Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 14

Advertisement

Aathirai

Well-known member
Member
(Episode-14)

அஞ்சலிக்கு, ரூபா பேசியதில் மிகவும் தர்மசங்கடமாகி விட்டது.. அர்ஜுனிடம் எதுவுமே சொல்லாமல் சட்டென்று கிளம்பியது கூட அதனால் தான்.. என்ன பெண்ணிவள், இவ்வளவு வருடம் தன்னுடன் தோழியாகப் பழகியும் எப்படி இவளால் தன்னைப் பற்றி இப்படிப் பேச முடிந்தது என்று எண்ணி கோபம் கொண்டாள்.. அதிலிருந்து அவளிடம் பேசவே கூடாது என எண்ணினாள்..

அவள் வீட்டிற்கு வந்ததும், யாரிடமும் பேசவே இல்லை.. இதற்கும் மது மற்றும் ஷாலினியிடம் ரூபா சொல்லி இருப்பாள் என அவளுக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால், அவர்கள் இருவரும் அவளைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்ததால் அஞ்சலியை எதுவும் கேட்கவில்லை.. மாறாக எப்பொழுதும் போலவே அவளிடம் பேசினர்.. இதில், ரூபாவுக்குத் தான் பெரும் ஏமாற்றம்..

அடுத்து வந்த நாட்களில், அஞ்சலி அர்ஜுனிடமும் சரியாகப் பேசவில்லை.. அவன் ஏதேனும் கேட்டால், அதற்க்கு மட்டும் பதிலை சொல்லிவிட்டு சென்றுவிடுவாள்.. அவ்வளவு தான்.. அர்ஜுன் தான் பாவம், முகமே வாடிப் போய்விடும்.. இது எல்லாவற்றையும் மது கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.. இருப்பினும் தன் தோழி சொல்ல வேண்டுமே எனக் காத்திருந்தாள்..

அன்று மாலை கல்லூரி விட்டு வந்த சிறிது நேரத்தில் மதுவின் செல்போன் மணி அடிக்க என்னவென்று பேசச் சென்றாள்.. பேசி விட்டு வந்த சிறிது நேரத்தில் அவள் முகத்தில் பதட்டம் அதிகமாக இருந்தது... அஞ்சலி கேட்டாள்...

“ஹே.. என்னாச்சு மது..?? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க.?? சொல்லு..”

“பிரபு அண்ணாவ போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம் அஞ்சலி..”

“ஹே.. எந்தா மது... ஆ சேட்டானா..?? எந்தா ப்ராப்ளமடி.. போலீஸ் எதுக்கு அரெஸ்ட் செய்து..??” என்றாள் ஷாலினி..

“ஹும்ம்.. அந்த அனிதா கிட்ட இந்த அண்ணா தப்பா நடக்க ட்ரைப் பண்ணாங்களாம்.. அதனால, அவங்க அப்பா கம்ப்ளைன்ட் கொடுத்து அரெஸ்ட் பண்ண வெச்சிருக்கார்... கண்டிப்பா இதுல ஏதோ சதி இருக்கு.. பிரபு அண்ணாவப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.. இந்த அனிதா தான் ஏதோ பண்ணிருக்கா.. கடவுளே அந்த அண்ணாவ எப்படியாவது காப்பாத்திடு..” வேண்டினாள் மது..

“ஹே.. கண்டிப்பா பிரபு அண்ணா எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டங்க மது.. அவருக்கு ஒண்ணும் ஆகாது.. நீ வொர்ரி பண்ணிக்காதே..” என்றாள் அஞ்சலி..

“ஹும்ம்... யாருக்கு தெரியும்.. இப்பல்லாம் யார நம்பறதுன்னே தெரியல.. ஒரு வேளை அவங்களே தப்ப பண்ணிருந்தாலும், பண்ணிருக்கலாம்..” என்று ஜாடையாக பேசினாள் ரூபா.. அஞ்சலி அவள் பேசுவதைப் புரிந்து கொண்டவளாக அவளை முறைத்தாள்...

“வாய மூடு ரூபா.. உனக்கென்ன தெரியும் அந்த அண்ணாவப் பத்தி..?? தேவையில்லாம பேசாத.. இப்பல்லாம் நீ ரொம்ப மாறிட்ட.. அதான், இப்படியெல்லாம் பேசற..” என்று ரூபாவின் வாயை அடக்கினாள் மது..

ரூபா எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள்.. மது அவள் தந்தைக்கு போன் செய்து விஷயத்தைக் கூறினாள்.. அவர் உடனே கீழ் வீட்டில் இருக்கும் அவர் நண்பன் வெங்கடேசனை தொடர்பு கொண்டு அவரால் முடிந்த உதவியைச் செய்யுமாறு கூறினார்.. அவர் விஷயத்தைக் கேள்விப்பட்டு நேரே மதுவிடம் விசாரிக்க வந்தார்..

“என்னம்மா.. மது.. இப்போதான் உங்க அப்பா போன் பண்ணி விஷயத்த சொன்னான்.. என்ன பிரச்சினை..? யார் அந்தப் பையன்..?” என்று அவளிடம் கேட்க.. அவள் நடந்ததைக் கூறினாள்..

“ஓ.. அப்படியா.. எந்த ஸ்டேஷன்னு உனக்குத் தெரியுமா??”

“எக்மோர் போலீஸ் ஸ்டேஷன்னு சொன்னாங்க அங்கிள்..” என்றாள் மது பதட்டம் குறையாமல்..

“ஓ.. எனக்கு தேனாம்பேட்டை எஸ்.ஐ நல்ல பழக்கம்.. என் ஃப்ரெண்டு தான்.. நான் எதுக்கும் அவர்கிட்ட பேசி ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு கேட்கறேன்..” என்றவர் அவள் முன்னலேயே அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்..

பேசி முடித்து விட்டு வந்தவர்.. “ஆங்க்.. பேசிட்டேன் மா.. அவர் எக்மோர் போலீஸ் ஸ்டேஷன கான்டாக்ட் பண்ணி பேசி விசாரிக்கறேன்னு சொல்லிருக்கார்..” என்றார்..

“ஓகே.. அங்கிள்.. எனக்கு அந்த அண்ணாவ பார்க்கணும் போல இருக்கு.. பாவம் அந்த அண்ணா.. அங்கே என்ன பண்றாங்களோ..??” என்று சொல்லி அழுதே விட்டாள் மது..

மதுவின் இந்த குணம் அவரை மெய்சிலிர்க்க வைத்தது… யாரோ ஒருவருக்காகவே இவள் இவ்வளவு அக்கறை கொள்கிறாள் என்றால், தனக்கானவர்கள் மீது இன்னும் எவ்வளவு அக்கறை கொள்வாள் என்றே தோன்றியது அவருக்கு..

“ஒண்ணும் பிரச்சினை இல்ல மது.. நான் அவ்ர்கிட்ட பேசிருக்கேன் இல்ல.. அவர் பாத்துக்குவார்.. இந்த நேரத்துல நீ அந்த பையன போய் பாக்கறதுங்கறது அவ்வளவு சரியில்லை.. நாம நாளைக்கு காலைல போய் பார்க்கலாம்.. நானும் உன் கூட வரேன்.. சரியா…” என்று சமாதானம் சொன்னார் அவர்..

அவளும் அரை மனதுடன் தலையை ஆட்டி விட்டு சென்றாள்.. அவள் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.. அவள் சோகமாக இருப்பதைப் பார்த்த அஞ்சலியும், ஷாலினியும் அவளை சமாதனப்படுத்தினர்.. ரூபா எப்பவும் போலவே அவள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்..

அன்று இரவு மது சரியாகத் தூங்கவே இல்லை.. தன் கூடப் பிறந்த சகோதரனாக அவள் பிரபுவை நினைத்தாள்.. அவளால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்தும் பிரபுவை பார்க்கவோ, பேசவோ முடியவில்லை.. எப்பொழுது விடியும் என்று இருந்தது..

அடுத்த நாள் காலை அவளுக்கு போனில் அவளுக்குத் தெரிந்த சீனியர் தொடர்பு கொண்டு பேசினான்.. அடுத்த நிமிடமே அடித்துப் பிடித்து கல்லூரி சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. பிரபு கல்லூரியில் தான் இருந்தான்.. மது, தோழிகளை அழைத்துக்கொண்டு அவனிடம் ஓடினாள்.. அங்கே வளாகத்தில் பிரபு, அர்ஜுனிடம் பேசிக்கொண்டிருந்தான்.. மதுவைப் பார்த்ததும் சிரித்தான்..

“பிரபு அண்ணா... என்னாச்சுனா.? போலீஸ் உங்கள அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னு சொன்னாங்க.. இத கேள்விப்பட்டதும் எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல.. அவங்க உங்கள ஏதும் பண்ணல இல்ல.?? நேத்து நைட் நானும், உங்களப் பாக்க எவ்வளவோ ட்ரை பண்ணேன்.. நிஜமா என்னால ஒண்ணுமே பண்ண முடில னா...” என்று மூச்சு வாங்கக் கூறினாள் மது...

“ஹும்ம்.. இல்ல மது.. நான் நேத்து நைட்டே ரிலீஸ் ஆகி ஹாஸ்டல் போய்டேன்..” என்றான் பிரபு அர்ஜுனைப் பார்த்து சிரித்தபடி...

“என்ன அண்ணா சொல்றீங்க.? எதுக்கு போலீஸ் உங்கள அரெஸ்ட் பண்ணனும், எதுக்கு ரிலீஸ் பண்ணனும்..? என்னதான் ஆச்சு விவரமா சொல்லுங்க..?” என்றாள் மது மீண்டும்..

அர்ஜூன் அவளிடம் விவரித்தான் “நேத்து ஈவினிங் கிளாஸ் முடிஞ்சு நானும், ரவியும், ஜெராக்ஸ் பண்ண வேண்டிய புக்க, ஹாஸ்டல்ல இருக்கற பையன் கிட்ட திருப்பிக் கொடுக்கலாம்னு போயிட்டு இருந்தோம்.. அப்போ ஒரு பொண்ணோட சத்தம் கேட்டு அந்தப் பக்கம் போனோம்.. யாருமே இல்லாத கிளாஸ்ல இந்த அண்ணாவும், அந்தப் பொண்ணும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க.. எனக்கு ஏற்கனவே இந்த அண்ணாவ நீ இன்ரோடியூஸ் பண்ணது ஞாபகம் இருந்துச்சு.. ரொம்ப நல்ல டைப்ன்னு தெரியும்.. ஆனா, அந்தப் பொண்ணுதான் கன்னா,பின்னான்னு கத்திகிட்டு துப்பட்டாவ கிழிச்சுட்டு வேணும்னே பண்ற மாதிரி தோணுச்சு.. நான், நிலைமை சீரியஸ் ஆகப் போகுதோன்னு அங்க நடக்கறத அப்படியே ரவி புதுசா வாங்குன கேமரா போன்ல ரெக்கார்ட் பண்ணிட்டேன்.. அத நம்ம பிரின்சிபால் கிட்ட காட்டலாம்னு அவர் வீட்டுக்கே போயிட்டேன்.. அதுக்குள்ளே நம்ம அண்ணாவ போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சு.. அப்பறம், பிரின்சிபால்ல கூட்டிட்டுப் போய், போலீஸ்க்கு உண்மைய சொல்லி ரிலீஸ் பண்ண வைச்சோம்..” என ஒன்று விடாமல் கூறினான்..

“அப்பா தேங்க் காட்.. இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு.. எனக்கு தெரியும் அண்ணா.. அவ தான் ஏதோன்னு பண்ணி உங்கள மாட்டி விட்டிருப்பான்னு.. ஏதோ காட் கிரேஸ்.. அர்ஜுன் வந்து உங்களைக் காப்பாத்திட்டான்.. ரொம்ப தேங்க்ஸ் அர்ஜுன்..” என்றாள் மது அர்ஜுனிடம் கையைப் பிடித்து..

“சொல்லப் போனா, அந்த அனிதாவ தான் அரெஸ்ட் பண்ணனும்.. தப்பு பண்ண அவளுக்கு எந்த பனிஷ்மென்ட்டும் இல்லையா..??” என்றாள் அஞ்சலி..

“ஹும்ம்.. அதான், அவள காலேஜ விட்டு டிஸ்மிஸ் பண்ணியாச்சே.. இனி அவ லைப்ஃபே போச்சு..” என்றான் பிரபு..

“விடுங்க சேட்டா.. அவளுக்கு அது தான் ஒரு நல்ல பனிஷ்மென்ட்..” என்றாள் ஷாலினி..

“ஹும்ம்.. ஆல் கிரெடிட்ஸ் கோஸ் டூ அர்ஜுன்..” என்றான் பிரபு..

“ஆமா.. கண்டிப்பா அர்ஜுன்.. நீ மட்டும் ஹெல்ப் பண்ணலன்னா நிஜமா என்னால யோசிக்கவே முடியல.. என்னோட அண்ணாவ நீ தான் காப்பாத்திருக்க.. உனக்காக எந்த உதவின்னாலும், நான் கண்டிப்பா செய்வேன்..” என்றாள் மது கண்கள் கலங்க.. பிரபுவே திகைத்தான் மதுவின் அன்பை நினைத்து..

“ஹே.. மது இதிலென்ன இருக்கு.. நீ இவ்ளோ பீல் பண்ற.. ஜஸ்ட் ஹாப்பி மா.. உன்னோட அண்ணாக்கு இப்போ ப்ரீடம் கிடைச்சிருச்சு, ஒரு பொண்ணு கிட்ட இருந்து.. லெட்ஸ் செலிபரேட் இட்..” என்று அர்ஜுன் சொன்னதும் அனைவரும் கோரஸாக சிரித்தார்கள்..


அஞ்சலி எந்த அளவிற்கு அர்ஜுனை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று நினைத்தாளோ, அந்த அளவிற்கு அவள் மனதில் அர்ஜுன் மிகவும் நெருக்கமாகிவிட்டான்.. இதோ இந்த விஷயத்திலும் கூட... அதை ஏனோ அவளால் தடுக்க முடியவில்லை...
 
கதை interesting a கொண்டுபோறீங்க....எந்த வித குழப்பமில்லாமல்...
error free writing... ?
வாழ்த்துக்கள் ஆதிரா....:)
 
கதை interesting a கொண்டுபோறீங்க....எந்த வித குழப்பமில்லாமல்...
error free writing... ?
வாழ்த்துக்கள் ஆதிரா....:)

ரொம்ப நன்றி தோழி..??
 
Top