Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?8?

Advertisement

Rudhra Vikram

Member
Member
" இங்க தானே போறோம்... சைக்கிள்லையே போலாமா ஸ்கூபி... "

சைக்கிளின் பக்கம் சென்றவனை " இது என்ன புதுசா... " என்பதைப் போல விசித்திரமாக பார்த்தது ஸ்கூபி (அதாவது நம்ம ஜாக்கி)...

எப்போதும் போல வழக்கமாக ராம் குமாரின் வீட்டிற்கு சென்றவன் தன் சைக்கிளை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு அவன் பின்னோடே வந்த ஸ்கூபியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு பின்னால் இருந்த தோட்டத்திற்கு சென்றாள்.

அவன் எதிரப்பார்த்தது போலவே அங்கு ஏற்கனவே ஆஜர் ஆகியிருந்த இருவரையும் பார்த்து ஒரு வசீகர புன்னகையுடன் வந்தான்.

ஒரு குட்டிப் பாப்பாவுடன் கொஞ்சி பேசியபடி இருந்த ரோஷினியின் தலையில் தட்டிவிட்டு அமர்ந்தான்.

அவனை முறைக்கிறேன் என்ற பெயரில் ஏதோ செய்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டு போக... அந்த குட்டி தேவதை வித்தார்த் அருகில் வர... அவளை மடியில் கிடத்தினான்.

" ஹோய்.. செல்லக் குட்டி... மாமாவ விட்டுட்டு போயும் போயும் அவ கூடவா விளையாடுவ.. " என்று பேச அவளோ சைகையாலே " ஏன் தாமதம்? " என வினவினாள்.

" அது ஒன்றுமில்லை டா பாப்பு... மாமா சைக்கிள்ல வந்தேனா அதான் லேட்.. "

அந்த சொற்கள் ரோஷினியின் செவியை எட்டியதும் கழுத்தைத் திருப்பி அவனைப் பார்க்க... அவனோ புருவத்தை உயர்த்தி என்னவென கேட்டான்.

" இல்ல... நீ ஸ்கூலுக்கு போறப்ப நான் சொன்னா கூட சைக்கிள் யூஸ் பண்ணதில்ல... அதான் ஒரு தங்கையாக அண்ணனின் மீது சிறிது சந்தேகம் வழு பெற்றிருக்கிறது... " என இழுக்க... அப்போது தான் அவனை ராம்குமார் கவனித்தார் போலும்...

"அடடே.. வாங்க தம்பி... " என்றவாறே உள்ளே அழைக்க....

" சார்.... எனக்கு சூப்பரா ஒரு குட்டி டிஃபன் கிடைக்குமா...? " என்று அவரைப் பார்க்க... அவரும் புன்னகைத்தவாறே உள்ளே சென்றார்.

தன் கண்களில் இருந்து அவர் மறைவதற்காய் காத்திருந்தவள் மூச்சு வாங்க ஓடி வந்து நின்றாள்...

" டேய்.. அண்ணா... ப்ளீஸ் டா... அவன்கிட்ட ஒரு தடவை பேசேன் டா... உன் மேல மரியாதை வச்சிருக்குறதால தான் அவன் என்கிட்ட முகம் குடுத்து கூட பேச மாட்றான்.. " ரோஷினி அவனை உலுக்க...

" அட.. இரு.. இரு... நீ யார சொல்ற... யார்ட பேசனும்.. " ஒன்றும் அறியாதவன் போல வினவியவனை கொன்று போட்டால் என்ன என்றிருந்தது அவளுக்கு.

" விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பனானு கேக்குற மாதிரி இருக்குடா... நேத்து தானே டா சொன்னே... "

" நேத்து என்ன சொன்ன? "
அவன் மீண்டும் வினவ அதில் கோபம் தலைக்கேற அவனை கீழே தள்ளி விட்டு அவன் மேலே ஏறி அமர்ந்தாள்...

" என்ன சொன்னேனா... மவனே அண்ணானு கூட பாக்க மாட்டேன்... ஓகே சொல்லு டா... " என அருகில் இருந்த வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூந்தொட்டியை எடுத்தவள் அந்த பூக்களை பத்திரமாக அங்கேயே வைத்து விட்டு.... திருப்பினாள்...

" ஓகே சொல்றியா... இல்ல இத மண்டைல போட்டு உடைச்சிட்டவா... "

அவள் ஆக்சனில் இறங்கி விட... பேய் அறைந்ததார் போல அவளைப் பார்த்தான் வித்தார்த்.

" என்னடா முழிக்கிற... ஓகே சொல்லு " என்றவாறே அந்த ஜாடியை இன்னும் தூக்க...

" அடியேய்.. ஓகே... ஓகே.. நான் பேசுறேன்... முதல்ல எழுந்திரு...ஜிம் பாடினாலும் யானைய தாங்குற அளவு சக்தி எனக்கு இல்ல.. " என்க அதில் கோபமுற்று
'டப்' என அந்த ஜாடியை வைத்து விட்டு எழுந்தாள் ரோஷினி, வித்தார்த்தின் தங்கை.

" அப்பா... ஏன்டி... " என மூச்சு வாங்க எழுந்தவன் அவளை அடிக்க வர... அப்போதென்று வந்தார் ராம்குமார்.

" நீ மத்தவங்களுக்கு ஆக்சன் ஃபில்ம் காட்னா நான் உன்கிட்டையே காட்டுவேன்... போடா... " என்று விட்டு செல்ல...

" ச்சே... ஒரு அண்ணன்ற மரியாதை இருக்கா... அது இருக்காது தான்... அட்லீஸ்ட் இந்த ஏரியா சப்- இன்ஸ்பெக்டர்ன்ற மரியாதை இருக்கா.. " என்று அவளை மனதிற்குள்ளாகவே அர்ச்சித்தான் வித்தார்த்.

" தம்பி டிஃபன் ரெடி பா... " என்றவாறே வர...

" நான் இப்ப தான் ஃபுல் மீல்ஸே சாப்டேன் ராம் சார்... " என சலிப்பு கூறி அவரோ குழப்பத்தில்...

" என்னபா சொல்ற... அதுங்குள்ளவா... எப்படி... " என அப்பாவியாக கேட்டார்....

உதட்டைக் கடித்துக் கொண்டு சிரிப்பதைப் போல அழுது கொண்டே

" அது இந்த வித்தார்தால தான் முடியும் சார்" என்க..

" தம்பி... ஆர் யூ ஓகே? சாப்பிடலாமா... டைம் ஆச்சு... " என்றவாறே உள்ளே சென்றனர் இருவரும்....

ஸ்கூபி ஏற்கனவே பாதி உணவை சாப்பிட்டிருந்தது...

"அதானே எவன் எப்படியோ போறான்... நமக்கு சாப்பாடு முக்கியம்.. இல்ல
ஸ்கூபி... " என ஒன்றும் அறியாத ஸ்கூபியை முறைத்து விட்டு சாப்பிட அமர்ந்தான்.

வழக்கம் போல அந்த குட்டிப்பாப்பாவிற்கு ஊட்டி விட்டவாறே சாப்பிட்டிருந்தான் வித்தார்த்....

" பை டா ரூஹி குட்டி... " என வித்தார்த், ராம் இருவரும் கை அசைத்துவிட்டு செல்ல
ரோஷினி ரூஹியுடன் தன் வீட்டிற்கு புறப்பட ஸ்கூபி அவர்களுடன் சென்றது.
****

நீண்டு வளர்ந்திருந்த செடியின் இலைகளை பியத்து ஷூ லேசைக் கட்டிக் கொண்டிருந்த கார்த்தி மீது எறிந்த வண்ணம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்
ஏஞ்சல்.

கார்த்தி தன் தலையில் கொட்டிக் கிடந்த இலைகளை தட்டி விட்டு விட்டு மறுமுறை தலை வாரினான்.

" ஹே லூசு.... என்னாச்சு.. "
என அவளை அழைக்க அப்போதும் அவள் இலைகளை பிய்த்து அவன் முகத்திலேயே தூக்கி எறிந்தாள்.

" அட லூசு.... " என ஏஞ்சலை உலுக்க... அவளோ அப்போதே தியானத்தில் இருந்து கலைந்தவளாய்...

" என்ன " என்றவளை மேலிருந்து கீழ் வரை அளந்தான் அவன்...

" அத நான் தான் கேக்கனும். என்ன...?? " என மீண்டும் கேட்க...

" நெஜமாவே நான் பேசுனவன் தான் வித்தார்தா... இல்ல நான் வித்தார்த்கிட்ட பேசினேனா... "

" டேய்... ரெண்டுமே ஒன்னு தான்... உனக்கு என்னதா ஆச்சோ..." தலையில் அடித்து கொண்டு அவன் கிளம்பி விட...

" நெஜமாவே அவனா... இல்ல அவன் தான் நெஜமாவா... " என்றபடியே
உள்ளே செல்ல...

" முழு பைத்தியம் ஆகிட்டா... " என சிரித்தவாறே சென்றான் அவன்.

காவல் நிலையத்தில் இறங்கியதும் சரியாக அங்கு வந்து சேர்ந்திருந்தான் வித்தார்த், கார்த்தியின் உதவி ஆய்வாளர்.

" டேய்.. உன்ன பாக்கும்போதுலா கேக்குறேன்... நீ அங்க
ACPஆ இருந்துட்டு அடையாளத்த மறச்சிட்டு இங்க வந்து இது தேவை தானா... " என்றவனை முறைத்தான் வித்தார்த்.

" நான் அவனுக்கு பயந்து இங்க வரல டா.. என் தங்கச்சிக்கு எதுவும் ஆகிட கூடாதுனு தான் வந்தேன்.. அவனுக்கு என் கையில சாவோ இல்ல எனக்கு அவன் கையில சாவோ... நடந்தா இங்க நடக்கட்டும்.. நான் பிறந்த ஊர்லையே நடக்கட்டும்... " என்றவாறே
கையை முறுக்கிக் கொண்டு அவன் உள்ளே சென்றான்...

அறியாத ஊரில் தனி காட்டு சிங்கம் போல வாழ்ந்தவன் தங்கையைக் காப்பாற்ற சிறு நரி ஆகி விட்டானா என மனம் கணத்தாலும் ஹெட் கான்ஸ்டபிளான ராம்குமாருடன் உள்ளே சென்றான்.

அன்றைக்கான பணி முடித்து வீடு திரும்பும் சமயம் ஒரு நடுத்தர வயது நபர் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வர... அவர் அவரை கவனிக்காமல் வந்த கார்த்தி அவன் மீது மோதிவிட அவர் கீழே விழுந்தார்...

" அச்சோ பெரியவரே... சாரி சாரி... " என்றவாறே கார்த்தியும் வித்தார்த்தும் இருவரையும் தூக்கி விட.. அவரும் மெதுவாக எழுந்து உள்ளே விரைந்தார்...

" அவரு ஏன்டா இவ்ளோ அவசரமா போறாரு... "
என கார்த்தி வினவ...

" எனக்கென்னவோ சரியா படல... " என்றவாறே உள்ளே செல்ல திரும்ப...

அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டு உள்ளே சென்றான் ஒரு அதிகாரி.

" டேய்... அவன.... " என வித்தார்த் செல்ல அவனைப் பிடித்து இழுத்து நிறுத்தினான் கார்த்தி.

" நீ கோபப்பட்டா என்ன நடக்கும்னு எனக்கு தெரியும்... இப்பவே ACPல இருந்து Sub-Inspector.. அப்பறம் நடு தெரு தான்... " என்றவாறே அவன் சென்று... அவரை மெதுவாக அவரை தூக்கி விட்டு... என்னவென வினவினான்...

" அந்த அநியாயத்தை ஏன்யா தம்பி கேக்குற... என் பொண்ண காணம்னு கம்பிளைன்ட் குடுக்க வந்தா... துரத்தி விட்றானுங்க..." என அவர் கண்ணீர் மல்க கூற...

" நீங்க ஒரு ஜர்னலிஸ்ட், ரைட்... " என வித்தார்த் புருவ முடிச்சுடன் கேட்க...

" ஆமா, தம்பி... " என்க கார்த்தியின் முகம் மேலும் கலவரமானது.

" உங்க பொண்ண காணோமா... இல்ல கிட்னாப்... " என வித்தார்த் இழுக்க....

அவனை அதிர்ந்து போனராய் பார்த்தவர்...
பின் முழு கதையையும் கூறினார்.

" நான் ஒரு ஜர்னலிஸ்ட் தம்பி... ஒரு ட்ரக் கேஸ்ல அத பத்தி மேலும் தேடும் போது தான் தெரிய வந்தது... அது ரொம்ப மோசமான விசயம்னு. அதுக்கான ஆதாரத்தை ஒருத்தர் என்கிட்ட வந்து குடுத்தாரு... அது என்னனு எனக்கு எதுமே புரியல.. அது காம்ப்ளிகேட்டடா இருந்துச்சு... அத குடுக்கலனா என் பொண்ணு தேவிய.... " என வாயைப் பொத்தி அவர் அழ அவரைச் சமாதானம் செய்தான் கார்த்தி...

" தேவி எங்கிருக்காங்கனு தெரியுமா சார்... " என்க

" தெரியல பா... எங்க வச்சிருக்கான்னு தெரியல.. அவ எப்போதும் போல நைட் ஷிஃப்டுக்கு போக *** ரோட்ல இருக்க பஸ் டாப்ல...... நானும் கூட இருந்தேன்... என்ன தள்ளி விட்டுட்டு அவள தூக்கிட்டு போய்டாங்க பா.. " என்க

" சந்தேகம் படும் படியா யாராவது அங்க இருந்திருந்தாங்களா??? " என கார்த்தி வினவ

" ஒருத்தன் தான் இருந்தான்... யாருனு தெரியல... " என அழுது வடிந்த முகத்தில் சிறு தைரியத்தோடு கூற

" தென் ஓகே... ஐ வில் டேக் கேர்... " என்றுவிட்டு தன் பைக்கின் பக்கம் சென்றவன்....

" வித்து இவர்கூட நீ அந்த எவிடன்ஸ போய் பாரு... நான் அந்த பொண்ணோட
வரேன்... " என்றவாறே வண்டியை எடுக்க போக...

" கார்த்தி... எதாச்சுனா என்ன கூப்பிடு... " என்று அவருடன் சென்றான்..
வித்தார்த்...

தனக்காக காத்திருக்கும் ஆபத்தை அறியாமல்...
 
Top