Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆகாயம் தீயாகவே என் பார்வையில்.

Advertisement

Selvipandiyan

Active member
Member
உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே.
அரசியல் கதைக்களம் மாதிரி இருக்குன்னு நினைச்சேன்.அதில் சினிமா நடிகன் ,மருத்துவர் இப்படி எல்லாம் கலந்து எழுதியிருக்காங்க.
ஆதித்யவர்மா சினிமா நடிகன்.அவன் தம்பி விக்ரம்,அவனும் துவாரகியும் நெருங்கிய நண்பர்கள்.மருத்துவர்கள்.துவாரகி ஆதியை காதலிப்பாள்.அவனின் ஒரு படம் துவாரகியின் அப்பாவின் அரசியலை சீண்டும் விதமாய் இருக்க இருவருக்கும் மோதல் ஆரம்பிக்கிறது.
துவாரகியின் மருத்துவமனையில் ஆதியின் அம்மா மருத்துவராக இருப்பார்.விக்ரமின் மரணம் நாம் சற்றும் எதிர்பாராதது.அவன் மரணம் எப்படி நடந்தது என்பது தெரிந்து ஆதி பழி வாங்க முயல்வான்.துவாரகியும் தன் பங்குக்கு பழி வாங்க முயற்சிப்பாள்.அது எப்படின்னு கதையில் பாருங்க.நாம் எதிர்பாராத திருப்பங்கள்!
துவாரகியின் குற்ற உணர்ச்சியும் ஆதியின் கோபமும் கதையில் விறு விறுப்பை கூட்டுகிறது.கடைசி அத்தியாயங்கள் அதிரடி திருப்பங்கள்!எனக்கு விக்ரம் பாத்திரம் தான் மனதில் நிற்கிறது.
 
Top