திரையில் தெரிந்த விசா அம்மா என்ற எண்ணை உயிர்ப்பித்தாள் "அம்மா நல்லா இருக்கிங்களா?" என்றவள் சில நல விசாரிப்புகளுக்கு பிறகு "என்ன மா சாந்தினிட ஏதும் பேசணுமா? என்று விசயத்தை யூகித்திருந்தாள்."ஆமா டா சாரா அவளுக்கு ஒரு நல்ல இடம் வந்துருக்கு ,நான் சொன்னா நாய் மாதிரி கொதறிருவா அதான், உன்ட சொல்லி " என்று இழுத்தவரை " ஆமா இவ பெரிய ஜான்சி ராணி நீங்க சொன்னதும் அவள்ட கேட்ருவா , இவளே ஒரு பயந்தாங்கொள்ளி " என்று ஸ்பேங்கேரில் தான் கேட்ட விசயத்திற்கு பதில் கூறினவள் வேறு யாருமில்ல நம்ம துர்வா தான்.

அவள் குரலை உணர்ந்த விசாலாட்சி " துர்வா நீயும் பக்கத்துல தான் இருக்கியா?, அப்ப விஷயம் முடிஞ்சுரும் " துர்வாவை பற்றி தெரியாத அந்த அப்பாவி தாய் " நீங்க தான் சாந்தினிட பேசணும் " என்றவரின் வார்த்தையில் அமைதி காத்தனர் தோழிகள் .

சாரா கண்களில் பீதியுடன் " சரி மா அவள்ட பேசி பாக்குறோம் " இடைமறித்த துர்வா " அவளுக்குலாம் என்ன பயம் , நா கேக்குறேன் மா , மாப்பிள்ளை பத்தி சொல்லுங் அப்போ தன ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து அவளை சம்மதிக்க வைக்கலாம் " என்றவளை சந்தேகமாக பார்த்த சாராவை பார்த்து ஈஈஈ என்று இழித்து வைத்தாள் துர்வா .

துர்வாவை நம்பிய விசாலாட்சி " அதுக்கென்ன டா துர்வா விஷ்வாட்ட சொல்லி உன் போனுக்கு அனுப்பி சொல்றேன் " என்ற பதிலை கேட்ட சாரா வாயை கைகளால் மூடி சிரிக்க , அதை சட்டை செய்யாத துர்வா ' கெட்டது குடி ' என்று எண்ணியவளாய் " நீங்க விஷ்வாட்ட சொல்லி சாரா போனுக்கு அனுப்ப சொல்லுங்க மா , ஏன் போனு ரிப்பேர் " சரளமாக பொய் சொல்லி தப்பினாள்.

விஷ்வா துர்வாவின் அண்ணன் , தங்கையின் திறமையில் பாதியளவு பங்கு அவனுக்கும் இருந்ததால் தான் இத்தனை நாள் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் தங்கையை சமாளிக்க முடிந்தது . அவனிடம் விசாலாட்சி துர்வா மாப்பிள்ளை பத்தி கேட்டா அனுப்பிடுன்னு சொல்ல, உடனே விஷ்வா சுதாரிச்சுருவான்ரமுன் அலசலில் தான் துர்வா சாரா போனுக்கு அனுப்ப சொன்னது. இதை அறியாத விசாலாட்சி " ஐயோ அப்படியா டா, கீழ விழுந்துருச்சா " உடையாத மொபைலுக்கு ஒரு அனுதாபத்தை செலுத்திவிட்டு சென்றார் .

" இப்ப எதுக்கு நீ மாப்பிள்ளை பற்றி கேக்குற ?" என்ற தன் விசாரணையை தொடர்ந்த சாராவிடம் " கேட்டது ஒரு குத்தமா? " என்று அப்பாவியாய் பார்த்த துர்வாவை முறைத்த சாரா " கேட்டது குத்தம் இல்ல, அத என் மொபைலுக்கு அனுப்ப சொன்னியே அது தான் குத்தம் " என்றவளிடம் " விஷ்வா அனுப்புறதா இருந்தா , நீ கேட்டான்னு சொன்னா தான் சந்தேகப்படமாட்டான் , நீ தான் நல்லவள்னு பேர் வாங்கிருக்கியே , அதான்..நான் கேட்டது தெரிஞ்சா எரும சந்தேகப்படுவான் " என்று அசால்ட்டாக விளக்கம் அளித்தவன் அடுத்த வார்த்தை சொல்ல தொடங்கும் முன் அறை கதவு திறந்து உள்ளே நுழைந்தாள் சாந்தினி.

அவளை பார்த்ததும் திரு திருத்த சாராவை பார்த்த சாந்தினி , எதுவோ சரி இல்லை என்று சரியாக யூகித்தாள் , இதை நொடியில் உணர்ந்த துர்வா " சாந்தினி இந்த HOD டோப்பா ஷங்கர் தொல்லை தாங்கலை , 3 rd இயர் csc க்கு ஏன் இன்னும் சிலபஸ் முடிக்கல , ஸ்டுடென்ட்ஸ் மார்க்ல ஏன் முன்னேற்றம் இல்லனு, உயிர வாங்குரன், நானா போய் படிக்க வைக்க முடியும் ?" என்று ஆதங்கப்பட்டவளை பார்த்த சாரா " இதுக்குலாம் பீல் பண்ற ஆளா நீ?, சாந்தினியை சொல்லு இப்பிடி பேசிட்டானேன்னு நைட்லாம் யோசிச்சு, காலேஜ்ல ஸ்டடி வைக்கலாமா வேண்மான் பட்டிமன்றமே நடத்திருப்பா " என்று துர்வாவின் பாதையிலே பேச்சை தொடர , சாந்தினிக்கு சந்தேகம் வழுக்க தொடங்கியது .

தன்னிடம் சொல்லாமல் எங்கே போய் விடுவார்கள் என்ற எண்ணத்தோடு அவளும் அவர்களின் பேச்சில் கலந்துகொண்டாள் .

இரவு உணவு முடித்து சாந்தினி குறிப்பு எடுக்க தொடங்க, துர்வாவும் சாராவும் மாறி மாறி கண் ஜாடை காட்டிக்கொண்டு சாந்தினியின் அருகில் அமர்ந்தனர். இதை எதிர்பார்த்தது போல் தன் புத்தகங்களை மூடிய சாந்தினி, அவர்களின் முகத்தை நேராக பார்த்தாள் .

சாரா மிடறு விழுங்கியவாரே சாந்தினியையும் துர்வாவையும் மாறி மாறி பார்க்க, துர்வா எதோ அனிமேஷன் படம் பார்ப்பது போல், காலை நீட்டி மடக்கி , முதுகுக்கு தலையணை எங்கு வைத்தால் இதமாக இருக்கும் என்று பார்த்து கொண்டிருந்தாள். துர்வாவின் செயலை கண்ட சாரா தலையில் அடித்த கொண்டு 'தன் கையே தனக்குதவி ' என்ற எண்ணத்தில் " சாந்தினி விசா மா இன்னைக்கு போன் பன்னிருந்தாங்க " என்றவளை பார்த்த சாந்தினி விஷயம் புரிபட சாராவை பார்க்க , அந்த பார்வையில் வாய் மூடி கொண்டாள் சாரா. பேச்சு தொடங்கியதும் இவர்களின் பக்கம் கவனத்தை திருப்பிய துர்வா சாந்தினியின் பார்வையில் " என்ன லுக்கு , விசா மா எத்தனை நாளா கேக்குறாங்க, பதில் சொல்ல வேண்டியதுதான , உடனே முடியாதுனு சொல்லாத , ஏன் முடியாது? என்ன காரணம்னு சொல்லு?" என்று ஒரே மூச்சில் கத்தியவளை வாய் மூடாமல் அதிர்ச்சியாக பார்த்தால் சாரா.

அதை கேட்ட சாந்தினி " இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம் " என்று ஒரே பதிலை அழுத்தமாக சொல்லியவளை கண்டுகொள்ளாமல் துர்வா " அவன் அவன் எப்படா மாப்பிளை பார்ப்பாங்க ஜாலியா கல்யாணம் பண்ணலாம்னு இருக்க, எங்களை விட்டு உனக்கு பார்க்காங்க பாரு அவங்களை சொல்லணும் " என்று பொரிந்தவள் கையோடு தனது தாய்க்கு அழைத்து " அம்மா எனக்கு கல்யாணம் பண்ணிவை " என்ற மகளின் குரலில் அதிர்ந்து அலைபேசியை கையில் இருந்து தவறவிட்டார் சிவகாமி.

அதை இந்த பக்கம் உணர்ந்த மகள் " இப்போ என்ன சொல்லிட்டேன் கல்யாணம் பண்ணிவைனு தான ? என்னமோ கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொன்னமாதிரி ஷாக் ஆகுறா " என்றவளை விழி தெறிக்கும் அளவு வெறித்தாள் சாரா.

அவள் கையில் இருந்த அலைபேசியை பறித்த சாந்தினி " மா நான் சாந்தினி பேசறேன் , அவ எதோ உளருறா , நீங்க வைங்க நான் அப்பறமா பேசறேன் " என்றவளை துர்வா " தானும் பண்ணமாட்டா கூட இருக்குறவங்களையும் பண்ண விடமாட்டா போலியே" என்று தீவிரமா குரலில் கூறியவளை கண்டு தன்னை அறியாமல் சிரித்துவிட்டாள் சாந்தினி.

சாந்தினியின் சிரிப்பை பார்த்த சாரா " ஏன் சாந்தினி கல்யாணம் வேண்டாம்னு சொல்ற, உனக்கு யாரவது புடிச்சுருந்தா சொல்லு விஷ்வா அண்ணா மூலமா பேச சொல்லலாம் "என்றவளை பார்த்த சாந்தினி இதழோரம் தோன்றிய சிரிப்பை அடக்கி கொண்டு " ஹேய் லூசு அப்படிலாம் ஒன்னும் இல்ல, நாம மூணு பேருக்கும் ஒண்ணா நடந்தா நல்லா இருக்கும்ன்ற எண்ணம் தான், அதுமில்லமா மாப்பிள்ளை நம்மள மாதிரியே ஒருதர்க் ஒருத்தர் தெரிஞ்சவங்கள இருக்கணும்ன்ற எண்ணம் " அதன் என்றவளை விழி பிதுங்க பார்த்தவள் வேறு யாருமில்ல துர்வா தான்.

" அப்ப ஒரே வீட்ல மூணு அண்ணன் தம்பி இருந்த தான் முடியும், எனக்கு என்னவோ இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம் நடக்கும்ன்ற எண்ணமே இல்ல " சோகமாக சொன்ன துர்வாவை பார்த்து சட்டென சிரிக்க தொடங்கினர் சாந்தினியும் சாராவும்.

" கவலை படாத துர்வா நமக்குன்னு பிறந்தவன் நம்மள தேடி வருவான் .அது வர பொறுத்துக்க " என்ற சாராவிடம் " சரிங்க பாட்டி " என்று கை கூப்பினாள் துர்வா .

அவர்களுக்காக பிறந்தவர்கள் நிஜமாகவே வரப்போவதை அறியாமல் தூங்க சென்றனர் தோழிகள்.

தொடரும் ......
 
மிகவும் அருமையான பதிவு,
ஷரண்யா சத்யநாராயணன் டியர்
 
Last edited:
Top