Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?7?

Advertisement

Rudhra Vikram

Member
Member
சில மாதங்களுக்கு முன்...

தன் டைரியை புரட்டிக் கொண்டிருந்தாள்
ஏஞ்சல்...

பல் துலக்கியவாறே வந்து அவள் பின்னால் நின்ற மேரி, " காலேலையேவா அப்டி அந்த டைரில என்ன இருக்கோ... " என்று புராணத்தை ஆரம்பிக்க..

டைரியை எடுத்து வைத்துவிட்டு அவள் தோள் மீது கைப் போட்ட ஏஞ்சல், " மேரி மா... நம்ம லைஃப்ல நிறைய இன்ஸ்சிடன்ட்ஸ் நடக்கும்.. அதெல்லாமே நமக்கு நியாபகம் இருக்குமானா அத சொல்ல முடியாது இல்லையா... அதுக்கு தான்... டைரி டைட்டிங்... நல்ல பழக்கம் தான் மேரி"

அவள் கன்னத்தில் கிள்ளி விட்டு," சரி... காஃபி ரெடி பண்ணி வை... நான் ஃபிரஷ்ஷாகிட்டு வரேன்" என ஏஞ்சல் வெளியே செல்ல எத்தனிக்க... அவளை இழுத்து அமர வைத்தாள் மேரி.

" காஃபி வேணும்னா அத செய்றதுக்கான பொருளும் வேணும்... உன் மாமன் தான் வேலை
வேலைனு கடைக்கு கூட போக நேரம் இல்லாம சுத்துறான்... " என அவள் குற்ற பத்திரிகை வாசிக்க அப்போதென்று நெட்டி முறித்து எழுந்தான் ஜோசப்.

மேரியின் குரல் கேட்டதுமே எட்டு மணி அலுவலகத்திற்கு அதிகாலை ஆறு மணிக்கே துண்டை எடுத்துக் கொண்டு
பழக்க தோசத்தில் குளியலறைக்குள் புகுந்து கொண்டான் ஜோசப்.

"என்ன பாரு... எங்க அங்க பாக்குற... " அவளை உலுக்கினாள் மேரி.

ஏஞ்சல், " அடப்பாவி மாமா... " வாயில் கை வைத்தவளைப் பார்த்து பலிப்புக் காட்டி தப்பிச் சென்றவனை மனதினுள் அர்ச்சித்தாள்.

மேரி, " அவன ஏன் கூப்பிட்ற.... எதுமே இல்லாம காஃபி வந்திருமா... நீயே போய் வாங்கிட்டு வா..."
என கையில் பணத்தை திணித்தவள்..

" காஃபி தூள் ஒரு பாக்கெட் " என்க

" என்ன மெயினே காபி தூள்... அது இல்லையா... "
என ஏஞ்சல் வாயைப் பிளக்க அவளைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தாள் மேரி...

" அப்பறம் சர்க்கரை... " என இழுக்க...

" அடியேய்.... அதுக்கு நான்
கடைலயே காஃபி வாங்கி குடிச்சிப்பேன்... போ.. "

விருட்டென எழுந்து சென்றாள் ஏஞ்சல்...

" ஹேய்... ஏஞ்சல்.. அப்போ நாங்க என்ன பண்றது... ஒழுங்கா வாங்கிட்டு வா.. "
எவ்வளவு கத்தினாலும் அவள் கேட்க போவதில்லை என தெரிந்தது தான்.

" ஹா... மாமஸ் வாங்கிட்டு வருவாரு... இன்னைக்கு சண்டே தானே.. " என்று வேண்டுமென்றே சத்தமாகவே கூற....

ஜோசபிற்கு அப்போது தான் உரைத்தது தான் வெறுப்பேற்றும் போதும் ஏஞ்சல் ஏன் அமைதியாக இருந்தாள் என்று.

" ஐயோ... போச்சு... இன்னைக்கு என் டெத் டே தான் போல..." என புலம்பத் தொடங்கினான்.
****

கைகளை இறுக கட்டிக் கொண்டு மெல்ல நடந்து சென்றாள் ஏஞ்சல்...

வழி முழுவதும் பூக்களின் வாசனை மணக்க... அவற்றை ரசித்தபிடியே நடந்து சென்றாள்.

வழக்கம் போல சந்தர் மாமா அவரின் கடையில் வேலையைத் துவங்கி இருக்க...

" சந்தா மாமா.... ஒரு கப் காஃபி கிடைக்குமா...? " என்றவாறே ஒரு பெட்டிக்குள் இருந்த ரொட்டித் துண்டை எடுத்து அங்கிருந்த மேசையில் அமர்ந்தாள்.

" ஹம்ம்... உனக்கில்லாத காஃபி இந்த ஊருல ஒருத்தருக்கும் கிடையாது... " என்றவாறே
காஃபி போட... ஏஞ்சலும் சிரித்துக் கொண்டே...

" மாமானா மாமா தான்.. " என்றவளை சட்டென நிமிர்ந்து பார்த்து...

"அடேய்.." என நெஞ்சில் கை வைத்தவரைப் பார்த்து சிரித்தவள்
" ஹாஹா.. சரி சரி... சும்மா சொன்னே.... எங்க மை காஃபி..... "

கூறி முடிப்பதற்குள் அவள் கையில் அவளுக்கென்று அவராகவே செய்த கப்பில்
காஃபி இருந்தது.

குடித்து முடித்ததும் எப்போதும் கூறும் வாக்கியத்தையும் மறக்காமல் கூறினாள்.

" இந்த உலகத்திலயே தி பெஸ்ட் காஃபி இது தான் "

அந்த கப்பை சுத்தம் செய்து அது இருந்த இடத்திலேயே வைத்தாள்.

" ஹம்... இதே டயலாக தான் நீ ஒவ்வொரு முறையும் சொல்ற... ஏஞ்சல்... " என்றவரைப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பார்த்தாள் ஏஞ்சல்...

அவளின் முகம் போகும் போக்கை கண்டதுமே சிரிப்பு தான் வந்தது அவருக்கு.

தன்னுடைய கப்பை வைக்கும் போது ஒன்றனை அப்போது தான் உணர்ந்தாள்...

" சந்தா மாமா.. இது யாரோட கப்... என்னோடது
மாதிரியே இருக்கு... " என்று அதை குறிப்பிட்டு காட்ட....

" ஓஓ... அதுவா.. அத எப்போமே தனியா எடுத்து வச்சிருப்பேன். இன்னைக்கு மறந்துட்டு இங்கையே வச்சிட்டேன் போல... " என்றவாறே அதை கையில் எடுத்தார்.

" இது நம்ம வித்தார்த் தம்பியோடது தான் ஏஞ்சல்... நீ கூட அந்த தம்பிய பத்தி பேசிட்டே இருப்பியே... " என்றதும் தன்னை மீறிய ஒரு குதூகலம் அவளுக்குள் வந்தது.

" ஆமா... ஆமா... அவர பாத்திருக்கீங்களா மாமா... " என கண்கள் மிளிர கேட்க அவளை ஏற இறங்க பார்த்தவர்...

" கடைக்கு வருவாங்க ஏஞ்சல்.. அப்பறம் எப்டி பாக்காமா இருப்பேன்... " என தலையிலேயே நங்கென ஒரு கொட்டு வைக்க... தேய்த்துக் கொண்டே சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினாள் ஏஞ்சல்.

" ஹம்... நாம எப்போ அவன பாத்து... எப்போ... பேசி... " என நினைத்துக் கொண்டிருக்கும் போதே எதிரில் வந்த ஒரு மோட்டார் வாகனம் அவள் மீது மோதுவது போல வந்து ஒரு இன்ச் இடைவேளையில் நின்றிருந்தது.

பயத்தில் கண்களை இறுக மூடியபடி கைகளை
அரணாக தன் முன் நிறுத்தியிருந்தாள்...

" என்ன ஒன்னுமே ஆகல... " என மெல்ல விழிகளைத் திறந்து பார்க்க கடுகளவு இடைவேளையில் நின்றிருந்தான் அவன்...

தலைக் கவசத்தில் இருந்த ஃபேஸ் ஷீல்டை மட்டும் அகற்றி விட்டு பேசத் துவங்கினான்...

அவளோ.... அவனின் அந்த கூர் விழிகளில் இருந்து மீளாதவளாக சிலையென ஸ்தம்பித்து நின்றாள்.

" ஹலோ.... ஏங்க... ஸாரிங்க... நான் சரியா கவனிக்கல... " அவனின் கனீரென்ற குரலில் நினைவிற்கு வந்தவளாய்

" ஏஞ்சல்... நீ என்ன பண்ற.. அவன் உன் மேல இடிக்க பாத்திருக்கான்.. ஜஸ்ட் மிஸ்... இப்போ நீ எப்டி ரியாக்ட் பண்ணனும்... கமான்..." அவளுள் கொம்பு வைத்துக் கொண்டு கையில் சூலாயுதத்துடன் இருந்த ஒரு குட்டி பிசாசு அலறியது...

" ஹே.. ஹே... என்ன ஸாரி... ஆ?? இங்க எத்தன சின்ன பசங்க விளையாட்றாங்க... அவங்க மேல இடிச்சிருந்தா... உன்னலா உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டனும்.. ஆமா.. எங்க போற.. " என்றவளை
விசித்திரமாக பார்த்தவன்..

" SI கிட்டையேவா..." என நினைத்துக் கொண்டவன்...

" அதோ அந்த கடைக்கு தான்... " என சந்தர் மாமாவின் கடையைக் காட்ட...

" இங்க இருக்க கடைக்கு பைக் வேணுமா... சைக்கிள்ல போலாம், இல்லையா... நடந்தே கூட வரலாம்... நான் கூட ஏதோ அவசரம்னு நெனச்சே... தப்பே இல்ல.. " என்று அவள் பாட்டிற்கு பேச....

" ஹா.. வரலாம் தான்.. அங்க ஒருத்தனுக்கு டைம்க்கு காஃபி குடுக்கலனா வீட்டையே இரண்டாக்கிருவானே " என இமேஜினேசனில் ஒரு முறை ஸ்கூபி வீட்டை தலைகீழாக திருப்பி போட்டது போல மாற்றியது நினைவிற்கு வந்ததும்...

" ஐ அம் ரியலி சாரிங்க... பை... " என கிளம்பி விட மறுபுறம் ஏஞ்சலை யாரோ அழைப்பது போல இருந்தது. அங்கே நின்றிருந்தவனைப் பார்த்ததும் சிநேகமாக புன்னகைத்து விட்டு முறைக்க அவனுக்கோ உள்ளுக்குள் 'ஐயோ' என்றிருந்தது.

" ஏஞ்சல்... அண்ணன் உனக்காக நிறையா வாங்கிட்டு வந்திருக்கேன் டா... இது ரோட் மா... அடிக்கிறது உதைக்கிறதுலா வீட்ல... ஓகேயா... அண்ணனுக்கு ஊர்ல கொஞ்சம் மரியாதை மிச்சமிருக்கு... அதை கெடுத்துராத டா தங்கமே..."

அவன் கூறுவதை எல்லாம் பொறுமையாக கேட்டவள் மீண்டும் சிரிக்க...

" ஐயோ இவ சிரிச்சா கூட வில்லங்கமா சிரிக்கிறாளே" என முப்பத்திரண்டு பல்லையும் காட்டினான் கார்த்தி.

" அந்த கொஞ்சத்தையும் விட்டு வச்சா நான் ஏஞ்சல் இல்லையேடா ராசா... "

பலர் வந்து போகும் சாலை என்று கூட பார்க்காமல் அவனை அடித்து துவைத்து எடுக்க..

" அடியேய்... உன் அண்ணா ஏற்கனவே டயர்டா இருக்கேன்... விடு டி பக்கி... " அவன் அலற..

" என்னடா மரியாதை குறையிது... " என காதைப் பிடித்து இழுத்துக் செல்ல..

" இந்த லூசு கூட இருந்தா
மானம், ரோசம்லா பாக்க கூடாது டா கார்த்தி..." என முகத்தை மூடியபடியே வீட்டிற்கு வந்தான் கார்த்தி. (அது ஒன்னும் இல்ல இமேஜ் டேமேஜ் ஆகிருமாம்...)

" அப்பப்பா.. என்ன அடி... என்ன அடி... " என மேரி அடித்ததில் கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே வர....

" பாக்க பக்கோடா மாதிரி இருந்துட்டு பாய்ஞ்சு பாய்ஞசு அடிக்கிறாளே... இவளுக்கு கராத்தே செல்லி தந்தவன சொல்லனும்... " என முதுகைப் பிடித்துக் கொண்டு கார்த்தியும் வர...

" டேய்.. கார்த்தி.... "

" டேய்... ஜோசப்... " என இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லியபடி ஹாலில் அமர்ந்திருந்தனர்.

அவ்விருவரையும் பார்த்து சிரித்த மேரி...

" ஏன்டா கார்த்தி... உனக்கு எத்தனை தடவை சொல்ல.. ஒரு கல்யாணம் பண்ணிக்கோனு.. " என்றவாறே வந்து அமர...

" இத தவிர வேற வேலையே இல்லையா மேரி உனக்கு... நீ பாலங்கெனத்துல விழுந்தா எல்லாருமா விழனும்.. " என்றவாறே கார்த்தி வாங்கி வந்திருந்த மிட்டாயை உள்ளே தள்ளினாள் ஏஞ்சல்.

" அடப்போ மேரி மா.. போலீஸ்க்கு எவன் பொண்ணு தருவான்... " என்று சலித்துக் கொண்டு எழுந்தவன் ஏஞ்சலிடம் வம்பிழுக்கும் தன் தலையாய பணியைத் தொடங்கினான்...

" சின்ன பிள்ளைக்கிட்ட பிடுங்கி சாப்பிட்ற... வெக்கமா இல்ல... " என ஏஞ்சல் தன் பாக்கெட்டில் மிட்டாய்களை நிறைத்து வைத்து கொண்டாள்.

" நீ சின்ன பிள்ளைனு சொல்ற... உனக்கு வெக்கமா இருக்கோ இல்லையோ.. அந்த சின்ன பசங்களுக்கு தான்
அவமானமா இருக்காம்..."

இருவரும் வழக்கம் போல சண்டையிட்டுக் கொள்ள... அவனை அடிக்க வந்த ஏஞ்சலைக் கையைப் பிடித்து தடுத்த கார்த்திக்...

" ஆமா... உனக்கு வித்தார்த்த முன்னாடியே தெரியுமா... அவன்கிட்ட பேசிட்டு இருந்த... " என்றவன் அவள் முகத்தில் இருந்த அப்பட்டமான அதிர்ச்சியைத் தான் பார்த்தான்.

****

" ஸ்கூபி... ஸ்கூபி...." என்று அதன் பின்னாலேயே ஓடினான்
வித்தார்த்...

" உனக்காக நான் எவ்ளோ கஷ்டப்பட்டு திட்டு வாங்கி என் கையால நானே காஃபி செஞ்சு தந்தா... கொஞ்ச லேட்டானதுக்கே பேசமாட்டேன்னு ஓட்ற நீ... " என அவன் மீது தாவி பிடித்திருந்த நிலையிலேயே கூறினான் வித்தார்த்.

" பாரு.. ஒரு நாள் நான் உன்ன விட்டு போவேன்ல அப்போ தான் என் அருமை
உனக்கு தெரியும்... அப்போ யாரு உனக்கு காபி போட்டு தருவா..?? " அவன் கேட்ட கேள்விக்கே அவனைக் கடித்துக் குதற வேண்டும் போல் இருந்த ஸ்கூபி... முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்து கொள்ள...

" ஸ்ஸ்... ஓகே ஓகே.. ஏதோ ஒரு ஆதங்கத்துல சொல்லிட்டேன்... ப்ளீஸ்... ஸ்கூபி... ஸாரி.. ஸாரி... கால்ல வேணா விழறேன்... " அவன் பேசியதை கேட்காதது போல இருந்த ஸ்கூபி அவனின் கடைசி வாக்கியத்தை மட்டும் பிடித்துக் கொண்டது.

அதன் கால்களை முன்னே நீட்ட... அவனோ முடிச்சிட்ட புருவத்துடன் அதைப் பார்த்து...

" அடிங்கொய்யாலே...."

செல்லமாக இரண்டு அடி அடித்தான்... ஸ்கூபியும் இரண்டு முறை குரைக்க அடிப்பதை நிறுத்தி விட்டு அதை அணைத்துக் கொண்டான் வித்தார்த்...
****

அடுத்த நாள் காலை நன்றாகவே விடிய.... தன் பைக்கை கை விரல்களால் நீவி விட்டபடி அமர சென்றவன்... பின் நினைவு வந்தவனாய்...

" இங்க தானே போறோம்... சைக்ககள்லையே போலாமா ஸ்கூபி... "

சைக்கிளின் பக்கம் சென்றவனை " இது என்ன புதுசா... " என்பதைப் போல விசித்திரமாக பார்த்தது ஸ்கூபி (அதாவது நம்ம ஜாக்கி)...
 
Top