Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 15

Advertisement

Aathirai

Well-known member
Member
(Episode-15)

அடுத்து வந்த நாட்களில் அஞ்சலியின் மனது சதா அர்ஜுனையே நினைத்துக்கொண்டிருந்தது.. அவனிடம் பேசாமல் இருக்கும் போது தான், அவனிடம் பேச வேண்டும் போல் இருந்தது..

செமஸ்டர் எக்ஸாம் நெருங்கிக்கொண்டிருந்த சமயம் அவளால் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவும் முடியவில்லை.. இதிலிருந்து தப்பிக்க ஒரு முடிவெடுத்தாள்.. மேலும், இதைப்பற்றி அவள் தோழிகளிடம் கூட கூறவில்லை..

அடுத்த நாள், அந்த செமஸ்டரின் கடைசி நாள்.. அதனால், அனைவரும் நண்பர்களுடன் மாலை வெளியே செல்ல திட்டமிட்டனர்... ஆனால், அஞ்சலி தனக்கு தலை வலியாய் இருக்கிறது என்று பொய் சொல்லி அனைவரையும் போய் வரும்படி சொன்னாள்.. அவர்களும் அவளை தொந்தரவு செய்ய மனமில்லாமல் சென்றனர்.. ஆனால், மதுவுக்கு அஞ்சலி மேல் சற்று சந்தேகமாக இருந்த்து.. இருந்தாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டு சென்றாள்..

அவர்கள் சென்றவுடன், அஞ்சலி அர்ஜூனுக்கு போன் செய்தாள்..

“ஹலோ.. சொல்லு அஞ்சலி.. என்ன ஒரு அதிசயம் ரொம்ப நாள் கழிச்சு கால் பண்ற..” என்றான் கிண்டலாக..

“இல்ல.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற சில்ரன்ஸ் பார்க்குக்கு வர முடியுமா??” என்றாள் தயக்கத்துடன்..

“சில்ரன்ஸ் பார்க்குக்கா..?? ஏன் அங்க போய் விளையாடிட்டே பேசலாம்னா..??” என்று கிண்டலடித்தான் அர்ஜூன்..

“ஹூம்ம்.. என்ன, கிண்டலா?? எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான்..” என்றாள் அஞ்சலி வெறுப்புடன்..

அப்போது தான் அன்று ரூபா ஐஸ்கிரீம் ஷாப்பிற்கு வந்தது நினைவுக்கு வந்தது அர்ஜூனுக்கு.. அதனால் தான் அங்கே வர சொல்கிறாள் என்று புரிந்து கொண்டான்..

“சரி மா.. நான் இன்னும் ஹாஃப் என் அவர்ல வந்திடறேன்..” என்று போனை வைத்தான் அர்ஜூன்..

அடுத்த அரைமணி நேரத்தில் அவள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சில்ரன்ஸ் பார்க்கிற்கு வந்து சேர்ந்தான் அர்ஜூன்.. அதிக கூட்டம் இல்லை என்றாலும், ஆங்காங்கே ஒரு சிலரைக் காண முடிந்தது.. குழந்தைகளும் சிலர் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தனர்..

அஞ்சலியைத் தேடினான் அர்ஜூன்.. சுற்றும், முற்றும் பார்த்தவன் ஒரு பெரிய மரத்தடி நிழலில் தன்னை மறந்து கனவு கண்டுகொண்டிருந்தவளைக் கண்டுகொண்டான்.. அங்கிருந்து அவளை ரசித்துக்கொண்டே அவளது அருகில் சென்றான்..

மெய் மறந்து இருந்தவள் தனது அருகில் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பினாள்.. அவனைக் கண்டதும் வேறு வழியில்லாமல் புன்னகைத்தாள்..

“ஹும்ம்.. மேடம் ஏதோ கனவுல இருந்தீங்களா?? ரொம்ப கஷ்டப்பட்டு ஸ்மைல் பண்ற அஞ்சலி.. பரவால்ல.. நீ என் கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆச்சு.. இன்னைக்கு அதிசயமா பேசணும்னு கூப்ட்டிருக்க.. என்னன்னு சொல்லு மா..”

“அது வந்து..” என்று ஆரம்பத்திலேயே தடுமாறினாள் அஞ்சலி..

“எதுக்கு இவ்ளோ தயக்கம்.. எதுவானாலும் பரவால்ல.. தைரியமா சொல்லு அஞ்சலி..” என்றான் அர்ஜூன்..

“ஸாரி அர்ஜுன்.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரில.. இப்பல்லாம் என் மைன்ட் என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.. ஏதாவது ஒண்ணு யோசிச்சுட்டே இருக்கேன்.. சரியா படிக்க முடியல.. நான்... நான்..” என்று தயங்கினாள்..

“ஏன், என்னாச்சு அஞ்சலி.. எனி ப்ராப்ளம்..??” என்றான் அர்ஜுன் அக்கறையுடன்..

“இல்ல.. நான் பிரான்க்காவே சொல்லிடறேன் அர்ஜுன்.. நீ தான் என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ற.. உன்னப் பத்தி தினமும் யோசிக்காம இருக்க முடியல.. அன்னைக்கு ரூபா சொன்னதுல இருந்து, உன்கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ணேன்.. ஆனா, அதுக்கப்றம் தான் உன்ன அதிகமா நினைக்கத் தோணுது.. எனக்கு பயமா இருக்கு அர்ஜுன்.. எங்கே, உன்ன லவ் பண்ணிடுவேனோன்னு..”

அர்ஜுன் ஒரு நிமிடம் அதிர்ச்சியானான்.. அஞ்சலி இவ்வளவு எதார்த்தமாக தன் காதலை சொல்வாள் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.. உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.. ஆனால், அஞ்சலியோ...

“வேண்டாம் அர்ஜுன்.. எனக்கு இந்த லவ் கண்டிப்பா ஒத்தே வராது.. எங்க அப்பாக்கு இதெல்லாம் தெரிஞ்சா என்னோட ஸ்டடீஸ் அவ்ளோதான்.. உடனே யாரையாவது பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுடுவார்.. சோ, நாம அதிகமா எதுவும் பேசிக்க வேண்டாம்.. முக்கியமா, தனியா பேசறது இதுவே லாஸ்டா இருக்கட்டும்... பிரண்ட்ஸ் கூட இருக்கும் போது நாம நார்மலா இருப்போம், பேசுவோம்.. அதே போதும்.. நீ இத புரிஞ்சு நடந்துக்குவேன்னு நான் நம்பறேன்.. ஏதாவது தப்பா பேசிருந்தா ஸாரி..” என்று நச்சென்று கூறினாள்..

இவள் இப்படி கூறிய பிறகு, தான் வேறு என்ன சொல்ல முடியும் என்று நினைத்தவாறு தலையை மட்டும் ஆட்டினான் அர்ஜுன்.. கிட்டத்தட்ட தன் காதலை சொன்னவள், அடுத்த கணமே இப்படி ஒன்றையும் கூறுவாள் என அவன் எதிர்பார்க்கவில்லை தான்.. கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது அவனுக்கு..

“சரி அஞ்சலி.. நீ ஒண்ணும் பயப்படாத.. இது இந்த ஏஜ்ல வர ப்ராப்ளம் தான்.. அதுல சரி, தப்பு எதுன்னு நீ தான் யோசிச்சு முடிவெடுக்கணும்.. பரவால்ல.. நீ சொன்ன மாதிரி நான் புரிஞ்சு நடந்துக்கறேன்..” என்றான் அர்ஜூன் மனதே இல்லாமல்..

அவன் அப்படிக் கூறியதும் என்னவோ போல் ஆனது அவளுக்கு.. அவன் எதிர்பார்ப்பை தான் ஏதும் கலைத்துவிட்டோமா என உணர்ந்தாள்.. மேலும், அவன் புரிந்துகொண்டது அவளுக்கு இன்னும் அவன் மேல் இருக்கும் மரியாதையை அதிகமாக உயர்த்தியது.. ஆனாலும், அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு ஏதோ அவன் சொல்ல வருவதைப் போல் தோன்றியது..

சிறிது நேரத்திலெல்லாம் கிளம்பி விட்டார்கள்.. அஞ்சலி இப்படி எதையோ தினமும் யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்ட மது பொறுமை இழந்தவளாய் அன்று இரவு அஞ்சலியை தனியே அழைத்துக் கேட்டாள்...

“சொல்லு அஞ்சலி.. உனக்கு என்ன ப்ராப்ளம்..?? ஏன் இப்படி இருக்க..??”

“நான் நல்லா தான் இருக்கேன் மது.. எந்த பிராப்ளமும் இல்ல..”

“பொய் சொல்லாத அஞ்சலி.. உன்னப் பத்தி எனக்குத் தெரியும்.. இப்போ கொஞ்ச நாளா உன்ன வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன்.. முதல் மாதிரி இப்பல்லாம் நீ எதையுமே என் கிட்ட ஷேர் பண்ணிக்கறதே இல்ல.. இப்போ கூட எங்கயோ வெளில போயிட்டு வர, வரும் போது எதையோ யோசிச்சுட்டே வர.. என்னதான் நடக்குது.. வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்..??” என்றாள் மது..

அவள் இவ்வளவு தூரம் கேட்டதும், அவளால் எதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. அனைத்தையும் சொல்லி முடித்தாள்..

“ஹும்ம்.. அடிப்பாவி.. இவ்வளவு நடந்திருக்கு.. என் கிட்ட ஒரு வார்த்த சொன்னியா.?? பிருந்தாவன் கார்டன்ல ஆரம்பிச்சது, இப்போ வரைக்கும் கன்டின்யூ ஆகுதா.. கிட்டத்தட்ட இப்போ நீ அர்ஜுன் கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டு வந்திருக்க அஞ்சலி..” என்றாள் மது கிண்டலாக அவளைப் பார்த்து..

“ஹே.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.. நான் ஜஸ்ட், அந்த மாதிரி நடக்காம இருக்கணும்னா என்ன பண்ணணுமோ அத தான் அர்ஜுன் கிட்ட பேசிட்டு வந்திருக்கேன்.. கண்டிப்பா அவன் புரிஞ்சிருப்பான்...”

“ஹும்ம்.. ஆமாமா, கண்டிப்பா நீ அவன லவ் பண்றேன்னு புரிஞ்சிருப்பான்.. ஆனா, நீ இப்படி சொன்னதுக்கு அப்பறம் வேற என்ன சொல்ல முடியும்னு நெனச்சு சரின்னு தலையாட்டிருப்பான்...” என்றாள் மது...

என்ன இவள், அனைத்தையும் நேரில் பார்த்ததைப் போல் பேசுகிறாளே என்று நினைத்தாள் அஞ்சலி.. மது சொன்னதைப் போல் அர்ஜுன் தலையை மட்டும் தானே ஆட்டினான்.. அப்போது அவள் கூறுவது உண்மையா என யோசித்தாள் அஞ்சலி.. மது அவளை உலுக்கினாள்...

“அஞ்சலி.. நிஜமா நான் ஒண்ணு சொல்லட்டுமா... உனக்கு அர்ஜுன புடிச்சிருந்தா அவன தாராளமா லவ் பண்ணு.. ஏன்னா, அவன் ரொம்ப நல்ல டைப்.. எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் எந்த பொண்ணையும் தப்பா பார்த்ததோ, பேசினதோ கிடையாது.. ரொம்ப டீசன்டா நடந்துக்கறான், நல்ல ஹார்ட் வொர்க் பண்றான், அட் த சேம் எல்லாருக்கும் எவ்வளவோ ஹெல்ப் பண்றான்.. ஏன், பிரபு அண்ணா விஷயத்துல கூட பாரு.. யாரு இப்படி இருக்கா..?? சொல்லு...”

“ஹே என்ன மது.. நீயே இப்படி சொல்ற..?” என ஆச்சர்யப்பட்டாள் அஞ்சலி...

“ஆமா, இந்த மாதிரி பையன் நாம எங்க தேடினாலும் கிடைக்க மாட்டான்.. சோ, சான்ஸ் கிடைக்கும் போது அத நாம கரெக்டா யூஸ் பண்ணிக்கணும்.. நீ தான் சரியான முடிவெடுக்கணும்.. என்ன.. நான் சொல்றது உனக்குப் புரியும்ன்னு நெனைக்கறேன்..” என்றாள் மது..

அதே வார்த்தைகள்.. ஆம், அர்ஜூன் கூறிய அதே வார்த்தகளைத் தான் மதுவும் கூறினாள்.. அவள் எதைக் கூறினாலும் அது சரியாகத்தான் இருக்கும் என நம்புவாள் அஞ்சலி.. இதிலும் ஏதோ ஒரு உண்மை இருப்பதாய் உணர்ந்தாள்..

“நிறைய யோசி.. ஆனா, சான்ஸ் ஒரு டைம் தான் வரும்.. அதையும் யோசிச்சுக்கோ.. அட்லீஸ்ட் நெக்ஸ்ட் செமஸ்டர்ல உன்னோட கரெக்டான லவ்வ அவன் கிட்ட சொல்லிடு.. சரியா..??” என்றாள் மது தீர்க்கமாக...

“ம்ம்...” என்று தலையை மட்டும் ஆட்டினாள் அஞ்சலி..

அப்போதைக்கு அதைப் பற்றி யோசிப்பதை விட்டு விட்டு, அடுத்து படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்தாள்.. செமஸ்டரும் வந்தது.. அனைத்து எக்ஸாமும் முடிவடைந்த நிலையில், தோழிகள் இரண்டொரு நாட்கள் கழித்து ஊருக்குச் செல்ல திட்டமிட்டு அங்கேயே இருந்தனர்..

அன்று அஞ்சலிக்கு திடீரென போன் வர, விஷயத்தைக் கேள்விப்பட்டவள் அப்பொழுதே தலை தெறிக்க ஓடினாள்.. ஆம், அவள் அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு ஹாஸ்பிட்டலில் இருப்பதாய் தகவல் வர அவள் உடனே கிளம்பினாள்.. தோழிகளுக்கு சற்று வருத்தமாய் தான் இருந்தது.. அவளைத் தேற்றி அனுப்பினர்..


விஷயம் கேள்விப்பட்டு அர்ஜுனும் சற்று வருத்தப்பட்டான்.. இப்போதைக்கு எதையும் கேட்க வேண்டாம் என விட்டு விட்டான்.. ஆனால், இதற்க்குப் பிறகு எல்லாமே தலைகீழாய் மாறும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை..
 
Top